Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேருக்கு நேர் - விளக்கமும் விமர்சனமும் 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 19, 2014 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புக்குரியவர்களுக்கு:

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதிரைநிருபர் தளம் கடந்த நான்கு வருடங்களாக இணையக் கடலில் சிறப்பான பயணம் தொடர்ந்து அதிரை மட்டுமல்லாது ஏனைய தமிழ்கூறும் நன்மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது – அல்ஹம்துலில்லாஹ்!. 

இந்த தளம் எவ்வகையிலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பது அனைவராலும் நன்கறியப்பட்டதாகும். மார்க்க வரம்புக்கு (முக்கியமாக குர்ஆன் ஹதீஸ்களுக்கு) அப்பாற்பட்ட எவ்வகை தகவல்கள் அல்லது செய்திகளை முழுமையாக தவிற்கும் நெறியுடன், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுவே எமது அணுகுமுறை. 

இந்த தளத்தில் அறிமுகம் அல்லது மறுஅறிமுகம் இன்னும் இணைய எழுத்துலகில் அங்கீகாரம் செய்யப்பட்ட ஒருசில பங்களிப்பாளர்கள் பிற அதிரை தளங்களில் அவர்களின் சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மேலும் சிலரோ இந்த இணையத்தில் எழுதுவதால் என்ன பயன் என்று எண்ணியோ அல்லது நேரமின்மை காரணமாகவோ தங்களின் பங்களிப்பை வலுப்படுத்தி தொடர இயலவில்லை. 

இணையத்தின் வாயிலாக நல்ல இதயங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சியவர்களாக தொடர்ந்து செய்து வருகிறோம், இதற்கான நற்பலன்களை அல்லாஹ் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கிறான். மீண்டும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகட்டும் (அல்ஹம்துலில்லாஹ்). 

கடந்த 06.02.2014 அன்று அதிரைநிருபர் தளத்தில் வெளியான நேற்று! இன்று ! நாளை! – தொடர் 27 [இட ஒதுக்கீடு!] என்ற தொடரில் இடஒதுக்கீடு என்ற பதிவு வெளியானது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்களின் உள்ளத்தில் உழன்று கொண்டிருந்த எண்ண ஓட்டங்களை தெளிவாகவும் அதே நேரத்தில் நேர்படவும் எடுத்துரைத்தது. எந்தவொரு தனி நபரையோ அல்லது எந்த இயக்கத்தையோ தன்னிச்சையாக சாடாமல் நீதமென்று அறியப்பட்டதை அப்பட்டமாக சொன்னது அந்த பதிவு அதே நேரத்தில் எவரையும் கேவலப்படுத்தி எழுத்தப்படவும் இல்லை, எந்தவிதமான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகமோ தனிமனித சாடலோ இல்லை. இதற்கு அல்லாஹ்வே சாட்சி!

தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் கேட்கப்பட்ட கேள்விகளை கொண்ட நியாயமான கண்ணியமான விமர்சனமாகவே அந்த பதிவு உரைகல்லாக நிமிர்ந்து நின்றது, தளத்தில் கருத்தாடல் பகுதியில் (பொதுவில்) கருத்திடாத சகோதரர்கள் மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் தங்களின் நேர்மையான விமர்சனங்களையும் அவர்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 

மாறாக வஞ்சப்புகழ்ச்சி தோரணையில் எழுத்தப்பட்டுள்ளது என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட ததஜவின் அதிரை-கிளை சகோதரர்கள் மேற்குறிப்பிட்ட பதிவுக்கு பதில் / விமர்சனம் என்ற போர்வையில் அதிரைநிருபர் தளத்தின் பங்களிப்பாளர்களையும், அந்த தொடரை எழுதி வரும் மரியாதைக்குரிய எங்கள் மூத்த சகோதரர்கள் இபுராஹீம் அன்சாரி, P.பகுருதீன் ஆகிய இருவரையும், மேலும் கருத்துகளை பதிந்த சகோதரர்களையும் ததஜ-அ.கி.வுக்கே உரித்தான மிகக்கேவலமான தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு ஒன்றை அவர்களது வலைப்பூவில் வெளியிட்டு, முகநூல் குழுமங்களிலும் பரப்பிவிட்டு நகையாடிக் கொண்டார்கள். பிறரைப் பற்றி அநாகரீகமாக தரங்கெட்டு பக்கம் பக்கமாக எழுதியது அவர்களுடைய நன்மதிப்பை மேலும் தூள் தூளாக்க அவர்களே எடுத்துக் கொண்ட தேடலே என்பது அவர்களுக்கு ஏனோ இன்னும் தெரியவில்லை.

ததஜ(அ.கி)வின் மிகவும் தாழ்ந்த வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்ட அவர்களின் பதிலுரைப் பதிவில், அதிரைநிருபரின் கட்டுரையாளர்களை பற்றியும், கட்டுரை பற்றியும் வந்த விமர்சனத்துக்கு தொடர்ந்த எமது நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2), என்ற இடஒதுக்கீடு பகுதி இரண்டில் மிக கண்ணியமான முறையில் விளக்கமாக அளிக்கபட்டு அத்தோடு அவர்களின் கேடுகெட்ட தூற்றலுக்கும் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது.

ததஜ-அ.கி. மற்றும் முரண்பாடுகள், அவதூறுகள், கேவலமான எழுத்து பிரயோகம்.

இட ஒதுக்கீடு தொடர்பாக வந்த பதிவில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒரு இயக்கத்திற்கு மட்டும் கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல, இட ஒதுக்கீட்டை முன்னிலை படுத்தும் அனைத்து இயக்க நிர்வாகிகளின் நேர்மைக்கும் அவர்களின் கொள்கைக்கும் விடுக்கப்பட்ட கேள்விகள். அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர திராணியின்றி தனிப்பட்ட நபர்களை தரங்கெட்ட முறையில் கேடுகேட்ட வார்த்தைகளை பிரயோகப்படுத்தி திட்டித் தீர்ப்பதும், ஆதாரமில்லாமல் யூகங்கள் அடிப்படையில் அவர்களால் அவதூறு பரப்புவதும் தொடர் கதையாவது எவ்வகையில் நியாயம்?

பேச்சுக்கும் மூச்சுக்கும் குர்ஆன் ஹதீஸ், நபி-வழி என்று சொல்லுபவர்கள், தரம்கெட்ட விமர்சனங்களை கையாளும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் பேச்சுக்கும் சரியான திருக்குர்ஆன் வசனங்களையோ அல்லது ஷஹீஹான ஹதீஸ்களையோ தங்களின் ஆதாரமாக காட்டி நிருபிக்கத்தான் போகிறார்களா?

இடஒதுக்கீடு தொடர்பான முதல் பகுதிப் பதிவில் இவர்கள் அவதூறு தூற்றல்களுக்கு தகுந்த பதில் இரண்டாம் பகுதிப் பதிவில் நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2), அளிக்கப்பட்டு விட்டது. இனி இது தொடர்பாக அவர்கள் தொடர் ஒப்பாரி வைப்பதால் எவ்வித பலனும் இல்லை.

கண்கள் இரண்டும் தொடர் தொடர்பாக வெட்டி(யாக) ஒட்டி (காப்பி பேஸ்ட்) என்று மீண்டும் பித்து பிடித்தவர்கள் போல் ஒப்பாரியுடன் பத்தி ப(க்)த்தியாக அவர்கள் வலைப்பூவிலேயே அழ ஆரம்பித்தார்கள். அந்த தொடரில் வரும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதனை எழுதும் சகோதரர் அதிரை மன்சூர், அதில் வரும் செய்திக்கு அவர்கள் தான் பொறுப்பான விளக்கம் தரக்கூடியவர்கள். ததஜ-அ.கி. கண்கள் இரண்டும் தொடரின் மார்க்க விடயங்களடங்கிய தகவல்கள் ஆன்லைன்-பிஜே தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை அந்த பதிவின் பின்னூட்டத்திலோ அல்லது, அதிரைநிருபர் பதிப்பகத்தின் நெறியாளர் மின்னஞ்சலுக்கோ தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்த பதிவு வெளிவரும் தளத்திற்கு சம்பந்தமே இல்லாத அவர்களுக்கு சொந்தமான ஒரு வலைப்பூவில் பதிவு என்ற பெயரில் கற்பனை யூகங்களை வைத்து திருடி விட்டார்கள், திருட்டு நிருபர்கள், திருட்டு பதிப்பகம் என்று கதறி அழுவது அறிவுடைய செயலா? அல்லது அந்த தொடர் வெளிவரும் தளத்தின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களது கருத்தை அழுத்தமாக எடுத்து வைப்பது நல்ல அனுகுமுறையா? என்பதை ததஜ-அ.கி. வலைக்குப் பின்னால் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

சகோதரர் அறிஞர் பி.ஜெ. அவர்கள் எவை, என்னவகை, எத்தனை தலைப்புகளடங்கிய புத்தகங்கள் எழுதியுள்ளார்கள் என்று அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைபப்து மடமை அது மிகவும் கடினமும் ஆகும். மாஷா அல்லாஹ் ! இறைவன் அவருக்கு அளித்துள்ள ஞானத்தைக் கொண்டு ஏராளமாக எழுதியிருக்கலாம். அவரின் புத்தகங்களிலிருந்து எடுக்கபப்ட்டவை என்று அறியப் பெற்றவர்கள் அதனை சுட்டிக் காட்டினால் மட்டுமே தெரியவரும். 

இதுவரை editor@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எந்த ஒரு சுட்டிக்காட்டலும் ஆன்லைன்பிஜெ தளத்திடமிருந்தோ, அல்லது ஆன்லைன்பிஜெ தளத்தின் முகவர்களாக தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கும் ததஜ-அ.கி. வலைக்கு பின்னாலிருப்பவர்களிடமிருந்தோ இதுவரை வரவில்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்கிறோம். தூற்றல்களின் நாற்றம் கண்ட எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் சகோதரர்களால் சுட்டிக் காட்டப்பட்ட தகவல்கள் கண்கள் இரண்டும் தொடரில் ஆன்லைன்பிஜெ தளத்தில் பதிக்கபப்ட்டிருந்த ஒருசில தகவல்கள் பதியப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது, அதன் பின்னர் அந்த பதிவில் ஆன்லைன் பிஜெ தளத்தின் சுட்டியையும் இணைக்கப் பட்டுவிட்டது.

ததஜ-அ.கி. போற்றும் இயக்கத் தலைவரின் (அறிஞர் பிஜெ) சிந்தனைகள் மக்களுக்கு பயன்பெறும் விதமாக பிற தளங்களில் வந்துள்ளது என்றால் அவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும்  என்ற நல்லெண்ணம் கொள்வது தானே அறிவுடமையான செயலாக இருக்க முடியும். நல்லெண்ணம் கொள்ளாமல், விபரம் கேட்காமல், முறையாக சுட்டிக் காட்டாமல், திருடர்கள், என்று மூன்றாம் தர கூத்தாடிகள் போன்று ததஜ-அ.கி. வரம்புமீறி கயமத்தனமாக கூறித்திரிவது கண்டிக்கத்தக்கது.

அறிஞர் பிஜெ அவர்கள் தான் புத்தகம் போட்டு பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்று எந்த பதிவில் எங்கு குறிப்பிட்டுள்ளோம்? 

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 28. (இட ஒதுக்கீடு - 2) பதிவில்  புத்தகம் வெளியிடுபவர்கள் பற்றிய பொதுவான விமர்சனத்தை, அறிஞர் பிஜெவை பற்றித் தான் சொல்லப்பட்டுள்ளது என்று ததஜ-அ.கி. ஒரு முடிவு செய்து. அறிஞர் பிஜெ அவர்கள் புத்தகம் போட்டுத்தான் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்று கூறியிருப்பதாக அப்பட்டமாக அவதூறு பரப்பி வரும் கீழ்தரமான ஈனச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

“ஹாஜி, இறையருட்கவிமணி” என்ற வார்த்தைகளை வைத்து, நம்மை வழிகேடார்கள் என்று பிதற்றும் ததஜ-அ.கி. இவைகளுக்கான விளக்கத்தை முறையாக தளத்தின் நிர்வாகத்திடம் கேட்டு விட்டு அதன்படி விமர்சனம் செய்தால் இவர்களுக்கு பதில் அளித்திருப்போம். ஹாஜி என்று சேர்ப்பது சுன்னத் என்றோ அல்லது பர்ளு என்றோ அல்லது மார்க்க செயல் என்றோ எவரும் போற்றவில்லை. பொதுவாக ஊரில் அறியப்பட்ட ஹாஜி தாஹா என்ற பெயருடைய அவர்களை எவ்வாறு அழைக்கப்படுபவர்கள் என்பது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் நன்மை என்று எங்கும் நாம் பதிக்கவில்லை.

உள்ளத்தில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.  மேலும் அது போன்ற வார்த்தைகள் (ஹாஜி, இறையருட்கவிமணி) பயன்படுத்துவது ததஜ-அ.கி. பார்வையில் தவறு என்றால், திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களின்-படி தவறு என்று சுட்டிக் காட்டியிருந்திருக்க வேண்டும். சரியான விளக்கம் காட்டியிருந்தால். நிச்சயம் நாங்கள் திருத்திக் கொள்வோம். ஆனால் அதை விட்டுவிட்டு கண்மூடித்தனமாக தவறான ஒரு விளக்கத்தை கொடுத்து நம்மீது அவதூறு பரப்பி அவர்களை உத்தம சீலர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் அவதூறு பரப்பி புகழ்பெற்ற ததஜ-அ.கி, ஏதோ திட்டித் தீர்க்க வேண்டும் என்பதற்காக உப்பு சப்பில்லாத ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு உளரிக் கொண்டிருப்பது இயக்க மயக்கத்தின் உச்சகட்ட அறியாமை. 

மார்க்க விசயத்தில் முரண்பாடுகளும் – ததஜவும்

நபித்தோழர்கள் இணைவைத்தார்கள், இதனை நபி(ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை, ஒரு யூதன் வந்து நபி(ஸல்) அவர்களுக்கு அந்த இணைவைப்பு பற்றி சுட்டிக்காட்டிய பிறகு நபி(ஸல்) அவர்கள் “ஓஹோ இது நமக்கே தெரியாமல் போய்விட்டது” என்று நபி(ஸல்) சொன்னதாக ஹதீஸில் இல்லாத வார்த்தையை பயன்படுத்தி. யூதனை ஹீரோவாக்கி நபித்தோழர்கள் இணை வைத்திருந்தார்கள், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்று நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தியதோடு அல்லாமல், நுட்பமான ஷிர்க் என்ற ஒன்றை 1400 வருடங்களாக எந்த ஒரு மார்க்க அறிஞர்களும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள். நாங்கள் ததஜ மண்ணடியில் இருந்து ஹதீஸ்களை மறு ஆய்வு செய்து நுட்பமான ஷிர்க்கை கண்டு பிடித்துள்ளோம். இதன் காரணமாக ஷஹீஹுல் புகாரியில் உள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தூக்கிவீச வேண்டும் என்று வாய்க்கூசாமல், அந்த ஹதீஸ்களுக்கு தங்களது பகுத்தறிவு சிந்தனையை புகுத்தி விமர்சனம் செய்து பாமர மக்களை நம்பவைத்து விளக்கம் என்ற பெயரில் புத்தகம் போட்டு, சிடிக்கள் போட்டு அதனையும் பரப்பி வருகிறார்கள்.

ஷஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என்று 1400 வருடங்களுக்கு மேலாக குர்ஆன் ஹதீஸை ஏற்று வாழ்ந்து வந்துள்ள சங்கைக்குரிய இமாம்கள், உலமாக்களின் விளக்கங்களை புரம் தள்ளி கடந்த சில வருடங்களாக அறிவிப்பாளர் தொடரில் துளி அளவும் சந்தேகமில்லாதா நம்பகமான ஷஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் (ஆதாரம் வேண்டுமா?) என்று தங்களுடைய போலி பகுத்தறிவு வாதத்தினால் மக்களை வழிகேட்டின் பக்கம் அறிந்தோ அறியாமலோ திசை திருப்பி விட்டு விளக்கம் என்ற பெயரில் அதற்கும் புத்தகமும் சீடி/டிவி போட்டு இவைகளையும் அமோகமாக செய்து வருகிறார்கள்.

“சூனியம் என்பது நுட்பமான ஷிர்க், அந்த நுட்பமான ஷிர்க்கை நாங்கள் ததஜ மண்ணடியிலிருந்து மறு ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளோம்,” ஹஜ்ஜத்துல்விதாவில் நபி(ஸல்) அவர்கள் மார்க்கம் பூரணமாகிவிட்டது என்று சொன்னாலும், ததஜ ஹதீஸ்களை மறு ஆய்வு செய்து “நபி(ஸல்) அவர்கள் கண்டுபிடிக்காத நுட்பமான ஷிர்க் ஒன்றை நாங்கள் இப்போது கண்டு பிடித்துள்ளோம். ஆகவே சூனியம் என்ற நுட்பமான ஷிர்க்  தொடர்பாக ததஜ விளக்கத்தை யாரெல்லாம் மனம் முரண்டாக புறக்கணிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் முஷ்ரிக், அவர்கள் பின்னால் தொழக்கூடாது, அவர்கள் அறுக்கும் பிராணியை உண்ணக்கூடாது” என்று மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். ததஜவின் இந்த விளக்கத்தை ஏற்காமல் ஷஹீஹுல் புகாரியில் உள்ள அனைத்து ஷதீஸ்களையும் நம்புகிறவர்கள் இணைவைப்பாளர்கள் என்று சொல்லித் திரிந்து, புகாரி, முஸ்லீம் போன்ற ஷஹீஹான ஹதீஸ்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பி ஏகத்துவத்துவ கொள்கையில் வாழ்ந்து வரும் முஸ்லீம் சமுதாயத்தை முஷ்ரிக் என்று சொல்லும் அளவுக்கு உலகில் எங்குமே இல்லாத ஒரு தனிப்பிரிவாக ததஜ வழிகேட்டில் கொடிகட்டி பறக்கிறது. 

ஷஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படும் என்ற ததஜவின் நிலைபாடு தவறு, ஷஹீஹான ஹதீஸ்கள் என்றுமே குர்ஆனுக்கு முரண்படாது, அப்படி முரண் என்று நம் ஆய்வுகோ அறிவுக்கோ தென்பட்டால், அது ஹதீஸில் உள்ள குறையல்ல, ஆய்வில் உள்ள குறை, ஆய்வு செய்தவரின் அறிவில் உள்ள குறை என்று சொல்லி ஆதாரத்துடன் தகுந்த விளகங்களுடன், முன்னர் வாழ்ந்த இமாம்கள் உலமாக்கள் எப்படி முரண் இல்லாமல் விளங்கியுள்ளார்கள் என்பதை மக்கள் மத்தியில் வைத்து ததஜ போலியான வாதத்திற்கு பதில் அளித்து வருகிறார்கள். இந்தியா மற்றும் இலங்கை தவ்ஹீத் உலமாக்கள். இந்த தவ்ஹீத் உலமாக்களையும் வழக்கம் போல் தகாத வார்த்தைகளைக் கொண்டும், பெண் பித்தர்கள் என்றும், வெளிநாட்டு காசுக்காக மாரடிப்பவர்கள் என்றும், சூனியக்காரர்கள் என்றும் வாய்க்கு வந்தார் போல் அவதூறுகள் பரப்பி திட்டித் தீர்த்து விளக்கம் என்ற பெயரில் சீடி போட்டு பரப்புரை செய்கிறார்கள்.

போனாபோகுது என்று சோறு கொடுத்தோம் என்று அன்சாரிகள் முஹாஜிர்களை பார்த்து சொன்னதாகவும், அன்சாரி நபித்தோழர்களையே பதவி வெறி பிடித்தவர்கள் என்றும், அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்றும், அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினலான வேலை செய்பவர் போன்று என்றும் என்று நபித்தோழர்களுக்கு சொல்லக்கூடாத வார்த்தை பிரயோகம் கொண்ட ஒரு சில ததஜ பயான்கள் கேட்டு ரசித்த ததஜ-அ.கி. வலைப்பூவுக்கு பின்னாலிருபப்வர்கள் நம்மை கேலிசெய்து ரசித்துப் பார்ப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயமல்ல. நபித்தோழர்களை கேவலப்படுத்தி விளக்கம் என்ற பெயரில் செய்த தவறை மேலும் நியாயப்படுத்தியும் வருகிறார்கள் என்பது தான் வேதனையான விசயம். நபித்தோழர்களை கேவலப்படுத்தும் இந்த ஈனச்செயலில் அறிந்தோ அறியாமலோ சிக்கி இருக்கிறார்கள் இந்த ததஜ-அ.கி. சகோதரர்கள்.

மார்க்க விசயங்களில் தில்லுமுல்லு வேலை செய்யும் இவர்களின் பட்டியலை எடுக்க ஆரம்பித்தால் அடுக்கடுக்காக சொற்களும் முற்களாகும் என்று எழுதிக்கொண்டே போகலாம். அவைகளுக்கு பதில் என்ற பெயரில் தங்களின் மேடைப் பேச்சால், விவாதமென்ற கூவலால் பதிலுக்கு சம்பந்தமே இல்லாத எங்கோ உள்ள குர்ஆன் வசனத்தையும், ஹதீஸ்களையும் சம்மந்தப்படுத்தி இதுதான் எங்கள் பதில் என்று பிதற்றலின் உச்சமாக சமாளிப்பதையும் இவர்கள் செய்துகொண்டு தங்களின் தவறுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டுள்ளார்கள். 

கேவலப்படும் ததஜ-அ.கி.

எத்தனை பேரை ததஜவினர் சக முஸ்லீம் என்று பார்க்காமல் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவர்களால் ஏராளமானோர் மனதால் நோவினை அடைந்திருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் ததஜவினரை பத்வா செய்திருப்பார்கள். அல்லாஹ் ஒரு சிலரை உடனே கேவலப்படுத்துவான், இன்னும் சிலரை தாமதித்து கேவலப்படுத்துவான், மேலும் சிலரை இவ்வுலகில் கேவலப்படுத்தாமல் நிச்சயம் மறுமையில் கேவலப்படுத்துவான்.

இன்றையச் சூழலில் பார்க்கிறோம், இந்திய பாராளுமன்ற தேர்தல் 2014 மற்றும் ஒதுக்கீட்டு கோரிக்கையினால் அல்லாஹ் ததஜவினரை கேவலப்படுத்துகிறான் என்றே எண்ணத் தோன்றுகிறது. முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அரசு கடிதத்தை வைத்துக்கொண்டு “அம்மா ஆணையம் அமைத்துவிட்டது, என்று கூவிக் கூவி சொல்லிக் கொண்டும் தங்கள் முகத்திலே தாங்களே துப்பிக் கொண்டு கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் இவர்களை கேவலப்படுத்தியுள்ளான். ‘அம்மா’ சிவசேனாவை தங்களின் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டுகோள் வைத்துள்ளார், மும்பையில் முஸ்லீம்களை கருவருத்த சிவசேனாவோடு ததஜ பிரச்சாரம் செய்யும் நிலையை அல்லாஹ் உருவாக்கி அவர்களை கேவலப்படுத்த உள்ளானோ என்ற எண்ணம் தமிழக முஸ்லீம்களிடம் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

அன்மையில் ததஜ-அ.கி. பள்ளிவாசலில் அதிமுக தஞ்சை வேட்பாளர் பரசுராமனை அம்மா புகழ்பாட வைத்து அழகு பார்த்துள்ளது ததஜ. ஓரிரை கொள்கையை கையில் தூக்கியவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் “காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல் அமைச்சர், வருங்கால பாரத பிரதமர்” என்று இணைவைப்பு புகழாரம், மறைமுக ஞானம் தங்களிடம் உள்ளது போல் வேட்பாளர் பரசுராமனால் பாடப் பட்டப்போது, வாயடைத்துப் போய் வேடிக்கைப் பார்த்து கேவலப்பட்டுப் போயுள்ளார்கள் ததஜ. அல்லாஹ் இவர்களை கேவலப்படுத்தியுள்ளான்.

அதிரைநிருபர் தளத்தில் வந்த பதிவுகளையும், கருத்துக்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதன் தொடுப்பு (link) ஏதும் போடாமல் வெட்டி(களின்) காப்பி பேஸ்ட் (ஒட்டி) செய்வது அவர்கள்தான் என்பதை நிரூபித்து கேவலப்பட்டுள்ளார்கள். மேலும் அதிரைநிருபர் பதிவில் வரும் பின்னூட்டங்களை காப்பி பேஸ்ட் செய்து ததஜ-அகி. பதிவின் பின்னூட்டங்களில் அதிரைநிருபர் லிங்க் இல்லாமல் பதிந்து, இயக்க மயக்க வழியில் காப்பி பேஸ்டர்கள் என்பதை நிருபித்துக் கொண்டார்கள்.

ஆணையம் அமைத்தது உண்மையா?

அதிரைநிருபரின் சமீபத்திய பதிவில் ‘தவ்ஹீத்’கான் அவர்கள் குறிப்பிட்டதில் மாநிலத்தில் ஆளும் அதிமுக 7 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் அவர்களுக்கு ஓட்டு இல்லாவிட்டால் அவர்களுக்கு வேட்டு, பின்னர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தந்தால் ஒட்டு இல்லாவிட்டால் வேட்டு, பின்னர் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தர ஒருவார கால அவகாசம், இறுதியில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஒரு கடித பரிமாற்றத்தை வைத்துக் கொண்டு அம்மா இட ஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் அமைத்து விட்டார்கள், என்று ததஜ பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வருவதை விமர்சனம் செய்யப்பட்டிருந்தது, மேலும் லட்சக்கணக்கில் செலவு செய்து இட ஒதுக்கீட்டு போராட்டம் செய்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆனையத்தின் பரிந்துரை இன்றி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என்று ஒரு சாதாரண உண்மைக்கூட தெரியாமல் போனது என்பது ஆச்சரியமான விசயம்.

அம்மா ஒரு அரசாணையிட்டால் போதும் இடஒதுக்கீட்டை அதிகரித்து விடலாம் என்று ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களை ஏமாற்றி விட்டார்களே என்ற அடிப்படையில் எழுத்தப்பட்டது. ததஜ அரசியல் நிலைப்பாடு பற்றிய விமர்சனமே தவிர தவ்ஹீத் கொள்கைப் பற்றி எவ்விதத்திலும் கேலியாக எந்த ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. 

இன்றளவும் ததஜ கோரிக்கையை ஏற்று அம்மா ஆணையம் அமைத்துவிட்டது, என்று கூறுகிறார்களே தவிர, ஏற்கனவே இருக்கும் ஆணையம் தவிர, அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றத்தை தவிர தமிழக அரசு புதிய ஆணையம் அமைத்துவிட்டதாக ததஜ சொல்லுவதற்கு அவர்கள் தான் ஆதாரத்தை மக்கள் மத்தியில் காட்ட வேண்டும். இல்லை என்றால் இது போன்ற கடும் விமர்சனம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அவனை நிறுத்தச் சொல், பிறகு என்னிடம் சொல்

ததஜவை மட்டும் விமர்சனம் செய்பவர்கள் என்று நம்மை சொல்லி விட்டு, அந்த கட்சி இப்படி செய்தது, அந்த இயக்கம் இப்படி செய்தது, அவர்களை விமர்சனம் செய்யாதது ஏன்? நாம் ஏதோ ஒரு இயக்கத்தின் ஏஜண்ட் என்று அவர்களாகவோ கற்பனை செய்து அவர்களாகவே முடிவு செய்துள்ளார்கள். 

இங்கு ஒன்றை மிகத் தெளிவாக தெளிவுபடுத்த விரும்புகிறோம். தற்போதைய சூழலில் இடஒதுக்கீடு மற்றும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய விமர்சனமே எங்கள் பதிவுகளில் வந்தவைகள். பிற இயக்கத்தவரின் தவறுகளை (?) நாம் விமர்சிக்க ஆரம்பித்தால், அதற்கு ஒரு தனி களம் காண வேண்டி வரும். சமுதாய பிற இயக்கங்களைப் பற்றி விமர்சனங்கள் செய்யும் வேலையை அளவுக்கு அதிகமாகவே ததஜ செய்து வரும் போது மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும், நிர்பந்திப்பதும் அவர்களின் அறியாமையே !

ததஜவினர் அவர்களைப் பற்றிய விமர்சனத்துக்கு மட்டும் சரியான பதில் சொல்லுவதை விட்டுவிட்டு, அவன் அப்படி செய்கிறான், அவனைப் போய் கேள், இவன் இப்படி செய்கிறான் இவனைப் போய் கேள் என்று தங்களுடைய தவறை பிறர் தவறோடு ஒப்பிட்டு தப்பித்துக் கொள்வதே இவர்களின் பொதுவான யுக்தி என்பது நாடறிந்த உண்மை. எங்களைப் பொறுத்தவரை ததஜ, தமுமுக, இதஜ, எஸ் டி பி ஐ ,முஸ்லீம் லீக் போன்ற இயக்கங்கள் எல்லாமே ஒன்றுதான். எல்லாம் சமுதாய நலனின் அக்கறை கொண்டு அரசியல் நடத்தும் இயக்கங்கள் அவைகள் அவரவர் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள் அவ்வளவுதான். இவ்வியக்கங்கள் யாவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவைகள் அல்ல.

எந்த இயக்கத்திற்கும் முகவர்களாக செயல்படவில்லை என்பதை அழுத்தமாக பதிகிறோம். ததஜ விமர்சிக்கும் கட்சிகளை, இயக்கங்களை நாங்களும் விமர்சிக்க வேண்டும் என்று அவர்கள் எங்களை எதிர்பார்ப்பது அறியாமையே அப்படி எவரையும் அவர்கள் நிர்பந்திக்க முடியாது.

ஊடக நடைமுறையில் பேட்டி எடுக்கிறார்கள் என்றால், அவர் அந்த கட்சியின் ஏஜண்டாக செயல்படுகிறார் என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமானது என்று சின்னஞ்சிறு பிள்ளைக்கும் தெரியும். இவ்வாறு அணுக ஆரம்பித்தால் அரசியல் கட்சிகளை பேட்டி எடுக்கும் ஊடகவியலாளர்கள் அனைவரும் அந்தந்த கட்சிகளின் ஏஜண்டுகளா? 

பதிவுகளை எழுதுபவர்களும் நிர்வாகத்திலிருப்பவர்கள் பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையே நல்லதை பிரித்தாய்ந்து இயன்றவரை சமூக அக்கறையுடன் செய்து வருவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இதனை யாருக்கும் விளக்கமாக சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. 

எங்களைப் பொருத்தவரையில் யாரிடமும் தவ்ஹீத்வாதிகள் என்று சான்றிதழ் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் உள்ளத்தில் உள்ளதை அறிந்துக்கொள்ள தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. 

ததஜ-அகி. வலைப்பூவில் தான்தோன்றித்தனமாக அவர்கள் சாடியதை கண்ட எமது நலன் விரும்பும் அன்புச் சகோதரர்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டிய காப்பி / பேஸ்ட் கதறல் தொடர்பாக போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. அதிரைநிருபர் தளத்தின் மீதும் அதன் அனைத்து பங்களிப்பாளர்கள் மீதும் திருடர்கள் என்று அவதூறு சொல்லி அனைவரையும் கேடுகெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியதற்காகவும் ததஜ-அதிரை கிளை மன்னிப்பு கேட்க வேண்டும். கடும் சொற்களால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதை நினைவூட்டுகிறோம்.

ததஜ-அ.கி. போன்று கண்ணியமற்ற முறையில் ஒவ்வொரு தனி மனிதனைப் பற்றி நாம் விமர்சனம் செய்ய நாம் துருவ ஆரம்பித்தால் (அல்லாஹ் பாதுகாப்பானாக) ததஜ, ததஜ-அ.கி. மற்றும் பிற இயக்கத்தில் உள்ள பலர் அவைகளிலிருந்து தப்ப முடியாது. ஆதாரத்துடன் பொதுவில் வைத்து பொதுவில் ஒவ்வொருத்தராக கேவலப்படுத்த முடியும். அதற்கான ஆதாரங்கள் உண்டு. எச்சரிக்கை செய்கிறோம் !

யூடியூப் தளங்களிலும், முகநூல் தளங்களிலும், அலைபேசி மிரட்டலின் ஒலிப் பதிவுகள் (எண்கள் உட்பட), ததஜ-அ.கி. வலைப்பூ நிர்வாத்திலிருப்பவர்கள், ததஜ-அ.கி. அபிமானிகளின் லீலைகளையும், சினிமா கூத்தாடிகளின் நகைச்சுவைகளை வைத்து முஸ்லீம்களை நய்யாண்டி செய்து மார்க்க விரோத செயல்கள் செய்து வருவதையும் ஆதாங்களுடன் வெளிக்கொணர முடியும். அவர்கள் வழிமுறையில் சொல்லுவதென்றால் அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துவிட்டு கேவலப்படுத்த முடியும். 

இப்படி ஒவ்வொன்றாக எடுத்துவிட ஆரம்பித்தால் நாற்றம் தாங்காது. ஆனால் இதுவல்ல குர்ஆன் சுன்னா வழிமுறை என்பதை நாங்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் அவ்வாறு செய்ய மாட்டோம். அல்லாஹ் பாதுகப்பானாக. ததஜ-அ.கி. வின் அமிமானிகளாக இருப்பவர்கள் பலர் நம் உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது நெருங்கிய நண்பர்களின் உறவினர்களாகவோ உள்ளதால் நாம் அவர்களைப் போன்ற கேவலமான வேலையில் பொதுவில் செய்து அவர்களின் குடும்பத்தவர்களை மனவேதனைக்குள்ளாக்க மாட்டோம். அல்லாஹ் மட்டுமே, இந்த கேடுகேட்ட செயலை செய்யும் ததஜ-அ.கி. சகோதரர்களை நேர்வழிப்படுத்த போதுமானவன்.

சமுதாய துரோகம் செய்யும் எவராக இருந்தாலும், அவர்களை எல்லா சந்தர்ப்பத்திலும் விமர்சனம் செய்வோம். சமுதாய துரோகிகளை, முஸ்லீம்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் கயவர்களையும், ஸஹபாக்களை கேவலப்படுத்தும் மூடர்களையும் வன்மையாக கண்டிப்போம், எதிர்ப்போம், களையெடுப்போம். இன்ஷா அல்லாஹ். 

இனி இந்த பதிவு பற்றிய என்ன விமர்சனம் செய்தாலும் அதற்கு நாம் பதில் அளித்து எம்முடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நீண்ட பதிவை பொறுமையாக நேரம் ஒதுக்கி வாசித்த நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.

அதிரைநிருபர் பதிப்பகம்
editor@adirainirubar.in 
comments@adirainirubar.in 

15 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

A bold and dire warning !!! Hope all the concerned brothers understand each other and resolve further conflicts. InshaAllah.

May Allah help us establish unity among(we are muslims) us.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

ஐயாமீது அம்மா காட்டும் பாசம்தேர்தல்முடிந்த ஆறு மாதத்துக்குள் வெளுக்கும்.அதன் பின் ஐயா வேறு கும்மிபாட்டு பாடுவார். தொண்டரடி பொடிகளும்'' கும்மியடிபெண்ணே! கும்மியடிநல்லா குணிஞ்சுகுணிஞ்சு கும்மியடி! 'கோமாளப் பெண்ணுக்கு மாப்புளே வாறாண்டு' கும்மியடிபெண்ணேகும்மியடி''என்று கோரஸ் பாடுவார்கள்.''இதெல்லாம் அரசியல் உலகில் சகஜமப்பா !''

Yasir said...

பல ததஜ.அ.கி. சகோதர்கள் முன்னர் எந்த நிலமையில் இருந்தார்கள் என்னென்ன செய்து கொண்டி இருந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும்...அன்றியும் தன் பல்லை குத்தி மொந்து பார்க்கும் பழக்கம் எங்களுக்கு இல்லையாதலால் அவர்களைப்பற்றி எடுத்து விடாமல் இருக்கின்றோம்...நாங்கள் புரிந்து நடைமுறை படுத்தி வரும் மார்க்கமும், நாங்கள் பயின்ற கல்வியும் உங்களைப் போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் யாரையும் தீட்டிதீர்க்க விடாமல் தடுக்கின்றது..அதில் உறுதியாகவும் இருப்போம்..அதற்க்காக எங்களை வேறு மாதிரியாக நினைத்தால்...அதில் நினைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு கொள்ளுங்கள்...அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்யட்டும்...கண்ணியத்திற்க்குரிய பி.ஜே அவர்கள் பேசியது எழுதியது எல்லாம் பேட்டன் உரிமை வாங்கி பாதுகாக்கப்படவில்லை...அந்த நல்ல விசயங்கள் பல பேர் பார்க்கும் ஊடகம் வழியாக சென்றவடைதினால் அவருக்கு நன்மை கிடைக்குமே அன்றி பாதிப்பு வராது

//இனி இந்த பதிவு பற்றிய என்ன விமர்சனம் செய்தாலும் அதற்கு நாம் பதில் அளித்து எம்முடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.///....ஆமாம் இனிமேல் தேவையில்லை எப்படி கதறினாலும்

Meerashah Rafia said...

நவீன அவ்லியாக்கள் கூட்டம்..
தலைகள் எது சொன்னாலும் ஏற்கும்..

கந்தூரி கூட்டத்தினற்கும், இவர்களுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை.. இருவருமே தான் கூறுவதுதான் சிறந்தது என்று கருதுகின்றனர்..

மத்ஹபை ஒழிக்க பிறந்தவர்கள் உருவாக்கிய புதிய மத்ஹப், இந்த இயக்கங்கள்..

இசுலாத்தில் தற்கொலை கூடும் என்று இருந்திருந்தால் 'உங்களால் பல தலைகள் உருண்டிருக்கும் உங்கள் அநாகரிக கேடுகெட்ட பேச்சுக்களை கேட்டு..

வளர்க...வீழ்வை நோக்கி..

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

காற்றைக் கயிற்றால் கட்ட முடியுமா?
சின்ன நூல் கண்டு நம்மை சிறைப் படுத்திவிடுமா?
அலைபேசி மிரட்டல்கள் கடல் அலைகளை நிறுத்திவிடுமா?
எரிமலையை ஈச்சம் பாய் போட்டு மூட முடியுமா?
நடை போடும் குழந்தையின் நகத்தை வெட்டினால்
நடுங்கிப் போய் நடையை நிறுத்துமா?

மனசாட்சிப்படி தவறான உள்நோக்கத்துடன் எழுதவில்லை. ஒரு செய்தி விமர்சனக் கட்டுரையை தாங்க இயலாத சகோதரர்கள் கொதித்தெழுந்து கனி இருப்பக் காய் கவர்ந்துவிட்டார்கள். இறுதியில் இன்றைய நிலவரப்படி நாம் சந்தேகப் பட்டவை உண்மை என்றாகிவிட்டது.
அல்லாஹ் பாதுகாப்பானாக!

இதை இந்த மட்டில் விட்டு விடலாம். வாதப் பிரதிவாதங்கள் வேண்டாம்.

அதிரைக்காரன் said...

1435 ஆண்டுகளுக்கு முன்பு முழுமைபடுத்தப்பட்ட மார்க்கத்தில், அதற்குப்பிறகு சொல்லப்படுபவை எல்லாமே குர்ஆன், ஹதீஸ்கள் ஆகியவற்றிலிருந்து காப்பி பேஸ்ட் செய்துதான் சொல்லமுடியும்! அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் வலியுறுத்தும் மார்க்கத்தில் காப்பிரைட் உரிமை யாருக்கும் இல்லை.

சகோ.பிஜே அவர்களின் கண்ணோட்டம் பலவிசயங்களின் சற்று மாறுபட்டும், புதியதாகவும் இருக்கும். எனினும், அவ்வாறு அவர் மட்டுமே சிந்தித்திருப்பார் என்று கருத முடியாது.

இயேசு கடவுளின் மகனா? என்ற ஆக்கத்தை ஜாகிர் நாயக் காப்பியடித்தாரென்று சொல்லும் இவர்கள், அதற்கு முன்பே மர்ஹூம் பழனிபாபா அஹமது அலி அவர்கள் அதைபோன்ற வாதங்களை எழுதி, பேசியிருப்பது அறிவார்களா என்று தெரியவில்லை. ஜாகிர் நாயக்கின் ஆசான், மர்ஹூம் அஹமது தீதாத் அவர்களும் கிறிஸ்தவத்திற்கு எதிரான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்துள்ளார். அவை நூல் வடிவிலும் வந்துள்ளன (50,000 Errors in Bible). இதையும் தாண்டி பைபிளில் பிழைகண்டிருப்பரா என்பதை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளட்டும்.

தர்ஜுமாவிலிருக்கும் அரபு வசனங்கள் நிச்சயம் முந்தைய பிரதிகளிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கும். ஆன்லைன் பிஜே தளத்திலுள்ள முஸ்லிம் ஹதீஸ் தமிழாக்கம்கூட ரஹ்மத் பதிப்பகத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது என்பதாகக் கேள்விப்பட்டேன். இக்கூற்றில் தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் அறியத்தரட்டும்.

இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் வாதம்செய்து பொழுதுகழிக்கும் ததஜவினர் பலர், ஆன்லைன் பிஜே தளத்திலிருந்துதான் காப்பி பேஸ்ட் செய்கிறார்கள். :P

sabeer.abushahruk said...

இதை இந்த மட்டில் விட்டு விடலாம். வாதப் பிரதிவாதங்கள் வேண்டாம்.

adiraimansoor said...

///1435 ஆண்டுகளுக்கு முன்பு முழுமைபடுத்தப்பட்ட மார்க்கத்தில், அதற்குப்பிறகு சொல்லப்படுபவை எல்லாமே குர்ஆன், ஹதீஸ்கள் ஆகியவற்றிலிருந்து காப்பி பேஸ்ட் செய்துதான் சொல்லமுடியும்! அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் ///


அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரைக்காரன் அழகாக விளக்கிவிட்டார் இதைவிட ஒரு விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்
மேலும் இறைவன் மீது ஆணையாக அவர்கள் செய்யும் தவறான கற்பனை கதா பாத்திரத்திற்கு நான் பொறுப்பல்ல அல்லாஹ்விடம் அவர்கள் பதில் சொல்லிகொல்லட்டும்

சகோதரர் யாசிர் சொல்வது போன்று
//நாங்கள் புரிந்து நடைமுறை படுத்தி வரும் மார்க்கமும், நாங்கள் பயின்ற கல்வியும் உங்களைப் போன்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் யாரையும் தீட்டிதீர்க்க விடாமல் தடுக்கின்றது..அதில் உறுதியாகவும் இருப்போம்..///
யார் மீதோ உள்ள கோபத்தில் என்னை திருட்டு பட்டம் கட்டினார்கள் அதையும் நான் சகித்துக்கொண்டு
இதில் நான் பிரச்சனையை கிளப்பி நமக்குள் அடித்துகொள்ள விரும்பததால் மெளனமக காத்தேன் இதையும் வேறுவிதமாக பிரச்சாரம் செய்தால் அவர்களை நான் மன்னிக்கமாட்டேன் மஹ்ஷரில் வந்து நிற்கட்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெட்டி(எழுத்துக்)களை ஒட்டி(வாசி)க்க..!

! ! !

Ebrahim Ansari said...

தம்பி ஜமாலுதீன் அவர்களின் விளக்கம் அருமை!

அனைத்து சகோதரர்களும் புரிந்து கொள்ள வேண்டும். பத்திரிகைத் துறையில் நடைமுறையில் உள்ள சாதாரண விஷயத்தை கஞ்சா அபின் கடத்தியதை கையும் களவுமாகப் பிடித்தது போல் திருடன் என்றெல்லாம் எழுதியவர்களை அல்லாஹ் மன்னிக்கட்டும்.

தம்பி மன்சூர்! நாங்கள் மறந்துவிட்டோம் .நீங்களும் மறந்துவிடுங்கள்.

Unknown said...

http://www.youtube.com/watch?v=8jNs7kCa74Q

Shameed said...

அதிரைகாரனின் விளக்கம் அருமை

Shameed said...

பொறுப்பான அதே நேரத்தில் தக்க பதில் அளித்துள்ளீர்கள் இனியும் வீண் வாதம் வேண்டாம் என்பதே அனைவரின் விருப்பம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு