Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

என் இதயத்தில் இறைத்தூதர் - 14 - வஸ்வாஸ்-வீண் சந்தேகங்கள் (தொடர்கிறது...) 3

அதிரைநிருபர் பதிப்பகம் | June 08, 2014 | ,

வஸ்வாஸ்-வீண் சந்தேகங்கள், குழப்பங்கள் குறித்து குர்ஆன்-ஹதீஸ்
வழிகாட்டல்கள்

114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் "சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்றே இடம் பெற்றுள்ளது.

6173. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்களோடு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டுக் கொண்டிருந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவனை) நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். 'பனூ மஃகாலா' குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் அவனுடைய முதுகில் தட்டும் வரை அவன் (இவர்கள் வந்தருப்பதை) உணர வில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நீ உறுதி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை (ஏறெடுத்து)ப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத்,'நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்' என்றான். 

பிறகு இப்னு ஸய்யாத் (நபி(ஸல்) அவர்களிடம்), 'நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்று) உறுதி கூறுகின்றீர்களா?' என்று கேட்டான். உடனே நபி(ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு, 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டேன்' என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதிடம் '(உன்னிடம்) நீ என்ன காண்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், 'மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் (மனத்தில் தோன்றும் ஓர் உதிப்பாய்) வருகின்றன' என்று சொன்னான். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (ஷைத்தானால் மெய்யும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு, 'நான் (உன்னைச் சோதிப்பதற்காக) ஒன்றை மனத்தில் மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்!)' என்று கேட்டார்கள். 'அது அத்துக் (அத்துதான் எனும் 44 வது )' என்று பதிலளித்தான். உடனே நபி(ஸல்) அவர்கள் 'தூர விலம்ப்பேர் நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது' என்றார்கள். (அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், 'இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனுடைய கழுத்தைக் கொய்துவிடுகிறேன்' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை' என்றார்கள்.194 
வால்யூம் :6 புக் :78

4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

4:120. ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.

7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரிடம் ஷைத்தான் வந்து, "இன்னின்னவற்றைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான் எனத் தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகுதூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. 

புக் :4 இன்னும் நிறைய குரான்,ஹதீஸ்கள் ஷைத்தானின் அரும்பெரும் குணங்களில் ஒன்றான இந்த வஸ்வாஸ்தனத்தை பற்றி விளக்குகிறது.நீங்களே தேடி பார்த்துக் கொள்ளல்லாம்.

மேலும் எளிய முறையில் தேடி படித்துக் கொள்ள கீழ் கண்ட லிங்கை சுட்டுங்கள்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்......

இப்னு அப்துல் ரஜாக்

3 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

சிறப்பானதகவல்கள்-நினைஊட்டல்.மனிதர்களுக்கு தாங்கள்தேடிய சொத்துக்களின்விபரங்களை தவிர மற்றவற்றில்குறிப்பாகமறுமை பற்றி வீன்சந்தேகம் எனும் வியாதி நிறையவே உண்டு.அதற்க்கு இது ஒரு மருந்துஆகலாம்.

sabeer.abushahruk said...

வஸ்வாஸ் சம்பந்தமான தேவையான விளக்கங்களுக்கு நன்றி!

இப்னு அப்துல் ரஜாக் said...

வாசித்த கருத்திட்ட துவா செய்த எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு