Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரிவரியாய் வாழ்க்கை! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | June 02, 2014 | , , , , ,


இவை
உயிரின் மிச்சம்!

வாழ்க்கையை
வாசித்து அறிய
வரிவரியாய் அனுபவங்களைப்
பதிவு செய்து வைத்திருக்கும் சருமம்!

பருவமழை பொய்க்க
நீரின்றி வெடித்திருக்கும்
நீர்நிலை;
நினைவு தப்பியதால்
ஊரின்றி திரிந்திருக்கும்
முதுமை!

எஞ்சிய சுமைகளோடு
இத்தகையோர்
ஏராளம் இவ்வுலகில்!

இவர்கள்
தேடலில்கூட
தெளிவில்லாத ஒரு வெறுமை;
கண்களில் ஒளி மங்கி
கனவுகள்கூட
கைவிட்டுப் போயிருக்குமோ?

பட்ட மரத்தை
விட்டுப்பறந்தன பறவைகள்;
எச்சங்களை மட்டுமே
வாழ்க்கைக் கணக்கில்
மிச்சங்களாய்க் கைப்பற்றுகிறது முதுமை!

எஞ்சிய காலத்தைச் சுமப்பதே
எல்லா சுமைகளைவிடவும்
கனம் கூடியது!

எத்தனை முயன்றாலும்
ஒரு நொடியைக்கூட
கடந்து போய்விட முடியாது...
சுமந்தே தீர வேண்டும்!

தோள் சோர்ந்து
தோல் சுருங்கி
நிஜம் மங்கி
நினை வறுந்து
உணர் விழந்து
உற வகன்று
தனிமை யெனும்
தவம் அழுத்தும் முதுமை!

இந்நிலை
ஏகும் முன்பே
பொய்யுலகில் மூழ்கிடாமல்
உழைத்துப் பெற்றவற்றை
உறவில் பெற்றவர்க்கு
பகிர்ந்தளித்து
மெய்யறிய அன்புணர்த்தி
பாசம் கொள்ளப்
பயிற்றுவித்தால்...

குடல் குளிர கூழூற்றி
உடல் மிளிர உடை உடுத்தி
முதுமையைக் கொண்டாட
உறவுகள் உடனிருக்கும்!

அதுபோது
முதுமை
சுமையாகாமல்
சுவையாகிச் சுபித்திருக்கலாம்!

படமும் கருவும் : S.முஹம்மது ஃபாருக்
யூகமும் எழுத்தும்: சபீர் அஹ்மது அபுஷாருக்

28 Responses So Far:

Shameed said...

//படமும் கருவும் : S.முஹம்மது ஃபாருக்
யூகமும் எழுத்தும்: சபீர் அஹ்மது அபுஷாருக்//

முதுமையும் இளமையும் கூட்டணி அமோக வெற்றி

Unknown said...

Assalamu Alaikkum

Respected brothers,

A poem of much wisdom and direction.

Realizing reality of life in advance to youngsters
and soothing lines for the elders.
The tenderness in one extreme and
the elderness in other extreme of a same stream of a human life.

Jazakallaah khairan

B.Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com.

Ebrahim Ansari said...

//எஞ்சிய காலத்தைச் சுமப்பதே
எல்லா சுமைகளைவிடவும்
கனம் கூடியது!//

மறுக்க முடியாத உண்மையை உணர்த்தும் வரிகள். இதனை அனுபவித்து உணர்பவர்களுக்கு மட்டுமே இந்த வார்த்தைகளின் கனம் தெரியும் .

அனுபவங்களால் பழுத்த பழத்தின் கருத்துக்களை நமது கவிப்பேரரசர் சபீர் அவர்கள் அழகு தமிழில் வடித்துத் தந்துள்ள இந்தப் புதிய முயற்சி இன்னும் தொடர வேண்டுமென்று விரும்புகிறேன்.

Ebrahim Ansari said...

இந்தப் படத்திலிருக்கும் " அப்பா" வின் பக்கத்திலுள்ள மரம் பட்டுப் போனதல்ல.
பராமரிப்பு இல்லாதது.

" அப்பா" வின் நிலையும் அதேதான்.

இப்னு அப்துல் ரஜாக் said...

It's amazing
The poem reflects reality of life and it conveys the truth. Wonderful

இப்னு அப்துல் ரஜாக் said...

It's amazing
The poem reflects reality of life and it conveys the truth. Wonderful

Aboobakkar, Can. said...

//பட்ட மரத்தை
விட்டுப்பறந்தன பறவைகள்;
எச்சங்களை மட்டுமே
வாழ்க்கைக் கணக்கில்
மிச்சங்களாய்க் கைப்பற்றுகிறது முதுமை!//

எப்பொழுதும் சகோ .... சபீர் அவர்களின் கவிதைகளை சற்றே தொலைநோக்குடன் ஆராயும் எனக்கு பிடித்த இந்த வாரிகளை ஒரு ஜப்பானியருக்கு அவர் மொழியில் விளக்கியதும் அவர் அசந்து போனார் ......

sheikdawoodmohamedfarook said...

///மைத்துனர் இப்ராஹீம் அன்ஸாரி சொன்னது ''அப்பா'' வின் நிலையம் அதேதான்// அதுமட்டுமல்ல ''அப்பாவியின்'' நிலையும் அதே! எப்பாவி ஆனாலும் ஆகலாம் அப்பாவி ஆகவே கூடாது!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

முதியவர்களை ஏதோ நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்ப்பதுபோல பார்க்கும் ஒரு மனோபாவம் நம் இளையதலைமுறையினர் பலரிடம் காண முடிகிறது.

முதுமை ஒரு நோயா? அஸ்தஹ்ஃபிர்லா!

மொத்தத் தூரத்தையும் ஓடிக் கடந்து இலக்கைத் தொட்டால் அது வெற்றி எனில், மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து கழித்து முதுமை எனும் இலக்கைத் தொடுவதும் வெற்றியல்லவா?

வென்றவர்களைக் கொண்டாடாமல் புறக்கணிப்பது எவ்வகையில் ஞாயம்? கொண்டாடவெல்லாம் வேண்டாம் மக்களே, குறைந்த பட்சம் திண்டாடாமலாவது பார்த்துக் கொள்வது நம் கடமை மக்களே.

sabeer.abushahruk said...

ஹமீது,

நீங்கள் கூட்டணியாக அடையாளப் படுத்தும் எங்கள் சந்திப்பு நண்பர் அலி வீட்டுத் திருமணப் பந்தலில் நிகழ்ந்தது. பல வருடங்களுக்குப்பிறகு தங்கள் தந்தையைச் சந்தித்ததால் நெடுநேரம் அவர்களைப் பேசவிட்டுக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

கூகுலிலும் பல பிரபல்யமான தத்துவ மேதைகளிடமும் நாம் தேடும் வாழ்வியல் தத்துவங்களும் வழிகாட்ட்ல்களும் நம்வீட்டுப் பெரியவர்களிடம் குவிந்து கிடக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களிடம் சற்றுநேரம் பேசினாலே நம் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்பதே என் பிரகடனம்.

தங்கள் கருத்துக்கு நன்றி.

sabeer.abushahruk said...

//Realizing
reality of life
in advance to youngsters
and
soothing lines for the elders.

The tenderness in one extreme
and
the elderness in other extreme
of a same stream
of a human life. //

Dear brother B. Ahamed Ameen,

Wa alaikkumussalam varah...

Thanks for tagging this post with powerful notes.

I like the way you use your language that you do like a feather; but it DOES work like a chisel and give a well trimmed message.

It is always a kind of good feeling when get appreciated by literals.

Thanks once again.

(Pls find time to pen your thoughts in Adirai Nirubar)

sheikdawoodmohamedfarook said...

மருமகன் சபீரின் கவிதைகளில் தத்துவ வித்துக்கள் பூத்து மலர்கிறது ! ஆழ்ந்து சிந்திப்போர்க்கு அதில் ஒரு பாடம் இருக்கிறது! கால்வரை நீண்ட தாடிவளரும் வரை காட்டில் தவமிருந்த தவசிகள் சொல்லாத தத்துவங்கள் இங்கே எளிதாக கிடைக்கிறது.வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"படிப்பதைவிட படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதால் இலகுவாக மனதில் பதியும் என்பது பள்ளிக்கூடத்தில் தர்மலிங்கம் சார் அடிக்கடி சொல்வது. அதுபோல், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு புரிய வைக்க முடியாதவற்றைப் பட்டறிவு / அனுபவம் பசுமரத்தில் ஆணி அடித்ததுபோல் மனத்தில் பதிய வைத்து விடும்." என்னும் உங்கள் கருத்து நிதர்சனமானது.

ஒரு சொக்காக்கூட போட்டிறாத இந்தப் புகைப்படத் தாத்தாவை ஃபாருக் மாமா என்னிடம் கொடுத்ததும் சட்டெனத் தோன்றிய உணர்வுகளையே இங்கு தமிழில் மொழி பெயர்த்தேன்.

விறுவிறுவென ஓடிக்கொண்டிருக்கும் காலத்தைக் கருத்தில் கொண்டு எனக்காகவும் எழுதச் சொல்லி உள்ளுணர்வு தூண்டியிருக்குமோ? :-)

வாசித்து விமர்சித்தமைக்கு நன்றி காக்கா.

sheikdawoodmohamedfarook said...

//அவர்களிடம் பேசினாலே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்// மருமகன் சபீர்அபுசாருக் சொன்னது.
இது பத்துபிள்ளை பெத்தவளுக்கு தலச்சான் பிள்ளைக்காரி மருத்துவம் பார்க்கும் காலம்! சொல்ஏறும்செய்விகள் யெல்லாம் சீல் வைத்து நாளாச்சு!

sabeer.abushahruk said...

Dear brother ibn Abdul Razaq,

Thanks for your comment. it is so encouraging.

The reality of life nowadays is reallly something to worry about. It slowly but steadily is drifting away from emotional attachment but willingly moving towards materialistic nature.

It is not necessary to learn a lesson on self occurrence but it is ones smartness to learn from other's experience.

So that, we can keep a future prepared ready for us.

thanks.

sabeer.abushahruk said...

//எனக்கு பிடித்த இந்த வாரிகளை ஒரு ஜப்பானியருக்கு அவர் மொழியில் விளக்கியதும் அவர் அசந்து போனார் ...... //

சகோ அபுபக்கர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஜப்பானியர்வரை என் கருத்தை எடுத்துச் சென்ற தங்கள் அன்பிற்கு நன்றி. அவர் அசந்து போனார் என்றால் ஜப்பானிலும் முதுயவர்கள் கவனிக்கப்படுவதில்லையா என்ன? மனிதம் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

நான் வாழ்ந்த, வாழ்ந்து வரும் சவுதி மற்றும் அமீரகத்தில் பெரியவர்கள் மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்ளப் படுகிறார்கள். அழைப்பதில் 'தலதெறிச்ச மாதிரி' பேர் சொல்லி ஒருமையில் அழைத்தாலும் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள்; மதிக்கிறார்கள். நம் நாட்டில்தான் பொருளாதார காரணங்களுக்காக முதியோரை உதறி விடுகிறார்கள்.

மேலும் என் கவிதைகளை தொலை நோக்குப் பார்வையோடு விமர்சிக்கும் தங்கள் பங்களிப்பிற்கு மிக்க நன்றி.

ஒன்று சேர்ந்து நன்றே சொல்வோம்; செய்வோம்.


sabeer.abushahruk said...

ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அந்தக் கல்யாணப் பந்தலில் கால் மனிதர், அரை மனிதர், முக்கால் மனிதர் என பலரைக் கண்டாலும் முழு மனிதராகத் தங்களைக் கண்டேன்; நான் வயதை மட்டும் சொல்ல வில்லை.

குறைந்த நேரமே எனினும் நம் சந்திப்பில் நான் பேசாமல் தாங்கள் பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருக்க விரும்புவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

மற்றுமொரு சந்திப்பில் நெடுநேரம் உரையாட அல்லாஹ் நாடட்டும்.

தங்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி.




Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahrukh,

Thanks a lot for your appreciation and exclaiming at interwoven concepts I tried to arrange in words.

There is an important concept under incubation and revolving around my mind, soon will be delivered as a post in Adirai Nirubar Insha Allah.

Me too eager to meet and have a chat with uncle soon. Insha Allah.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.
www.dubaibuyer.blogspot.com

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அழைக்கும் ,

பல மாதங்கள் கழித்து வரிவரியாய் வார்த்து எடுத்தேன் வலுவிழந்த போகின்ற முதியவர்களின் வாழ்க்கையை. மாஷா அல்லாஹ்


Yasir said...

மாஷா அல்லாஹ்
உள்ளத்தை உருக்கி பிழிய வைக்கும் வார்த்தைகளை கொண்டு கவிதை புனைவதில் கவிக்காக்காவிற்க்கு நிகர் அவர்களேதான்

//வரிவரியாய் அனுபவங்களைப்
பதிவு செய்து வைத்திருக்கும் சருமம்!// வாவ்....

sabeer.abushahruk said...

//
முதுமையும் இளமையும் கூட்டணி அமோக வெற்றி//

ஹமீது,

இப்பதான் சரியான கோணத்தில் உங்கள் கருத்தைக் கவனித்தேன்.

முதுமை - ஃபாரூக் மாமாவா?
இளமை - என்னயத்தானே சொல்றீங்க, ஹாங்?

என்னயத்தானே என்னயத்தானே என்னயத்தானே???

நல்லா சத்தமா கோலாலம்பூர்(ஜாகிர்), சிங்கப்பூர் (ரியாஸ்), ரியாத்(காதர்), சென்னை(ஆஷிக்), ஷார்ஜா(எங்கூட்டம்மா), ஈந்தியா(அலி), தமாம்(தாங்கள்) எல்லார் காதுலயும் வுழற மாதிரி சத்தமாச் சொல்லுங்க.

உண்மையச் சொல்லி கலக்கிட்டீங்க, கை கொடுங்க ஹமீது.

sheikdawoodmohamedfarook said...

//இந்த சந்திப்பில் நான் பேசாமல் நீங்கள் பேசியதை கேட்டுக்கொண்டு.....// கவனித்தேன்.அது ஒரு நல்ல பண்பாடு! ஒருவர் ஒருவிசயத்தை பேசும்போது பேச்சு முடியும் வரை அதை காதுகொடுத்துமௌனமாய் கேட்பது மலேசிய மக்களிடம் நான் கற்ற நல்ல நாகரீகம்! ஆனால்இங்குவாழும் ''கல்தோன்றி மண்......மூத்தகுடியினரிடம்'/ மருந்துக்குகூடஅது இல்லை! ஒருவர் பேசும்போது குறுக்கிட்டு-குறுக்கிட்டு பேசி பேசவந்தவருக்கே''என்ன பேசவந்தோம்?'' என்பது மறந்து இடத்தை விட்டு விடுதலை பெற அல்லாவிடம் துவா செய்வார்! அவர் நல்ல அமல்கள் ஏதேனும் செய்திருந்தால் அல்லா அவரை காப்பான்! இல்லையேல் கூலி நிச்சயம்! நம்நாட்டில் சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் நடக்கும் கூத்துக்களை வெளிநாட்டவர் கண்டுசிரிக்கும்போது அங்குவாழும் இந்தியருக்கு தலை குனிவை தருகிறது.அஸ்ஸலாமு அலைக்கும்.

sheikdawoodmohamedfarook said...

//Me too eager to meet and chat with uncle//Assalaamu Allaikkum Dear marumagan Ahamed Ameen! Me too eager to meet and chat with you! As your father and I were good friends on those greenish school days.The time has forced the men to change their course of Life.We have no exception but to obey the merciless grip of the of the Time. The result, we left school and spread our wings to different directions to find livelihood . I have more and more things to tell, so I hope to meet you soon.You are Welcome.Thank You.Assalaamu Allaikkum.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் எல் எம் எஸ்,

நலம்தானே?

நாளாயிற்று தங்களைக் கண்டும் தங்களிடம் கேட்டும்.

வலுவிழந்து வரும் தருணத்தில் பெரியவர்களுக்கு ஒரு பிரத்யேகப் பிடி தேவைப்படும்; நடக்க தடி உதவுதைப்போல நம் பிடி வாழ்க்கையைத் தொடர உதவும்.

அந்தப் பிடிப்பை நாம் நம் மூத்தவர்களுக்குத் தந்தால் நாம் மூப்பெய்தும்போது நமக்காகவும் காத்திருக்கும் அப்படி ஒரு பிடிப்பு.

sabeer.abushahruk said...

யாசிர்,

நல்லுள்ளம் கொண்ட உங்கள் மனதை நல்லவற்றைச் சொல்லி கவர்வது ஒன்றும் சிரமமில்லை.

அதனால்தான், நான் சொல்லி வரும் செம்மையான பல வாழ்வியல் தத்துவங்கள் தங்களுக்கும் பிடித்துப்போய் விடுகிறது.

உணர்வுபூர்வமான கருத்திற்கு நன்றி.

Ebrahim Ansari said...

இந்தப் படமும் கவிதையும் கருத்துக்களும் பதிலும் மீண்டும் மீண்டும் பார்க்கவும் படிக்கவும் தூண்டுகின்றன.

adiraimansoor said...

///தோள் சோர்ந்து
தோல் சுருங்கி
நிஜம் மங்கி
நினை வறுந்து
உணர் விழந்து
உற வகன்று
தனிமை யெனும்
தவம் அழுத்தும் முதுமை!///

முதுமைக்கு ஆதரவு கொடுக்காத நம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதையல்ல இந்த தொண்டு கண்டு மெய் சிலிர்த்தேன் காலம் தாழ்ந்து படிக்க நேர்ந்தாலும் மனதில் ஆழமாக பதிந்த வரிகள் என் சிந்தனையை உசுப்பிவிட்டது
முதுமைக்கு முக்கியத்துவம்
மிக நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் சபீர்

Thameem said...

எந்த நிலையுலும் யாரும் அப்பாவி இல்லை.

((****தொழுகைக்கு வாருங்கள்! *****))

அல்லாஹ் உங்களுக்கு மன நிம்மதியை தர அவனிடம் வேண்டுகிறேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு