Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - நிறைவுப் பகுதி ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | June 11, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
நபி(ஸல்) அவர்களின் நற்பண்புகளில் முக்கியப் பண்பான பணிவு பற்றி ஒரு சில உருக்கமான சம்பவங்கள் பற்றிய தொகுப்பை சென்ற பதிவில் அறிந்து கொண்டோம், அதிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளையும்  அறிந்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில சம்பவங்களை இங்கே சுட்டிக்காட்டி படிப்பினைகளைப் பெறலாம்.

இதற்கு முன்னர் பதிக்கப்பட்ட பதிவுகளில் பெருமை, பொறாமை, பேராசை இவைகளின் தாக்கங்களுக்கு அப்பார்பட்டவர்களாக உத்தம நபி(ஸல்) அவர்களும், அவர்களை உயிருனும் மேலாக மதித்த சத்திய சஹாபாக்களும் வாழ்ந்துள்ளார்கள் என்பதை எண்ணிலடங்கா ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத் திருப்பு முனையாக திகழ்ந்த பத்ரு யுத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பிறகே இஸ்லாம் அரேபிய பிரதேசத்தில் பல்கிப் பெருக ஆரம்பித்து. உமைர் இப்னு வஹப் (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன்பு, மக்கத்து காஃபிர்களின் அணியின் முக்கிய ஆலோசகராக இருந்தவர், உமர்(ரலி) அவர்களைப் போன்று கடினமானவர், தைரியசாலி. பத்ருப் போரில் காஃபிர்கள் தோல்வியுற்று புறமுதுகிட்டு ஓடினார்கள், அதில் ஒருவர் தான் உமைர் இப்னு வஹப் (ரலி) அவர்கள். இவரின் மகன் கைதியாக முஸ்லீம்களால் பிடிக்கப்பட்டார், இவருடைய தோழர் ஒருவரின் தந்தை போரில் கொல்லப்பட்டார். இதில் ஆத்திரம் கொண்ட உமைர் இப்னு வஹப். நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய வாளில் விஷம் தடவி, முஹம்மது(ஸல்) அவர்கள் மேல் வாள் பட்டு ஒரு வேலை அவர் உயிர் உடனே பிறியாமல் போனால், வாளில் தடவிய விஷம் அவரை நிச்சயம் கொல்லும் என்று நயவஞ்சகத்தோடு மதீனாவை நோக்கி புறப்பட்டார்.

உமைர் இப்னு வஹபின் வருகையைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரை பிடித்து, அவரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டவாரு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் கோபத்தோடு ”யா ரசூலுல்லாஹ் மக்காவிலிருந்து வந்த நான் உமைர் இப்னு வஹப் என்கிற ஒரு நாயை இங்கு பிடித்து வந்துள்ளோன், இவர் வந்த நோக்கம் நமக்கு பாதகமாக இருப்பது போல் தெரிகிறது” என்றார்கள். இந்த சந்தர்பர்த்தில் நபி(ஸல்) அவர்கள் தான் ஒரு ஆட்சியாளர், ஓர் இறைத்தூதர் என்ற பெருமை இல்லாமல், உடனே “உமரே அவரை விட்டுவிட்டு நீங்கள் வெளியே செல்லுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். 

நபி(ஸல்) அவர்கள் உமைர் இப்னு வஹபிடம், 

“நீங்கள் வந்த நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள். 

நபி(ஸல்) அவர்களை சுற்றி உமர்(ரலி) போன்றோர் சுற்றி இருப்பதால், தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த உமைர் இப்னு வஹம், நபி(ஸல்) அவர்களை தான் கொல்ல வந்த நோக்கத்தை சொல்லாமல், வேறு பதில்களாக பொய் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் உமைரை பார்த்து 

“நீ பொய் சொல்லுகிறாய், நீயும் உன் நண்பனும் மக்காவிலிருந்து வாளில் விஷம் தடவி என்னைக் கொல்லவே இங்கு வந்துள்ளாய்” என்று சொன்னார்கள். 

இதனை கேட்ட உமைர் இப்னு வஹப் அவர்கள் கண் கலங்கியவர்களாக “ 

“முஹம்மதே(ஸல்), அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இப்போது சொல்லுகிறேன், நானும் என்னுடைய நண்பரும் உங்களை கொல்ல திட்டம் தீட்டியது உண்மை, நாங்கள் பேசிக்கொண்டிருந்தது யாருக்குமே தெரியாது. ஆனால் இதை அந்த அல்லாஹ் உங்களுக்கு அறிவித்திருக்கிறான். நீங்கள் இறைத்தூதராக இருப்பதால் தான் இந்த தகவல் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, உங்கள் கரத்தை நீட்டுங்கள்” என்று சொல்லி கலிமா சொல்லி தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியில் காத்துக் கொண்டிருந்த உமர்(ரலி) அவர்களை அழைத்து நபி(ஸல்) அவர்கள் 

“உமரே இதோ உங்கள் நண்பர் உமைர் இப்னு வஹப் அவர்களை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்” என்று சொன்னார்கள். உமர்(ரலி) அவர்கள் உமைர் இப்னு வஹப்(ரலி) அவர்களின் தோளின் மேல் கை வைத்து “ 

“அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு பன்றியைவிட கேவலமாக நினைத்திருந்து உங்களை வெறுத்திருந்தேன், இப்போது சொல்லுகிறேன், நான் உங்களை என்னுடைய குழந்தைகளைவிட நேசிக்கிறேன்” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். 

கோபத்தின் உச்சத்தில் இருந்த உமர்(ரலி) அவர்கள், உமைர் இப்னு வஹப்(ரலி) அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்றார்கள் என்றதும், அவர்கள் கோபத்தை மறந்து பணிவோடு அந்த தோழரை அல்லாஹ்வுக்காக நேசித்தார்கள்.

உமைர் இப்னு வஹப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரை கொலை செய்ய வருகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதருக்கு தெரியும். ஆனால் தன்னுடைய பணிவுத்தன்மையால், உமைருடை மனதை கலங்க வைத்தார்கள். தன்னுடைய கோபத்தாலும், வரட்டு கவுரவத்தினாலும், பெருமைத்தனத்தினாலும், பேராசையினாலும், பொறாமை குணத்தினாலும், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய ஹிதாயத்துக்கு எந்த வகையிலும் தடையாக இருக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்களும், அவர்களை பின் தொடர்ந்த சத்திய சஹாபாக்களும் இருந்துள்ளார்கள் என்பதை ஏராளமான ஹதீஸ்களின் மூலம் நாம் அறியலாம். ஆனால் இதே சந்தர்பத்தில் நாம் இருந்தால், என்ன செய்திருப்போம் என்பதை உங்கள் அனைவரின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

அத்துஹைல் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் மற்றும் நபி(ஸல்) அவர்கள் பற்றிய ஓர் முக்கிய சம்பவத்தை நாம் அனைவரும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு ஒரு நாள் அத்துஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் மக்கா கஃபாவில் அன்றைய அவருடைய மத அடிப்படையில் வணக்கம் செலுத்த வந்துள்ளார். இவர் அத்தவுஸ் என்ற ஓரு மிகப்பெரிய கோத்திரத்தின் தலைவராவார். இந்த மிகப்பெரும் கோத்திரத்தின் தலைவரை மக்கத்து குரைஷி தலைவர்கள் சந்தித்து “எங்கள் ஊருக்கு விருந்தினராக வந்த உங்களுக்கு நல்லதையே சொல்ல விரும்புகிறோம், நீங்கள் முஹம்மது என்று ஒருவரை மட்டும் நீங்கள் சந்திக்க வேண்டாம், அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டாம், அவர் நல்லா இருக்கும் குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்துகிறவர்.” என்று அறிவுரை கூறினார்கள். இந்த ஆலோசனையின்படி அத்துஹைல் இப்னு அம்ரு அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்க வேண்டாம் என்பதற்காக காதில் பஞ்சை வைத்துக்கொண்டு கஃபாவிற்குள் வலம் வந்தார். 

ஒரு மனிதர் ஏதோ சத்தம் போடுவது அம்ரு அவர்களின் காதில் விழுந்தது. மக்கது குரைஷிகள் சொன்ன நபர் முஹம்மது இவர்தானோ என்று உணர்ந்து தன்னுடைய காதில் உள்ள பஞ்சை இறுக்கி அழுத்திக்கொண்டார் அம்ரு. மீண்டும் அந்த நபருடைய சத்தம் அம்ருக்கு கேட்டது. உடனே அம்ரு அத்துஹைல் இப்னு அம்ரு அவர்கள் தான் ஒரு நாட்டினுடைய தலைவர், தனக்கும் நல்லது கெட்ட்து பிறித்தறிவது தெரியும் என்பதை உணர்ந்து, காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டு, அந்த முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லுவது நல்லதா கெட்டதா என்று கேட்க ஆரம்பித்தார். தொடர்ந்து முஹம்மது(ஸல்) அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்து, அவர்கள் நிற்கும் இடம் வரைச் சென்றார்கள். ஓர் இடத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள், அப்போது அத்துஹைல் இப்னு அம்ரு அவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, “ முஹம்மதே உங்களுக்கு பைத்தியை பிடித்திருக்கிறது என்று மக்கள் சொல்லுகிறார்கள், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயை என்னால் குணப்படுத்த முடியும், உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்லுங்கள்” என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்..

(இன்னல் ஹம்துலில்லாஹ்! நஃமதுஹு வநஸ்தயீனுஹு மன்(ய்) யஹ்திஹில்லாஹு ஃபலா முழில்ல லஹு. வமன்(ய்) யுழ்லில்ஹு ஃபலா ஹாதிய லஹு. வஅஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அம்மா பஅத்)

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன். நிற்க!'' என்று சொன்னார்கள்.

மீண்டும் மீண்டும் அத்துஹைல் இப்னு அம்ரு கேட்டார் “உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சினை?” என்று, நபி(ஸல்) மேற் சொன்ன அதே ஹம்து ஸலவாத்தை மீண்டும் மீண்டும் பதிலாக சொன்னர்கள். இதனை செவியுற்ற அத்துஹைல் இப்னு அம்ரு அவர்கள் நபி(ஸல்) அவர்களை பார்த்து, 

“நான் எவ்வளவோ சூனியக்கார்ர்களை பார்த்திருக்கிறேன், எவ்வளவோ தலைவர்களை பார்த்திருக்கிறேன், ஆனால் இது போன்று யாரும் சொன்னதில்லை. நீங்கள் ஓர் இறைத்தூதர் தான்” என்று சொல்லி நபி(ஸல்) அவர்களின் கரம் பிடித்து கலிமா சொல்லி இஸ்லத்தை ஏற்றுக்கொண்டார்.

அத்துஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னால் “உனக்கு பைத்தியம், உன்னுடைய புத்தியில் பிரச்சினை, அதனை குணமாக்க என்னால் முடியும்” என்று ஆத்திரமூட்டும் வார்த்தைகள் சொன்னபோதும், நபி(ஸல்) அவர்கள் கோபம் கொள்ளவில்லை, அல்லாஹ்வின் தூதர் அத்துஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்களைப் பார்த்து 

“எனக்கா பைத்தியம் பிடித்துள்ளது? என்னைப் பார்த்தா இந்த கேள்வியை கேட்கிறாய்? நான் பைத்தியக்காரனா நீ பைத்தியக்காரனா? என்று நம்மைப் போல் வீர வசனமாக ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அல்லாஹ்வின் தூதர பணிவோடு கூறியது மேற்சொன்ன ஹம்து ஸலவாத்து மட்டுமே.

நாம் செய்ய ஒரு தவறை நாம் செய்யும் போது நம்முடைய இரத்தம் கொதிக்கிறது, நமக்கு எதிராக பேசியவனை உண்டு இல்லை என்று பார்த்துவிடுவோம் என்று கோபம் நமக்கு வருகிறதே, ஆனால் என்றைக்காவது நம்முடைய இறைத்தூதர் இது போன்ற சம்பவங்களில் எவ்வாறு பணிவோடு அவைகளில் நடந்துக்கொண்டார்கள் என்று எண்ணிப்பார்த்து நாமும் அவ்வாறு நடந்திருப்போமா?

அல்லாஹ்வின் தூதரர் தன்னுடைய நாவினால், ஒரு மனிதன் மானம் இழந்து, மரியாதை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக வாழ்ந்துக்காட்டிச் சென்றுள்ளார்கள். அத்துஹைல் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் ஊருக்கு சென்று தன்னுடைய குடும்பத்திற்கு இஸ்லாத்தை எடுத்துச்சொல்லி அனைவரையும் முஸ்லீம்களாக்குகிறார். பின்னார் கிட்ட்த்தட்ட 90 குடும்பங்களை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து இஸ்லாத்தை எடுத்துச் சொல்லச் சொல்லி அவர்கள் அனைவரையும் இஸ்லத்தில் இணையச் செய்கிறார் அத்துஹைல் இப்னு அம்ரு (ரலி) அவர்கள். இவை எல்லாம் நபி(ஸல்) அவர்களின் பணிவுத்தனமையால் அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துள்ளது என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

நாம் கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும். நம்முடையை பெருமை, நம்முடையை பொறாமை, நம்முடைய வரட்டுப்பிடிவாதம் இவைகளால் நாம் இவ்வுலகில் என்ன சாதித்திருக்கிறோம். ஆனால் நம்மிடம் பணிவுத்தனமை இருந்தால் இவ்வுலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதறகு நம்முடைய வாழ்வின் முன் மாதிரி நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் ஒவ்வொரு சம்பவங்களும் நம் முன்னே உள்ளது. இவைகளை நாம் அதிகமதிகம் அன்றாடம் வாசிக்க வேண்டும், நினைவுபடுத்த வேண்டும், நாமும் அவைகளை கடைபிடித்து, பிறருக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.

இதுவரை 37 அத்தியாயங்களாக என்னால் இயன்றளவு, நான் வாசித்த, கேட்டறிந்த மார்க்க விசயங்களை உங்களோடு ஒரு சிறு தொகுப்பாக பகிர்ந்தளித்துள்ளேன். ‘அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் என்ற இந்த தொடர் பதிவு நிறைவுக்குள் வருகிறது. இன்னும் எழுத எண்ணிடலங்கா மார்க்க விஷயங்கள் இருந்தும் இந்த முடிவை அறிவிப்பது மனதிற்குச் சற்றே கஷ்டமாக இருந்தாலும், வேலைப் பளு, இன்னும் அதிகமாக Facebook (https://www.facebook.com/thowheedtv2) போன்ற சமூகப் பிணைப்பு தளங்களில் மார்க்கம் தொடர்பான விசயங்களை வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பயண்படுத்தி இயன்றளவு தூய இஸ்லாத்திற்காக பணிகள் செய்ய ஆர்வமாக உள்ளேன். இதுவரை வெளிவந்துள்ள பதிவுகள் உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். தொடர்ந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்த அத்துனை நல்லுங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

ஒவ்வொரு வாரமும் இந்த தொடர் பதிவில் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகள் என கண்டிருப்பின் இயன்ற வரை அதனைச் சரி செய்ய உதவிய எங்கள் சபீர் அஹ்மது காக்கா மற்றும் நெறியாளர் ஆகியோருக்கும் மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரா.. !

தொடர்ந்து இந்த பதிவை வாசித்து கருத்துட்ட சகோதரர்கள் மற்றும் தொடர்ந்து தவறாமல் வசித்து வந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும். மிக்க நன்றி. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் என்னுடைய பதிவுகள் நல்ல தலைப்புகளில் இடம் பெற முயற்சி செய்கிறேன். மேலும் காணொளி காட்சி பதிவுகளில் கவனம் செலுத்தவும் முயற்சி செய்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்திற்காக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமைய வல்லவன் ரஹ்மான் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

நமக்கு முன் மாதிரி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள், அவர்களின் பணிவுத்தன்மை நம்மிடம் வர வேண்டும். இது வரை நாம் பணிவற்றவராக இருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்போம், யா அல்லாஹ் எங்களை பணிவுள்ள மனிதர்களாக மாற்றுவாயாக என்று அடிக்கடி து ஆ செய்வோமாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

நிறைவடைகிறது....

M.தாஜுதீன்

14 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவர்களின் உன்னத வாழ்வு பற்றி தொடர் படிப்பினை தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

இன்னும் நிய்யத்படியே பல நல் விசயங்களை தொடர்ந்திட அல்லாஹ் உங்களுக்கு உயர்ந்த ஞானத்தை தருவானாக!

Aboobakkar, Can. said...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் ....நிறைவு பகுதி ......
அருமை தம்பி தாஜுதீன் அவர்களே...கூடாது ....கூடாது .....கூடவே ..கூடாது ....தொடருங்கள் .....மென்மேலும் .......உங்களின் ஆக்ககளுக்கு பின்னூட்டம் இடாதவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர் . அதில் நானும் ஒருவன் உங்களின் ஆக்கங்களை உலகறிய செய்தவர்களில் நானும் ஒருவன் ...இதை இறைவன் அறிவான் .இவர்கள் உங்களின் பதிவிற்கு பின்னோட்டம் விடுபவர்களை விட அதிகம் எண்ணில் அடங்காதவர்கள் கனடா , UK, ஜப்பான் , USA என ....காரணம் வேலை பளு மற்றும் அலுவல்கள் ....

sheikdawoodmohamedfarook said...

மனிதர்களை நல்வழிக்குஇட்டுசெல்லும்நம் ரசூலுலாஹ்[[அலைகிவசல்லம்] அவர்கள் கூறிய கருத்துக்களின் சாரங்களை நெஞ்சில்பதிய தந்தீர்கள்.அதிலிருந்து பலபெற்றேன் பலகற்றேன்.வாழ்த்துக்களும்நன்றியும்.மீண்டும் ஒன்றைஎதிர்பார்க்கிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...


யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

இப்னு அப்துல் ரஜாக் said...

We will miss you brother thajudeen.
Please come up with the new concept. We need more from you.I really enjoyed your articles. May Allah bless you here and hereafter .

Ahmed Ali said...

///நமக்கு முன் மாதிரி நம் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்கள், அவர்களின் பணிவுத்தன்மை நம்மிடம் வர வேண்டும். இது வரை நாம் பணிவற்றவராக இருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்போம், யா அல்லாஹ் எங்களை பணிவுள்ள மனிதர்களாக மாற்றுவாயாக என்று அடிக்கடி து ஆ செய்வோமாக.///.......இன்ஷா அல்லாஹ்...."ஜஸாகல்லாஹு கைரன்"......சகோதரர் தாஜுத்தீன்,....தங்களின் அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்க்கிறோம்....அல்லாஹ் தங்களுக்கு துணை புரிவானாகவும்..ஆமீன்....!!!

sabeer.abushahruk said...

அற்புதமான, குர்ஆன் ஹதிஸ்களின் அடிப்படையில் இம்மைக் காரியங்களை அலசியத் தொடர் நிறைவுறுகுறது என்பது வருத்தமளித்தாலும், தம்பி தாஜுதீன் இதுபோன்றதொரு மார்க்க நினைவூட்டல் பதிவுகளை அடிக்கடி வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்த்துகள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பல விடயங்களில் ஒப்பீடாக அலசிக் கொண்டிருக்கும்போது இன்றையச் சூழலில் இயக்கங்களை வழிநடத்தும் தலைகளின் செயல்களும், நாம் சந்திக்கும் தனிமனிதர்களின் அன்றாட வாழ்விலும் என்று சென்று கொண்டிருந்த அந்த கலந்துரையாடல் சட்டென்று இதே ஒப்பீட்டை நபிகளார் மற்றும் சத்திய சஹாபாக்கள் வாழ்வியலில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துரைக்க முயற்சித்தால் என்ன என்று எழுந்த எண்ணமே...

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் என்ற தலைப்பிட்டு சில வாரங்களே பதிக்கலாம் என்று முடிவுடன் களம் கண்ட தம்பி, மாஷா அல்லாஹ் ! அதற்கென எனது சகோதரன் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அலசல்கள், தேடல்கள் என்று தொடர் சிறப்புற உழைத்ததற்கான பலனை அல்லாஹ்விடமே எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

வாழ்த்தியும், வரவேற்றும் கருத்துக்கள் பதிந்த, தனி மின்னஞ்சல் இன்னும் நேரிலும் கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் !

Iqbal M. Salih said...

அடக்கம், பணிவு பற்றி அண்ணல் நபி (ஸல்) வரலாற்றிலிருந்து அழகாய் எடுத்து எழுதிக்கொண்டிருந்த அன்புச் சகோதரர் தாஜுத்தீன் அபுமஹ்மூத் அவர்களின் இந்த அழகிய செயலை அல்லாஹ் (ஜல்) ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மிகப் பெரும் நன்மைகளை வாரிவழங்குவானாக!

Unknown said...

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை நிருபர் தளத்துடன் பிரிக்க முடியாத பந்தத்துடன் இருக்கும் தம்பி தாஜுதீன் மீண்டும் இன்னொரு உயர்வான கருப்பொருளுடன் கருத்துக்களைப் பொழிய விரைவில் வருவார் என்ற நம்பிக்கையுடனும் துஆவுடனும் மெருகேறி வரும் அவரது எழுத்துப் பணியும் சமுதாயப் பணியும் இன்னும் மெருகேறவும் நல வாழ்த்துக்களுடன்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரை நிருபர் தளத்துடன் பிரிக்க முடியாத பந்தத்துடன் இருக்கும் தம்பி தாஜுதீன் மீண்டும் இன்னொரு உயர்வான கருப்பொருளுடன் கருத்துக்களைப் பொழிய விரைவில் வருவார் என்ற நம்பிக்கையுடனும் துஆவுடனும் மெருகேறி வரும் அவரது எழுத்துப் பணியும் சமுதாயப் பணியும் இன்னும் மெருகேறவும் நல வாழ்த்துக்களுடன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த தொடர் பதிவை வாசித்து கருத்துட்டு, ஊக்கமும் உற்சாகமும் தந்து எனக்காக பிரார்த்தனைகள் செய்த சகோதர, சகோதரிகள் மற்றும் தொடர்ந்து தவறாமல் வசித்து வந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும். மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரா... தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் என்னுடைய பதிவுகள் நல்ல தலைப்புகளில் இடம் பெற முயற்சி செய்கிறேன்.

Yasir said...

ஒரு சிறந்த தொடர்...ஈமானை சுயபரிசோதனை செய்து கொள்ள அழகிய தொடரை தந்த சகோ தாஜூதீன் அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் நல்குவானாக ..ஆமீன்...ரமலான் வருவதால் மீண்டும் ஒரு சிறந்த தொடரை தருவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு...அல்லாஹ் உங்கள் பணிச்சுமை இலேசாக்கி அதற்க்கு உதவ வேண்டும்

இஸ்லாமிய மார்க்கத்திற்காக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமைய வல்லவன் ரஹ்மான் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு