Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 77 1

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2014 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

ஃதிக்ரின் சிறப்பு:

(நபியே) உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் : 7:205)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! (அல்குர்ஆன் : 33:41, 42)

''ஒருவரின் ஒவ்வொரு மூட்டும் தர்மம் செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு தஸ்பீஹ் கூறுவதும், தர்மமாகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ''லாயிலாஹா இல்லல்லாஹ்'' எனக் கூறுவது அனைத்தும் தர்மமாகும். ''அல்லாஹு அக்பர்'' எனக் கூறும் அனைத்தும் தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். தீயதை தடுப்பது தர்மமாகும். லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது இதற்கு ஈடாக அமையும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1432 )

தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் உதாரணம் போலாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)

''அல்லாஹ்வை நினைவு கூரும் வீடு, அல்லாஹ்வை நினைவு கூறாத வீடு ஆகியவற்றிற்கு உதாரணம் : உயிருள்ளது, மரணித்தது போன்ற உதாரணமாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1434 )

 ''என் அடியான் என்னை நினைவு கூரும் இடத்தில் நான் உள்ளேன். என்னை அவன் நினைவு கூர்ந்தால், நான் அவனுடன் உள்ளேன். தன் மனதிற்குள் என்னை அவன் நினைவு  கூர்ந்தால், என் மனதிற்குள் நான் அவனை நினைவு கூர்வேன். ஒரு கூட்டத்தில் என்னை அவன் நினைவு கூர்ந்தால் அவர்களையும் விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நினைவு கூர்வேன் என்று அல்லாஹ் கூறினான்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1435)

''இறைத்தூதர் அவர்களே! இஸ்லாமிய செயல்கள் என் மீது அதிகம் உள்ளன. தொடர்ந்து செய்யும் ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என, ஒருவர் கேட்டார். ''அல்லாஹ்வை நினைவு கூர்வதில் (திக்ரு செய்வதில்) உனது நாக்கு தொடர்ந்து திளைத்து இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு புஸ்ரு (ரலி)   அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1438)

சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் பற்றி உமக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி ''என்றேன். ''(அது) லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ் '' (பாவங்களை விட்டு மீள்தலும், சக்தியும் அல்லாஹ்விடமே தவிர வேறில்லை) என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1443)

எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூருதல்:

அல்லாஹ் கூறுகிறான்:

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
( அல்குர்ஆன் : 3:190  )

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ''எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை, நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்). ( அல்குர்ஆன் : 3:191 )

நபி (ஸல்) அவர்கள், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாகவே இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1444)

''ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவில்) ஈடுபட வந்து ''பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷைத்தான வஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா'' என்று கூறினால், அதில் அவ்விருவரிடையே குழந்தை ஏற்பட விதிக்கப்பட்டிருந்தால், அக்குழந்தைக்கு ஷைத்தான் எவ்வித இடைஞ்சலும் செய்ய மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

பொருள்:
அல்லாஹ்வின் பெயரால் (இதில் ஈடுபடுகிறேன்). இறைவா! ஷைத்தானை எங்களை விட்டும் நீக்குவாயாக. மேலும் எங்களுக்கு நீ வழங்கும் குழந்தையை விட்டும் ஷைத்தானை நீக்குவாயாக! (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1445)

தூங்கும் போதும், தூக்கத்திலிருந்து எழும் போதும் கூற வேண்டியவை:

 ''நபி(ஸல்) அவர்கள், தான் படுக்கைக்கு  வந்தால், ''பிஸ்மிக்கல்லாஹும்ம அமூது வ அஹ்யா'' என்று கூறுவார்கள். விழித்தால், ''அல்ஹம்துலில்லாஹில்லஃதீ அஹ்யானா பஹ்த மா அமாதனா வ இலய்ஹின் னுஷூர்'' என்று கூறுவார்கள். ( புகாரி )

பொருள் : 1
இறைவா! உன் பெயரால் தூங்குகிறேன், உன் பெயரால் விழிப்பேன்.

பொருள் : 2
எங்களை உறங்கச் செய்தபின் எங்களை விழிக்கச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனிடமே மீண்டும் திரும்புதல் உண்டு. (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1446) (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
 அபூஃதர் ( ரலி )
அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1408)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

1 Responses So Far:

sabeer.abushahruk said...

அல்லாஹ்வை நினைவு கூர்தலை ஞாபகப் படுத்தும் அருமருந்து,

ஜஸாகல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு