Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 79 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 25, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

பிரார்த்தனையின் சிறப்பு:

அல்லாஹ் கூறுகிறான் :
''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன், எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான். ( அல்குர்ஆன் : 40:60)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் ! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். ( அல்குர்ஆன் : 7 : 55 )

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின்ஷர்ரி மாஅமில்து வமின் ஷர்ரி மாலம் அஹ்மல்'' என்று தன் பிரார்த்தனையில் நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (முஸ்லிம்)

பொருள்:
இறைவா! நான் செய்துள்ளவற்றின் தீங்கை விட்டும் நான் செய்யாதவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1477 )

''மூஃமின்களின் அன்னையே! உங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது, எந்த துஆவை அதிகம் ஓதுவார்கள்?'' என்று கேட்டேன். ''யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக'' என்பதுதான் அவர்களின் துஆவில் அதிகமாக இருந்தது என்று பதில் கூறினார்கள்.  ''

பொருள் : இதயங்களைப் புரட்டுபவனே! என் இதயத்தை உன் மார்க்கத்திலே உறுதிபடுத்துவாயாக! (அறிவிப்பவர்: ஷஹ்ரு இப்னு ஹவ்ஷப் (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1489 )

''நபி(ஸல்) அவர்கள் அதிகமாக துஆ செய்வார்கள். அதில் எதையும் நாங்கள் மனனம் செய்ததில்லை. (ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! அதிகமாக துஆ செய்கிறீர்கள். அதிலிருந்து எதையும் நாங்கள் மனனம் செய்யவில்லையே என்று கூறினோம். ''அவை அனைத்தையும் சேர்த்து உங்களுக்கு நான் கூறட்டுமா?'' ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கய்ரி மா ஸஅலக மின்ஹு நபிய்யுக முஹம்மது(ஸல்), வஅஊது பிக மின் ஷர்ரி மஸ்தஆப்த மின்ஹுநபிய்யுக முஹம்மது(ஸல்), வஅன்தல் முஸ்தஆனு, வஅலய்கல் பலாஃகூ, வலா ஹவ்ல, வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்று கூறுவீராக! எனக் கூறினார்கள்.

பொருள்:
இறைவா! உன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னிடம் கேட்ட நல்லவற்றை அனைத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன். உன் நபி முஹம்மது (ஸல்) உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமையானவற்றை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ உதவி செய்ய கோரப்படுபவன். உன்னிடமே நான் கேட்டவை உண்டு. எந்த திரும்புதலும், சக்தியும் உன்னிடமே தவிர வேறில்லை.  (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள் (திர்மிதீ)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1492 )

முன்னே இல்லாதவருக்கும் துஆ செய்வதின் சிறப்பு:

அல்லாஹ் கூறுகிறான் :
''அவர்களுக்குப் பின் வந்தோர் எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன் : 59 : 10)

(நபியே) உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்பு கேட்பீராக! (அல்குர்ஆன்: 47:19)

''தன் சகோதரருக்காக மறைவாக துஆ செய்யும் ஒரு முஸ்லிம் அடியாரிடம் ''உனக்கும் இதுபோல் உண்டு'' என ஒரு மலக்கு கூறாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுதர்தா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1494 )

''முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக செய்யும் துஆ, ஏற்கப்பட்டதாக அமையும். (துஆ செய்கிற) அந்த மனிதரின் தலை அருகே, நியமிக்கப்பட்ட வானவர் இருப்பார்.அவர் தன் சகோதரருக்காக நல்லதை கேட்கும் போது, வானவர், ''அப்படியே ஆகட்டும்! உனக்கும் இதுபோலவே உண்டு'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1495 )

துஆவின் சட்டங்கள்:

''ஒருவரால் நன்மை செய்யப்பட்டவர், அதை செய்தவருக்கு ''ஜஸாக்கல்லாஹு கய்ரன் (அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூறினால், (நன்றி கூறி) அவரைப் புகழ்வதில் அவர் அதிகமாக நடந்து கொண்டவராவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1496 )

''உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள். உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். உங்களின் சொத்துகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள். (இப்படி துஆ செய்வது மூலம்) நீங்கள் அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டு, உங்களுக்கு அவன் துஆ ஏற்கின்ற அந்த நேரத்திற்கு உட்பட்டு விட வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1497 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

2 Responses So Far:

sabeer.abushahruk said...

கருணையாளன் அல்லாஹ்விடம் கேட்பதில் உள்ள ஆறுதல் வேறு எதிலும் கிடைப்பதில்லை.

நேற்று நள்ளிரவு தொடங்கி 2:30 வரை ஷார்ஜா காஸ்மியா பள்ளியில் நடந்த கியாமுல்லைல் தொழுகைக்கு ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியே நிரம்பி வழிய நின்று தொழுது அழுது கேட்ட துஆக்கள் கபூலாகி விட்டதாகவே ஓர் உணர்வு என்னுள் வியாபித்தது.

நினைவூட்டலுக்கு நன்றி, அலாவுதீன்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

''மூஃமின்களின் அன்னையே! உங்கள் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் போது, எந்த துஆவை அதிகம் ஓதுவார்கள்?'' என்று கேட்டேன். ''யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக'' என்பதுதான் அவர்களின் துஆவில் அதிகமாக இருந்தது என்று பதில் கூறினார்கள். ''

பொருள் : இதயங்களைப் புரட்டுபவனே! என் இதயத்தை உன் மார்க்கத்திலே உறுதிபடுத்துவாயாக! (அறிவிப்பவர்: ஷஹ்ரு இப்னு ஹவ்ஷப் (ரலி) அவர்கள் (திர்மிதீ)


ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு