Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அண்ணே...! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2014 | , , , , ,


(எங்கள் N A S ஸார்)

தெரியாதவற்றைப் பற்றி
விரிவுரை யாற்றும்
பேராசிரியர்களுக்கு மத்தியில் – இவர்
புரிய வைத்து
அறி வமுதம்
அள்ளித் தருபவர்

நான் இவரிடம்
படித்த மாணவன் அல்லன் – இருப்பினும்
பிடித்த மானவன்!

பாடம் நடத்துவதும்
பாராயாணம் கற்பிப்பதுவும்
பேராசிரியர் வழி – இவரோ
பாடங்களை இதயங்களில்
நட்டு வைப்பவர்;

பின்னர்
களை எடுப்பது
இவருக்குக்
கைவந்தக்
கலை!

உதைத்துப் போதிக்காமல்
பாடங்களை
மூளைக்குள்
விதைத்துச் சாதிப்பவர்

பாடங்களை
வாசித்துக் காட்டுவதைவிட
பையன்களை
நேசித்துப் புகட்டுபவர்

இயற்பியல் விற்பண்ணர்
இயல்பில் நற்பண்பர்

ஒரு விநாடிப் புன்னகை
ஒரு மில்லிமீட்டர் வளர்ந்து
மேலுதட்டிற்கும் கீழுதட்டிற்கும்
இடையே
ஒரு மில்லிமீட்டர் பிளப்பதே
மனித நேயத்திற்கான
முதல் விதி
என்று
பெளதீக ரீதியில்
புன்னகைக்கச் சொல்பவர்

மலைபோல் கஷ்டத்தையும்
சிறிய தீர்வு கொண்டு
பனி போல் நீக்க
நெம்புகோல் தத்துவத்தை
நம்புங்கள் என்பவர்

காந்தத்தைப் போன்ற
சாந்தப் பேச்சால்
எதிர் முனைகளையும் ஈர்ப்பவர்
நேர் முனகள் விலக நேர்ந்தால்
தன் முனைப்பால்
முனை மாற்றி கவர்பவர்

இழிவானவற்றை நிந்திக்கும்
தெளிவான சிந்தணை;
மொழி ஆற்றல் மிக்க
பொளிவான பழகுமுறை!

மூத்தோரை மதிப்பவர்
இளையோரால் மதிக்கப்படுபவர்
எதிரிக்குக் கூட
இன்னல் எண்ணாத
மின்னல் ஒளியொத்தத்
தூய அன்பாளர்

துவக்கத்தில்
பெளதீகப் பட்டம்
பின்னர்
கணினிச் சட்டத்தில் தேர்ந்து
கல்லூரியின்
கணினித்துறைக்குத் தலைவரான
கனி நீ என்றி னிப்பவர்

எளிமையில்
இவர் ஒரு கோட்டோவியம்
எனினும்
அறிவுக்கோட்டைக்கு அரசன்

இவருக்கு அதிரை
பிறந்த வீடுமல்ல புகுந்த வீடுமல்ல
'அண்ணே' என்று அன்பைப்
பகிர்ந்த ஊர்!

இவரின் வாழ்நாட்களில்
அதிக விடியல்கள்
அதிரையிலேயே உதித்தன

அண்ணமிட 'அக்கா'க்களும்
உண்ணீர் உண்ணீர் என ஊட்ட
ஊர்க்காரர்களும்
ஆதரிக்கும் செல்லம் இவர்!

பந்து விளையாட்டில் - இவர்
வந்து தலைகாட்ட
ஆட்டம் கலைகட்டும்!

தீராத விளையாட்டுப் பிள்ளை – எனினும்
மாற்றான கொள்கைக்கு
தலை யாட்டுவ தில்லை!

இந்தப்
புன்னகை மன்னர் - இன்னும்
புகழோடு
நீடூழி வாழ (வாழ்த்த வயதில்லை)
ஆண்டவனை வேண்டுகிறேன்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

22 Responses So Far:

Ebrahim Ansari said...

//நான் இவரிடம்
படித்த மாணவன் அல்லன் – // படிக்காத மாணவரிடமிருந்தே இப்படி ஒரு கவிதையைப் பரிசாகப் பெற இயலுமென்றால் மரியாதைக்குரிய பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களுடைய நல்லியல்புகள் எல்லோருக்கும் விளங்கும்.

எனக்கு பேராசிரியருடன் இதுவரை நேரடியான சந்திப்பு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் எங்கள் ஊரின் பல மாணவர்கள் ஆசிரியருக்கேன்று ஒரு ரசிகர் மன்றம் வைத்தால் அதை என் ஏ எஸ் அவர்களுக்கே வைப்பார்கள் என்பது நிச்சயம்.

இறைவன் பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களுக்கு நன்னலமும் நீண்ட ஆயுளும் தந்து கல்விப் பணியில் காலமெல்லாம் கடமையாற்ற கருணை புரிவானாக!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அந்த சாரைப் பற்றிய நல்ல புகழ் மாலை!

Iqbal M. Salih said...



அண்ணன் NAS அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு, சுவையான விபரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதற்கு நேரம்தான் இல்லை! அட்லீஸ்ட் ஒரு கவிதையாவது எழுதிய சபீருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

sheikdawoodmohamedfarook said...

மகனார்N.A.S.ஸின்எளிமையானநல்லகுணம்எல்லோர்க்கும்பிடிக்கும். 'தான்ஒருபேராசிரியர்'என்றஇடைவெளியேதன்மாணவர்களிடமோ மற்றவர் களிடமோ அவர்காட்டியதில்லை. ஏனெனில் அவருக்கே தான்ஒரு பேராசிரியர் என்பதே தெரியாது. மருமகன்சபீரின்கவிதைவரிகளுக்குபொருத்தமானவர்.வாழ்த்தசொல்ல எனக்குவயதிருப்பதால்இன்னும்1000நோன்பு பெருநாள் பிறைகள் கண்டு வாழ வாழ்த்துகிறேன்.

Ebrahim Ansari said...

தம்பி சபீரின் கவிதை வரிகளை ஒரு சகோதரியிடம் படித்துக் காட்டினேன்.

சபீர் அவர்கள் மீது உரிமையுடன் கோபித்துக் கொண்டார்கள். இப்படி சபீர் சில உண்மைகளை மறைக்கலாமா என்று உரிமைப் பிரச்னை தொடுக்கிறார்கள். ( மன்னிக்கவும் தமிழக சட்டமன்றம் நடை பெறுகிறது)

இது கேள்வி நேரம் முடிந்ததும் எழுப்படவேண்டிய கேள்வி இல்லை.

அவசரத் தீர்மானம் போட்டு விவாதிக்க வேண்டிய விஷயம். காரணம் மகளிர் தொடர்புடையது.

சகோதரி யின் குறை : எத்தனை முறை என் கையால் கொடுவாக் கருவாடும் மொச்சைக் கொட்டை கத்தரிக்காய் போட்டு ஆனம் காய்ச்சிக் கொடுத்திருப்பேன் அந்த ஆசிரிய மகனுக்கு? அதைப் பற்றி ஒரு வரி இல்லையே என்பதே அம்மையாரின் புகார் மனுவின் அம்சம்.

நான் சொன்னேன் அதற்கென்ன? அதையே தலைப்பாக வைத்து தம்பி சபீரை ஒரு சானட் ( Sonnet) எழுதும்படிக் கேட்கிறேன். அது உங்கள் கருவாட்டு ஆனத்தைவிட சுவையாக இருக்கும் என்றேன்.

சரிதானா? என் வாக்குறுதி நிறைவேறுமா?

அதிரை.மெய்சா said...

சாரைப் பற்றி சமத்தாய் ஒரு கவி
உன் ஒவ்வொரு வரிகளுக்குள்ளும்
ஒளிந்து கிடப்பது
குருவின் மரியாதியுடனான
குசும்பு வார்த்தைகள்
வார்த்தைகளை
பின்னிப் பிணைந்து எழுதுவதற்காக
உனக்கு P H D பட்டம் தரவேண்டும்.

சாரை சோர்வில்லாமல் உயர்த்தியிருக்கிறாய்
நல்லாருக்கு நண்பா

sabeer.abushahruk said...

காக்கா,

கொடுவாக் கருவாடு
ஒருவா திண்ணாலும்
மறுவா கேக்கும் ருசி -தெருத்
தெருவா திரிஞ்சாலும்
தருவார் கெடையாது
அதுவா அடங்கும் பசி

அதே வீட்டோட
ஒரே மாடியிலே
இதே வாத்தியோடு
எனக்குக் கெடச்சதோ
விலாங்கு மீனும் அப்பமும்

எந்த வேளையிலே
அங்க போனாலும்
திங்காம வந்தது எவுக?

இந்த வாத்திக்கு
சொந்த உடன்பிறப்பா
ஊட்டி வளத்ததும் அவுக!

Ebrahim Ansari said...

தம்பி!

தங்களின் தன்னிலை விளக்கம் ஏற்கப்பட்டது. ஒரு சிரிப்பு அதை அங்கீகரித்தது.

அதே போல இன்னொரு அவசரக் கூட்டம் தேங்காய்ச் சோறு, கருவாட்டுக்கறி விருந்தோடு நானும் பங்கேற்க நடைபெறுமா என்று ஏங்குது நெஞ்சம்.

சமைத்துத்தர கரங்கள் தயார். கலந்துகொள்ள உறுப்பினர்கள் தயாரா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு காலத்தில் 'சார்' எல்லாம் நம்மைச் சாராதவர்களாக இருந்த நிலை மாறி, 'சார்'கள் எல்லாம் நம்மைச் சார்ந்தவர்களாக அமைந்தது சமகாலம் !

நானோ அருகிலிருந்து பழகியவன் அல்ல, ஆனால் அவரோடு பழகிய என் நண்பர்கள் 'சாரை'ப் பிழிந்தெடுக்க கையில் மாட்டாத குறையாக புகழ்வார்கள் !

எங்கள் கவிக் காக்காவின் வரியில் சித்திரமாகத் தெரிந்த பிம்பம் குணச் சித்திரமாக காட்டுகிறது !

sheikdawoodmohamedfarook said...

குற்றாலஅருவிபோல்கொட்டும்கவிதைகளுக்கு’கொடுவாகருவாட்டுக் கறியும் தேங்காய்சோறுமென்ன? கருவாட்டுக்கடலும் தேங்காமரதோப்பும் கொடுக்கலாம்.வரத்தயாரானால்கொடுக்கத்தயார்!எல்லோரும்ஒன்றாக வர வாய்ப்பு இல்லாதபோதும் வசதிபோல் தனித்தனியாக வரலாம். [ஒருசந்தேகம்!மசக்கைகாரிபுளிச்சமாங்காய்மேல்மனஸுபட்டதுபோல் ‘கொடுவாகருவாட்டுக்கும்தேங்காய்சோத்துக்கும்’மைத்துனர்இனா.அனா. .மனஸுபட்டமர்மம்என்ன?]

sabeer.abushahruk said...

காக்கா / மாமா,

28/07/14 முதல் 26/08/14 வரை நான் ஊரில்தான். சம்பந்தப்பட்ட கூட்டுத் தீணிப்பண்டாரங்களான முகமது அலி, ஹமீது யாவரும் ஊரில்தான்.

ஒரு பெருமகிழ்வான சந்திப்பும் ஆக்கபூர்வமான சிந்தனைகளும் சாத்தியமே, இன்ஷா அல்லாஹ்!



//கம்பன் கனா!

எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்

வசந்த பவன் தயிர்சாதம்I
வாலையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில் :/

இப்படி ஒரு டாக்குமென்ட்ரி காணொளி உருவாக்கும் திட்டமும் உண்டு!

Ebrahim Ansari said...

ஒரு மாதம் ஊரில் . நல்ல செய்தி. இப்போதே கோடியக்கரைக்கு போன் போட்டு கொடுவாக்கருவாட்டுக்கு ஆர்டர் சொல்லி விடுகிறேன்.

மச்சான்! நான் மனசுப் படவில்லை. அந்தக் காலத்திய அந்த ஆனமும் சோறும் பலமுறைகள் ஆவணப் படுத்தப்பட்டிருந்தன.

விட்டால் ஐ நா சபை பாரம்பரிய உணவு வகைகளில் சேர்த்துவிடுவார்கள் போலத் தோன்றியது.

ஆனால் நான் ருசித்ததில்லை. ஆகவே அந்தப் பட்டாளத்துடன் பகிர்ந்து கொள்ளவே நினைத்தேன்.

ZAKIR HUSSAIN said...

N.A.S அண்ணனை பற்றி கவிதை எழுதுவதாவது முடிகிறதே என சந்தோசப்படவேண்டியதுதான்.

நிகழ்வுகளை எழுதினால் பல எபிஸோட் தாண்டும். கவிதை ..ஸ்டாம்புக்கு பின்னால் நாவல் எழுதும் முயற்சி.

sheikdawoodmohamedfarook said...

28/7/14 to26/8 /14கோடியக்கரை கொடுவாகருவாடும் கோக்கோ நட்ரைஸும் ரெடி! 'வருக!வருக'யெனவரவேற்க்கிறோம்.

Yasir said...

எல்லோருக்கும் பிடித்த எங்கள் சாரைப்பற்றி(நான் அவரிடம் படிக்கவில்லை பழகி இருக்கின்றேன்)....கவிதை மூலம் வாழ்த்த கவிக்காக்காவால் மட்டுமே முடியும்..பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு பெருமைப்படுத்த சார் முழுத்தகுதியானவரே.....

அப்துல்மாலிக் said...

NAS சார் அவர்களின் வாழ்வியல்களை ஆசிரியர் எப்படியெல்லாம் இருக்கனும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக எடுத்து புத்தகமே எழுதலாம். பெரும்பாலானவர்கள் தன்வீட்டுப்பிள்ளை என்றே கவனித்துவந்தனர். அன்னார் நம் கல்லூரிக்கும் நமக்கும் கிடைத்த வரப்பிரசாதம். வல்ல இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆரோக்யமான் ஆயுளை தரவேண்டும் என்று துஆ செய்கிறேன்..., சபீர் காக்காவின் கவித்துவம் சொல்லிப்பாராட்டனும்னு தேவையில்லை..

Shameed said...

இயற்பியல் தராசில் அண்ணனை எடை போட்டு கவிதையிலும் இயற்பியல் சொன்னவிதம் அருமை

Shameed said...

அண்ணன் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பாடம் படித்து கொடுக்கவில்லை கல்லூரிக்கு வெளியேயும் பாடம்படித்து கொடுத்தார்கள் நாங்களெல்லாம் அவரிடம் கல்லூரிக்கு வெளியோ படித்த பாடத்தால் இன்றைக்கு இறைவன் உதவியால் நல்ல நிலைமையில் உள்ளோம்

sabeer.abushahruk said...

அண்ணன் என் ஏ எஸ் சாரை வாழ்த்தி புகழ்ந்த எல்லா சகோதரர்களுக்கும் நன்ற்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

என்னடா "அண்ணே!" ன்னு போட்டிக்கீங்க ? என்று ஒருத்தர் கேட்டார்..

ஏனுங்க ! "அண்ணே !" ன்னு தலைப்புல ஏதும் சூசமம் இருக்கா ?

கவிக் காக்கா - ஆன்சர் ப்ளீஸ் !

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Abusharuk,

Thanks for the nice poem on NAS sir. He is my beloved teacher , a mentor and respected colleague who have been influencing my studies, writing, and work. Even a single drop of his encouragement uplift our enthusiasm and spirit. May Allah bless him and give long healthy life.

Thanks and best regards
Meet you soon in Adirai.

B. Ahamed Ameen from Adirai.

sabeer.abushahruk said...

Wa alaikkumussalam bro. Ahamed Ameen,

See you in sha Allah!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு