Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 8 [பதிக்கப்பட்டதிலிருந்து....] 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2014 | , , ,

வாக்கு கொடுத்தல்

எந்த விதமான விசயமாக இருந்தாலும் சரி வியாபார விசயங்கள் என்று வந்து விட்டாலே 'வாக்கு" என்பது மிக முக்கியம். இதில் வேலையாட்கள் சம்பந்தப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் அதே முக்கியத்துவம்தான். ஏனெனில் வாக்குக்கு பணமதிப்பீடு என்று ஒன்று இருக்கிறது.

பணம் அவாங்கிக்கொண்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவை எந்த அளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இனிமேல் அப்படியே அந்தரத்தில் தான். உங்கள் நல்ல பெயர் கெட்டு குட்டிச்சுவராக எளிதான வழி....' கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் நடந்து பாருங்கள்" . இதை ஏன் இவ்வளவு நெகட்டிவ் ஆக எழுதி புரிய வைக்க வேண்டும் என நினைக்கலாம். இதில் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும் எனும் நிதர்சனம்தான்.


தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் வாக்கு மிக முக்கியம். தொடர்ந்தாற்போல் உங்கள் வீட்டில் இருக்கும் சின்ன பிள்ளைகள் கேட்கும் பொருட்களை ' வாங்கித்தர்ரேன்' என சொல்லி அதை வாங்கி கொடுக்காமல் இருந்து பாருங்கள்... வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில பெரிய தொழில்களில் எத்தனையோ ப்ராஜக்ட் நடந்தேராமல் போனதற்கு காரணம் அதை வழிநடத்தும் அந்த கார்ப்பரேட் லீடர்களின் வாக்கு சுத்தமில்லாமல் இருப்பதுதான். இங்கு [மலேசியாவில்] சில நிறுவனங்கள் சாலை / நெடுஞ்சாலை கட்ட கான்ட்ராக்ட் எடுக்கும்போது அதற்கான அறிவிப்பு பலகையில் [Project Board]   இல் வேலை தொடங்கும் தேதி / முடிவுறும் தேதி என குறிப்பிடுவார்கள்.  அதில் இப்போதைக்கு 100 % ப்ராஜக்ட்,  முடிவுறும் தேதிக்கு முன்னால் ப்ராஜக்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடுவிடுகிறது. இங்குள்ள இது போன்ற நிறுவனங்கள் 'முடிவுறும் தேதி" க்குள் வேலையை முடிப்பதைத் தனது நிறுவனத்தின் கெளரவமாக கருதுகிறார்கள். நிறுவனங்களுக்கே இப்படி என்றால் 'உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.

Image maker

நமது எண்ண ஒட்டங்களை ஒரு வெண்திரைக்கு ஒப்பிடலாம். அதில் நீங்கள் என்ன விதமான காட்சிகளையும் ஓட்டலாம்.
  • ஒரே சோகம் / பணப்பற்றாக்குறை.
  • 'என்னை நிந்தித்து விட்டார்கள், / “என்னை வச்சி முன்னேறி என் முதுகில் குத்திட்டாய்ங்க!!” [பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]
அல்லது
  • நான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இறைவன் எனக்கு ஓவ்வொரு விசயத்திலும் உதவி செய்துகொண்டே இருக்கிறான்.
  • எனது தொழிலில் வரும் சவால்கள் பிறகு என்னை உயர்த்த காரணமாக இருக்கிறது.
  • எனக்கு நல்ல குடும்பத்தையும்,நண்பர்களையும் இறைவன் அருளியிருக்கிறான்.


இப்படியும் காட்சிகளை திரும்ப திரும்ப ஓட்டலாம் . The CHOICE  is YOURS.

வாழ்க்கையில் முன்னேர ஏணிமரத்தையும் , எஸ்கலேட்டர்களையும் நாம் தயாரித்துக்கொண்டிருக்கும்போது நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும். இங்கு நம் கைகள் என சொன்னது நமது எண்ணத்தை.

முதன் முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. அந்த நாற்காலியை வடிவமைத்தவர் நிச்சயம் நம்பியிருப்பர். நாற்காலியில் உட்கார்ந்தால் சிரமம் குறையும் என்று..அப்படியானால் நாற்காலியை செய்து முடிக்குமுன் அதன் தோற்றத்தை அவர் பார்க்க முடிந்தது.  அப்படித்தானே?....அப்படி யென்றால் உங்களின் சந்தோசமான / ஆரோக்யமான / வசதியான வாழ்க்கையை பார்க்க உங்களினாலும் முடியும். அப்படி பார்க்க முடியவில்லை என்றால் தடையின் காரணம் நாமாகத்தான் இருக்க முடியும். பதிலை வெளியில் தேடி புண்ணியமில்லை எனவே நீங்கள் எப்படி உருவாகப்போகிறீர்கள் என்பதை புத்தாக்கம் [CREATE] செய்வதும் “நீங்கள்” தான். Creativity யின் வகைகளை பிறகு வரும் வாரங்களில் படிக்கலாம்.

உங்களைப்பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து ரிஜிஸ்டராகும் ப்ராசஸ் Sub conscious Mind க்குள் பதிவாகி விட்டால் அதை மீறி நீங்கள் செயல்படுவதில்லை. மற்றும் தொடர்ந்து எண்ணப்படும் எண்ணங்கள் செயலுருவமாகிறது. எனவே மனைவியை கைநீட்டி அடித்துவிட்டு சில [வீர] கணவன்மார்கள் "திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector  கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.

Image Maker ல் எளிய வழியும் உண்டு. அதுதான் copycat. மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து முன்னேறுவது. இதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை. வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து அப்படியே அதை நாமும் செய்வது. இதற்கு நாம் ஒருவரை Mentor  ஆக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர் எப்படி தொழில் செய்யும்போது பேசுகிறார்/ எப்படி உடை உடுத்துகிறார் / இப்படி எல்லாவற்றையும் ஈயடிச்சான் காப்பியடிப்பதுதான் இதன் சிஸ்டம். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைக்கும் சாதனை களை ஒரு 70% நிறைவேற்றிவிடலாம். ஒன்றும் செய்யாமல் வழியும் தெரியாமல் 'பேய்முழி" முழித்துக் கொண்டிருப்பதற்கு இது தேவலாம் எனும் ரேஞ்சில்தான் பெரும்பாலான விற்பனை நிறுவனங்கள் Multi Level Marketing /   தொழில்துறைகள் / வெள்ளைக்காரர்களின் செமினார்கள் சொல்லிக்கொடுக்கிறது.  

எனக்கு ஏன் இதில் உடன்பாடில்லை என்கிறேன் என்றால்.. நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது.

எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’  என்று சொல்லும்"  அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். 

உங்களை தாழ்த்தி அவரை உயர்த்தி இறைவன் படைத்திருப்பான் என்று சொல்ல / எழுத என்னால் முடியாது.

மற்றும் ஒரு வழிகாட்டியாக / தலைவராக ஏற்றுக்கொள்ள எம்பெருமானார் நபி முஹம்மத் [ ஸல் ] அவர்களைத்தவிர யாரும் அந்த நிலைக்கு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை நான் முஸ்லீமாக இருப்பதற்காக எழுதவில்லை. எம்பெருமானாரின் வாழ்க்கையை, ஆட்சித்திறமையை , சுபிட்சத்தை நோக்கி தன் மக்களை நடத்திச்சென்ற ஒப்பற்ற Leadership quality ஐ ஓரளவு படித்தவர்கள் அப்படித்தான் எழுதமுடியும்.

See you in next episode…. with lot of light readings…
ஏற்றம் தொடரும்...
ZAKIR HUSSAIN

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//மற்றவர்கள்செய்வதைஅப்படியேசெய்துமுன்னேறுவது//இதில்எனக்குஉடன்பாடில்லை//மருமகன்ஜாகீர்சொன்னது. இதுசொந்தமுயற்ச்சியில்சாதனைசெய்து முத்திரைபதிக்கும்Gentilman policy. இது மலேசியாபோன்ற நாடுகளுக்கே செல்லுபடியாகும். .இந்தியாபோன்றநாடுகளுக்குசெல்லாது.அந்தGentilman policyயைதூக்கி குப்பையில்போட்டுவிட்டுகுறுக்குவழியில்அல்லதுஎவன்தலையை யாவது தடவி நீகாஸுபணத்தோடுஊருக்கு வந்தால்தான் அட்லீஸ்ட் உன் மச்சினன்மகன்கல்யாணபத்திரிக்கையாவதுஉன்வீடுதேடிவரும். ''அதையெல்லாம்நான்விரும்பவில்லை''யென்றுநீசொன்னால் உன்பேர் ஜாகிர்அல்ல.''இரண்டாம்புத்தன்''. என்கருத்தைசிலர்மனவியாதிஎன்றும் சொல்வார்கள். சிலர்அனுபவம் என்றும், சிலர் Observation என்றும் சொல்வார்கள். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில்கற்றுக்கொள்ளமுடியாது.வாழ்வின்வொவ்வொரு கால கட்டத்தில் தான்கற்றுக்கொள்ளமுடியும்.காலமேசிறந்தபோதகன்.

ZAKIR HUSSAIN said...


அன்பு மிக்க எஸ் முஹம்மது பாரூக் மாமா அவர்களுக்கு.

நீங்கள் சொல்வது உண்மைதான். இதில் எனக்கும் ஸ்ட்ராங் ஆக மறுத்து சொல்ல எண்ணமில்லை. நான் இப்போது ஒரு ஆர்டிக்கில் எழுதிக்கொண்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் அது அ.நி யில் பதியப்படும்.

அதில் 'மெஷின்" என்ற தலைப்பை படிக்கவும். அதில் உங்கள் கருத்துக்கும் என் எழுத்துக்கும் ஒற்றுமை இருக்கும்.

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother Mr. Zakir Hussain

Good thoughts on trusthworthyness, imitating and mentorship.

Trustworthiness is the cornerstone o a good personal character, and very important for practicing personal and business ethics.

There is nothing wrong in imitating someone in the beginning. "Fake it till you make it". Doing everything by starting from the beginning requires great effort and may give uncertainty in one's endeavor. Business franchise systems are great examples successfully implemented imitating business ideas. Franchises like KFC, McDonald's, Subway, Texas Chicken etc are good examples for imitating the formula given by the original company. I mean no need to reinvent the wheel.

Mentoring providing several advantages to personal or businesses as it reduces the learning curve. An individual or business or government can have great edge when they have mentor or consultant who provides ongoing guidance, training and monitoring the developments. Its a smart practice to have a mentor. Once the mentee become master and able to function independently, then individuality and originality is absolutely possible.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Shameed said...

/ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயர்களும் புயலில் அடித்துக்கொண்டு போகும் மரம் மாதிரி நம் பெயரும் வேரோடு அறுத்து எறியப்படும்//

//வீட்டில் இருக்கும் பல்லிக்கு உள்ள மதிப்பு கூட நமக்கு இருக்காது.//

//உப்பு /மிளகாய் சேர்த்துக்கொள்ளும் நமக்கு அது அதிகமாக இருக்கவேண்டும்.//

//[பேக்ரவுன்ட் ம்யூசிக் யாரை வேண்டுமானாலும் நீங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் ]//

//நம் கைகள் நமக்கு 'பள்ளம்' தோண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும்//

//முதலில் நாற்காலி எப்போது கண்டு பிடித்து இருப்பார்கள்?. தரையில் உட்கார்வதில் சிரமத்தை உணர்ந்த போது. //

//திடீர்னு' ஆத்திரம் வந்துடுச்சி என்பதெல்லாம் போலீஸ் பயன்படுத்தும் Lie Detector கருவியில்லாத தெனாவெட்டாக இருக்கலாம்.//

//எனக்கு உடன்பாடில்லை என்பதற்காக அது வொர்க் அவுட் ஆகாது என அர்த்தமில்லை//

//நமது வேலைகளில் தனித்தன்மை போய்விடும். உங்களுடைய ஸ்டைல் என்று எதையும் சொல்ல முடியாது//.

//எப்போது ஒருவரை நாம் Mentor ஆக ஏற்றுக்கொண்டோமோ அதிலிருந்து நமது புத்தி நம்மை " Second Best’ என்று சொல்லும்" அப்படியானால் யார் அந்த “First Best’ நீங்கள் ஏற்றுக்கொண்ட அந்த Mentor தான். //

வார்த்தைகளை கையாள்வதில் கரைகண்டவர் கட்டுரையாளர்

இப்னு அப்துல் ரஜாக் said...

வரிக்கு வரி அழகான விளக்கம்
ஒவ்வொரு கருத்தும் டானிக்
அல்லாஹ் அருள் செய்வானாக

அப்துல்மாலிக் said...

ஜாஹிர் காக்கா, உங்க கட்டுரையை படிக்கும்போது ஒரு புத்துணர்ச்சி உண்டாவதில் எந்தவித சந்தேகமுமில்லை...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு