Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 86 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

அல்லாஹ் கூறுகிறான்:

இரகசியம் பேசுதல் நம்பிக்கை கொண்டோரைக் கவலை கொள்ளச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்து ஏற்படுவது. (அல்குர்ஆன் : 58:10)

''மூன்று பேர்கள் இருந்தால், மூன்றாம் நபரை விடுத்து இரண்டு பேர்கள் இரகசியம் பேச வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1598)

''நீங்கள் மூவராக இருந்தால் ஒருவரை மட்டும் விட்டு விட்டு, இருவர் ரகசியம் பேச வேண்டாம். ஆனால் மக்களோடு சேர்ந்திருந்தாலே தவிர. இது அவரை கவலைப்படச் செய்யும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1599)

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் : 58:10)

''பூனையை அது இறந்து போகும் வரை சிறை வைத்த பெண்ணொருத்தி வேதனை செய்யப்படுகிறாள். இது விஷயமாக நரகிலும் வீழ்கிறாள். அதை அவள் அடைத்து வைத்திருந்த போது அவள் அதற்கு உணவளிக்கவும் இல்லை. அதை நீர் அருந்தச் செய்யவும் இல்லை. மேலும் பூமியின் புழு பூச்சிகளை அது உண்பதற்கும் அவள் அதை வெளியே விடவும் இல்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1600)

''கால்நடைகளுக்கு எதுவும் கொடுக்காமல் கட்டிப் போடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1602 )

''வசதி உள்ளவர் (கடனை திருப்பி அளிப்பதில்) தாமதம் செய்வது அநீதமாகும். உங்களில் ஒருவர் கடனை நிறைவேற்ற ஒப்படைக்கப்பட்டால், அவர் (அதை) நிறைவேற்றட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1611)

''தன் அன்பளிப்பைத் திரும்ப வாங்குபவன், தன் வாந்தியை தானே உண்ணும் நாயைப் போன்றவன்.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)  (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1612)

''இறைவழியில் பயன்படும் குதிரை ஒன்றை (ஒருவருக்கு) அன்பளிப்பாக வழங்கினேன். தன்னிடம் அதை வைத்திருந்தவர் அதை வீணாக்கி விட்டார். எனவே, அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். அதை அவர் குறைவான விலைக்கு விற்பார் என எண்ணினேன். நபி(ஸல்)  அவர்களிடம் (இதுபற்றி) கேட்டேன். ''அதை நீ விலைக்கு வாங்காதே! அதை உனக்கு  அவர் ஒரு திர்ஹமிற்கு கொடுத்தாலும் உன் தர்மத்தை திரும்பப் பெறாதே! தன் தர்மத்தை திரும்பப் பெறுபவன், தன் வாந்தியை திரும்ப உண்பவன் போலாவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1613)

''வட்டியை உண்பவனையும், உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்து விட்டார்கள்.'' (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1615 )

''மறுமை நாளில் தீர்ப்பு கூறப்படும் மனிதர்களில் முதல் நபர், இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராவார். அவர் கொண்டு  வரப்படுவார். தனது அருட்கொடையை அவரிடம் அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக நீ (உலகில்) என்ன செய்தாய்?''  என அல்லாஹ் கேட்பான். ''உனக்காகவே போரிட்டேன். இறுதியில் கொல்லப்பட்டேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''பெரும் வீரர்'' என்று கூறப்படவே நீ போரிட்டாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு முகம் குப்புற அவரை நரகில் போட கட்டளையிடப்படும்.

அடுத்தவர், கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆனை ஓதியவருமாவார். அவர் கொண்டு வரப்படுவார். அவரிடம் தன் அருட்கொடையை அல்லாஹ் எடுத்துக் கூறுவான். அவரும் அறிந்து கொள்வார். ''இது விஷயமாக (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என்று கேட்பான். ''நான் கல்வியைக் கற்றேன். பிறருக்கும் கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை  ஓதினேன்'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய். ''அறிஞர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ கற்றுக் கொடுத்தாய். ''நன்கு ஓதுபவர்'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக குர்ஆனை நீ ஓதினாய். அவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு, ''அவரை முகம் குப்புற நரகில் போடுங்கள்'' என கட்டளையிடப்படும்.

அடுத்து, அல்லாஹ்வினால் அனைத்து செல்வங்கள் பெற்ற வசதியானவரை கொண்டு வரப்படும். தன் அருட்கொடைகளை அவருக்கு அல்லாஹ் அறிவிப்பான். அதை அவரும் அறிந்து கொள்வார். ''இதிலே (உலகில்) எப்படி நடந்து கொண்டாய்?'' என அல்லாஹ் கேட்பான். ''எந்த வழியில் செய்யப்படுவதை நீ  விரும்புவாயோ அந்த வழியில் உனக்காக நான் செலவு செய்தேன்!'' என்று கூறுவார். ''நீ பொய் கூறுகிறாய் ''கொடையாளி'' என்று கூறப்பட வேண்டும் என்பதற்காக நீ இதைச் செய்தாய். இவ்வாறே (மக்களால்) கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறுவான். பின்பு நரகில் முகம் குப்புற அவரைப் போடுங்கள் என கட்டளையிடப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1617 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இரகசியம்/

இந்த வாரம் அருமருந்து... சாட்டையாக சுழன்று நிறைய எச்சரிக்கை விடுக்கிறது...!

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...!

sabeer.abushahruk said...

இத்தகைய அருமருந்துகளைப் பொது விருந்தாகப் படைக்கும் அலாவுதீனுக்கும் அதிரை நிருபருக்கும் நன்றியும் துஆவும்.

ஜும்ஆ தொழுகையாலும் விடுமறை நாள் என்பதாலும் எனக்கு வித்தியாசமாக நிறைவுறும் வெள்ளிக் கிழமைகள் அருமருந்துத் தொடரால் மேலும் மெருகேறுகிறது.

வாழ்த்துகள்

இப்னு அப்துல் ரஜாக் said...

The real medicine ( Quran and sunnah)
Thanks bro alavudeen kaka

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு