Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கிள்ளித் திரிந்த காலம்! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | September 07, 2014 | , ,

என்
சிந்தையில் நிற்கும்
ஆசான்கள்
சிலரைப் பற்றிய
சிறு குறிப்பு இது

இந்தச்
சிறு மதியினனைச்
சீர் திருத்தி
பெரு மதியினனாக்கிய
ஆசான்களுக்கு
வெகு மதியாக
இந்த நினைவலைகள்

'ரெண்டாம்' நம்பர் பள்ளியில்
'அஞ்சாம்ப்பு':

துள்ளித் திரிந்த
பள்ளிப் பிராயத்தில் - காதுமடல்
கிள்ளித் தண்டிக்கும்
கணக்கு வாத்தி வகுப்பில்

இரும்புக்கை மாயாவியின்
பாம்புத்தீவு சித்திரக்கதை...
பாடத்தைக் கவனிக்காமல்
மறைத்து வைத்துப் படித்ததை
வாத்தி
முறைத்துப் பார்த்து பிடித்துவிட

தீயிட்டுக் கொளுத்தி அதை
வெளியே வீசியதும்
காது நுணி வலியை
கையால் தடவிக் கொண்டே
கண்கலங்கி நின்றதுவும்
கலையாத நினைவுகள்

கா மு மே பள்ளி
ஏழாம் வகுப்பு கணக்கு:

வீட்டுப் பாடம்
கேட்டு வாங்கி பார்த்து
ஏட்டில் இல்லாததால்
நறுக்கென்று கிள்ளினார்
நாக ரத்திணம் ஐயா

அழுத முகம் கண்டு
'ஆரடிச்சா?' என்று கேட்ட
அம்மாவுக்கு
கிள்ளியதைச் சொன்னாலும்
கிள்ளுப்பட்ட
இடம் காட்ட முடியாமல்
வெட்கி
மலங்க மலங்க விழித்ததுவும்
மறக்கவொண்ணா நினைவு

மேல்நிலை வகுப்பு அறிவியல்:

வாத்தியார் வரும்வரை
வகுப்புத் தோழர்களோடு
கலை கட்டியது கச்சேரி

மீசை யில்லா பசங்களுடன்
மேசை யடி மேளத்தின்
ஓசை நயம் கிடுகிடுக்க
வாத்தியார் வந்ததை
பார்த்தது யாரய்யா!

படம் வரைந்து காட்டாமல்
பாடம் நடத்தாத
தர்மலிங்க ஐயா
எங்கள்
கபாலத்தில் வாசித்த
மேலைநாட்டு மேள ஒலி
இன்னும் கேட்கிறது
ஐயா... இன்றும் கேட்கிறது ஐயா!

'வா...இப்டி' என்றழைத்து
நசுக்கிக் கிள்ளும்
நாடிமுத்து சார் நினைவும்

பிரம்படியை மிஞ்சும் வலி
அலியார் சார்
முறைத்துப்
பார்க்கும் பார்வை வலி!

எல்லா ஆசான்களும்
எமக்கு
சொல்லித் தந்ததோ...
மேம்படுத்த!
கிள்ளியதும் குட்டியதும்
பண்படுத்த!

நன்றி ஆசான்களே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
மற்றும் அதிரைநிருபர் பங்களிப்பாளர்கள்

29 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

எழுதறிவித்தஆசான்களுக்குசரிஆசனமும்சரியாசனமும்சரியானநேரத்தில்கொடுத்தசரியானகவிதை!மறைந்தஆசிரியர்களுக்குமறவாமல்ஒரு கவிதாஞ்சலிதீட்டமருமகன்சபீரைவேண்டுகிறேன்.

Ebrahim Ansari said...

Insha Allah we will organize to read this ever memorable Kavithai during the course of to-day's function.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

மறைந்தவர் ஆசிரியர்கள் எனினும் போதனைகள் நிலைத்திருப்பதால் அவர்கள்தம் புகழும் மறைவதில்லை.

குறிப்பாக ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பயிற்றுவித்ததால்தான்...

பில்டிங்கும் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டும் ஸ்ட்ராங்கா இருக்கு.

ஆனா, இப்ப வருகிறவர்க்ளிடம் ஒரு காலண்டர் மாட்டச் சொன்னாக் கூட அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்துவிட்டு "நீ ஆணியே புடுங்க வேணாம்" சொல்லத் தோனுது.

ஏன்னா, இவர்கள் பில்டிங்கு ஸ்ட்ராங்கு (MBA., MSc) ஆனா பேஸ்மெண்ட்டு (ஏழாம் எட்டாம் ஒன்பதாம் வாய்பாடுகள்) வீக்கு!

(நம் இரண்டாம் சந்திப்பு நிகழமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும். அலைச்சல் அதிகமாகிப்போனது. கையிருப்பில் உள்ள கட்டுரையை அனுப்பித் தாருங்கள் மாமா)

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. AbuShahruk,

Expression of painful experience of a naughty student's activities is really funny.

But I used to be obedient student and its rarely impressed in the minds of teachers for being naughty.

I would like to submit my respect and best wishes for all my masters from schools and college I studied.

Those obedient students who respect their masters while studying become masters themselves in the subjects and do great in their lives.

My heartfelt congratulations for all the teachers on the occasion of Teacher's Day

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai

Ebrahim Ansari said...

நாக ரெத்தினம் சாரை நினைக்கும் பொது அதாவது ரத்தினத்தை நினைக்கும் போது முத்தின் நினைவும் வருகிறது. அவரே நாடி முத்து சார்.

அத்துடன் சந்திரன் என்ன சளைத்ததா? ராமச்சந்திரன் சார். இவர்கள்

அனைவருடனும் இனிய நினைவாக நிற்கும் ராஜா எங்க ரெங்கராஜா .

நம்மை உருவாக்கிய உயர்ந்தவர்கள்.

சிங்காரம் பிள்ளையையும் தாமஸ் சாரையும் வாழ்நாளில் மறக்கத்தான் முடியுமா?

ஹாஜா முகைதீன் சாரின் வகுப்பு ஒரு இலக்கியச் சுரங்கம்.

பட்டபபெயர்களுக்குப் பஞ்சமில்லாமல் இருந்தாலும் நம்மோடு உறவாடி நம்மை உருவாக்கிய இந்த ஆசிரியர்களால்தான் நாம் உயர்ந்து நிற்கிறோம்.

பெயர் விடுபட்ட பலரை மறந்துவிட்டதாகப் பொருளல்ல.

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

சபீர்........பள்ளி ஆசிரியர்களைப்பற்றி நான் முன்பு 'நியூ இந்தியாவில் ' கமென்ட் எழுதி [ நல்லபடியாகத்தான் ] அதற்கு அஹமது இப்ராஹிம் சார்
[ தலமை ஆசிரியர் ] இடம் அளவுக்கு அதிகமாக அறிவுரை வழங்கப்பட்டு கால் கடுக்க நின்றதை நினைவு படுத்தியது உனது இந்த பதிவு.

Ebrahim Ansari said...

அலியார் சாரிடம் அடிவாங்காமல் தம்ப்பியவர்களில் நானும் ஒருவன்.

அவர் என்னை அடித்ததில்லை ; காரணம் நான் அவரிடம் படித்ததில்லை. நாங்கள் பள்ளியை விட்டு வெளியேறும் வருடத்தில் அவர் ஆசிரியராகப் பணியாற்ற இணைந்தார்.

அதே போல் மேகலா டீச்சர், எனக்கு ஒரு வருடம் ஜூனியர்.

பல மாணவர்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதையுடன் பேசுவது மகிழ்வைத் தருகிறது. இன்றைய விழாவில் அவர்களையும் கவுரவப் படுத்துகிறோம்.

ZAKIR HUSSAIN said...


இளமையில் இருந்தது எதுவும் மறக்காதாமே......

லேசாக எண்ணெய் வழியும் அந்த காலேஜ் ஸ்டாப் டீக்கடை சமுசா.......

கூர்மையான வேலித்தாவரத்தில் கிறுக்கிய பெயர்.

புதிதாக வாங்கிய புத்தகத்தின் வாசம்

தூரத்தில் தண்டவாளத்தில் புறப்படும்போது சறுக்கிக்கொண்டு சுத்தும் எல்ஜி லோகோமோடிவ்வின் ரயிலின் ஒசை

பரீட்சை எழுதும் அமைதியினூடே பேசிக்கொண்டே போகும் மீன் சுமப்பவர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகள்...

காதில் விழும் செம்படவர்தெரு....நேற்று நடந்த கல்யாணத்துக்கு இன்றைக்கு போடும் ' சோலம் வெதைக்கையிலே...சொல்லிப்புட்டு போற புள்ளே யில் தொடங்கும் "வசனம்"

கடைசிப்பரீட்சை பேப்பரை எழுதிக்கொடுத்து விட்டு வரும் சந்தோசம்.

பள்ளிகூடத்து பக்கத்தில் நம் வாழ்க்கையுடன் ஒன்றிப்போன புளிய மரம்.

விளையாட்டுத்திடலில் கட்டப்பட்ட கலர் பேப்பர்களின் காற்றில் போராடும் சங்கீதம்.

நெய்னா பாயின் அவசர நடை.

ஹாஜாமி சாரின் இடது கை எழுத்தில் போர்டில் தெரியும் தெளிவான கணக்கும் , தமிழ் எழுத்துக்களும்.


அலியார் சாரின் கண்டிப்பும் அவர் நடத்தும் பாடம் ஈசியாக புரியும் அதிசயமும்.

சீனிவாசன் சாரின் அயன் கலையாத சட்டையும் ...செல்லமான அன்பும்.

ஃப்ரான்சிஸ் சாரின் இங்லீஸ் கவிதையும் ..அவரது கனிவும்...

இப்படி அடுக்கிக்கொண்டே போக வசந்தங்கள் பல இருந்தும்...இப்போதைக்கு அதை எல்லாம் வாழ முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது

sabeer.abushahruk said...

ஆசிரியர்கள் பற்றிய நினைவுகள் என்றுமே இளமையானவை. சென்ற வருட நினைவலைகள் கீழே:

நன்றி ஆசான்களே!

எழுத்தறிவித்தவன் இறைவன்
எடுத்தறிவித்தது நீவிர்
சொல்லையும் எழுத்தையும் கோத்து
சிந்தனை விதைத்தீர் யாத்து

அன்னை கற்பித்த ஒலிகளுக்கு
அர்த்தம் கற்பித்த ஆசான்களே
தந்தை போதித்த வார்த்தகளை
தரமாய் விளக்கிய வாத்திமாரே

முன்னேற்றம் வானுயரம்
முதற்படியாய் வாய்த்தோரே
முத்தமிழும் அறிவியலும்
கணக்கோடு கற்பித்தீர்

பயணப்பட்டு செல்லுகையில்
பயிற்றுவித்தப் பாடங்களே
வழித்துணையாய் வாய்த்திடவே
வாரித்தந்த வள்ளல்களே

அறியாமை பிணி நீக்கி
அழியாத கல்வி தந்தீர்
கல்லாமை இழி வகற்றி
காலமெல்லாம் வாழச் செய்தீர்

கணிதம் சொல்லித் தந்ததொரு
மனிதருள் மாணிக்கம்
வாழ்க்கையின் புதிர்களுக்கும்
சூத்திரம் சொன்னவர் நீங்கள்

இயற்பியல் பாடத்தில்
ஈர்ப்பு இயல்பானது
பெளதீக வாத்தியாரின்
புல்லரிக்கும் போதனையால்

கான்வெண்ட் ஆங்கிலமோ
நுணிநாக்கில் தடுமாற
கல்வெட்டன பதிந்தது
கற்றுத்தந்த தோரணை

இன்முக ஆசான்களின்
இலகுவான வகுப்பெடுப்பால்
தமிழ்தாஸானோம்
பன்முகம் கொண்டோம்

அரசியலும் சமூகமும்
அத்தனை கல்வியிலும்
அடிப்படைகள் கற்றுத்தந்தீர்
அகிலத்தை வென்றிடவே

எழுத்தறிவித்தீர் ; எழுந்து நின்றோம்
நீதிபோதித்தீர் ;நேர்கொண்டு பார்த்தோம்
நடத்தியப் பாடத்தால் ; நிமிர்ந்து நடந்தோம்
மாக்களாகிப்போகாமல் ; மக்களாக்கினீர்கள்

தங்களை வருத்தி
எங்களை உயர்த்திய
அத்துணை ஆசான்களும்
அன்பான நன்றியும் அக்கறையோடு துஆவும்
நீங்கள் நிடூழி வாழ்க!!!

Ebrahim Ansari said...

வாவன்னா சார் வகுப்பில் ஆடும் சொற் சிலம்பம் வரலாறு படைக்கத்தக்கது

அதற்காக வாடி என் மச்சி வெங்காய பஜ்ஜி உன் உடம்பைப் பிச்சி என்றெல்லாம் சொல்லமாட்டார்.

அதிரை புட் பால் அசோசியேஷன் என்று ஒன்று இருந்தது. அதை ஆங்கிலத்தில் A F A என்று அழைப்பார்கள் . ஒரு முறை அந்த டீம் நிறைய வெற்றிகள் பெற்றது.

அது பற்றி வாவன்னா சாரின் கமென்ட் :AFAரம் :
.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஈனா ஆனா காக்கா,

நினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்ட சில ஆசிரியர்களை வாழ்நாள் முழுக்க நானும் என்னைச் சார்ந்தோரும் வாழ்த்திக்கொண்டேதான் இருப்போம். காரணம், இவர்கள் படித்துக் கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. நம் முன்னேற்றத்தில் கடும் நாட்டம் கொண்டு நம்மைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார்கள்.

அவர்களில் மிக முக்கியமான ஆசிரியர்கள் எனக்கு இருவர்.

ஒருவர் மதிப்பிற்குரிய SKM ஹாஜா மொய்தீன் சார் அவர்கள். +1ல் என்னைச் சிறந்த மாணவனாக அறிவித்து, தன் மைத்துனர் அவர்களிடம் சொல்லி என்னை சவுதிக்கு அனுப்பியவர்கள். எண்ணிலடங்கா செய்திகள் உண்டு ஸாரைப் பற்றிச் சொல்ல.

அடுத்தவர் மதிப்பிற்குரிய லியாக்கத் அலி ஸார் அவர்கள். பாடத்தை நடத்தாமல் புகட்டுபவர். மதிப்பிற்குரிய ரங்கராஜ் சார் விதைத்த அடிப்படை அறிவியல் அறிவை ஒட்டி, அறிவியலில் தீவிர நாட்டம் ஏற்படுத்தியவர். என்னைப் பிரத்யேகமாக கவனித்துக் கொண்டதைப்போன்றதொரு உணர்வை ஊட்டியவர்.

மதிப்பிற்குரிய ராமதாஸ் சார் ஷன்முகம் சார் தாஜுதீன் சார் போன்றவர்களும் நன்றிக்குரியவர்களே.

sabeer.abushahruk said...

வாவன்னா சாரின் நாநயமும் நாணயமும் சித்திரமும் சிரிமுகமும் மிகவும் பிரசித்தி எனினும் நாங்கள்லாம் வீவிங் க்ளாஸ் போய் ஆடை நெய்தோம். பல் துலக்கும் முக்கியத்துவம் பற்றி நன்றாக கற்றுக்கொண்டோம்.

sabeer.abushahruk said...

Wa alaikkumussalam dear brother B. Ahamed Ameen,

Thanks for reading this post and sharing your school memories.

I was also a quite student when teacher in class; but very naughty if left with friends. Yet, we never crossed our limits.

sheikdawoodmohamedfarook said...

R.V.என்றுஅன்புடனும்மரியாதையுடனும்அழைக்கப்பட்டராஜாமட விஸ்வநாதன்ஸார்.அவர்எங்களுக்குஆசிரியர்மட்டுமல்லஎங்களுக்கு தந்தையும்மாகிகாத்ததோடுஒருநல்லநண்பன்போல்எங்களோடுகூடிகடல் கரைதெருவில்வாலிபால்விளையாடியவர்.நாங்களெல்லாம்[அலியார்ஸார்ஹாஜாமொஹிதீன்ஸார்]படித்தபள்ளிதஃவாபள்ளிக்குஅருகிலிருந்தது. அதில்எத்தனையோதூண்கள்இருந்தது.அவைகள்அசையாமல்பள்ளியே தாங்கியது.அசைந்துதாங்கியதூண்ஆர்.வி.ஸார்.கல்லூரிஅமைவதற்கும் அவரும்ஒருகாரணம்.அவர்ஆன்மாவின்பிரார்த்திப்போம்.

Yasir said...

அல்ஹம்துல்லில்லாஹ்....ஒகோ என்று இல்லாவிட்டாலும் ஒரளவிற்க்காகவாது வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதற்க்கு எங்கள் ஆசிரியர்கள் போட்ட பேஸ்மெண்டும் அதனை கேட்டு செயல்படுத்தியதும்தான் காரணம்....ஜாஹீர் காக்காவின் கருத்து ஸ்கூல் ஞாபகத்தை அதிகமாகவே கிளறிவிட்டுவிட்டது

sheikdawoodmohamedfarook said...

//அவர்ஆன்மாவின்பிரார்த்திப்போம்//''இதைஅவர்ஆன்மசாந்திக்குபிரார்த்திப்போம்''என்றுதிருத்திவாசிக்கவும். ஆர்.வி.சாருக்குதமிழகஅரசுநல்லாசிரியர்பட்டம்கொடுத்துபாராட்டியது! இன்றையநிகழ்வுதொடங்கும்முன்நம்மைகடந்துமறைந்தஆசிரிய பெருமக்கள்அனைவருக்கும்எழுந்துநின்றுஒருமூன்றுநிமிடமௌனஅஞ்சலிசெய்தால்நன்றாகஇருக்கும்என்பதுகருத்து.

sabeer.abushahruk said...

ஜாகிர்,

உன் பள்ளி நினைவுகளில் பல எனக்கும் மின்னலடிக்கிறது. நீ அவற்றை ஒரு கவிதைபோல நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறாய்.

ரிசல்ட் வைக்கப்பட்டிருக்கும் வகுப்பறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த "பாஸா ஃபைலா"

"கனமழை காரணமாக பள்ளி இன்று 5 பொழுதோடு முடியும்" என்று சர்க்குலர் வந்த பிறகு நின்றுபோகும் மழைநாள்.

நல்ல மார்க்கோடு வகுப்பில் தரப்படும் விடைத்தாள்கள்.

ஸ்போர்ட்ஸுக்கு நாம் விரும்பும் லீடரின் ஹவுஸில் சேர அழைக்கப்படும்போது.

இப்படி எத்தனையோ இன்னுமிருக்கின்றன.


Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

மிக அருமையாக நடைபெற்று நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

முழு விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…
அன்பானவர்களே!

மிக அருமையாக நடைபெற்று நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

முழு விபரங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில்.//

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் !

இன்ஷா அல்லாஹ்....

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் அக்பர்
அருமையான மலரும் நினைவுகள் காக்கா. நீங்கள் கிள்ளு வாங்கியது ராம மூர்த்தி சாரிடம்தானே!

sabeer.abushahruk said...

தம்பி இப்னு அப்துர்ரஸாக்,

ஆமாம். அங்கேயுமா?

யாசிர்,
மாண்புடை மாணவரான நீங்கள் அடி வாங்கியிருக்க மாட்டீர்களே?

அதிரை.மெய்சா said...

கிள்ளித்திரிந்த காலம் ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் அற்புதப்படைப்பு
இத்துடன் துள்ளித் திரிந்த காலத்தையும் கொஞ்சம் நீ சொல்லியிருக்க வேண்டும். இக்கவியை வாசிக்கும்போது அப்படியே என்னை நம் பள்ளி வாழ்க்கைக்கு இழுத்துச் சென்று விட்டது. என்மனதைக் கிள்ளி விட்டுச் சென்றது.மனதை விட்டு நீங்கா நம் பள்ளித் தோழர்கள் k.s.a.சாகுல் ஹாதி,அன்வர் தீன்,நம்மை விட்டு மறைந்த மர்ஹூம் அன்வர்,அஸ்லம் , அப்துல் காதர் இன்னும் பல நட்புக்கள் மனக் கண்முன் தோன்றினர். வாழ்வில் என்றும் மறக்கமுடியாத ஒரு இனியநாட்கள். நன்றி நண்பனே.!

Yasir said...

//மாண்புடை மாணவரான நீங்கள் அடி வாங்கியிருக்க மாட்டீர்களே?// ஆமாம் காக்கா...ஹாஜி மற்றும் அலியார் சாருக்கே நான் செல்லப்பிள்ளையென்றால் பாருங்களேன்.....நன்றி காக்கா

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நானும்தான் யாசர்! மேலும் இரண்டாம் நம்பர் பள்ளியில் ஆரம்பத்தில் அடிவாங்கியிருக்கிறேன். எவ்வளவு சேஸ்டை செய்தாலும் காதிர்முகைதீன் பள்ளியில் யாரிடமும் அடிவாங்கிய அனுபவம் இல்லை! எல்லாருக்கும் நான் ரொம்ப செல்லம்!ஆனால் நீங்கள் நல்லாப்படிச்சதால நான் நல்ல தோழமையுடனும் ,சுமாற படிச்சாலும் நல்ல எண்டர்டெயினர் என்பதாலே!ஹஹஹஹஹ்ஹஹ்ஹ!!!!

crown said...

அலியார் சாரிடம் பல முறை வகுப்பு டெஸ்டையே தள்ளிபோட வைத்த பெருமை எம்மை மட்டும் சாரும்!சாரும் சிரித்துக்கொண்டே வெள்ள பயல உன் தோலை உரிச்சி அந்த உச்சில தொங்க விடனும்னு சொல்லி கிட்டே!அடுத்த நாள் டெஸ்ட் என மாற்றி இருக்கிறார் காரணம் நம்மிடம் உள்ள கெத்தும் அவருக்கு நான் ரொம்ப நல்ல மாணவன்!அழியாறு என்பதையே கிண்டலாக அவர்முன் அலியார் என படித்திருக்கிறேன்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு...!

பள்ளிக்கூட ஃபேர்வெல் பார்ட்டி அன்னைக்கு அங்கே இங்கே ஓடி வேலை செய்து கொண்டிருந்த நான், பார்ட்டி நடக்கும் வகுப்பிபிற்குள் நுழையும்போது அங்கிருந்த படி ஏறும்போது சற்று தடுமாறி கீழே விழப்போனேன். உள்ளே இருந்த நாடிமுத்து சார் "அப்பவே சொன்னேன் 'படி'டா 'படி'டா ன்னு கேட்டாத்தானே... என்றதும் அங்கிருந்தவர்கள் அனைவருமே சிரித்தனர் அவரின் சமயோசிதம் அப்படி இருக்கும்.

sabeer.abushahruk said...

மெய்சா,

நீ சொல்லும் பள்ளி நண்பர்களும் அந்தக் காலகட்டமும் மறக்க இயலாதவை.


கிரவுன்,

படிக்கவில்லையோ என்று கவலையாக இருந்தது. உள்ளேன் ஐயா வுக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு