Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 89 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

''ஒரு விஷயத்தில் கெட்டப்பேச்சு இருப்பின், அது அச்செயலை கெடுக்காமல் இருப்பதில்லை. மேலும் ஒரு விஷயத்தில் வெட்கம் கொள்வது இருப்பின், அதை அது மெருகூட்டாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1735 )

இறைவா! நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!  இறைவா நீ நாடினால் எனக்கு அருள் புரிவாயாக!'' என்று உங்களில் ஒருவர் கேட்க வேண்டாம். கேட்பதில் உறுதியாக இருக்கட்டும். ஏனெனில், நிச்சயமாக எவரும் அவனை நிர்பந்தம் செய்ய முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது:

''எனினும், உறுதியாக கேட்கட்டும். ஆசையை பெரிதாக்கிக் கொள்ளட்டும்! ஏனெனில், அவனுக்குக் கொடுக்க எதுவும் பெரிதல்ல'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1743 )

"ஒருவர் பிரார்த்தனை செய்தால், கேட்பதை உறுதியாக கேட்கட்டும். ''இறைவா! நீ நாடினால் எனக்குக் கொடுப்பாயாக என்று கூற வேண்டாம். நிச்சயமாக  அவனை நிர்பந்தம் செய்பவர் எவருமில்லை'' என்று நபி(ஸல்) கூறினாhர்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1744)

''இமாமுக்கு முந்தி தன் தலையை உங்களில் ஒருவர் உயர்த்தினால், அவரின் தலையை கழுதையின் தலை போல் அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது கழுதையின் உருவமாக அவர் உருவத்தை அல்லாஹ் ஆக்கிவிடுவதை அவர் பயப்பட வேண்டாமா? என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1751 )

''உணவுத் தயாராக இருக்கும் போதும், மல ஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழுவது கூடாது'' என்று நபி(ஸல்) கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)     (ரியாளுஸ்ஸாலிஹீன்:1753 )

''கப்ருகளை நோக்கிக் தொழாதீர்;கள். அதன் மீது உட்காராதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமர்ஸத் என்ற இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்:1757 )

''தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டுவிட்டால், கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகை கூடாது என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1759 )

''(வாரம் முழுதும் உள்ள) இரவுகளில் ஜும்ஆ இரவை மட்டும் வணங்கிடத் தோந்தெடுக்காதீர்கள். மேலும் மற்ற நாட்கள் இருக்க வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கத் தேர்ந்தெடுக்காதீர்;கள். ஆனால், உங்களில்  ஒருவர் தொடர்ந்து நோன்பு வைத்திருக்கும் போது அந்த நாள் வந்தால் குற்றமில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1760 )

''ஒருவர் ஜும்ஆ நாளில் மட்டும் நோன்பு வைக்க வேண்டாம். ஆனால் அதற்கு முன் அல்லது அதற்கு பின் ஒரு நாள் (நோன்பு வைத்தாலே) தவிர'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1761 )

''கப்ரு பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதற்கும், அதில் கட்டிடம் கட்டுவதற்கும் நபி (ஸல்) தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1767 )

''சாபத்தைத் தரும் இரண்டு காரியங்களைப் பயப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''சாபத்தை ஏற்படுத்தும் அந்த இரண்டு எது?'' என்று மக்கள் கேட்டனர். ''மக்கள் நடக்கும் பாதையில் மல ஜலம் கழித்தல் மற்றும் மக்களுக்கு நிழல் தரும் மரத்தின் கீழ் மல ஜலம் கழித்தல் '' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1771 )

''தேங்கிக் கிடக்கும் தண்ணீர் (குளத்தில்) சிறுநீர் கழிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1772 )

''ஒரு மூஃமின், மற்றொரு மூஃமினுக்கு சகோதரர் ஆவார். ஒரு மூஃமினுக்கு, தன் சகோதரனின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் செய்திடவோ, தன் சகோதரன் பேசிய பெண்ணைப் பேசிடவோ அந்த சகோதரன் விட்டுத்தரும் வரை கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)          (ரியாளுஸ்ஸாலிஹீன்:1780 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

3 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

மோடிஜி,குறித்துக் கொள்ளுங்கள்!இந்தியா தூய்மை பெற நபிகள் நாயகத்தின் அறிவிப்பு

http://peacetrain1.blogspot.com/2014/10/blog-post_10.html

sabeer.abushahruk said...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு