Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 92 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

 “எந்த நபியும் தன் சமுதாயத்தினரிடம் பொய்யனும் ஒற்றைக் கண் உடையவனுமான (தஜ்ஜால்) அவனைப் பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்க! நிச்சயமாக அவன் ஒற்றைக் கண் உடையவன் ஆவான். நிச்சயமாக உங்களின் இறைவன், ஒற்றைக் கண் உடையவன் இல்லை. தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும்என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1817 )

யூதர்களிடம் முஸ்லிம்கள் போர் புரியும் வரை மறுமை நாள் ஏற்படாது. அப்போது யூதர்கள் பாறை, மரங்களின் பின்னே ஒளிந்து கொள்வார்கள். அப்போது பாறையும், மரமும் முஸ்லிமே இதோ! என் பின்னே யூதன் உள்ளான். இங்கு வருவீராக! அவனைக் கொல்வீராக! என்று கூறும். ஆனால் ''ஹர்கத்'' என்ற (முள்) மரத்தைத் தவிர அந்த (முள்) மரம், யூதர் மரமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1820 ) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1820 )

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ஒரு சபையில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கிராமவாசி வந்து, ''மறுமை நாள் எப்போது வரும்?'' என்று  கேட்டார். நபி(ஸல்) அவர்கள் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். மக்களில் சிலர், ''இவர் கூறியதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கிறார்கள்'' என்று கூறினர். வேறு சிலரோ, ''இவர் கூறியதை அவர்கள் கேட்கவே இல்லை'' என்று கூறினார்கள். இறுதியாக தன் பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாள் பற்றி கேட்டவர் எங்கே?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அது நான் தான்'' என அவர் கூறினார். ''நம்பிக்ககை மோசடி செய்யப்படும்போது, மறுமை நாளை நீர் எதிர் பார்ப்பீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  ''நம்பிக்கை மோசடி என்பது எப்படிஎன்று கேட்டார். தகுதி இல்லதவர்களிடம் ஆட்சி வழங்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்ப்பீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1837 )

அல்லாஹ்விடம் பூமியில் மிகப் பிரியமான இடம், பள்ளிவாசல்களாகும். அல்லாஹ்விடம் பூமியில் மிகக் கோபத்திற்குரிய இடம் கடைவீதிகளாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1841 )

வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள். நெருப்பு ஜுவாலையால் ஜின்கள் படைக்கப்பட்டனர்.  உங்களிடம் வர்ணிக்கப்பட்ட (மண்) மூலம் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1846 )

அல்லாஹ்வை சந்திப்பதை ஒருவன் விரும்பினால், அவனை சந்திப்பதற்கு அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை சந்திப்பதை ஒருவன் வெறுத்தால், அவனை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! மரணத்தை வெறுக்கலாமா?'' நாங்கள் மரணத்தை வெறுக்கிறோமே! என்று கேட்டேன். ''அது அப்படி அல்ல! எனினும் ஒரு மூஃமின். அல்லாஹ்வின் அருள், அவனது திருப்தி அவனது சொர்க்கம் பற்றி சுபச் செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். உடனே அல்லாஹ்வும் அவனை சந்திக்க விரும்புகிறான். ஓர் இறை மறுப்பாளன், அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்வை சந்திக்க வெறுக்கிறான்.  அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுக்கிறான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1848)

 ''நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஹ்திகாஃப் இருந்தார்கள். அவர்களை சந்திக்க ஒருநாள் இரவு வந்தேன். அவர்களிடம் பேசிவிட்டு, வீட்டிற்குச் செல்ல எழுந்தேன். என்னை அனுப்பி வைக்க என்னுடன் நபி(ஸல்)அவர்களும் எழுந்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரீ நபித்தோழர்கள் இருவர் நடந்து சென்றனர். அந்த இருவரும் வேகமாக நடந்து சென்றதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் இருவரும் நில்லுங்கள். இவள், (என் மனைவி) ஸபிய்யா பின்த் ஹுயய் தான்'' என்று கூறினார்கள். ''சுப்ஹானல்லாஹ்! (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சந்தேகப்படவில்லையே)'' என்று இருவரும் கூறினார்கள். அப்போது ''நிச்சயமாக ஷைத்தான், ஆதமின் மகனின் (மனிதனின்) ரத்த நரம்புகளில் ஓடுகிறான். உங்கள் இருவரின் உள்ளங்களில் தீய எண்ணத்தை அவன் போட்டு விடக்கூடும் என்று பயப்படுகிறேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா பின்த் ஹுயய் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்:1849)

''மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர அவன் ஒப்புக் கொள்ளமாட்டான். மேலும் அல்லாஹ் தூதர்களுக்கு கட்டளையிட்டதையே மூஃமின்களுக்கும் கட்டளையிடுகிறான்'' என்று நபி(ஸல்)கூறிவிட்டு (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

தூதர்களே! தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். நற்செயல் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 23:51)

''இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து தூய்மையானவற்றை உண்ணுங்கள்.'' (அல்குர்ஆன் : 2:172)

பின்பு நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பற்றி கூறினார்கள்:

ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். புழுதி படிந்தவராகவும், பரட்டைத் தலையுடையவராகவும் உள்ளார். தன் கைகளை வானத்தின் பக்கம் உயர்த்தி, ''இறைவா! இறைவா! என்று கூறுகிறார். அவரது உணவு ஹராமாக உள்ளது. அவரது பானமும் ஹராமாக உள்ளது. ஹராமானதையே ஆடையாகவும் அணிகிறார். பிறகு எப்படி துஆ ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1851 )

நபி(ஸல்) மறுமை நாளில் மூன்று பேர்களிடம் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைபடுத்த மாட்டான். அவர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்கு நோவினைதரும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) தற்பெருமை கொள்ளும் ஏழை என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1852 )

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறேன். தினமும் 70 தடவைக்கும் மேலாக பாவமன்னிப்பு கேட்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1870 )

ஆதமின் மகனே!  நிச்சயமாக நீ என்னிடம் துஆ செய்யும் காலமெல்லாம் என்னை நீ நம்பும் காலமெல்லாம் உன்னில்; ஏற்படும் குற்றத்தை நான் மன்னிப்பேன். நான் பொருட்படுத்த மாட்டேன். ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உன் பாவங்கள் அடைந்து, பின்பு, என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன். நான் பொருட்படுத்தமாட்டேன். ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து, பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பைத் தருவேன்'' என்று அல்லாஹ் கூறினான் என நபி(ஸல்) கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1878 )

''சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும், ஓர் அழைப்பாளர் (வானவர்), ''நிச்சயமாக உங்களுக்கு நிரந்தரமான வாழ்க்கை உண்டு. எக்காலமும் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். நிச்சயமாக உடல் நலத்துடன் இருப்பது உண்டு. எக்காலமும் நீங்கள் நோயாளியாகி விட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் வாலிபர்களாக இருப்பதுண்டு. எக்காலமும் நீங்கள் முதுமையாகி விடமாட்டீர்கள். நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எக்காலமும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என அறிவிப்பு செய்வார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1892)

''சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் ''நீ ஆசை கொள்'' என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். மேலும் ஆசை கொள்வார். ''நீ ஆசை கொண்டாயா?''என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். ''ஆம்'' என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் ''நிச்சயமாக நீ நினைத்தது உனக்குண்டு. மேலும் அத்துடன் அது போன்றதும் உண்டு'' என்று கூறுவான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்:1893)

 ''சொர்க்கவாசிகளைப் பார்த்து அல்லாஹ், ''சொர்க்கவாசிகளே!'' என்று அழைப்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! உன்னிடம் ஆஜாரகி விட்டோம். உன்னிடம் வந்து விட்டோம். நன்மைகள் அனைத்தும் உன் வசமே உள்ளது'' என்று கூறுவார்கள். ''நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா!  நாங்கள் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம். உன் படைப்பினங்களில் எவருக்கும் நீ அளிக்காத ஒன்றை எங்களுக்குக் கொடுத்துள்ளாயே?'' என்று கூறுவார்கள். '' இதைவிட மிகச் சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்கட்டுமா?'' என்று கேட்பான். ''இதையும் விட மிகச் சிறந்தது எது?''  என்று அவர்கள் கேட்பார்கள். உடனே அவன் ''உங்களுக்கு என் திருப்தியை தந்து விட்டேன். இதன் பின் எப்போதும் உங்களிடம் நான் கோபம் கொள்ள மாட்டேன்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1894 )

 ''நபி(ஸல்) அவர்களின் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் பவுர்ணமி இரவு நிலவைக் கண்டார்கள். ''இந்த நிலாவை நீங்கள் பார்ப்பது போல், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கண்களால் மறுமையில் காண்பீர்கள். அவனைப் பார்க்கும்  விஷயத்தில் இடைஞ்சல் - இடையூறு அளிக்கப்படமாட்டீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1895 )

சுஹைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விட்டால், அல்லாஹ் ''எதையேனும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதிகப்படுத்துகிறேன்'' என்று கூறுவான். அதற்கு அவர்கள் ''எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கி விடவில்லையா? சொர்க்கத்தில் எங்களை நுழையச் செய்து நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றி விடவில்லையா?'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் (தனக்கும், அவர்களுக்குமிடையே உள்ள) திரையை திறப்பான். தங்களின் இறைவனை அவர்கள் பார்ப்பதை விட, அவர்களுக்கு விருப்பமான,வேறு எதையும் அவர்கள் வழங்கப்பட வில்லை. (அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஹைப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1896)

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும்.

''அல்லாஹ்வே! நீ தூயவன்''. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10 : 9 – 10)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
நிறைவுற்றது!!!
குறிப்பு:
அன்புச்சகோதரர்களே :
இத்துடன் ரியாளுஸ்ஸாலிஹீன் தொகுப்பில் உள்ள ஹதீஸ் முடிந்தது.


வேறு தொகுப்பில் உள்ள ஹதீஸ்களை தொகுப்பதற்கு சில காலங்கள் தேவைப்படும். தொகுத்த பிறகு தொடர்கிறேன். இன்ஷாஅல்லாஹ்!

அலாவுதீன் S.

3 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்புக்குரிய அலாவுதீன் காக்கா அவர்களுக்கு,

அல்ஹம்துலில்லாஹ் ! [அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்]

தங்களின் பங்களிப்பில் ஒரு சிறப்பானதொரு 'வெள்ளி'மணிகளைக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று அதிரைநிருபரை அலங்கரித்து அறிவுரை அழகுற எடுத்துரைத்து வந்தீர்கள்.

எந்த விதமான இடையூறும் இன்றி, தொடர்ந்து வெளிவர உழைத்தீர்கள்.

இது முற்றும் அல்ல, நிறைவுக்கு வந்திருக்கிறது மீண்டுமொரு தொகுப்போடு மின்னிட தங்களின் முயற்சி தொடரவும் அதற்கான சூழலையும் வல்லமை நிறைந்த அல்லாஹ் தங்களுக்கு வழங்குவானாக என்று துஆச் செய்கிறோம்.

அனைவராலும் பொருந்திக் கொள்ளக் கூடிய விடயத்தை அருமையானதொரு தலைப்பில் பதிந்தது போன்று மற்றுமொரு தொடரில் விரைவில் உங்களை எதிர்பார்க்கிறோம் இன்ஷா அல்லாஹ்...

அல்லாஹ் நம் அனைவரின் செயல்கள், அமல்கள் அனைத்தையும் அங்கீகரித்து அருள் புரிவானாக !

நம் அனைவருக்குமான சுயகுறிப்பு: "திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து ஓதுவோம் / படிப்போம்'' அடுத்தவருக்கும் எடுத்துரைப்போம் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாரம் முழுதும் வேலை வேலை என்று ஓடி கலைத்துப் போகும் எங்களுக்கு விடுமுறை நாளான வெள்ளிதோறும் வாசித்து வந்த அருமருந்து ஒரு மரத்தடி நிழல்போல் ஆசுவாசமும் உத்வேகமும் தந்து வந்தது.

இதை நாங்கள் இழக்கத் தயாராக இல்லை.

நீ என்ன பண்றேன்னா, சீக்கிரமாகத் தொகுத்துக் கொண்டு அருமருந்தை இடைவேளை இல்லாமல் தொடர வேண்டும்.

(இத்தனை காலம் நீ எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு அல்லாஹ் உனக்கு நற்கூலி வழங்குவானாக ,ஆமீன்)

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, அலாவுதீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

No to " the end " for Quran and Sunna .
See you soon insha Allah Kaka.
We welcome you always, and yours is the best.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு