Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழப் பழகுங்கள்! 34

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2014 | , , , ,

உலக வரைபடத்தில்
வாழ்க்கையைத் தேடி
ஊரூராய்ப் பறக்கும் மனிதா
அது
ஒழுகும் கூரைகொண்ட
உன் வீட்டு முற்றத்தில்
உட்கார்ந்திருப்பதை உணர்!

சில்லறையைத் தேடி நீ
சீமைக்குப் போனதால்
இழந்த
இல்லற வாழ்க்கையை
ஈடு செய்தல் எங்ஙனம்?

லட்சக் கணக்குப் பார்க்கும்
உச்சகட்ட அவலமே,
நீ இழந்த
முத்தக் கணக்கை
என்றேனும் பார்த்ததுண்டா?

உச்சி மோந்து உருகும்
உம்மாவின் முத்தம்
தட்டிக் கொடுத்துத் தேற்றும்
தந்தையின் முத்தம்

தோள் தழுவும் உன்
தோழனின் முத்தம்
தேன் இனிக்கும் உன்
திருமதியின் முத்தம்

ஒட்டுமொத்தச் செல்வமும்
தட்டில் வைத்துத் தந்தாலும்
கிட்டிவிடுமா உனக்கு உன்
குட்டிப் பாப்பாவின் முத்தம்!

தாத்தாவுக்குத் தரும்
இருமல் மருந்திலும்
பாட்டியின் கைத்தாங்கி
படுக்கையில் இருத்துவதிலும்

அம்மாவுக்காக நிற்கும்
ஆஸ்பத்திரி காத்திருப்பிலும்
அப்பா அலுவல்களில்
அரைவாசியை ஏற்பதிலும்

ஆயிரம் முறை பார்த்தாலும்
அலுக்காத
அன்பு மனைவி கண்களிலும்

அவளை
அம்மாவென்று கழுத்தைக் கட்டும்
அன்பு மக்கள் அருகாமையிலும்
கொட்டிக்கிடக்கிறது வாழ்க்கை

கட்டுக் கட்டாய்க்
காசு கொடுத்தாலும்
கேவலம்
கனவுகளைக் கூட உன்னால்
வாங்கிவிட முடியாது

பிறகு ஏன்
நிதர்சனங்களை விட்டுவிட்டு
நிழலைப் பிடிக்க
நிற்காத இந்த ஓட்டம்

பந்தயக் குதிரைகள்
பிந்தைய நாட்களில்
சுட்டுக் கொல்லப்படுவதை அறி

லட்சங்களைக் காட்டிலும்
லட்சியங்களே வலிமையானவை

வசதிகளைவிட
வருடல்களே
வாழ்க்கையின் ஆதாரம்.
வாழப் பழகுங்கள்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

34 Responses So Far:

Iqbal M. Salih said...

//ஒட்டுமொத்தச் செல்வமும்
தட்டில் வைத்துத் தந்தாலும்
கிட்டிவிடுமா உனக்கு உன்
குட்டிப் பாப்பாவின் முத்தம்//

Classic!

sheikdawoodmohamedfarook said...

//உச்சிமோந்துஉருகும்உம்மாவின்முத்தம் தட்டிகொடுத்துதேற்றும்தந்தையின்முத்தம்// இவையெல்லாம்கி.மு.வில்நடந்துஇருக்கலாம். கி.பி.யில் அப்படிஅல்ல. பணத்தின்எடைபார்த்துபாசம்வைக்கும்காலமிது. கல்யாணபத்திரிக்கையும்திறப்புவிழாஅழைப்புகளும் காசிசிருப்பவன் கதவை தட்டுகிறது. வெளிநாடுபோய்கணவன்காசோடுவந்தாலே முத்தம் கொடுக்க மனைவிAirportவருவாள்.

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய ஃபாரூக் மாமா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நலம்தானே?

யதார்த்தத்தில் நீங்கள் சொல்லும் புற காரணிகளால் அகவாழ்வில் சந்தர்ப்பவாதம் மிகைத்தாலும், ஆழ்மனதில் மனிதனை அன்பு பாசம் போன்ற உணர்வுகளே விலங்கினங்களிலிருந்து பகுக்கின்றன.

அந்த உணர்வுகளை தூண்டிவிடுவதே என் நோக்கம்.

காரணம் இருக்கின்றது.

பொருள்தேட பினாங்க் சபுர்செய்வது பிரதான மார்க்கமாக இருந்தபோது நான் சிறுவனாக இருந்தேன். எனக்கு 14 வயது நிரம்பியபோது சென்னை துரைமுகத்தில் கப்பல் மூலம் வந்திறங்கியவர்களில் ஒருவரைச் சுட்டிக்காட்டி "இதுதான் உன் வாப்பா" என்று நம் தெரு ஹாஜா காக்கா அவர்கள் சொன்ன கணம் நான் என்னென்ன இழந்திருக்கிறேன் என்பதை உணரவில்லை.

ஆனால், பிறந்த நேரம் முதல் என்னுடனேயே வளரும் என் குழந்தைகளுக்கு நான் என்னென்ன செய்கிறேன் என்பதை சீர்தூக்கிப்பார்த்தபோது நான் மகனாக அன்று நிறைய இழந்ததாக இன்று உணர்கிறேன்.

திரைகடலோடி திரவியம் தேடும் வாழ்வுக்கு எதிர்க்கருத்து உள்ளவனல்ல நான், பாடாவதியாக வருடக்கணக்கில் பிரிந்து கிடப்பவர்களின் எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்க முடியாது.

அன்று பினாங்க்; இன்றோ அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்.

நம் சமுதாயம் வாழப் பழக வேண்டும் என்பதே என் ஆசை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நம் சமுதாயம் வாழப் பழக வேண்டும் என்பதே என் ஆசை !

N. Fath huddeen said...

//பாடாவதியாக வருடக்கணக்கில் பிரிந்து கிடப்பவர்களின் எந்தக் காரணத்தையும் என்னால் ஏற்க முடியாது.//

வாழாவெட்டி டாட் காம் என்ற ஒரு database - ஐ நமதூர் சகோதரர் ஒருவர் இங்கே தயாரித்தார்!!!

அதை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி பலருக்கு!

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகன்சபீருக்கு!அஸ்ஸலாமுஅலைக்கும்! உங்கள்ஆதங்கம் புரிகிறது! என்தந்தையும் எனக்கு எட்டு வயசோ எழுவயசோ இருக்குபோதேஊர்வந்தார்.பினாங்குசபுறுகாலம். அவர்என்னைபார்த்ததில்லைலை:நான்அவரைபாத்ததில்லை.தந்தையேமகனுக்குஅறிமுகபடுத்தவும் தந்தைக்கு மகனை அறிமுகபடுத்தவும் ஆள்தேவைபட்டது.அறியாமை காலமான அன்று மனிதமும் புனித அன்பும்பூத்துமணம்வீசியகாலமது. இன்றோபணத்திற்கேபாசமும்நேசமும்விலையாகிறது.பணம்இருந்தால்மட்டுமேபந்திக்குஅழைப்பு.எனவே''நம்மக்கள்வாழபழகவேண்டும்!''என்றுநாம்சொல்வதைவிடஅவர்களைநாம்'வாழபழக்க வேண்டும்'' என்றுசொல்வதுநல்லதுஎன்றுநினைக்கிறேன்.அதற்க்குபணக்காரன்-ஏழை/கருத்தவன்செவத்தவன்போன்றபாகுபாடுஇன்றி ''யாதும்ஊரே;யாவரும்கேளிர்!''யென்றநெறிமுறையில்செயல்படுவோம். நிச்சயம்வாழ்வோம்;வாழவைப்போம்!

sheikdawoodmohamedfarook said...

//என்தந்தைவந்துஇறங்கியபோதுநான்எதைஇழந்திருக்கிறேன் என்பதைஉணரவில்லை// ஆனால் நானோ உங்களுக்கு எதிர்நிலையில் நிற்கிறேன்! ..அதாவது என் தந்தை வந்து இறங்கியதால் அதற்க்கு முன்பெற்றஅத்தனை சுகங்களையும் பறி கொடுத்து தனிமரம் போல் தவித்துநிற்கிறேன்.என்பிள்ளைகளைஅப்படிநான்விடவில்லை. ஒருசாதாரணதந்தையின்கடமைஎதுவோஅதைசெய்தவிட்டேன்.ஆதலால் திருப்பதியோடு(தூக்கமாத்திரைபோட்டு}தூங்குகிறேன்.இந்தவிஷயத்தில் நீங்கள்ஒருகோணம்;நான்ஒருகோணம்.

sabeer.abushahruk said...

என் கவிதைகளுக்கு எப்போதுமே கலிஃபோர்னியாவிலிருந்துதான் கருத்து மழை பொழியும், இப்போதும் அங்கிருந்துதான். எப்போதும் கிரவுனுரை; இப்போது இக்பாலின் நச்சென்ற பாராட்டு.

நன்றி இக்பால்; நலமா கிரவுன்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நன்றி இக்பால்; நலமா கிரவுன்? ///

இக்பால் காக்காவிடம் நபி"மணி' தானே இருக்கும்... இப்போ 'கிரவ்னு' இருக்கா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா,

கிரவ்னு ஃபேஸ்புக்கில் கொஞ்சம் பக்கத்தை தேடிகிட்டு இருக்கான்.. நினைக்கிறேன்...

sheikdawoodmohamedfarook said...

சுமார்25-30ஆண்டுகளுக்குமுன்பு'ஆனந்தவிகடனில்'அதன் ஆசிரியர் மணியன்'ஆசைஅறுபதுநாள்மோகம்முப்பதுநாள்'என்றதலைப்பில் தாம்பத்திய வாழ்க்கை [Sexual life] பற்றி ஒரு தொடர்எழுதினார். அதை ''மோகம்முப்பதுவருஷம்''என்றதலைப்பில்கே.பாலச்சந்தர் திரைபடமாக இயக்கினார்.அதில்விதவையானஒருபாட்டிகல்யாணம்செய்துகொடுத்த தன்பேத்தியைகணவனுடன்சேராவிடாமல்'அது'அப்பசாரம்என்றுசொல்லி எப்படியெல்லாம்தடுத்துபேத்தியின்வாழ்க்கையேவீணடித்தால்என்பதை விளக்கினார். அதேநிலை-''மாமியார் கொடுமை'' நம் சமூகத்திலும் நிலவியது. இப்பொழுதும்அதுகொஞ்சம்குறைந்தாலும்முற்றும்குறைந்ததுபோல்தெரியவில்லை.இதையெல்லாம்அழித்தொழிக்கஉளவியல்சார்பானபோதனை யாளர்களைகொண்டுவந்துபாடம்சொல்லிகொடுக்கலாம்.என்காலத்தில் கல்யாணமுடித்தபுதிதிலும்மாப்பிளைபினாங்கிலிருந்துவந்தபோதும்பத்தைகைலிகொடியில்ஒருவாரத்திற்குஎத்தனைதடவைகாய்கிறதுஎன்றும்ஒரு கூட்டம்ஆய்வுநடத்தும்.இதில்மாமியார்நாத்தினார்மார்கள்முக்கியபங்கு வகிப்பார்கள்.இதுபோதாதுஎன்றுவெட்டிகுளத்துபெண்கள்கரையிலும் வேவுதுறைவீற்றிருக்கும்.மருமகள்குளித்தால்மாமியார்முகத்தில்எள்ளும்கொள்ளும்வெடிக்கும்.பண்டபாத்திரங்கள்அங்கும்மிங்கும்சிதறிஎட்டு வீட்டுக்குஅப்பாலும்ஓசைஎழும்.ஜாடைமாடையானகுத்தல்பேச்சு. இந்ததொல்லைதாங்காமல்கப்பல்ஏறியமாப்பிள்ளைகைபிடித்தபெண்ணைகைவிட்டுஅங்கொருத்தியை'கை'பிடித்துஅங்கேயேதங்கிபாடாவதிகேஸ் ஆனவர்கள்பலபேர்.இதற்க்குபிற்போக்குசிந்தனைசுயநலம்பொறாமை போன்றவைஅடிப்படை காரணங்கள். அவைகளிவேர்கள்இன்னுமஇருந்துகொண்டுதான்இருக்கிறது.இதைபோக்கவழிகண்டால்வாழ்க்கைசிறக்கும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இதை கவிதை என்பதைவிட வாழ்க்கை பாடம் என்பதே சரி

Unknown said...

வழியில்லா வாழ்க்கையில் வழி
தேடி வாழ்கிறோம்,..

வலியோடு வாழ்கிறோம்..

நாம் அங்கு இருக்கும்போது இருந்தவர்கள்
நாம் அங்கு இல்லாதபோது இந்த உலகிலேயெ இல்லாமல் போய்விட்டார்கள்

மறக்க நினைத்தேன் - முடியவில்லை
இப்படி அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறீர்கள்..


-அப்படி பார்க்காதீர்கள் சபீர் காக்கா...ச்சும்மா

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abu Shahruk,

Nice motivating poem which invokes the sense and meaning of family life. Still there is remaning life for bold decision makers. But people feel helpless hence become senseless to meaningful living.

May Allah give enough courage and strength to live better lives.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

அதிரை.மெய்சா said...

வாழப் பழகுங்கள் தலைப்பே அமர்க்களமாக உன் கட்டுரையைப் பார்த்துப் வாழப் பழகணும் போல உள்ளது.

மாளிகையானாலும்
மண் குடிலானாலும்
கானி நிலமானாலும்
கரிசல்காடானாலும்
தனக்கெனத் தேடியதை
தலைவணங்கிப் பெற்றிற்ற
தன்னம்பிக்கை யுடையோன்
வாழப் பழகியவன்

வறுமைக்கு வரப்பிட்டு
வகைவகையாய் பணி செய்து
வெறுமைக்கு விடைகொடுத்து
வேரூன்றி நிற்ப்பவன்
வாழப் பழகியவன்

பொறுமைக்குக் கிடைத்திட்ட
பொன்னான வாய்ப்புக்களை
மறுமைக்கும் தேடிக் கொள்பவன்
வாழப் பழகியவன்

அதுக்கு மேல ....!?!? இப்போதைக்கு போதும் நண்பா ...


Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

என்னதான் உசுப்பேத்தினாலும் நாம் பயணங்களை நிருத்தபோவதில்லை விமான டிக்கட்டின் விலை குறையப்போவதில்லை

sabeer.abushahruk said...

தம்பி இப்னு அப்துர்ரஜாக்,

கவிதை என்பதைவிட பாடம் என்று எடுத்துக் கொள்வதையே நானும் விரும்புகிறேன்.

எழுத்துகளைக் கருத்துகளாகக் காணும் தங்களுக்கு நன்றி.

sabeer.abushahruk said...

தம்பி ஜாஃபர்,

நிர்பந்தங்களை அறியாதவனல்ல நான். இருப்பினும் சுயபச்சாதாபங்களை ஊக்குவிப்பவனுமல்ல.

வளைகுடா சபுராளிகள் நினைத்தால் நினைத்த 7 மணி நேரத்திற்குள் ஊரில் இருக்கலாம். அப்படி நல்லது கெட்டதற்குக்கூட குடும்பத்தோடு இணைய இயலாத அளவுக்கு வெகுதூரம் சென்று பல ஆண்டுகாலம் ஊருக்கு வராமல் வாழ்பவர்கள் மீதான வருத்தமும் இரக்கமும் அனுதாபமும்தான் இதை எழுதக் காரணம்.

வாசிப்புக்கும் கருத்திற்கும் நன்றி.

sabeer.abushahruk said...

Dear brother B. Ahamed Ameen,

va alaikkumussalaam varah...

In most of the cases, the decisions are not actually taken by the concerned expatriates to work in far west countries, but imposed onto them.

i dont blame for those men who travel across the world in search of wealth but my concern is only on their personal life that they miss for years.

Thanks for supporting my view through your wonderful comment.

sabeer.abushahruk said...

//பொறுமைக்குக் கிடைத்திட்ட
பொன்னான வாய்ப்புக்களை
மறுமைக்கும் தேடிக் கொள்பவன்
வாழப் பழகியவன் //

மெய்சா,

சரளமாக வந்து விழும் சார்புடைய வரிகளை வலுக்கட்டாயமாக நிறுத்தியிருக்க வேண்டாம். தொடர்ந்து எழுதி அசத்தியிருக்கலாம்.

வாசிப்பிற்கும் மேற்கொண்டு தந்த விளக்கங்களுக்கும் நன்றி.

sabeer.abushahruk said...

ஹமீது,

பயணங்களை நிறுத்த வேண்டாம். குடும்பத்துடனான தொடர்புகளை உதாசீனம் செய்யாமல் நெருக்கத்தைக் கூட்டிக் கொண்டாலே போதும்.

வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி.

sabeer.abushahruk said...

அபு இபு,

கிரவுன் வராமல் இருப்பதற்கு ஏதாவது வலிமையான காரணம் இருக்கலாம் என்றே நம்புகிறேன்.

என் கருத்தை ஓங்கி ஒலித்தமைக்கு நன்றி.

அருமையான ஓடையை ஓடவிட்டுக்காட்டியிருக்கும் அதிரை நிருபருக்கு நன்றி.

நிறைவாக,

வாழ்க்கையில் எதிர்மறையான அதிர்ச்சிகளைச் சந்திக்க நேரிட்டாலும், காசுபணம் போன்றவற்றின் தாக்கத்தாலும் அன்பு பாசம் நட்பு போன்ற உணர்வுகள் ஆங்காங்கே காயப்பட்டாலும் வாழ்க்கையின் தாத்பரியம் என்றுமே நல்லவற்றைப் பிறர்க்குச் சொல்லி வாழ ஊக்குவிப்பதே ஆகும். அவ்வாறே எழுதுவதே என்றைக்கும் என் பாணி என்று கூறி நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்!

sabeer.abushahruk said...

ஜோ,

உங்களுக்கு எழுதிய பதில் ஒன்று காணாமல் போய் விட்டது.

அ.நி. எங்கே என்று தேடி எடுத்துப் போடவும், ப்ளீஸ்.

Ebrahim Ansari said...

வாழ்க்கையின் பல பரிணாமங்களைப் போட்டு வடித்தெடுக்கப்பட்ட கவிதை. வழக்கம்போல பல பரிசுகளை அள்ளிச் செல்கிறது.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அபு இபு,

கிரவுன் வராமல் இருப்பதற்கு ஏதாவது வலிமையான காரணம் இருக்கலாம் என்றே நம்புகிறேன்.
---------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.புரிதலுக்கு நன்றி!தொடர்ந்து படித்துவந்தாலும் பொதுவில் பதிவில் கொண்டுவர முடியாமல் போனதில் மனதுக்கு வருத்தம்தான்!

crown said...

அடிக்கடி ஊர்வர(ம்)ப்பெற்றோர்!,பெற்றோரை பார்க பெற்றோர் பேறு பெற்றோரே!

crown said...

சில்லறையைத் தேடி நீ
சீமைக்குப் போனதால்
இழந்த
இல்லற வாழ்க்கையை
ஈடு செய்தல் எங்ஙனம்?
-------------------------------------------------------------------
காசு கல்லா கட்ட இல்லறத்துக்கும் கல்லறை கட்டும் கல்லா போனதே நம் நெஞ்சம்!!!!இது விதியா? நாம் நமக்கே வகுத்துக்கொண்டவிதியா?

crown said...

எல்லா(ர்)முத்தமும் ,மொத்தமாய் இழக்கும் அவலம் ஏனோ?இனியேனும் வரும் காலங்களில் கிட்டுமா இன்ப முத்தங்கள்.???

crown said...

பந்தயக் குதிரைகள்
பிந்தைய நாட்களில்
சுட்டுக் கொல்லப்படுவதை அறி
--------------------------------------------------------------
இப்படி சுட்டி(டு)காட்டியிருப்பது நல்லதொரு பாடம் இது பந்தயக்குதிரைக்குமட்டுமா?பந்தயக்குதிரையாகிபோன அதிரை வாசிகளுக்குமா?

crown said...

லட்சங்களைக் காட்டிலும்
லட்சியங்களே வலிமையானவை

வசதிகளைவிட
வருடல்களே
வாழ்க்கையின் ஆதாரம்.
வாழப் பழகுங்கள்!

-----------------------------------------------------
சத்தியமான வார்தை! வழக்கம்போல் நல்லதை நினைவூட்டும் கவிதை!முத்திரை பதிப்பதுடன் , நம் நிலையின் முகத்திரையையும் கிழித்து! நிதர்சனத்தை சொல்கிறது!

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய இப்றாகீம் அன்சாரி காக்கா,

வாசித்துப் பாராட்டி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.


கிரவுன்,

இப்போதுதான் இந்தப் பின்னூட்டப்பகுதி மனத்திருப்தியோடு நிறைவாகிறது.

நன்றி.

N. Fath huddeen said...

sabeer.abushahruk சொன்னது…
ஜோ,

உங்களுக்கு எழுதிய பதில் ஒன்று காணாமல் போய் விட்டது.

அ.நி. எங்கே என்று தேடி எடுத்துப் போடவும், ப்ளீஸ்.

Yasir said...

வாழப் பழகுங்கள் வாழ்க்கையின் எதார்த்தம்/பாடம்...வார்த்தைகளும் அதன் உள்ளிருக்கும் வலிமையும் வாழ்க்கையை அர்த்ததுடன் வாழ வேண்டும் என்ற உந்துதலை நம்மில் விதைக்கின்றன....லேட்டாக வந்ததற்க்காக தண்டனை கொடுத்துவிடாதீர்கள்

//ஒட்டுமொத்தச் செல்வமும்
தட்டில் வைத்துத் தந்தாலும்
கிட்டிவிடுமா உனக்கு உன்
குட்டிப் பாப்பாவின் முத்தம்! // அனுபவித்த முத்தம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு