Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

போடாதே தப்புக் கணக்கு! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2014 | , ,


ஏட்டுக் கணக்குப் பிழையென்றால்
ஏழுக்கு எட்டு விடையென்றாகும்
வீட்டுக் கணக்கில் குளறுபடி
வீண்சண்டை விவாதம் அடிதடி

ஓட்டுக் கணக்கைக் கணிக்காவிடில்
ஒழித்துக் கட்டும் தேர்தல் களம்
சொத்துக் கணக்கில் சுத்தமில்லை
கம்பிக் கணக்கை எண்ண நேரிடும்

உப்புக்குச் சப்பாய் கூட்டிக் கழித்து
தப்புக் கணக்குப் போட்டுவிட்டால்
கைமேல் பலனெனக் கிடைப்பதெல்லாம்
கைத்தடி வயதில் நோகடிக்கும்

உன்றன் கையில் உள்ளதெல்லாம்
உனக்கே உனக்கென எண்ணவேண்டாம்
உலகையே வென்றதாய் உவகையோடு
உற்சாகக் கூச்சல் போடவேண்டாம்

உள்ளங்கை ரேகை ஒன்றைத் தவிற
உள்ளதெல்லாம் போகும் உணரவேண்டும்
உள்ளெண்ணமும் செயலும் நல்லதென்றால்
உயர் நன்மையாய் மாறி நிலைத்து நிற்கும்

செலவைக் கணக்கிடாமல் - பெரும்
வரவு வந்தும் பலனில்லை
உறவைக் கவனிக்காமல் - இவ்
வுலக வாழ்வில் விடிவில்லை

விளைவுகளைத் தீர்மாணிக்கும்
வினைகளாற்றக் கற்றுக்கொள்
கனியிருப்பக் காய் கவரும்
குருட்டுத்தனம் மாற்றிக்கொள்

ஏழ்மை இழிவெனவோ
இயலாமை விதியெனவோ
முதுமை முடிவெனவோ
மதிப்பீடு முறையல்ல

எல்லா கிழக்கிலும்
விடியல்கள் காத்திருக்க
எல்லா முடிவினிலும்
இன்னுமொரு துவக்கம் உண்டு

எல்லா செயல்களுக்கும்
ஏகப்பட்ட வழியிருக்க
தப்புக் கணக்குப் போட்டு
சதுப்புச் சேற்றில் சிக்கிவிடாதே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

20 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//எல்லா கிழக்கிலும்
விடியல்கள் காத்திருக்க
எல்லா முடிவினிலும்
இன்னுமொரு துவக்கம் உண்டு//

அருமை
ஊக்கம் தரும் வரிகள்
நன்றி காக்கா

sheikdawoodmohamedfarook said...

//கைத்தடிவயதில்நோகடிக்கும்//சிறந்ததத்துவம். என் நெஞ்ஜோரம் ஒரு திரைப்படலின் பதிவுண்டு. அது ''பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானம்மா'' என்பதாகும். கைநெல்லைவிட்டவர்கள்எல்லாம் கைத்தடியையாவதுவிடாமல் பிடித்துக்கொண்டேநிற்கட்டும். மருமகனின்இந்தகணக்குகவிதைக்கு100/100மார்க்.அவ்வளவுதான்நம்ம''கை''மிஞ்சியது.மீதிஇருப்பதுகைதடியே!

sheikdawoodmohamedfarook said...

//'அவ்வளவுதான்நம்ம''கை''யில்மிஞ்சியது'//என்றுதிருத்திபடியுங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிறைய 'த'ப்புக் கணக்கு...!

எத்தனை 'த' 'த' போட்டாலும் அத்தனையும் 'ஜ'ல்ராதான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உன்றன் கையில் உள்ளதெல்லாம்
உனக்கே உனக்கென எண்ணவேண்டாம்
உலகையே வென்றதாய் உவகையோடு
உற்சாகக் கூச்சல் போடவேண்டாம்//

எக்காலத்திற்கும் ஏற்றது...

அதிரை.மெய்சா said...

தப்புக் கணக்கெ சரியாத்தான் போட்டிருக்கெ நண்பா ..
உன்கணக்கு எப்பவும் தப்பா இருக்காது
கூட்டிக் கழித்துப் பாத்தா கணக்கு சரியாத்தான் இருக்கு

Ebrahim Ansari said...

கவிதையின் தலைப்பு தப்புக் கணக்காக இருக்கலாம் . கவிதை பட்டியலிட்டுள்ளவை வாழ்க்கையின் பாடம் மற்றும் படம்.

sabeer.abushahruk said...

தம்பி இப்னு அப்துர்ரஜாக், ஃபாரூக் மாமா, அபு இபு, மெய்சா, ஈனா ஆனா காக்கா...

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்!கணக்கா எழுத்துக்களை கையாண்டு,கணமான புத்திமதிசொல்லும் வாழ்கை கணக்கை நல்ல சூத்திரத்துடன் சொன்ன விதம் எப்பொழுதும் போல் அருமை!

crown said...

ஏட்டுக் கணக்குப் பிழையென்றால்
ஏழுக்கு எட்டு விடையென்றாகும்
வீட்டுக் கணக்கில் குளறுபடி
வீண்சண்டை விவாதம் அடிதடி
-------------------------------------------------------------------
கவிஞரே! நல்லாத்தான் கணக்கு பண்றீங்க!வீட்டு கணக்கு விட்டுகொடுப்பதிலும்,கூட்டு கணக்காய் இருப்பதிலுமே வெற்றி சூத்திரம் புரியும்!

crown said...

ஓட்டுக் கணக்கைக் கணிக்காவிடில்
ஒழித்துக் கட்டும் தேர்தல் களம்
சொத்துக் கணக்கில் சுத்தமில்லை
கம்பிக் கணக்கை எண்ண நேரிடும்
---------------------------------------------------------------------
கவிஞரே! இதுல ஏதோ கணக்கு உதைக்குதே!தப்புக்கணக்கு போட்டுவிட்டீஙகளோ? நம்ம நாட்டிலா இது நடக்கும்? கம்பி எண்ண நேரிடும் என உங்கள் ஏக்கம் நடக்க கடாவதாக!ஆனாலும் கல்ல கணக்கு காட்டினாலும் என்னா நேரிடும்???

Yasir said...

கவிதை ஃபார்முலா போட்டு வாழ்க்கையின் ஏதார்த்த பிரச்சனைகளை அழகாக தீர்த்து இருக்கின்றீகள்

//உள்ளங்கை ரேகை ஒன்றைத் தவிற
உள்ளதெல்லாம் போகும் உணரவேண்டும்//

வலு நிறைந்த வரிகள்

crown said...

உப்புக்குச் சப்பாய் கூட்டிக் கழித்து
தப்புக் கணக்குப் போட்டுவிட்டால்
கைமேல் பலனெனக் கிடைப்பதெல்லாம்
கைத்தடி வயதில் நோகடிக்கும்
------------------------------------------------------------
சரியாக சொன்னீர்கள் கவிஞரே!

crown said...
This comment has been removed by the author.
crown said...

உன்றன் கையில் உள்ளதெல்லாம்
உனக்கே உனக்கென எண்ணவேண்டாம்
உலகையே வென்றதாய் உவகையோடு
உற்சாகக் கூச்சல் போடவேண்டாம்

உள்ளங்கை ரேகை ஒன்றைத் தவிற
உள்ளதெல்லாம் போகும் உணரவேண்டும்
உள்ளெண்ணமும் செயலும் நல்லதென்றால்
உயர் நன்மையாய் மாறி நிலைத்து நிற்கும்
----------------------------------------------------------------------------------
சங்கை ஊதும் போது உன் பங்கை கொண்டு செல்ல முடியாது!ஆனால் சங்கை மிகு மார்கம் சொல்லும் வழி செல்லும் நம்மவர்கள்!வாழும் நாட்கணக்கில் அமலை அமல் செய்தால் நன்மையை இரு கைகள் நிறைய அள்ளிச் செல்ல முடியும்!

crown said...

செலவைக் கணக்கிடாமல் - பெரும்
வரவு வந்தும் பலனில்லை
உறவைக் கவனிக்காமல் - இவ்
வுலக வாழ்வில் விடிவில்லை
-------------------------------------------------------------------------
இம்மைக்கும் , மறுமைக்கும் நன்மை சொல்லும் கணக்கு இது!

crown said...

விளைவுகளைத் தீர்மாணிக்கும்
வினைகளாற்றக் கற்றுக்கொள்
கனியிருப்பக் காய் கவரும்
குருட்டுத்தனம் மாற்றிக்கொள்
----------------------------------------------------------------
வெளிச்சம் பாய்ச்சும் வைர வார்தைகள்!!!

crown said...

ஏழ்மை இழிவெனவோ
இயலாமை விதியெனவோ
முதுமை முடிவெனவோ
மதிப்பீடு முறையல்ல
------------------------------------------------
உங்கள் அறிவுரையின் மேல் மதி''ப்பீடு கூடி வருகிறது!!!!!

crown said...

எல்லா கிழக்கிலும்
விடியல்கள் காத்திருக்க
எல்லா முடிவினிலும்
இன்னுமொரு துவக்கம் உண்டு

எல்லா செயல்களுக்கும்
ஏகப்பட்ட வழியிருக்க
தப்புக் கணக்குப் போட்டு
சதுப்புச் சேற்றில் சிக்கிவிடாதே!
-------------------------------------------------------------------
வழுக்காத வலுவான புத்திமதி! இதிலும் வழுக்கினால் அவரவரே பொருப்புதாரிகள்! வழக்கம் போல் பாடம் நடத்தி நீங்கள் பாஸாகிவிட்டதுடன் எங்களையும் பாஸ் பன்ன அடிகோலி இருக்கீங்க கவிஞரே!

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Abu Shahruk,

A philosophical poem motivating to think and progressing in life.

Jazakkallah khairan

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு