Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இளைஞனே...! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2014 | , , , , ,


பழமையை முழுதாய் ஒதுக்காதே!
புதுமையை முழுதாய் ஏற்காதே!

சிந்தை சீர்தூக்கி அல்லவை தள்ளு!
நல்லதை அள்ளு! வாழ்வில்
வேண்டாம் திள்ளு, முள்ளு !

கற்பனையை நிசமாக்க முயல்வாய்!
நிசத்தினை பொய்யாக்குவோரை இகழ்வாய்!
வருவாய் ஒளிக்கதிராய்!

பெறுவாய் நல் மதிப்பை!
விரைவாய் பணி முடித்து-
தருவாய் நலம் பல
நம் சமுதாய முன்னேற்றத்திற்கு...

- CROWN -

புதிராய் புலப்படுகிறது !
புதினம் காட்டிய இயக்கங்கள்...

புத்தி சொன்னால் ஏளனம்...
பித்து பிடித்தவங்க என்று !

இயக்கவெறி வைத்த வேட்டு
சிதறியோடியது நம்ம ஓட்டு !

ஒற்றுமையை கற்றுத்தந்த நம் மார்க்கம்
வேற்றுமையில் கண்டதோ வேறு மார்க்கம் (வழி)!

இளமை துள்ளும் இஸ்லாமியனே
இனிமேலும் இழக்காதே சுயபுத்தியை !

எதிர்த்தாள ஒரு இயக்கம்
ஏசிப்பேச ஒரு இயக்கம்
தக்லீதுக்கு ஒரு இயக்கம்
தர்மம் கேட்கவும் இயக்கம்

இப்படியாக ஏகப்பட்ட இயக்கங்கள்
என்று மறையும் இந்த மயக்கம் !

கிரவ்ன் காக்கா
2011 மே மாதம் பதிக்கப்பட்டது
இது ஒரு மீள்பதிவு

3 Responses So Far:

sabeer.abushahruk said...

இளைஞர்களே என்று தஞ்சோட்டுப் பசங்களுக்குச் சொல்லும் செய்தி அருமையானது; அவசியமானது!

அதிலும் கிரவுன் தமிழில் சொன்னால் கேட்டு நடக்க வாய்ப்பு அதிகம்!

இதை ஓட்டுக்காகச் சொல்லி பதவியில் அமர்பவர்களுக்கு மத்தியில் கிரவுன் பொதுநலனுக்காகச் சொல்கிறார்.

வாழ்த்துகள்

ZAKIR HUSSAIN said...

//இயக்கவெறி வைத்த வேட்டு
சிதறியோடியது நம்ம ஓட்டு !//

To Bro CROWN...

கவிஞர்களின் கருத்து காலத்தை வென்று நிற்கும் என்பதற்கு இந்த வரிகள் போதுமானது.

தெருக்களின் நுழைவாயில்களில் பதிக்கப்பட வேண்டிய விசயத்தை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//இயக்கவெறி வைத்த வேட்டு
சிதறியோடியது நம்ம ஓட்டு !//






































































To Bro CROWN...

கவிஞர்களின் கருத்து காலத்தை வென்று நிற்கும் என்பதற்கு இந்த வரிகள் போதுமானது.

தெருக்களின் நுழைவாயில்களில் பதிக்கப்பட வேண்டிய விசயத்தை கவிதையாக எழுதியிருக்கிறீர்கள்.
--------------------------------------------------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும். நலமா? மருத்துவர் காக்கா!இந்த வைர வரிகளுக்குச்சொந்த காரர் அபுஇபுறாகிம் காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு