Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமிய வங்கிகளும் இன்ன பிற மதத்தவரும்...! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2014 | , , ,


கடன்* வாங்க அவசரம், அங்கே இருந்தவர்களிடம் இருந்த பரபரப்பு. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனில் கையொப்பமிடும்போது பவ்யமும், அவர்களின் கும்பிடும், சைகைகளும், நெஞ்சுக்கு குறுக்கே கைகளால் கோடு போடுவதும், எங்கே இருக்கிறோம் என்று திணறல் ஏற்பட்டது.

நம் அனைவரின் அன்றாட வாழ்வியலில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கும் வங்கிகளின் செயல்பாடுகளும் அதன் பயன்பாடும் அதனால் கிடைக்கும் பலன்களும் அனுபவிக்காதவர்கள் சிலரே.

இன்றைய காலகட்டத்தில் வங்கிப் பரிவர்த்தனை மிக முக்கியமானதாக இருப்பதனால், தேவைகளுக்கு இருப்பில் இல்லாவிடினும் வங்கியிடமே கேட்டுப் பெரும் சேவையாகட்டும். வங்கிகளே தானாக முன் வந்து கடன்* என்ற போர்வை போர்த்தி அதன் வாடிக்கையாளர்களை அமுக்கிப் போடும் போட்டியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வளைகுடாவில் பெரும்பாலான வங்கிகளும் அவசியமாக ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன, அதுதான் 'இஸ்லாமிய வங்கி'களாகும். இதுமட்டுல்லாது தனித்தே பிரபல்யமான இஸ்லாமிய வங்கிகளும் ஸ்திரமாக காலூன்றி தங்களது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றது.

தனிப்பட்ட முறையில் நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு இரண்டொரு
இஸ்லாமிய வங்கிகளோடு நெருங்கிய வர்த்தக பரிவர்த்தனை தொடர்பு இருப்பதனால் அதனோடு எனக்கும் நிரம்ப ஈடுபடு.

கடந்த ரமளான் மாதம் நெருக்கத்தில் சிறப்பு சலுகை என்று கடன்* வசதிகளை அறிவித்து இருந்த அந்த வங்கியில் அங்கே அலைமோதியவர்களை பார்த்ததும் சற்றே வியப்பு மேலிட்டது. அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் அவதானித்ததில் ஒன்று தெளிவாக விளங்கியது வட்டியில்லா கடனாம், வட்டிக்கு வட்டி அதன் குட்டிக்கு வட்டி இல்லையாம் அதனால் அங்கே கடன்* வாங்க காத்திருந்தவர்களின் வருகையும் அதிகமென இருவர் பேசிக் கொண்டனர்.

அடுத்தடுத்த நாட்களில் அங்கு நடந்தவைகளை பார்த்தபோது, இஸ்லாமிய வங்கிகளின் பயன்பாட்டை அதிகமதிகம் பயன்படுத்துவது இஸ்லாமியர்களைவிட இன்ன பிற மதத்தவர்களே...! என்ற சிந்தனையோட்டமே மேலிட்டது.

ஏன் இந்த போட்டியில் நம்மவர்கள் குறைவாக இருக்கின்றனர் என்ற கேள்வியையும் வங்கியில் பணிபுரியும் தமிழ் பேசும் ஒருவர் கேட்டுவிட்டு, அவரே சொன்னார் அந்த போட்டிக்கு ஏற்ற சம்பளம் நம்மவர்களிடம் இல்லாததே முக்கிய காரனம் என்றார்.

இன்னும், இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாடுகள் அதன் வர்த்தக பரிவர்த்தனைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மவர்களிடையே இல்லை அல்லது அவைகள் பற்றிய விபரங்களை அறிய முற்படுவதும் இல்லை.

* T&C apply : கடன்களுக்கு மட்டும் சொல்லவில்லை... ;)

அபூஇப்ராஹீம்

4 Responses So Far:

sabeer.abushahruk said...

நல்ல சுட்டல்.

அபு இபுறாஹீம்,

வட்டியில்லா கடன் வாங்க என்ன தகுதி வேண்டும் என்று கேட்டுச் சொல்ல முடியுமா?

உதாரணத்திற்கு, ஒரு அரை மில்லியன் திர்ஹம் கடன் வாங்க என்ன தகுதி வேண்டும்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//உதாரணத்திற்கு, ஒரு அரை மில்லியன் திர்ஹம் கடன் வாங்க என்ன தகுதி வேண்டும்?//

திடுதிப்பென்று இப்படி கேள்வி வரும்னு எதிர்பார்க்கலை, இருந்தாலும் 'தனி நபரு'க்கான தகுதி என்னெவென்று கேட்டுதான் சொல்லனும் :)

Unknown said...

இஸ்லாமிய வங்கி பற்றிய எந்த 'தெளிவுமில்லாத உலகத்தில்' நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை நிலவரம்.

மத்திய கிழக்கு நாடுகள் என்றாலும் சரி, மலேசியா போன்ற தூர கிழக்கு முஸ்லீம் நாடுகளேன்றாலும் 'இஸ்லாமிய வங்கி' என்ற பெயரில் 'வட்டிக்கு' தீர்வு கண்டதாக தெரியவில்லை.

முதலாவதாக பொருளாதாரம் குறித்த அறிவில்லாத 'அறிஞர்களை' மதரசாக்கள் உருவாக்கி கொண்டிருப்பது மிக பெரும் சவால்.

அடுத்ததாக இஸ்லாமிய பொருளாதார விதிமுறைகளுக்கு 'ஹனபி மத்ஹபில்' தீர்வை தேடும் முட்டாள்தனம் தொடர்கிறது.

இறுதியாக இஸ்லாமிய பொருளாதாரம் என்ற பெயரில் இஸ்லாத்தின் எதிரிகளும், சமாதி வணங்கி சூபி 'ஷியா பயல்கள்' தாங்கள் விருப்பம் போல நடத்தும் போலி இஸ்லாமிய வங்கிகளின் பெருக்கம் - முஸ்லீம்களை இன்னும் முட்டாள்களாக ஆக்குகிறது.

இது போன்றவர்கள் 'பைத்துமால்' என்ற பெயரில் 'இஸ்லாமிய வங்கி' நடத்துகிறோம் என்று அடிக்கும் கூத்துக்களுக்கு அளவே இல்லை.

இந்த நிலவரங்களை கலவரமாக மாற்றுமளவிற்கு - 'இஸ்லாமிய வங்கிக்கு' உள்ள ஒரே வாய்ப்பான 'பங்கு சந்தையையும்' ஹராம் என்று ஒரு பக்கம் 'பொருளாதாரம்' குறித்த அறிவில்ல்லாத நிலையில் சிலர் 'பத்வா' கொடுக்கின்றனர்.

மொத்தத்தில் 'முஸ்லீம்களில்' உள்ள அடுத்த தலைமுறை 'பொருளாதாரம்' குறித்த அறிவே இல்லாத ஆட்டு மந்தைகளாக மேற்கண்டவர்களால் ஆக்கபட்டள்ளனர் என்பது தான் உண்மை.

உண்மையை கூற புகுவோமானால் மத்திய கிழக்கு நாடுகளிலும் 'நோய் பிடித்த ஐரோப்பாவின்' ஒரே ஆரோக்கிய தேசமாக மாறிவிட்ட 'துருக்கியிலும்' - இஸ்லாமிய வங்கிகள், கொள்கை ரீதியாக தட்டு தடுமாறி கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை.

வாயளவில் இஸ்லாமிய பொருளாதாரம் பேசி, பொருளாதார் அறியாமையில் உழலும் முஸ்லீம் சமுதாயம் தன்னை சீர்திருத்தி கொள்வது உடனடி தேவையாகும்.

இதற்கு ஒரே மாற்று இஸ்லாமிய சந்தை பொருளாதாரம் குறித்த கருத்து பரிமாறல், கல்வியறிவு மற்றும் செயல்திட்டம் ஆகியவற்றை 'முஸ்லீம்களிடையே' பரவலாக்குவதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு