Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2014 | , , ,

தொடர் : பகுதி பதிமூன்று

பாலஸ்தீனத்தில் துருக்கி சுல்தான்களின் ஆட்சியை காணும் முன்பு யூதர்கள் பற்றிய ஒரு கேவலமான வரலாற்றுச் செய்தியைப் பகிரவேண்டும். தொடர்ந்த வரலாற்றுச் செய்திகளுக்கு இவைகளை நாம் அறிவது அவசியம். 

கடந்த சில வாரங்களாக எழுதப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தொடரின் சரித்திர சம்பவங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒரு முக்கியமான சந்தேகம் நிச்சயம் எழுந்திருக்க வேண்டும். அடிப்படையில் பாலஸ்தீனம் என்ற மையபுள்ளியின் பங்காளிகள் மூவர். அவர்கள் யூதர்கள் , கிருத்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோராவார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக நாம் எழுதியவை மற்றும் படித்தவை யாவுமே கிருத்துவர்களையும் முஸ்லிம்களையும் பற்றி மட்டுமே. இன்னொரு இனம் எங்கே போயிற்று?

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் சிலுவைப் போர்கள் நடைபெற்றன; பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டன; பல கட்டிடங்கள் நொறுங்கின; பல நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன; சில சக்கரவர்த்திகள் மாண்டார்கள்; சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன; பல மனமாற்றங்கள் எடுத்துக் காட்டப்பட்டன; பலரின் மனிதாபிமானங்களும் சிலரின் சீர்கெட்ட குணங்களும் வெளிப்பட்டன.

ஆனால் இவை எல்லாமே கிருத்துவ மற்றும் முஸ்லிம்கள் தொடர்புடைய செய்திகளாகவே இங்கு காட்டப்பட்டனவே தவிர, பாலஸ்தீன் என்ற மண்ணுக்கு முதல் சொந்தக்காரர்கள் என்று அந்த மண்ணை இன்று சொந்தம் கொண்டாடும் யூதர்கள், இந்தப் போர்களும் சரித்திர நிகழ்வுகளும் நிகழ்ந்தபோது எங்கே போனார்கள்? இந்த சரித்திரத் திருவிழாவில் இந்த யூதக் குழந்தைகள் எங்கே தொலைந்து போனார்கள்? எங்கே பதுங்கினார்கள்? அவர்கள் தங்களைப் போட்டுப் போர்த்திக் கொண்ட ஈரச்சாக்கு எது? ஏன் அவர்களில் ஒருவரின் தலைகூட வெளியில் தெரியவில்லை? கிருத்தவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு விட்டு இந்த யூத புல் தடுக்கி பயில்வான்கள் போன இடங்கள் யாவை? இந்த சந்தேகங்கள் இதைப் படிப்பவர்கள் மனங்களில் எழுந்திருக்கும். யாராவது அவர்களைத் தேடினீர்களா? 

இந்தக் கேள்விகளுக்கான பதில் மிகவும் எளிதானது. 

இன்றைக்கு உலகில் பெரிய பூச்சாண்டிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த யூத சமூகத்தினர் உண்மையில், ஒன்றாம் நம்பர் சந்தர்ப்பவாதிகள்; பயந்தாங்கொள்ளிகள். வீரத்திருமகன் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களும் சிங்க இதயம் படைத்தவரென்று புகழப்பட்டஆங்கில மன்னன் ரிச்சர்டும், ஜெர்மானிய சக்கரவர்த்தியும், பல போப் ஆண்டவர்களும் தங்களின் உயிரைவிட்டுப் போராடிக் கொண்டிருந்த நேரங்களில் நமக்கென்ன வந்தது என்று இந்தப் போர்களில் எந்தப்பக்கமும் சேராமல், தங்களின் உயிர்களைக் கைகளில் பிடித்துக் கொண்டு பாலஸ்தீனிலிருந்து விட்டால் போதுமென்று ஊரைக் காலி பண்ணிக் கொண்டு கண்பட்ட நாடுகளுக்கெல்லாம் அகதிகளாக ஓடிவிட்டார்கள். இவர்களின் இந்த பயந்தாங்கொள்ளித்தனத்தை சரித்திரம் குறித்து வைத்து இருக்கிறது. 

இன்று வல்லரசுகளின் தயவில் தங்களின் வாழ்வை ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த யூத துரோகிகள், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடியவர்கள்தான் என்பதை நினவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் அகப்பட்ட அத்தனை நாடுகளிலும் குறிவைத்து இவர்கள் கொல்லப்பட்டதற்கும் கூட்டம் கூட்டமாக அடித்துத் துரத்தப்பட்டதற்கும் அவர்களின் இந்த சுயநலத்தன்மையும் ‘ புலிக்கு பயந்தவர்களே எல்லோரும் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்கிற இயல்பும் ஒரு காரணம் என்பதை இப்போது நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். 

பாலஸ்தீன் பற்றி எரியும்போது யூதர்கள் இப்படி அந்நாட்டை விட்டு ஓடியது கிருத்துவ மற்றும் முஸ்லிம் படைகளுக்கு யூதர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது. இப்படி ஓடிய அவர்களுக்குப் பாடம் படித்துக் கொடுக்கவேண்டுமென்று இருதரப்புமே எண்ணி எதிர்பார்த்து இருந்தது. 

கிருத்தவர்களைப் பொருத்தவரையில், அவ்வளவு சிலுவைப் போர்களிலும் தோற்று கடைசியாக கையறு நிலையில் வெறுத்துப் போய் நாடு திரும்பிய சிலுவைப் போர் வீரர்கள் தங்களின் பங்குக்கு , தாங்கள் போகும் வழியில் ஏன் சும்மா போகவேண்டுமென்று எண்ணினார்களோ என்னவோ இன்றைய லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த கிட்டத்தட்ட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்களை குடும்பத்துடன் கொன்று போட்டுவிட்டுத்தான் தங்களின் நாடுகளுக்குத் திரும்பினார்கள். அத்துடன் பல ஆயிரம் யூதர்களை அடிமைகளாக விலங்கிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து –அல்ல- இழுத்துச் சென்றார்கள் என்பதையும் நாம் காண்கிறோம். 

இறைவனால் சபிக்கப்பட்ட இந்த யூத சமுதாயத்துக்கு கிருத்தவர்கள் இப்படித் தங்களின் பரிசை வழங்கினார்கள். இதற்குக் காரணம் யூதர்கள் கோழைகளாகி, போர்க்களத்தை விட்டும் போர்ப்பகுதிகளில் இருந்தும் ஓட்டமெடுத்தது மட்டுமல்ல ஹஜரத் நபி ஈசா (அலை) என்று முஸ்லிம்கள் குறிப்பிடுகிற இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்கள் இந்த யூதர்கள் என்கிற பரம்பரைக் கோபமும்தான் காரணம்.

ஆனால் முஸ்லிம்களோ அவர்களுக்கு மனிதாபிமானமாக அனுதாபம் காட்டி முஸ்லிம்கள் வென்ற இடங்களில் இருந்து யூதர்கள் வெளியேற விரும்பினால் அவர்களை பத்திரமாக போகவேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆகவே உண்மையில் யூத இனம் நன்றி செலுத்த வேண்டுமென்றால் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அரபு இனத்துக்கும்தான் காலத்துக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஆனால் இன்றோ கிருத்துவ வல்லரசுகளோடு கை கோர்த்துக் கொண்டு அரபு இனத்தை அழிப்பதற்கு ஆலவட்டம் கட்டி நிற்கிறது யூத இனம். 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்திலிருந்து சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களையும் தொடர்ந்து வந்த சுல்தான்களும் யூதர்களை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். 

அடிப்படையில் ஒரே உருவமற்ற இறைவனை வணங்குவதிலும் ஆப்ரஹாமிய மதங்கள் என்று வரலாறு பெயர் சூட்டி அழைக்கும் மதங்களில் முதன்மை வகிக்கும் மதங்களை யூதர்களும் முஸ்லிம்களும் பின்பற்றுவதால் இயல்பிலேயே முஸ்லிம்களுக்கு யூதர்களின் மீது இரக்கம் இருந்தது. அதே இரக்கம் திரண்டுவந்த கிருத்துவர்களுக்கெதிரான முஸ்லிம்களின் உயிர்ப் போராட்டங்களுக்கு உதவாமல் - தோளோடு தோள் நிற்காமல் விலாங்கு மீன் நழுவுவது போல் நழுவி நாட்டை விட்டு ஓடிப் போன காரணத்தால் கிருத்துவர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் யூதர்களின் மீது கடும் கோபத்தையும் வரவழைத்தது. முஸ்லிம்களின் யூதர்களின் மீதான இரக்கம் இறக்கம் கண்டது. 

ஆனாலும் யூதர்களின் பங்களிப்பு இல்லாமலேயே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றிகளையையே தொடர்ந்து பரிசாக அளித்தான். இந்த வெற்றிகளில் பங்கு பெற்று கவுரவமான பங்காளிகளாகத் திகழ வேண்டிய யூதர்கள், நாடோடிகளாக உலகெங்கும் மூட்டை முடிச்சுகளோடு சாலைப் பணியாளர்கள் போல அலைந்தார்கள். சிலுவைப் போர்கள் நடைபெற்ற காலங்களில் முஸ்லிம்களோடு இணைந்து யூதர்களும் நின்று இருந்தால் நாடற்றவர்களாக அவர்கள் அலைந்த கதைகளும் கொத்துக் கொத்தாக அவர்கள் ஹிட்லர் முதலியவர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளையும் சரித்திரம் சந்திக்காமலேயே போயிருக்க வாய்ப்பிருந்தது. அந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டவர்கள் யூதர்களே. வினையை விதைத்தவர்கள் வினையை அறுத்தார்கள். 

இது ஒருபுறமிருக்க ஐரோப்பா முழுதும் யூத சமூகத்தின் மீது ஒருவித வெறுப்பு உச்சகட்டத்தில் நீன்று நிலவ ஆரம்பித்தது. இதற்கு அடிப்படைக் காரணம், முன்னரே குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களின்போது யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தங்களுடன் நிற்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் என்றாலே அவர்கள் சுயநலக் காரியவாதிகள்; துரோகம் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள் என்பதை ஐரோப்பிய உலகம் நன்றாக உணர்ந்து கொண்டது. அவர்கள் நாடோடிகளாகத் தங்களின் நாடுகளுக்கு வந்ததை எந்த ஐரோப்பிய நாடும் விரும்பவில்லை. அவர்களை தங்களின் நாடுகளைவிட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்று அவை ஆர்வம் காட்டின. ஐரோப்பிய நாடுகளில் அவர்கள், ‘முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்தாகவே ‘ நடத்தப்பட்டனர். 

யூதர்களின் மீது முதல் கல்லை எடுத்து வீசிய நாடு ஸ்பெயின் ஆகும். ஸ்பெயின் யூதர்களை தங்களின் நாட்டை விட்டு வெளியேற்றிய வரலாற்றுச் செய்திகள், அவற்றின் நடைமுறைகள் நம்மைக் குலை நடுங்கச் செய்கின்றன. 

1492 ! On July of that year, the entire Jewish community , some 200, 000 people were expelled from Spain. என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு இனத்தை கூண்டோடு குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்று ஒரு நாட்டின் அரசு உத்தரவிட்டது பெரிய விஷயமல்ல. ஆனால் இறைவனால் சாபமிடப்பட்ட யூதர்கள் எப்படி இழிவு படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை ஒரு சாம்பிளுக்காக எடுத்துக் காட்டுவதானால் வரலாறு தருவதை அப்படியே தரலாம். 

Tens of thousands of refugees died while trying to reach safety. In some instances, Spanish ship captains charged Jewish passengers exorbitant sums, then dumped them overboard in the middle of the ocean. In the last days before the expulsion, rumors spread throughout Spain that the fleeing refugees had swallowed gold and diamonds, and many Jews were knifed to death by brigands hoping to find treasures in their stomachs.

யூதர்களின் இந்த இழிநிலையை கே. பி. சுந்தராம்பாள் பாணியில் , “ தப்பித்து வந்தானம்மா! பாவம் தனியாக நின்றானம்மா! காலம் கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா “ என்றுதான் பாடவேண்டும். 

பெரும் தொகைகளை தப்பித்துச் செல்லும் கப்பலுக்கு கட்டணமாகச் செலுத்தினாலும் அவர்கள் சமுத்திரத்தின் நடுவில் குப்பைகளைப் போலக் கொட்டப்பட்டனர். நாட்டைவிட்டுச் செல்லும் யூதர்கள் ஸ்பெயினிலிருந்து தங்கத்தையும் வைரத்தையும் தங்களின் வயிறுகளில் வைத்து கடத்திச் செல்வதாக ஒரு வதந்தி எழுந்ததைத் தொடர்ந்து அவர்களின் வயிறுகள் கூர்மையான கத்திகளால் கீறப்பட்டு சோதனையிடப்பட்டன. இதனால் இறந்த யூதர்களின் எண்ணிக்கை எத்தனையோ.

பல ஆயிரம்பேர்கள் உயிர் பிழைக்கவேண்டுமானால் கிருத்துவ மதத்துக்கு மாறவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டு கிருத்துவ மதத்துக்கு மதம் மாற்றப்பட்டனர். மதம் மாற மறுத்த சைமன் மாயமி என்ற ஒரு யூதத்தலைவர் கழுத்து வரை தரையில் புதைக்கப்பட்டு ஏழுநாட்கள் அன்னம், தண்ணீர், ஆகாரமின்றி கொல்லப்பட்டார். இவைகள் சில உதாரணங்கள்தான்.

இவ்வளவு கொடுமைகளுக்கிடையிலும் பல யூதர்கள் பல்வேறு நாடுகளுக்குத் தப்பி சென்றனர். அவ்விதம் அவர்கள் நாடு பெயர்ந்தபோது தாங்கள் வட்டிக்குக் கொடுத்து சேர்த்திருந்த அத்தனை சொத்துக்களையும் போட்டது போட்டாற்போல் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடினார்கள். ‘வட்டி, செல்வத்தை அழிக்கும் ‘ என்ற திருமறை குர் ஆனின் வாசகத்துக்கு இது ஒரு உதாரணம். அப்படித் தப்பிச் சென்ற நாடோடி யூதர்களில் ஒரு பகுதியினர்தான் அமெரிக்காவுக்கும் சென்றார்கள். இன்று அங்கிருந்துகொண்டு உலகை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். அதே போல பல அரபு தேசங்களுக்கும் இவர்கள் தப்பிச்சென்றார்கள். இவர்கள் அரபு தேசங்களுக்கு குறிப்பாக துருக்கிக்குச் சென்றதை யூதர்கள் பெற்ற அதிர்ஷ்டம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது இப்படி. 

“The most fortunate of the expelled Jews succeeded in escaping to Turkey. Sultan Bajazet welcomed them warmly.” (Source: Joseph Telushkin. Jewish Literacy NY: William Morrow and Co., 1991).

இப்படி அவர்களை வரவேற்று வாழ்வளித்ததற்கான விலையை, பச்சிளங்குழந்தைகள் மற்றும் வயோதிகர்களின் உயிர்களாக இன்று பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் இந்தக் கொடியவர்களுக்குக் கொடுத்து வருகிறோம் என்பதை நாம் வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க இயலாது. 

இப்படி ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள் என்பதை விக்கி ஒரு கணக்குப் பட்டியலாகத் தருகிறது. இதோ :- 

It may be of interest to give the following estimates of Loeb's of the numbers of those who were in Spain before the expulsion and of those who emigrated to different parts of the world:

Algeria 10,000
Americas 5,000
Egypt and Tripoli 2,000
France 3,000
Holland, England, Scandinavia and Hamburg 25,000
Italy 9,000
Morocco 20,000
Turkey 90,000
Elsewhere 1,000
Total emigrated 165,000
Baptized 50,000
Died en route 20,000
Total in Spain in 1492 235,000

ஸ்பெயினைப் பின்பற்றி இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் யூதர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி கதவை சாத்தின ; தூக்கி தூர வீசின. பிரிட்டன் உட்பட குறைந்த பட்சம் பதினைந்து நாடுகளாவது இவ்விதம் இவர்களை வெளியேற்றின. இதர ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் யூதர்களை வெளியேற்றுவது என்பது ஒரு நடைமுறையாகவே பின்பற்றப்பட்டது. அப்போதெல்லாம் அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகள் மத்திய கிழக்கில் இருந்த அரபு நாடுகள்தான் . அதையும் மீறி சிலர் வடஆப்ரிக்க நாடுகளுக்கும் அமெரிக்க நாடுகளுக்கும் பின்னங்கால்கள் பிடரியில் பட ஓடினார்கள்! ஓடினார்கள்! வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். 

இப்படிப் பட்ட வெள்ளாடுகள்தான் இந்த யூதர்கள். சரி ! இந்த வெள்ளாடு எப்படி வேங்கையானது? 

இன்ஷா அல்லாஹ் தொடரலாம்...

இபுராஹிம் அன்சாரி

18 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

துரத்தும் வேலைப்பளு..நேரத்தை விடாமல் பின்னாடியே வால் பிடித்துப்போகும் சூழ்நிலை ...சமயங்களில் இந்த தொடரை அத்தியாயம் விட்டு படிக்க வைக்கிறது. இருப்பினும் எந்த தொடரும் 'விருப்பம்" குறையாமல் அழகாக தொகுத்து வழங்கும் உங்கள் திறமை வித்யாசமானது.

வேலைகளின் பளு சமயங்களில் நினைக்க வைக்கும்....' ச்சே...தமிழ் நாட்டில் கல்லூரி பேராசிரியராய் பிறந்து விட்டால் இந்த லொல்லு தேவையில்லாமல்.....காந்தி ஜெயந்தி / சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை / சுதந்திர தினம் / குடியரசு தினம் / அடைமழை / உண்ணாவிரதங்கள் / பசங்க ஸ்ட்ரைக் / உள்ளிருப்பு போராட்டம் / லேப்டாப் தராததற்கு போராட்டம் / ஹாஸ்டலில் இட்லி வேகாததற்கு போராட்டம் என்று விடுமுறைகளால் விமோசனம் அடைந்த நிலையை அனுபவிக்களாமே என்று ஏக்கம் எதேச்சையாக ஏற்படும்...

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜாகிர்!

நேற்று இரவுதான் நானும் பாரூக் மச்சான் அவர்களும் தங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம்.

பேச்சின் நோக்கம் உங்களைத் தேடியதன் தேட்டமே.

காலையில் முதல் கருத்துரை உங்களுடையது காண மிகவும் மகிழ்ச்சி.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

காக்கா,

உண்மைதான் . யூதர்களின் சதிகளுக்கு எதிரானத் தொடரில் அவர்களையே காணோமே என்கிற எண்ணம் தோன்றியதுதான். இருப்பினும் சொல்லிவரப்பட்ட சிலுவை யுத்தம், ஐயுபி போன்ற ஏனைய வரலாற்றுச் செய்திகளின் சுவாரஸ்யம் கட்டிப்போட்டு வைத்து விட்டது.

இந்த அத்தியாயத்திற்குத் தொடரும் போட்டிருக்கும் விதம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

வகுப்பைத் தொடர வாழ்த்துகள், வாத்யார் அவர்களே!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sheikdawoodmohamedfarook said...

//ஆனால்முஸ்லிகளோஅவர்களுக்குமனிதாபிமானஅனுதாபம்காட்டி........................ஆனால்அரபுஇனத்தைஅழிப்பதற்குஆலவட்டம்காட்டிநிற்கிறதுயூதஇனம்//'நரிக்குஇடம்கொடுத்தால்கிடைக்குரெண்டுஆடுகேக்கும்'என்றுஒருபழமொழிஉண்டு.யூதநரிஅதைசெய்கிறது.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

sheikdawoodmohamedfarook said...

பாலஸ்தீனம்-யூதஇனம்-ராக்கெட்-மத்தியகிழக்குஅமெரிக்கா-பகைமை போன்றவார்த்தைகள்பத்திரிக்கையில்செய்தியாக வரும்போது மாப்பிளைகொடுத்துபெண்எடுத்ததில்சீர்சீராட்டில்அவர்களுக்குள்வரும் சம்பந்திசண்டையோஎன்றுநினைத்தேன்.இப்பொழுதுதான்அதுவேறு!இதுவேறு!என்று அறிந்தேன். குழப்பதை நிவர்த்தி செய்து கொண்டிருப்பதற்க்கு நன்றி.

sheikdawoodmohamedfarook said...

அஸ்ஸலாமுஅலைக்கும்மைத்துனரே!இந்தவரலாற்றில்ஏசுநாதரைநுழையவிடாமல்பார்த்துகொள்ளுங்கள்.வந்தால்அவரால்நிறையஉங்களுக்கு தொல்லைவரும்.மற்றும்வள்ளுவர்-நாலடியார்-.இளங்கோ-சிலப்பதிகாரம்-குண்டலகே-சிபாரதிதாசன்ஆகியோர்களுக்கும்அனுமதிஇல்லைஎன்று முன்கூட்டியேதகவல் சொல்லிஅனுப்பவும்.

sheikdawoodmohamedfarook said...

//கடந்தசிலசிலவாரங்களாகஎழுதப்பட்டதொடர்களைப்டித்தவர்களுக்கு......//எனக்கும்அந்தக்குழப்பமும்கேள்வியும்வந்தது.கதையின்கதாநாயகரை காணோமேஎன்றும்மைத்துனர்'தும்பைவிட்டுவாலைபிடிக்கிறாரே!'என்றும் நினைத்தேன்.இந்தவாரம்தூண்டியில்மாட்டியதுநல்லகொடுவாமீனு.இந்தவாரம்Tasty fried-fish.Thank you!

Shameed said...

//ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து –அல்ல- இழுத்துச் சென்றார்கள் என்பதையும் நாம் காண்கிறோம். //

//முஸ்லிம்களின் யூதர்களின் மீதான இரக்கம் இறக்கம் கண்டது.//

எழுத்தாற்றல் வசீகரமான எழுத்து இவை அனைத்தையும் உங்கள் எழுத்தில் காண்கின்றேன்

Ebrahim Ansari said...

அன்புள்ள மச்சான் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம். தங்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி.

Ebrahim Ansari said...

மருமகன் சாவன்னா!

// வசீகரமான எழுத்து// பூக்களால் நீ வசீகரிக்கிறாய். எனது கட்டுரை வார்த்தைகளாலா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பாலஸ்தீனம் வெடித்தால், (குண்டு) விழுந்தால், பேசப்படும் அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு மறக்கப்படும். மாறாக இந்த தொடரில் ஆணித்தரமாக பதிக்கப்படும் இந்த வரலாறு இன்னும் அதன் பின்னரும் பேசப்படும் இன்ஷா அல்லாஹ் !

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்.பல விஷயங்கள் தெரியாதவைகள்.குறிப்பாக யூதர்களின் அன்றைய நிலை பற்றின விவரம்.இன்னும் எதிர்பார்க்கிறோம்.இந்த தொடர்,ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு,வெளியிடப்பட வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

A kind note to Christians,

ஈஸா அலை (Jesus- peace be upon him)அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.இஸ்லாத்தை பொருத்தவரை - அவர்களை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை,கொல்லவுமில்லை என்பதாகும்

4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
THE QUR'AN



http://www.tamililquran.com/quransearch.php?q1=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88&B2=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

இப்னு அப்துல் ரஜாக் said...

//அஸ்ஸலாமுஅலைக்கும்மைத்துனரே!இந்தவரலாற்றில்ஏசுநாதரைநுழையவிடாமல்பார்த்துகொள்ளுங்கள்.வந்தால்அவரால்நிறையஉங்களுக்கு தொல்லைவரும்//

மதிப்புக்குரிய பாருக் காக்கா அவர்கள்,தமிழ் குர்ஆன் தர்ஜுமா படிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இயேசு அலை இல்லாமல் பாலஸ்தீனா?நன்றாக உள்ளது உங்கள் கதை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//மற்றும்வள்ளுவர்-நாலடியார்-.இளங்கோ-சிலப்பதிகாரம்-குண்டலகே-சிபாரதிதாசன்ஆகியோர்களுக்கும்அனுமதிஇல்லைஎன்று முன்கூட்டியேதகவல் சொல்லிஅனுப்பவும். //

அன்புக்குரிய பாருக் காக்கா அவர்கள் மிக சரியாக சொல்லியுள்ளார்கள்.மேற்கண்டவர்களுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் சம்பந்தம் இல்லை , அவர்கள் ஏன் இங்கு வர வேண்டும் என்று.அழகான முறையில்,உண்மையை சொல்லிய உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களின் கருத்து.

//இந்த தொடர்,ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு,வெளியிடப்பட வேண்டும்.//

தங்களின் அன்பான நல்லெண்ணக் கருத்துக்கு ஜசாக் அல்லாஹ் ஹைரன்.

ஏற்கனவே இப்படி ஆர்வமூட்டபட்ட நான் எழுதிய இரண்டு தொடர்கள் மறைக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் பொருளாதாரச் சிந்தனைகள் மரணப்படுக்கையில் கிடக்கின்றன.

ஏதோ எழுதுகிறோம் படிக்கிறோம் அவ்வளவுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு