Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 01, 2014 | , , ,

தொடர் : பகுதி பதினான்கு

கடந்த அத்தியாயத்தை யூத வெள்ளாடு எப்படி வேங்கையானது? என்ற கேள்வியோடு நிறைவு செய்து இருந்தோம்.

வெள்ளாடும் வேங்கையாகும். புல்லும் பூச் செடியாக வளரும் – மலரும்; கல்லும் கவி பாடும் ; கட்டெறும்பும் காண்டாமிருகமாக உருவெடுக்கும் ; மண்ணில் புதையுண்டு கிடக்கும் மரவள்ளிக் கிழங்கு கூட மான் குட்டியாகி துள்ளிக் குதித்தோடும்.

எப்போது?

எண்ணங்களும் திட்டங்களும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப் படும்போது மேலே நாம் குறிப்பிட்டவைகள் சாத்தியம்தான். இதற்கு யூதர்களின் வாழ்க்கையே அதிசயங்களைக் காட்டும் ஒரு ஆச்சரியப்படத்தக்க உதாரணம். 

ஒற்றுமையும் ஒத்துழைப்பும் முயற்சியும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளும் மனப்பான்மையும் உள்ளே கொழுந்துவிட்டெரியும் உத்வேகமும் செயலாக உருவெடுக்கும்போது நிறைவேறாதவைகளைக்கூட நிறைவேற்றி வைக்கும் என்பது வரலாறு நிருபிக்கும் உண்மைகளாகும் . மீளமுடியாது என்று உலகம் நினைத்த ஜப்பான் உலகமகா அழிவில் இருந்து மீண்டு, வல்லரசான அந்த நாட்டின் வெற்றிக்கு அந்த மக்களே காரணம் என்பது அண்மைக்கால உதாரணம் 

விழுவது மீண்டும் எழுவதற்கே என்று ஒரு இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் எண்ணி செயல்பட்டால் – ஒத்துழைத்தால் உலகையே ஆட்டிப் படைப்பதும் சாத்தியம் என்பதே யூதர்களின் வரலாறும் உலகுக்கு உணர்த்தும் உண்மை. 

இந்த நேரத்தில் இன்று நாம் கண்ணால் காணும் சில காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. ஒரு நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கிடையே வாழும் ஒரு சிறிய அளவு மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களின் சமுதாயம், தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலைகளை அன்றாடம் பார்த்துக் கொண்டு இருக்கும் நாம், யூதர்களின் திட்டமிட்ட செயல்களையும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெற்றிகளையும் எண்ணிப்பார்த்தது அவர்கள் இறைவனுக்கும் நமக்கும் எதிரிகளாக இருந்தாலும் கூட அவர்களைப் பார்த்து வியக்காமல் இருக்க இயலவில்லை. இதைப் படிப்பவர்கள் சிலவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

இதுவரை நாம் படித்த இந்ததொடரின் பகுதிகளில் இருந்து நாம் அறிந்து கொள்வது எவை என்றால் பாலஸ்தீனத்தை இறைவன் யூதர்களுக்காகவே படைத்து அவர்களை உயர்வாக்கினான் ஆனால் அவர்களின் நன்றி கெட்ட செயல்களினால் இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகினர். மனித எதிரிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இறைவனே இவர்களை எதிரியாகப் பார்க்க வேண்டிய யாருக்கும் வரக்கூடாத இழிநிலை இவர்களுக்கு வந்தது. 

அவர்கள் இருந்த நிலங்களிலிருந்தும் புனிதப் பகுதிகளில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் சீரழிந்தனர். கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். நடுக்கடலில் அள்ளி வீசப்பட்டனர். 

இப்போது சொல்ல வருவது இதுதான் , இதே நிலை இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தாலும் , அவர்களது மூன்று தலைமுறை அழிந்தாலும் ஒழிந்தாலும் அவர்கள் ஓடி ஒளிந்தாலும் மீண்டும் பாலஸ்தீனத்துக்கு வந்து குடியேறி விடவேண்டுமென்ற அவர்களின் நோக்கம் மட்டும் உள்ளூர ஒளிர்ந்துகொண்டே இருந்தது. ஒடுக்கப்பட்டு ஓடி ஒளிந்த இனம் எப்படியும் மீண்டும் எழுந்து நிற்கவேண்டுமென்ற எண்ணம் தாய்ப்பாலுடன் சேர்த்து பிறக்கும் குழந்தைகளுக்கும் புகட்டப்பட்டது. இந்தக் கருத்தை நமது மனதில் வைத்துக் கொண்டு இந்த வரலாற்றைத் தொடர்ந்து படிக்கலாம். 

ஸ்பெயினைத் தொடர்ந்து போர்சுகல் முதலிய நாடுகளும் அட்டவணை வைத்து யூதர்களை வெளியேற்றின. அவ்வாறு வெளியேறியவர்கள் அரபுகளுக்கு மக்களுக்கு மத்தியிலேயே வாழ்வதைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் அவர்களது குறிக்கோள் பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனம். இப்படி பலநாடுகளிலிருந்து வெளியேறிய யூதர்களை அரபு நாடுகளுக்கு அனுப்புவது என்பதை ஆலோசனை செய்து அறிவித்தது யூத குருமார்களின் சபைதான். அதிலும் முக்கியமாக பல்துறை அறிஞர்களை மற்றும் வல்லுனர்களைத் தேர்ந்தெடுத்து அரபு தேசங்களுக்கு திட்டமிட்டு அனுப்பினார்கள். இதற்கு முக்கியக் காரணம் , ‘ நாளை நமதே! நாளை நமதே! ‘ என்று பாடிக் கொண்டு மீண்டும் பாலஸ்தீனத்தில் குடிபுகுந்துவிட வேண்டுமென்ற அவர்களின் உள்ளத்தில் தலைமுறை தலைமுறைகளாக ஊறி உரம்போடப்பட்ட எண்ணம்தான்.

இந்தியாவில் எவ்வாறு மிகச் சிறுபான்மையினரான பிராமணர்கள் தங்களின் படிப்பாலும் புத்தியாலும் திறமையாலும் அரசமைப்பின் முக்கிய இடங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொள்வதுடன் - பற்றிக் கொள்வதுடன் தங்களின் இனத்தவரையும் எப்படியாவது அத்தகைய உயர் பதவிகளில் நியமித்து விடுகிறார்களோ அதே போலத்தான் யூதர்களும் இருந்தார்கள். எவ்வாறு பிராமணர்கள் ஆட்சியார்களைத் தங்களின் கண்ணசைவில் வைத்து இருந்தார்கள் என்று நாம் அறிந்து இருக்கிறோமோ அவ்வாறே யூதர்களும் ஆட்சியாளர்களை தங்களின் சொல்லுக்கு அடிபணியவைப்பதில் வித்தகர்களாக இருந்தார்கள். 

இதன் மூலம் யூத இனத்துக்காக பல நன்மைகளைப் பெற்றுத்தருவதில் மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது கருமமே கண்ணாயிருந்தனர். இதற்காக அரசர்களாக இருந்தாலும் ஆளும் தலைமையினராக இருந்தாலும் அவர்களின் தோழி , தோழர்கள் உட்பட்ட வளர்ப்பு மகன்களாக இருந்தாலும் அவர்களின் சொத்துக் குவிப்புக்குத் துணை போக கையூட்டுத் தருவதில் யூதர்கள் காலம் நேரம் பார்த்ததில்லை.

பின்னங்கால்கள் பிடரியில் பட ஓடி வந்த யூதர்கள் பலர் துருக்கியில் வந்து புகுந்தார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் கண்டோம். துருக்கியின் அரசரும் அவர்களை பாவப்பட்டு வரவேற்றார் என்பதையும் கண்டோம். சிலுவைப்போர் வீரர்களால் சூறையாடப்பட்டபோது கான்ஸ்டாண்டி நோபிள் என்று அழைக்கப்பட்ட துருக்கியின் தலைநகரம் இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படுகிறது. யூத வெள்ளாடுகள் இஸ்தான்புல்லின் புல்லை மேய வந்தன. அரசரும் அனுமதித்தார். 

அத்துடன் ஆட்டோமான் துருக்கியின் ஆளுமைக்குட்பட்ட எகிப்து, அல்ஜீரியா, டமாஸ்கஸ் போன்ற பகுதிகளிலும் குடியேறும் அனுமதியும் யூதர்களுக்கு வழங்கப்பட்டது. 

யூதர்களின் புத்திசாலித்தனத்துக்கு நாம் ஒரு ஒப்பீட்டையும் உதாரணத்தையும் சொல்ல வேண்டுமானால், கடந்த 105 வருடங்களில் உலகில் உள்ள 14 மில்லியன் யூதர்களில் இதுவரை நோபல் பரிசைப் பெற்றவர்கள் 180 பேர்களாவார்கள். ஆனால் 1.5 3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம்களில், இதுவரை நோபல் பரிசு பெற்றுள்ளவர்கள் மூன்று பேர்கள் மட்டுமே. 

உலகில் பல முன்னணித் தொழில்களின் முதல் அதிபதிகளாக யூதர்களே இருக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை வாங்கிவிடுவதில் கில்லாடிகள் யூதர்கள். உதாரணமாக, இன்றைய நவீன அறிவியலின் விதைகளற்ற பழங்களின் (Seedless Fruits) காப்புரிமை யூதர்களிடமே இருக்கின்றன. ஒரு இடத்தில் ஒரு சிறிய காய்கறித் தோட்டத்தைப் போட்டாலும் அதை ஒரு பெரிய விவசாயப் பண்ணையாக உயர்த்திவிடக் கூடிய திறமை யூதர்களிடம் இருக்கிறது என்று கூறுவார்கள். இத்தகைய தன்மைகள் யூதர்களிடம் இன்றல்ல அன்றே இருந்திருக்கிறது என்பதை அறிந்த ஆட்டோமான் துருக்கியின் சுல்தான் யூதர்களின் அறிவை மட்டும் பெரிதாக கருதி அவர்களை அரவணைத்தார்; ஆதரித்தார். இந்த அரவணைப்பும் ஆதரவும்தான் இத்தனை காலம் யூதர்கள் எதிர்பார்த்தது; திட்டமிட்டது. 

மேற்கண்ட பகுதிகளில் நாம் யூதர்களின் திறமைகளைப் புகழ்ந்து சில வரிகளைக் குறிப்பிட்டு இருக்கிறோம். இன்றைய நிலையில் அவர்கள் போர்க்களத்திலும் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மையே . ஆனால் அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான். இறுதி வெற்றி யூதர்களுக்கல்ல என்பதே நாம் நம்பிக்கை கொள்ள வேண்டியது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டி இருக்கிறது. காரணம் அல்லாஹ்வின் அருட் தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியதாக ஹஜரத் அபு மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி 5598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் யூதர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்வீர்கள். எந்த அளவுக்கென்றால், (கல்லின் பின்னால் ஒரு யூதன் ஒளிந்துகொள்வான்.) அப்போது அந்தக் கல், "முஸ்லிமே! இதோ ஒரு யூதன். நீ வந்து, அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். “

ஆகவே இந்த நபி மொழியை நினைவில் வைத்துக் கொண்டுதான் நாம் தொடர்ந்து படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் யூதர்களின் திறமையும் வெற்றியும் தற்காலிகமானதே என்பதை சுட்டிக்காட்டிச் சொல்வதும் நமது கடமை. 

இப்போது வரலாற்றுக்குப் போவோம். 

இவ்வளவு தூரம் யூதர்களையும் அவர்களுக்கு துருக்கியின் ஆதரவையும் பற்றி ஏன் பேசுகிறோமென்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. 

அதைச் சொல்வதற்கு முன் , பாலஸ்தீன வரலாறு பல பக்கங்களை விழுங்கும் மாமுலக் மற்றும் மங்கோலியர்களின் போர் மற்றும் படையெடுப்பைப் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டு விட்டு செல்வோம். காய்த்தமரம் கல்லடி படும் என்பதைப் போல மங்கோலியர்களும் அவர்கள் பங்குக்கு பாலஸ்தீனத்தைக் கைப்பற்ற எடுத்த படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. முரட்டு மங்கோலியர்கள் மத்திய கிழக்கின் பல பகுதிகளில் குறிப்பாக பாக்தாத்தில் நடத்திய அட்டூழியங்கள் துயரங்களும் பல ஆயிரம் முஸ்லிம் பிணங்களும் விழுந்த ஒரு தனி வரலாறு.

நம்மைப் பொறுத்தவரை பாலஸ்தீனம் தொடர்பான மங்கோலியர்களின் நிலை பற்றி விவரிக்கும் கீழ்க்கண்ட வரலாற்றின் வரிகளை மட்டும் சொல்லிவிட்டுத் தொடரலாம். 

The Mongol Empire reached Palestine for the first time in 1260, beginning with the Mongol raids into Palestine and reaching an apex at the pivotal Battle of Ain Jalut. In 1486, hostilities broke out between the Mamluks and the Ottoman Turks and the Ottomans captured Palestine in 1516. 

இறுதியில் ஒரு வழியாக பாலஸ்தீனம் , 1512 – ஆம் ஆண்டு தொடங்கி படிப்படியாக ஆட்டோமான் துருக்கியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. அன்றைய துருக்கியின் சுல்தான் பயஸித். (Bayazid ) ஆவார். இவர் வேறு யாருமல்ல. நாடு கடத்தப்பட்டு நாடி வந்த அனைத்து யூதர்களையும் அன்புடன் அரவணைத்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆட்டோமான் துருக்கியின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் குடியேற தாராளமாக அனுமதி அளித்த சுல்தான் அவர்களுடைய வாரிசுதான்.

துருக்கி, பாலஸ்தீனத்தை முழுமையாகக் கைப்பற்றியதை யூதர்கள், அண்மையில் பெங்களூர் பரப்பனகார அக்ரகார சிறைவாசலில் வெடித்த பட்டாசுகளைவிட அதிகப் பட்டாசுகளை வெடித்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். துருக்கியர்கள் கூட அவ்வளவு மகிழ்ந்து இருப்பார்களா என்பது கூட சந்தேகம்தான். 

அத்துடன் யூதர்கள், தங்களது அடுத்த காயை நகர்த்தத் தொடங்கினார்கள். ஆட்டோமான் துருக்கியின் சுல்தானின் முன்பு கண்களைக் கசக்கிக் கொண்டு போய் நின்றார்கள். 

கண்ணீருக்குக் காரணம்? 

பாலஸ்தீனம் என்ற வண்ணபலூனைத் தாங்களும் ஊதிப் பார்க்க அனுமதி வேண்டுமென்றுதான். ஆட்டோமான் துருக்கியின் இதர பகுதிகளில் குடியேற அனுமதித்தது போல் பாலஸ்தீனற்குள்ளும் குடியேறி வாழவும் வணிகம் செய்யவும் சுல்தானின் அனுமதி கேட்டார்கள். 

இப்போதுதான் , “ வெள்ளையம்மா! வந்ததம்மா உன் காளைக்கு ஆபத்து !” என்ற நிலை உண்டானது. 

அனுமதி கிடைத்ததா? இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம் அடுத்த வாரம். 

குறிப்பு:- இந்தத் தொடரில் ஆட்டோமான் துருக்கி என்று நாம் குறிப்பிடுவது உண்மையிலேயே உதுமான் துருக்கி என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் வரலாற்று நூலகள் ஆட்டோமான் துருக்கி என்றே குறிப்பிடுகின்றன. இது எதைப் போல என்றால் கன்னியாகுமரியை கேப் காமரின் என்பது போலவும் தூத்துக்குடியை டூடிகோரின் என்று சொல்வது போலவும்தான்.

இபுராஹீம் அன்சாரி

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//பாலஸ்தீனத்திற்குள்குடியேறிவாழவும்யூதர்கள்துருக்கிசுல்தானிடம் அனுமதிகேட்டார்கள்//அப்போபாலஸ்தீனத்தில்ottomamஆட்சிக்குசங்குஊத அஸ்திவாரம்போட்டாச்சு!''!என்றுயூகிக்கநிறையவாய்ப்புண்டு.வந்ததுஆட்டுத்தோல்போர்த்தியயூதநரியாச்சே!

sheikdawoodmohamedfarook said...

//துருக்கிபாலஸ்தீனத்தைமுழுமையாககைபற்றியதையூதர்கள்பட்டாசு வெடித்துகொண்டாடினார்கள்//'நேரடியாகஒருவனைஎதிர்த்துகெடுக்க முடியாதுபோனால்அவனைபுகழ்ந்துகெடு''என்றசூத்திரம்அவர்களுக்குநன்கு தெரியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த நேரத்தில் இன்று நாம் கண்ணால் காணும் சில காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. ஒரு நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கிடையே வாழும் ஒரு சிறிய அளவு மக்கள் தொகை கொண்ட இந்திய முஸ்லிம்களின் சமுதாயம், தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து நின்றுகொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலைகளை அன்றாடம் பார்த்துக் கொண்டு இருக்கும் நாம், யூதர்களின் திட்டமிட்ட செயல்களையும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வெற்றிகளையும் எண்ணிப்பார்த்தது அவர்கள் இறைவனுக்கும் நமக்கும் எதிரிகளாக இருந்தாலும் கூட அவர்களைப் பார்த்து வியக்காமல் இருக்க இயலவில்லை. இதைப் படிப்பவர்கள் சிலவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். //

ஆம் ! (இயக்க மயக்க) ஆள்காட்டிக் கொண்டும்....!

வரலாறு என்றுமே பாடம் புகட்டும் !

இப்னு அப்துல் ரஜாக் said...

அமர்க்களம்.ஹதீஸ் மேற் கோளுடன் அற்புத - ஆணித்தர வரலாறு.அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் சக்தியும்,நல் சுகமும் தருவானாக

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

இதென்ன ச்செஸ் விளையாட்டுப் போலல்லவா இருக்கிறது! இந்த கிராஃபிக்ஸ் யுகத்தில் முற்றுகை, போர் மற்றும் சாணக்யம் போன்றவற்றை நீங்கள் விளக்குவது மிகுந்த பிரமிப்பை உண்டாக்குகிறது!

இந்தக் கட்டுரையை இன்ஷா அல்லாஹ் முழுமைப்படுத்தி ஒரு thesisஆக சமர்ப்பித்தால் NPhil இலகுவாகக் கிடைத்துவிடும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

sabeer.abushahruk said...

//வெள்ளாடும் வேங்கையாகும். புல்லும் பூச் செடியாக வளரும் – மலரும்; கல்லும் கவி பாடும் ; கட்டெறும்பும் காண்டாமிருகமாக உருவெடுக்கும் ; மண்ணில் புதையுண்டு கிடக்கும் மரவள்ளிக் கிழங்கு கூட மான் குட்டியாகி துள்ளிக் குதித்தோடும்.//

விவாத வழவழா கொழகொழாக்களில் நொந்துபோன நமக்கு இது போன்ற சுற்சுறு இலக்கிய ரசனை மிக்க சொற்றொடர்கள் மிக மிக அவசியம்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

Anonymous said...

ஆட்டோமான் துருக்கி என்பதை உதுமான் துருக்கி என்றுதான் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அதுவும் தவறான உச்சரிப்பாம். உஸ்மானிய துருக்கி என்றுதான் இருக்க வேண்டும் என்று மவுலானா அசதுல்லாஹ் அவர்கள் திருத்தினார்கள்.

தவறுக்கு வருந்துகிறேன்.

ஜாசாக் அல்லாஹ் ஹைரன் மவுலானா.

தங்களைப் போல மார்க்க கல்வியாளர்கள் இந்தத் தொடரைப் படிப்பது பற்றி மிகவும் மகிழ்ச்சி.

>இபுராஹீம் அன்சாரி

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Ebrahim Ansari,

The series of articles about Palastine are going in full swing. I have rsearched about reason for current and pass success of Jews. It is said that the intelligence of human is measured using an unit called IQ. Jews are having highest IQ.. more than 115.

From my observation there are so many factors determine their success almost on every advanced intellectual endeavors. One of the key factors is thay give primary importance to education.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் தம்பி அஹமது அமீன் அவர்களின் கருத்து , பயனுள்ள தகவல் ஆகிய அனைத்துக்கும் நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு