Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிரடி நடவடிக்கைகள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2014 | , , , , ,

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில்...!

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.

கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

--------------0O0O00O0O00O0O00O0O0-------------

மின்வாரிய விதிமுறைகள் மீறப்பட வேண்டாம்

அதிரை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு 20.11.2014 தேதியிட்டு எழுதிய கடிதம்.


--------------0O0O00O0O00O0O00O0O0-------------

கந்தூரிகளுக்குத் தடை வேண்டும்!

கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:



பகிர்வு : ADT

6 Responses So Far:

Shameed said...

இதன் மூலம் ADT கொள்கை ரீதியாக உறுதியாக செயல்படுகின்றது என்பது தெளிவாகின்றது

Ebrahim Ansari said...

//1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.//

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரு தனிப் பகுதிகளைப் பிரிக்க க்ரீன் லைன் என்ற ஒரு பகுதி உண்டு. பெய்ரூட் மியூசியம் ஏரியா என்றும் இதை அழைப்பார்கள். பெய்ரூட்டை இரு பகுதிகளாக பிரிக்கும் முறை இது. ஒரு பக்கம் இருப்பவர்கள் மறு பக்கம் வர மாட்டார்கள். நம்மைப் போல பிழைக்கபோனவர்கள் மட்டுமே சென்று வர முடியும் . எனக்கு அந்த நினைவு வருகிறது. - ஏனோ.

தடை என்றால் முழுத்தடை தேவை. அது என்ன குறிப்பிட்ட சில தெருக்களில் மட்டும் அனுமதி. உயர்வு தாழ்வா?

வேண்டுமானால் தர்கா பகுதியை மட்டும் நாலு சுற்று சுற்றிவிட்டு வரச் செய்து இருக்கலாம்.

Ebrahim Ansari said...

இருந்தாலும் ஏடிடி யின் செயல்பாடுகளில் ஒரு நம்பிக்கையின் வெளிச்சம் தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் இந்தக் களங்கம் துடைக்கப்படட்டும்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

தெருவார்கள்ஒன்றுகூடிதெருகட்டுபாட்டைவிதித்துஹன்டூரிஎடுப்பதை நிறுத்தலாமே.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு