Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிரிப்பின் அழகு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 05, 2015 | , , ,

நபிமணியும் நகைச்சுவையும் - தொடர் - 1
யா அத்தஹ்ஹாக்! (சிரிப்பழகரே!)”


அப்படித்தான் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.

அழைத்தவர் வேறு யாருமல்லர்! நம் அன்னை ஆயிஷா அவர்கள்தாம்!

ஆம்! அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவி அழைத்தவராகவே  முற்றிலும் அவர் தோன்றினார்.

அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரை விடவும் மேலானவர்!

அவர்தாம் நம் இனிய தலைவர்  நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!


ஜரீர் இப்னு சமுரா (ரலி) அறிவிக்கின்றார்:

“நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, என் ஒவ்வொரு சந்திப்பிலும் நபியவர்களைப் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகத்தினராகவே நான் கண்டிருக்கிறேன்.” (1)

நகைச்சுவையின் வரையறை:

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய  அண்ணல் அவர்கள், நகைச்சுவையின் இலக்கணத்தையும் அதன் எல்லையையும்கூடச்   சரியாக வரையறுத்துக் காட்டினார்கள்.

“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற முஃமின்களின் அன்னை ஆயிஷா  (ரலி) அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும், அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள் ஏந்தல் நபியவர்கள்.  (2) 

இதன் விளக்கமாவது, நாயகம் (ஸல்) அனுமதித்த நகைச்சுவை என்பது மிகையாக ஜோடனை செய்யப்பட்டதாகவோ சகமனிதனின் கண்ணியத்தைக் குலைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதாம்!

(இன்றைய ஆங்கில எழுத்தாளனும் அல்லாஹ்வின் தூதரின் கூற்றை  இவ்வாறு வழிமொழிகின்றான்:  "There is more logic in humor than in anything else.  Because, you see; humor is truth.  ~Victor Borge, London Times.")

இன்னும் தெளிவாகச்சொல்வதென்றால், நகைச்சுவை  என்ற பெயரில், அடுத்தவரைச் சிரிக்கவைப்பதற்காகச்  சின்ன விஷயத்தை மிகைப்படுத்தி, மெருகூட்டி, பொய் கலந்துபேசி, மற்றவர் மனம்தனை நோகடிப்பதை  நபியவர்கள் வெறுத்தார்கள். மேலும், “பிறரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொன்னவன் அழிந்தான்” என்றார்கள் (3).
ooooo 0 ooooo
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ஆதாரங்கள்:
(1) புகாரி : ஹதீஸ் 6089
(2) திர்மிதீ : ஹதீஸ் 1913
(3) திர்மிதீ : ஹதீஸ் 2237

இக்பால் M. ஸாலிஹ்

8 Responses So Far:

Yasir said...

உலகத்திற்க்கு அருட்கொடையாக அருட்கொடையாக அருளப்பட்ட எங்கள் உயிரினும் மேலான கண்ணியத்திற்குரிய நபி (ஸல்) அவர்களைப்பற்றி படிப்பதற்க்கும் ,புகழ்வதற்க்கும் எங்கள் நாவுகள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றையச் சூழலின் அவசியம் கருதி மீண்டும் இந்த தொடர் பதிக்கப்பட இருப்பது மகிழ்வே - அல்ஹம்துலில்லாஹ் !

//உலகத்திற்க்கு அருட்கொடையாக அருளப்பட்ட எங்கள் உயிரினும் மேலான கண்ணியத்திற்குரிய நபி (ஸல்) அவர்களைப்பற்றி படிப்பதற்க்கும் ,புகழ்வதற்க்கும் எங்கள் நாவுகள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்//

ஆம் !

sabeer.abushahruk said...

உலகத்திற்க்கு அருட்கொடையாக அருளப்பட்ட எங்கள் உயிரினும் மேலான கண்ணியத்திற்குரிய நபி (ஸல்) அவர்களைப்பற்றி படிப்பதற்கும் புகழ்வதற்கும் எங்கள் நாவுகள் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters

///தமாஷ் என்ற பேரில், அடுத்தவனைச் சிரிக்கவைப்பதற்காகச் சின்ன விஷயத்தை மிகைப்படுத்தி, மெருகூட்டி, பொய் கலந்துபேசி, மற்றவர் மனம்தனை நோகடிப்பதை நபியவர்கள் வெறுத்தார்கள். மேலும், “பிறரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொன்னவன் அழிந்தான்” என்றார்கள் (திர்மிதீ)///

We see few of muslims brothers and sisters even more aged are taking this matter easy. Its serious matter when we lower other people's dignity by our fun speech and fun behavior.

May Allah save us from hell.

B. Ahamed Ameen from Dubai.

Muhammad abubacker ( LMS ) said...

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்.

யா அல்லாஹ் நாளை மறுமை நாளில் நபி (ஸல்) அவர்கள் அருகாமையில் இருக்கக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக!

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Iqbal M. Salih said...



சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

இணையத்தில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் படித்ததில் பிடித்ததை எடுத்துவைத்துப் பின்னூட்டம் இடுவதற்கும் வாரத்தின் ஏழு நாட்களும் எந்திரனாகப் பல மணிநேரங்கள் பணியாற்றும் காரணத்தால் என்னால் இயலாமற் போய்விட்டது குறித்து, முதலில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

எனினும், 'நபிமணியும் நகைச்சுவையும்' மீண்டும் மீள்பதிவாக வெளியிட முடிவு செய்திருக்கும் நெறியாளர் மற்றும் குழுமத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹூ க்ஹைரன்!

அயராமல் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் அன்சாரி காக்கா அவர்களுக்கும் சபீர், ஜாகிர் போன்ற என் நண்பர்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் என் அன்பினை அதிரை நிருபர் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Ahmed Ali said...

Masha Allah; Jazakallahu khairan.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு