நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மார்ச் 07, 2015 | , , , ,

2015 மார்ச் 2 முதல் 4 வரை !

Paperworld Middle East - மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சந்தையில் புதிய தயாரிப்புகளையும் கொண்டு மற்றும் விரிவாக்கங்களையும் எதிர்பார்த்து நிறுவனங்கள் சர்வதேச அளவில் பங்கு கொண்ட கண்காட்சி இது. துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஜபீல் ஹாலில் நடைபெற்றது.

கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த வர்த்தக காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏழு சர்வதேச அரங்கங்கங்கள் மற்றும் ஜெர்மனி, சைனா, ஹாங்காங்க், தைவான், இத்தாலி, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் பங்கேற்றுள்ளனர்.

வெற்றிகரமாக தொடரும் இந்த வர்த்தக காட்சியின்னா ஆரம்பத்தில் 202 நிறுவனங்கள் கலந்து கொண்டன இந்த வருடம் 2015ல் 280 நிறுவனங்கள் பங்கெடுத்தனர்.

கண்காட்சியில் கணிசமாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் வர்த்தகம் அனைத்து வகையான காகிதம், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் இன்னும் பல்வேறு வகையாக ஸ்டேஷனரிகள் அதிகரித்திருக்கிறது.Paperworld Middle East வருகையாளர்களுக்கு:
  • உலகம் முழுவதும் இருந்து தொடர்புடைய விநியோகஸ்த்தர்கள்.
  • முக்கிய தொழில் வல்லுநர்களோடு உறவுகளை வளர்க்க.
  • பிராந்திய அல்லது உள்நாட்டு வர்த்தக வாய்ப்புகளை கண்டறிய.
  • உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், விற்பனையானர்களின் வாடிக்கையகாளர்கள் நேரடியாக சந்தித்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
கண்காட்சி வர்த்தக பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் அவசியம் பதிவு செய்து கொண்டு அதற்கான நுழைவு அட்டையை பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

முக்கியமாக: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கண்காட்சி அரங்கில் நுழைய அனுமதி இல்லை.


இந்த வருடத்தின் சிறப்பம்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் 169 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட ரிசைக்கில் பேப்பர் கொண்டு உருவாக்கப்பட்ட அவர்களின் படைப்புகள் அதற்கான பரிசளிப்பு நிகழ்வில் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களுடன் வெற்றி பெற்ற மாணவமணிகளையும் அனுமதிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது !

அபூஇப்ராஹீம்

5 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

கண்கவர்காட்சி!!!

அபு இபு,

இதில் தங்கள் ஸ்டால் எங்கே?

sheikdawoodmohamedfarook சொன்னது…

ஸ்டேசனரிசாமான்கள்எல்லோரும்தானேஉபயோகபடுத்துகிறார்கள். எல்லோரையும்அனுமதித்தால்என்ன?

sheikdawoodmohamedfarook சொன்னது…

!ஸ்டால்கள்எல்லாம்பாக்கபாக்கஅழகாஇருக்கு.கோலாலம்பூர் புத்தககண்காட்சி யிலேஇப்புடித்தான் போட்டுஇருப்பாங்க! சென்னைபுத்தகண்காட்சியிலேஇப்புடிபோட்டாசோறுதிண்டஎச்சிவாழ எலேயேபோட்டுஅசிங்கம்பண்ணிபுடுவாய்ங்ய!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு