Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 6 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 08, 2015 | , , , ,


சிலருக்கு தமது இலக்கின் மீதான பிடிமானம் தமிழ்நாட்டு மின்சாரம் மாதிரி நிரந்தரமற்ற சூழ்நிலையில் இருக்கும். இதன் காரணம், அவர்கள் ஒரு குறிக்கோளை நிர்ணயித்தபோதே அது அவர்களுடைய ஒரிஜினல் வெர்ஷன் இல்லை.

# "என்னங்க.... உங்க கண்ணு காண பொறந்தவன்... தோப்பு,வயல், பில்டிங் நு வாங்கி கிட்டே போறான்...நீங்களுந்தான் வெளிநாட்டுக்குப் போனிய...அப்படி ஒன்னும் நீங்க சூட்டிகையா கிழிச்ச மாதிரி தெரியலையே.

# எல்லோரும் முன்னேரனும்னு சொல்றாங்க அதனாலெ நானும் முன்னேறனும். அப்படி முன்னேரலேனா என்னைய தப்பா நினைப்பானுங்களே.

ஒப்பீடுகளால் ஒரு விசயத்தை சாதிக்க முடியாது என நான் சொல்லவில்லை. ஆனால் அது நிரந்தரமில்லை. இன்னொருவனை நான் ஓவர்-டேக் செய்ய நினைக்கிறேன், செய்து விட்டேன், பிறகு...???.

ஆக ஈகோவுக்கு சாப்பாடு போட்டு வளர்க்கும் சம்பிரதாயங்கள் வெள்ளைக்காரர்களின் படிப்பு. அதனால் தான் “You can Do it, I can do it”  என்று கத்தும் எந்த பயிற்சியும் வெகுநாட்கள் நின்று பிடிப்பதில்லை. தனி மனித முன்னேற்றத்துக்கு யார் மனதையும் புண்படுத்தாத சூழல் எப்போதும் நிரந்தரம். சாதித்த பிறகும் அதில் நிம்மதியும் இருக்கும். ஆக ஒப்பீடு யாருடன் இருக்க வேண்டும்?

நிச்சயம், நம்மோடுதான் !

இரண்டு வருடத்துக்கு முன் நம் மாத வருமானம் எவ்வளவு?. இப்போது எவ்வளவு? அதேதானா? இல்லை குறைவா? முன்னேற்றமில்லாத வருமானம் கால ஓட்டத்தில் நிச்சயம் பிரச்சினைகளைத் தரும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்.

பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொண்டால் உங்கள் குடும்பம், உங்களைச் சார்ந்தவர்களுக்கு நல்லது. If you born as a poor it could be a fate. But in this world opportunities are given to you to change the fate.

சில சமயங்களில் நாம் எப்படியிருக்கிறோம் என்று ஒரு சுய பரிசோதனை இல்லாமல் நிதர்சனத்தோடு மல்லுக்கு நிற்பதும் காரணமாகும்.

Passing Judgments

மனிதனின் 'மைன்ட்' தொடர்ந்து தீர்ப்புவழங்கிக் கொண்டிருக்கும் கருவி. இறைவன் உங்களுக்குக் கொடுத்தது BRAIN,  நீங்கள் உங்கள் சூழ்நிலைகளில் உருவாக்கி கொண்டது MIND. அந்த மைன்ட் தான் பெரும்பாலான விசயங்களில் காலை வாரி விடும் எதிரி.

எந்த சூழ்நிலை, எந்த மனிதர்கள் யாரைப்பார்த்தாலும் நமது மைன்ட் தன்னை ஓர் அறிந்த சூழலுக்குப் பழக்கிக்கொள்ளும். அதனால்தான் ஒருவரைப் பார்த்தவுடன் நீங்கள் இந்த ஊரா, எந்த பள்ளியில் படித்தீர்கள்? எனக்கு ஒருவரைத்தெரியும் [உங்கள் தெருவில்] அவர் உங்களுக்குச் சொந்தமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நாம் தொடுக்கிறோம். இதற்கு காரணமும் ஒரு ஜட்ஜ்மென்ட்டுக்கு வருவதற்குத்தான்.

நமது ஜட்ஜ்மென்ட்டில் வாழ்வது உண்மையுடன் தொடர்பு அற்றவர்களாகப் போவதற்கு அதிக சான்ஸ் இருக்கிறது.

நிகழ்வு: ஒரு கண்ணாடி கிளாசை உங்கள் பிள்ளை போட்டு உடைத்து விட்டது உங்கள் வீட்டில்…..

ரியாக்சன் 1. "நல்ல வேளை காலில் விழவில்லை"
ரியாக்சன் 2. "ஒழுங்கா கையிலெ பிடிக்க தெரியாது?.."
ரியாகசன் 3. "உனக்கு எப்ப பார்த்தாலும் இதான் வேலை!!"

இதில் உண்மை நிலை என்ன?

"ஒரு கிளாஸ் விழுந்து உடைந்து விட்டது", அவ்வளவுதான்... இதற்குப் போய் ஏன் இஞ்சி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு தாளிக்க வேண்டும்?

இதை நான் எழுதக்காரணம் நம் தொழிலில் /  வேலையில் / குடும்பத்தில் இப்படித்தான் பிரச்சினை எது என்பது அறியாமல் பல முடிவுகளை நாம் எடுக்கிறோம். சென்டிமென்டையும் தொழிலையும் ஒன்றாய் போட்டு பின்னி பிணைப்பவர்கள் பிறகு வரும் பிரச்சினைகளால் மீள முடியாமல் கஷ்டப்படும்போது சொல்லும் வார்த்தை "நான் நல்லதைத்தான் நினைத்தேன்...எனக்கு போய் இப்படி" உண்மை அதுவல்ல.

உங்கள் தீர்க்கமான முடிவுகள் தவறாகவே இருந்து இருக்கிறது. எனவே உண்மையுடன் தொடர்பில் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

இப்போதைய பிரச்சினை உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, இன்னும் திருந்த மாட்டேன் என்றால்.... தயாராகி விடுங்கள் இன்னொரு புதிய பிரச்சினையை சமாளிக்க.

இது தொழிலில் மட்டுமல்ல நம் ஊரிலும் இந்த "ஜட்ஜ்மென்ட்" நோய் தாக்கி இருக்கிறது. இல்லாவிட்டால் சகோதர பாசம் முக்கியம் என்றும், சகோதரத்துவத்தை ஒவ்வொரு நாளும் 5 வேலை பாங்கு சொல்லும் 32 பள்ளிவாசல்களை வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு பிரிந்து இருப்போமா?. சின்ன சின்ன பிரச்சினைகளிலும், இயக்கங்களிலும் மனிதனை மனிதனாக பார்க்கும் குணம் எங்கு குறைந்து போனது?. 

இன்று எதிரியாக உள்ள அரசியல் கட்சிகள் நாளை தேர்தலில் கூட்டு சேரும்போது நாம் விமர்சிக்கிறோம். "வெட்கங்கெட்டவைங்க" என பெயர் வைக்கிறோம். நாம் இன்று எதிரியாக நினைக்கும் இன்னொரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவன் நாளை நம்முடன் சேரும்போது நம் நிலைப்பாடுதான் என்ன?...பிரிவுகள் கருத்தோடு இருந்து விட்டுபோகட்டும்..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!

Vacuum Prosperity

நாம் முன்னேற்றம் அடைய பழையது நம்மிடம் இருக்க கூடாது என்பது ஒரு விதி. நாம் உபயோகப்படுத்தாத சட்டை, துணிமணிகள் எல்லாம் பல வருடம் நம்மிடம் இருக்கும். தேவை இல்லாத சென்டிமென்ட் பார்த்து நாமும் வைத்துக்கொண்டு நம்மை விட வசதியில் குறைந்தவர்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு Vacuum prosperity என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களிடம் பயன்படாமல் இருக்கும் சில துணிமணிகளைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள், தானாகவே புதிய உடைகள் உங்களுக்கு வந்து சேரும்.

உங்கள் வேலை இடத்தில் வியாபாரத்தில் சில டிப்ஸ்.

1.1. மனிதன் சந்தோசப்படும் வார்த்தை "அவனது பெயர்" ,   பேசும்போது இடையிடையே உங்கள் கஸ்டமர் பெயர் உச்சரிக்க பழகிக் கொள்ளுங்கள் [மரியாதை சேர்த்துக்கொள்வது உங்கள் கஸ்டமரின் வயதைப்பொறுத்தது.  தொடர்ந்து பெயர் உச்சரிக்கப்படும்போது கஸ்டமர் ஒரு safety ஐ உணர்வது நிச்சயம்.

1.2. நோ ப்ராப்ளம் எனும் வார்த்தையை எல்லாவற்றிற்கும் உச்சரிப்பவர்கள் ஏதாவது பிரச்சினையைத் தன் வசம் கவர்ந்து கொண்டே இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது.

1.3. உங்களுக்குத் தெரியாத விசயத்தை தெரிந்த மாதிரி சீன் போட்டு பிறகு வழிவதை விட்டு விட்டு, எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை விசாரித்து உடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என சொல்வதுடன், உங்கள் கஸ்டமரின் டெலிபோன் நம்பரை அவர் முன்னாடியே குறித்து கொண்டு அல்லது verify செய்து மறவாமல் அவருக்கு நீங்கள் விசாரித்ததைத் தெரிவித்தால் அவரது சந்ததியே உங்களிடம் பெரும் மதிப்பு வைத்திருக்கும்.

எதையும் முழுமையாக கேட்ட பிறகு பேசுங்கள். உங்களின் நிறைய நேரம், பணம்,  எனர்ஜி வீணாவதைத் தடுக்க முடியும்.

We will see “image maker” in next episode, Insha Allah !

தொடரும்...
ZAKIR HUSSAIN

7 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//செண்டிமெ ன்டையும்தொழிலையும்ஒன்றாய்போட்டு பிண்ணி.....//இன்னும் சிலர் தொழிலுக்கே சம்பந்தம் இல்லாதசொந்தங்களை சேர்த்துதொழிலைகரைசேர்க்கமுடியாமல்மூழ்கிபோனார்கள்.ரத்தபாசமாம்!

sheikdawoodmohamedfarook said...

//கண்ணாடிகிளாஸைபிள்ளைபோட்டுஉடைத்துவிட்டது.....//வெளிநாட்டில்சம்பாதிக்கும்வாப்பாவின்சாம்பாத்தியத்தைபொறுத்து ரியாக்சன்வேறுபடும்.''ஒன்னும்தெரியாதபச்சேபாலவன் தெரியாமேதானே ஒடச்சுட்டான்.புதுஸாஒன்னுவாங்கிட்டகொறஞ்சாபோயிடும்.இதுபணத்தை அள்ளிஅள்ளிஅனுப்பும்வாப்பபெத்தபுள்ளைக்கி கொடுக்கும் ஜட்ஜ்மென்ட்./ஆடிக்கிஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா பணம் அனுப்புறவன் புள்ளைக்கி ''சனியன்!எந்த நேரம் பொறந்துச்சோ? தெரியலேம்மா!கண்டைதைஎல்லாம்ஒடச்சு குமிக்கிதே! அவன்களிச்சல்லே போவான்பெத்துபோட்டு இந்தசனியனேஎன்தலைலேகட்டிபுட்டான்''.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

//என்னோடுஒருநாள்எழுப்பப்படும்சகோதரனே!//தனியாகஎழுப்பபட்டாலும்கூட்டத்தோடுஎழுப்பபட்டாலும்தலைவரின்அனுமதிகேட்டுதான்எழும்புவான்.தலைவர்அனுமதிகொடுக்கவில்லைஎன்றால கல்லசைஎனனசையென்று''தலையணையேகட்ட்டிபிடித்துக்கொண்டு தூங்குவதுபோல்பாசாங்குசெய்வான்.

sheikdawoodmohamedfarook said...

/சகோதரபாசம்முக்கியம்!இதுமேடையில்முழங்கும்வாக்கியம்!சஹன்சோறுஉண்ணஏழைக்குஇல்லைபாக்கியம்!

sabeer.abushahruk said...

//உங்களுக்குத் தெரியாத விசயத்தை தெரிந்த மாதிரி சீன் போட்டு பிறகு வழிவதை விட்டு விட்டு, எனக்கு இப்போதைக்கு தெரியவில்லை விசாரித்து உடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என சொல்வதுடன், //

நம்ம ஸ்டைல்கூட தெர்லேன்னா ஓப்பனா தெர்லேதான்! அப்பத்தான் நெறய தெரிஞ்சுக்கலாம்.

Ebrahim Ansari said...

// இன்று எதிரியாக உள்ள அரசியல் கட்சிகள் நாளை தேர்தலில் கூட்டு சேரும்போது நாம் விமர்சிக்கிறோம். "வெட்கங்கெட்டவைங்க" என பெயர் வைக்கிறோம். நாம் இன்று எதிரியாக நினைக்கும் இன்னொரு இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவன் நாளை நம்முடன் சேரும்போது நம் நிலைப்பாடுதான் என்ன?...பிரிவுகள் கருத்தோடு இருந்து விட்டுபோகட்டும்..உறவில் வேண்டாம் என்னோடு ஒரு நாள் "எழுப்பப்படும்" சகோதரனே!!//

சிந்தனை செய் மனமே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு