Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாய் துர்நாற்றம்...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | April 06, 2015 | , , , ,

வாய் - எப்போதும் நீரோட்டம் இருக்கும் பகுதி. வெதுவெதுப்பான சூழல். இந்தக் காரணங்களால் அது, பாக்டீரியா கிருமிகளுக்கு. குடித்தனம் நடத்த ஓர் அற்புதமான இடமாக இருப்பதோடு வெகுவேகமாக தங்கள் வாரிசுகளையும் பெற்றுத் தள்ளுகின்றன இவை. இதன் விளைவு - வாய் துர்நாற்றம்.

காலை எழுந்தவுடன், வாயில் இருந்து துர்நாற்றம் எழுவது என்பது மிகவும் சகஜமான ஒன்றுதான். இதற்குக் காரனம், எந்த உடல்நலக் கோளாறும் இல்லை. பற்களுக்கிடையே அகப்பட்டுக் கொண்ட சின்னச் சின்ன உணவுத் துகள்களை வாயில் இருந்து வெளியேற்றுவது (அதாவது உடலுக்குள் அனுப்புவது) எச்சில்தான். இது வழக்கமான ஒரு நடவடிக்கை. கூடவே, வேண்டாத பாக்டீரியாவால் உண்டாகும் வேண்டாத நாற்றங்களையும் உள்ளே தள்ளிவிடும்.

ஆனால், நாம் தூங்கும்போது எச்சில் சுரப்பது மிகவும் குறைந்துவிடுகிறது. வாய்ப் பகுதி உலர்ந்து போகிறது. இறந்த செல்கள் நாக்கில் தங்கிவிடுகின்றன. இவற்றையே உணவாகக் கொண்டு துர்நாற்றம் உண்டாகக்கூடிய ரசாயனப் பொருள்களை பாக்டீரியா வெளியேற்றுகிறது. இதனால்தான், காலையில் வாய் துர்நாற்றம். பற்களைத் துலக்கும்போது, நாக்கும் சுத்தம் செய்யப்பட, எச்சிலும் அதிகமாகச் சுரந்து நிலைமை சரியாகிவிடுகிறது.

சரி, பொதுவான வாய் துர்நாற்றத்துக்கு என்ன காரணம் ? பற்களைத் துலக்காததன் கரணமாக, அவற்றுக்கு இடையே உணவு தங்கிய உணவுப் பொருட்கள் அழுகிப்போய் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஈறுகளில் உண்டாகும் நோய்கூட இதற்குக் காரனமாக அமையலாம். அப்போது, ஈறுகள் சிவந்து பருத்துக் காணப்படும். சிலசமயம் அவற்றில் இருந்து ரத்தம் கசியலாம்.

பூண்டு, வெங்காயம், சிக்ரெட், புகையிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பிறகு வாயில் ஏற்படும் ரசாயண மாற்றங்கள் வாய் துர்நாற்றத்துக்குக் காரணம் ஆகலாம்.

வாய் அல்லாத பிற பகுதிகளும்கூட வாய் துர்நாற்றத்துக்குக் காரணமாக அமையலாம். தொன்டை நுரையீரல், சைனஸ் ஆகிய பகுதிகளில் ஏற்படும் தொற்றுகள், வாய் துர்நாற்றத்துக்கு வழி வகுக்கலாம். எச்சில் சுரப்பிகளில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் இந்த நிலை தோன்றலாம். வாயால் மூச்சு விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும் வாய் துர்நாற்றம் உண்டாவது இயல்பு.

சர்க்கரை நோய், சிறுநீரக நோய், குடல் நோய் போன்றவற்றால் நீண்டகாலமாக அவதிப்படுபவர்களுக்கும் வாய் துர்நாற்ரம் உண்டாகலாம்.

இதன் காரணமாக, சுற்றி இருப்பவர்கள் விலகிப் போனாலும் சம்பந்தப்படவர், தனது வாய் துர்நாற்றத்தை உணர்ந்து கொள்வதில்லை. ஏன் தெரியுமா? மூக்கில் உள்ள வாசனையை அறியும் செல்கள், தங்களுக்கு வெகு அருகிலேயே தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கும் வாய் துர்நாற்றத்துக்குப் பழகிவிடுகின்றன, அவ்வளவுதான்.

இதற்கு நேர் எதிராக, வேறு சிலர் தங்கள் வாயில் இருந்து எந்த துர்நாற்றமும் வெளிப்படாதபோதும், அப்படி இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

ஒரு பல் மருத்துவரால், எதிரே அமர்ந்திருப்பவரின் வாய் துர்நாற்றத்தை எளிதில் அறியமுடியும். தவிர, அதைக் கொண்டு அவரது உடல்நலக் கோளாறு என்ன என்பதைக்கூட அவர் கண்டு பிடிக்கக் கூடும்.

உதாரணத்துக்கு, வாய் சுவாசத்தில் பழ வாசனை வந்தால், அவரது இரத்தத்தில் சர்க்கரை மிக அதிகமாக இருக்கிறது என்று கூறலாம். சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களிடம் இருந்து சிறுநீர் போன்ற துர்நாற்றம் எழுந்தால், அவரது சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறி அது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வாய் துர்நாற்றத்துக்கு சரியான காரணம் எது என்பதைக் கண்டு பிடித்து அதை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும். முக்கியமாக, தினமும் இருவேளை பற்களை சரியாகத் துலக்குங்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதாலும், எச்சில் அதிகமாக சுரக்கும் என்பதால், வாய் துர்நாற்றம் நீங்கக் கூடும். வாய் துர்நாற்றத்திற்கு வயிறும் ஒரு காரணம் ஆதலால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் வயிற்றை dulcolax போன்ற மாத்திரைகளின் மூலமோ விளக்கெண்ணெய் குடித்தோ சுத்தம் செய்வது நல்லது.

இப்படிக்கு
கா.மூ.தொ.கூட்டணி

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

ஒருவர்சொல்லியரஹ்சியத்தைஊரெங்கும்சொல்லிஅம்பலப்படுத்தும்ஓட்டைவாய்காரர்களின்வாயேஅடைக்கஏதேனும்வைத்தியம்உண்டா?

sabeer.abushahruk said...

கா மு தொ.வின் அருமையான கொள்கை விளக்கக் கோட்பாடுகள். இன்னும் ஆழமாக விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

உங்கள் கூட்டணிக்காரர் ஒருசிலர் பேசும்போது கடுமையான சாரல் அடிக்கிறதே, எங்களை எப்படி காவந்து செய்வது?

Yasir said...

உங்கள் கூட்டணிக்காரர் ஒருசிலர் பேசும்போது கடுமையான சாரல் அடிக்கிறதே, எங்களை எப்படி காவந்து செய்வது? kakka....hahahahaha....

Ebrahim Ansari said...

எப்படியோ பதிவு மணக்கிறது. பாராட்டுக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு