Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு உரையாடல்.. with வாவன்னா சார் 7

அதிரைநிருபர் பதிப்பகம் | April 12, 2015 | ,


ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed

அடுத்த பேட்டிக்கான ஆயத்தத்தில் இருக்கும்போது எனக்கு கிடைத்த டெலிபோன் தொடர்பில் கிடைத்தவர்” வாவன்னாசார்” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜி A.M. அப்துல் காதிர் M.A.B.Ed அவர்கள்

அவரிடம் நலம் விசாரிக்கும்போது " கொஞ்ச காலமா நடக்கமுடியாமெ , உடல் நலக்குறைவா இருந்தேன்...இப்போது பரவா இல்லை..அனேகமா உங்கள் பேட்டியெ பார்த்த பிறகு எங்களைப்பற்றி என் பழைய மாணவர்களுக்கு ஞாபகம் வரலாம்' என்று சொன்னவுடன் என் மனது கணத்தது. ஒரு ஆச்சர்யம் எங்களுக்கு படித்து கொடுக்கும்போது அவர் எப்போதும் நடைதான், அவர் சைக்கிளில் வந்ததை கூட நான் பார்த்ததில்லை. அதனால் அப்போது அவருக்கு சைக்கிள் ஒட்டத்தெரியுமா எனும் சந்தேகமே இருந்தது.

நீங்கள் படித்தது , பிறகு ஆசிரியர் ஆன காலம் பற்றி.... ?

படித்ததெல்லாம் Khadir Mohideen college [P.U.C] பிறகு ஹாஸ்டல் ஆபிசில் வேலை, பிறகு டிராயிங் மாஸ்டராக எக்ஸாம் எழுதி நமது Khadir Mohideen High School லில் டிராயிங் மாஸ்டராக வேலை பார்த்தது, பிறகு ஒரத்த நாட்டில் ஆசிரியர் பயிற்சிக்காக B.Ed …முடித்து அப்புறம் உங்களுக்கெல்லாம் சரித்திரம் பாடம் எடுத்தது...அப்போது நமது ஸ்கூல் ஹையர் செக்கன்டரி வந்து விட்டது, உங்களுக்கு பாடம் எடுக்கும் முன்னமே நான் தனியாகவே B.A. எக்ஸாம் எழுதி பாஸ் செய்து விட்டேன். அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைவு , எனவே நான் துபாய் போய் வேலைபார்த்தேன் ஒரு பிரின்டிங் கம்பெனியில், என்னுடன் வேலைக்கு வந்தவர்களில் தூர்தர்ஸனில் வேலை பார்த்த அப்துல் ரஜாக் இருந்தார். 1982 லிருந்து 19 வருடம் துபாயில் காலம் ஓடி விட்டது, 1983ல் வாலன்ட்ரி ரிட்டயர்மென்ட்டுக்கு அப்ளை செய்திருந்ததால் எனக்கு இப்போது பென்சன் இல்லாத ரிட்டயர்மென்ட்.

மறக்க முடியாத அனுபவங்கள் / மாணவர்கள் பற்றி... ?

'நீங்கள் எல்லாம் ஹையர் செக்கன்டரி முடிந்து போகும் போது நடத்திய சோசியல் ப்ரேக் அப் தான். அப்போது நான் என்ன பேசினேன் என்று கூட ஞாபகம் இருக்கிறது...'
சார் அது நடந்தது 1980- அல்லது 81 எனநினைக்கிறேன். 30 வருடம் ஓடி விட்டது.அந்த நிகழ்ச்சியின் மொத்தமும் நான் ஆடியோ கேசட்டில் எடுத்தேன் ...இன்னும் அது என் கிட்டே பத்திரமாக இருக்கிறது.- இது நான்

'அப்டியா இன்னும் பத்திரமா இருக்கா ?' மறக்க முடியா மாணவர்களில் மாஜிதா ஜுவல்லரி வைத்திருக்கும் என் மாணவன் சுபஹத்துல்லாஹ்...ஏதோ ஒரு முறை நான் செய்த அறிவுரையை இன்னும் கடைபிடிக்கிறேன் என சொன்னது...

என் வீட்டில் பிள்ளைகள் எல்லோரும் என்னை ஏதாவது இணையத்தில் எழுத சொல்கிறார்கள் ..இன்ஷா அல்லாஹ் உடம்பு ஒத்துழைத்தால் ஏதாவது எழுதத்தான் வேண்டும்.. இப்போது பேரப்பிள்ளைகளுக்கு படித்து கொடுத்து கொண்டிருக்கிறேன்.

….நீங்கள் எழுதனும் சார்...உங்கள் கூடப்பிறந்த தம்பி யூனிகோட் உமர்தம்பி அவர்கள் கம்ப்யூட்டர் உலகில் ஏற்படுத்திய பயன்பாடுகள் மிகவும் உயர்ந்தது.. அவரின் யூனிகோட்தான் நான் இன்னும் பயன்படுத்துகிறேன்.- இது நான்

அது சரி...நான் ஒரு கேள்வி கேட்கிறேன். என்னைப்பற்றி உன் கமென்ட்ஸ் என்ன?...

நான் படித்த காலத்தை வைத்தே சொல்கிறேன். ரொம்ப சிம்பிள் டைப் மனிதர். யாரையும் கடிந்து கொள்ளாத அமைதியான ஆசிரியர். இதை எல்லோரும் ஆமோதிப்பார்கள் என்பது அந்த எல்லோருக்கும் தெரியும்...

கொஞ்சம் சிரித்து விட்டு "ஊருக்கு வரும் போது வந்து என்னை பார்த்து விட்டுப்போ"....இந்த அன்பான , உரிமையான வார்த்தையில் டெலிபோனை வைக்க மனமில்லாமல்.."இன்ஷா அல்லாஹ்..வந்து பார்க்கிறேன் சார்' என்று சொன்னேன்.

ZAKIR HUSSAIN
நன்றி: சகோதரர்கள் மொய்னுத்தீன் உமர்தம்பி / அபு இபுறாஹிம்

7 Responses So Far:

Unknown said...

புன்னகையோடு பாடம் போதிக்கும்
புன்னகையிலேயே மாணவனின் தவறை சுட்டிக்காட்டும்
அளந்தே பேசும்
அற்ப்புதமான ஓவியங்களை தத்ரூபமாக தீட்டும்
எங்களின் ஒரே ஆசிரியர்.
எங்கள் வாவன்னா ஆசிரியர் அவர்கள்.

அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை சிறக்க செய்யட்டும்.

ஆமீன்1

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

பெண்ணியம் பேசி
கண்ணியம் இழக்கிறது
நவநாகரிக பெண்மை

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

நம்முடைய வாழ்நாளில் நாம் சந்தித்த சில மனிதர்களில் வாவன்னா சார் அவர்களை ஒரு மறக்கவே முடியாத மனிதர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிரை நிருபர் வலைதளத்தில் நான் எழுதிக் கொண்டு இருந்த மனுநீதி தொடர் வெளிவந்து கொண்டிருந்த நேரம். ஒருவார பயணமாக நான் அதிரைக்கு வந்து இருந்தேன். வாவன்னா சார் அவர்கள் என்னைப் பார்க்க விரும்புவதாக தம்பி எல். எம். எஸ் .அபூபக்கர் அவர்கள் கூறினார்கள். நான் மிகுந்த ஆவலுடன் போகலாம் நீங்கள் வந்து என்னை உங்களின் பைக்கில் அழைத்துச் செல்லுங்கள் என்று அபூபக்கர் அவர்களிடம் கூறினேன். அதன்படி அவர் வருகைக்காக அதிரையில் எனது வீட்டில் காத்திருந்தேன்.

ஒருநாள் அசருக்குப் பின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத்திறந்த எனக்கு அதிர்ச்சி ஆனந்தம். அபூபக்கரும் வாவன்னா சாரும் நின்று கொண்டு இருந்தார்கள்.

தள்ளாடும் நிலையில் எனைக் காண வந்த அவர்களின் பண்பு எனக்கு கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. " ஏன் சார் உங்களுக்கு சிரமம். நான்தான் வருவதாக இருந்தேனே ! அதுதானே முறை " என்று நான் சொன்னேன். உன்னைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. ஒரு வார விடுமுறையில் வந்திருப்பதாக சொன்னார்கள். ஆகவே தவறவிடக்கூடாது என்று நானே வந்துவிட்டேன். என்று சொன்னார்கள்.

எப்படிப்பட்ட மனிதர்!

தலையில் கட்டுடன் .கட்டிலில் கிடத்தபட்டுக் கிடந்த காட்சியைக் கண்டபோது கண்களைக் கட்டுபடுத்த இயலவில்லையே!

அதிரையின் அன்பும் பண்பும் அடக்கமும் ஒரு சேர அமைந்த ஒரு மனிதர் நம்மைவிட்டுப் பிரிந்ததாகவே நான் உணர்கிறேன்.

அன்றாடம் வாவன்னா சார் அவர்களுக்காக இறைஞ்சுவோமாக!

அதிரை சித்திக் said...

ஒரு முறை காதிர் முகைதீன் மேல் நிலை பள்ளியில் மீலாது நபி விழாவில் ...
வாவன்னா சார் அவர்கள் கவிதை வாசித்தார்கள் ..அதில் சில வரிகள் ..

மக்கா இருந்த மக்களை ..
மதி நாவால் திருத்திய மா நபியே ..என்ற இரு வரிகள் சிலேடை யுக்தி கொண்டு அவர்கள் வாசித்த
கவிதை இன்றும் ரீங்காரம் இடுகிறது ..

மக்காவில் இருந்த மக்களை ..
மதினாவில் இருந்து கொண்டு திருத்தினார்கள் ...
மற்றொரு கருத்து ...
மக்கு ....என்றால் ஒன்றும் அறியாத என பொருள் கொண்டு ..
மதி .புத்தி கொண்டு ...நாவினால் திருத்திய என்ற பொருள் படும்படி கவி தந்தார்கள் ...

அதே போன்று சரித்திர பாடம் நடத்தும்போது ....மேப்பில் ஜம்மு காஸ்மீர் எங்குள்ளது என வினவிய வாவன்னா சார் ..நகைசுவையுடம் பதில் கூறினார்கள் ..
ஜம்முனு இந்தியா மேல் அமர்ந்துள்ளது என கூறி புரிய வைத்தார்கள்

Shameed said...

அல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்வை சிறக்க செய்யட்டும்.

abs said...

அன்னனும் தம்பியும் அற்புத நடை பயணம் செல்லும் சாலை நானத்துடன் பார்கும் ,அப்துல் காதர் , உமர் தம்பி அன்ணன் தம்பியா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு