Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் - 11 4

அதிரைநிருபர் பதிப்பகம் | May 13, 2015 | , ,



நம்மோடு ஒருவர் [எப்போதும்] வருபவரை எப்போதாவது கண்டித்திருக்கிறோமா?....பெரும்பாலும் அவருடன் தோற்றுப் போகிறோம். அவரே உங்களை அநியாயத்துக்கு இயக்குகிறார். ஆனால் வெளியில் நாம் "எனக்கு மற்றவர்களை பின்பற்றுவது துப்புறவா பிடிக்காது... எனக்கு என ஒரு தனித்தன்மை இருக்கிறது, அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது... மாட்டேன் என்று வீராப்பு பேசுவதோடு சரி.

சரி கொஞ்சம் புரியும்படி எழுதுகிறேன். உங்களுடன் ஒருவர் 24 மணிநேரமும் தங்கியிருக்கிறார். அவர் உங்கள் ரூம்மேட். அவர் நீங்கள் என்ன செய்தாலும் கமெண்ட் செய்வார்.

# எதுக்கும் யோசனை செய், உடனே உன்னால் மாற முடியுமா?

# காலு லேசா வலித்தாலும் C.T ஸ்கேன், MRI எல்லாம் பார்த்துவிடுவது நல்லது.

# நெஞ்சு லேசா வலித்ததா?...எதற்கும் ஒரு Angiograms  பார்த்துடேன்!!

வீட்டுக்கு டெலிபோன் போடும்போது யாரும் எடுக்கலெ.... நிச்சயம் யாருக்கோ  வீட்லெ பிரச்சினை!!!

போய் பேசுன பிஸ்னஸ் பிக்-அப் ஆய்டுமா?..ஊத்திக்குமா?...

இப்படி தொடர்ந்து ஒருவர் உங்கள் பக்கத்திலேயே இருந்து பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்லத்தோன்றும்? ' தரித்திரம் புடிச்சவனே, வாய மூடு' என்றுதானே.?.

இப்போதைக்கு மனோவியல் ரீதியாக பார்த்தால் அதிகம்பேர் இதுபோன்ற 'மைன்ட் வாய்ஸ்' உடன் தான் அலைகிறார்கள். இவர்கள் இதை காலையில் டாய்லெட்டில்  உட்கார்ந்திருக்கும்போதே மைன்ட் வாய்ஸ் பேசும்போது கட்டுப்படுத்திவிட்டால் அந்த நாள் முழுதும் நல்ல நாளாக மாற்றிவிடலாம். இது செய்யும் தொழிலை / வேலையை பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுக்குள் ஒலிக்கும் அந்த குரலை எப்போது அடக்க தெரியுமோ அப்போதுதான் மனித வாழ்க்கையில் ஒரு படி மேல் நோக்கி போவதாக அர்த்தம். மனதுக்குள் ஒலிக்கும் அந்த மைன்ட்வாய்ஸை அறியும் ஒரு பயிற்சி இருக்கிறது. ஒரு சுவற்றை நோக்கி உங்கள் முகம் பார்க்க வைத்து சுவற்றோடு நெருக்கமாக அமர்ந்து [ ஏறக்குறைய 30 நிமிடம் , ஒரு மணி நேரம் ] நமக்குள் என்னென்ன கேள்விகள் / உரையாடல்கள் தொடர்ந்து கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கிறது என்பதை கவனமாக observe செய்ய வேண்டும். இதை செய்யும்போது உங்களுக்கு உடம்பில் சில இடங்கள் வலிக்கும். சரியாக தொடர்ந்தாற்போல் உட்கார முடியாது [ நீங்கள் எவ்வளவு இளமையானவராக இருந்தாலும் சரி] அதற்காக பயப்பட வேண்டாம். இது தொடர்ந்து செய்பவர்கள் பிறகு  ஒருவிதமான தெளிவு கிடைப்பதை உணர முடியும். இதுபற்றி அங்கு சொல்லப்பட்டிருக்கிறது / முன்னால் "டமிலன்" கண்டுபிடித்தது என்று சொல்வதால் புண்ணியம் நஹி.

செயல்களில் கவனம் தேவைதான் அதற்காக எதற்கெடுத்தாலும் பயந்தாங்கொள்ளியாக செயல்படுவது நமக்கு அழகல்ல.

Failure teaches success.

உங்களுக்கும் ஒரு செக்கிங்!!

உங்கள் மீது உங்கள் மனைவி / மக்கள் எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு ஒரு ப்ராக்ரஸ் கார்டு வைத்து உங்களை எப்படி செம்மை படுத்த முடியும் என்பதை இதுவரை செய்திருக்கமுடியாது...இனிமேலும் செய்யப்போவதில்லை. நீங்களே உங்களுக்காக செய்யாமல் மற்றவர்கள் எப்படி செய்வார்கள்,.

இன்றுவரை கார்ப்பரேட் பயிற்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் டெக்னிக்[S.W.O.T]  analysis.  Strength / Weakness / Opportunity / Threat.

சிலர் இதை படிப்பதில் காட்டும் ஆர்வம் அதற்காக ஒரு பேப்பரை எடுத்து எழுதிப்பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. பலர் ஒரு லைப்ரரி மாதிரி எல்லாவிசயமும் தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள், கடை பிடிக்கும்போதுதான் பல்டி அடித்து விடுகிறார்கள். எனவே நடமாடும் லைப்ரரிகளால் மனித சமுதாயத்துக்கு என்ன கிடைக்க போகிறது.?

மேற்குறிப்பிட்ட விசயம் [SWOT analysis] படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பயன்படும், தொழில் / வேலை செய்பவர்களுக்கும் பயன்படும்.

Strength
முதலில் உங்களின் பலம் எது என்பதை எழுதிப்பாருங்கள். பலர் உங்களை 'பிடிவாதம்" பிடித்தவன் என்று சொன்னாலும் அதை பலமாக மாற்ற முடியும்.பிடிவாதத்தை உங்களின் இலக்கை / வெற்றியை அடைய பயன்படுத்திக்கொள்ளலாமே நீங்கள் நன்றாக பேசக்கூடியவரா அது கூட பலம்தான் [ சிலர் வீட்டில் பெண்களிடம் எல்லாம் தான் ஒரு வீரபராக்கிரமன் என்று காட்டிவிட்டு ஒரு தாலுக்கா ஆபிசில் சர்டிபிகேட் பேசி வாங்க கூட வக்கில்லாமல் அலைவதை நான் ஊரில் பார்த்திருக்கிறேன்.]

Weakness
உங்களின் பலவீனம் எது என்பதை தெரிந்துகொள்வதன் காரணம் மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்க அல்ல [பலர் இப்போது பல வெர்சனில் ஒப்பாரி வைக்கிறார்கள். ஒப்பாரிகள் தனக்கு சரியான படிப்பு இல்லை என்பதில் ஆரம்பித்து மாமனாருக்கு பேங்க் பேலன்ஸ் விசேசமாக இல்லை என்பதுவரை பல வகைப்படும். சரியான ஒப்பாரிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நம் ஊர் பக்கம் பல வருடம் வெட்டியாக திரியும் மருமகன் களின் ஸ்டேசனுக்கு உங்கள் ட்யூனரை சரிசெய்து கொள்ளவும்....இவர்களுடைய டேக்லைன் தான் " கேளுங்க ...கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "  கால ஒட்டத்தில்  FM Stations சுட்டுவிட்டதாக கேள்வி.

உங்களின் பலவீங்களை பார்க்க ஆரம்பித்து விட்டாலே தானாகவே அவைகள் மாறத்தொடங்கும். ஏனெனில் மனிதன் அப்படித்தான் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன். அதை விட்டு குலப்பெருமை எல்லாம் பேசி ' நாங்க யார் தெர்யும்ல....' என ஆரம்பித்தால் வாழ்வியலின் உண்மைகள் உங்களுக்கு ஓட்டுபோடாது.

Opportunity
வாய்ப்புகள் நோக்கி எப்போதும் கவனம் தேவை. வாய்ப்புகள் திடீரென வரலாம். பயன்படுத்தி கொள்பவர்களே சிறந்தவர்களாகிறார்கள். காரணம் சொல்பவர்கள் கவனிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள். உயிரோட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் பூமியின் வெளிப்பிரதேசத்துக்கு வருவதே இல்லை. அவர்கள் வெளியில் இருந்தாலும் புதைக்கப்பட்டவர்களுக்கு சமம்.கடல் உயிரோட்டமில்லாத எதையும் தன்வசம் வைத்துக்கொள்ளாமல் அதை தன் கரைகளில் துப்பி விட்டு போய்விடுகிறது. பூமியின் சவால்களை சமாளித்தவர்களுக்கே சிலை வைக்கப்படுகிறது. காரணங்கள் சொன்னாலே வாழ்ந்துவிடலாம் என தப்புகணக்கு போடுபவர்கள் தன்குடும்பத்தினராலேயே ஒதுக்கப்பட்டுவிடுகிறார்கள்.  ரத்தம் சூடாக இருக்கும்வரை I Don’t Care  சொல்லலாம். அதற்கு பிறகு  Somebody Must take care you.  உங்களை அவர்கள் பார்த்துக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்.?

Threat
அடுத்தது பயம்...இது பற்றி முன்பே எழுதிவிட்டதால்...skip…இருப்பினும் பயத்தை எதிர்கொண்டால்தான் அதை வெள்ள முடியும். அதை விட்டு தற்காலிக நடவடிக்கைகள் எதற்கும் உதவாது.

இந்த SWOT analysis ஐ பற்றி தம்பி யாசிர் முன்பே ஒருமுறை எழுதியிருந்ததை படித்து இருக்கிறேன். சரியான விசயங்கள் நம் சமுதாயத்துக்கு தெரிவிக்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி.

ஈடுபாட்டுடன் செயல்படும் விசயங்களில் கவனம் சிதறும்போது நாம் ஆத்திரப்படுகிறோம். நல்ல சீரியல் ஒடிக்கொண்டிருக்கும்போது வரும் விருந்தாளிகள் "விழுந்து பிராண்டப்பட்டதால்' விருந்தாளிகளின் வரத்தும் பல வீடுகளில் செல்போன் டவர் உள்ள இடங்களில் சிட்டுக்குருவி இல்லாமல் போனமாதிரி வெரிச்சொடி விட்டதாம்.

இருப்பினும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் உங்களுக்கான Goal setting செய்து விட்டீர்கள், பொருளாதார ரீதியில் முன்னேர கடுமையான கடப்பாடுகளுடன் ஆரம்பித்து விட்டீர்கள் உங்கள் வேலையை / தொழிலை....இருப்பினும் யார் வந்து கூப்பிட்டாலும் எப்படி உங்களுக்கு உங்கள் தொழிலை/ வேலையை  தூக்கிபோட்டு விட்டு மற்றவர்களின் பின்னால் ஒட முடிகிறது?...சீரியலுக்கு கொடுக்கும் சீரியஸ்னஸ் கூட கொடுக்க முடியாத அளவு உங்கள் இலக்கு அவ்வளவு பலவீனமானதா?

See you in next episode…
ZAKIR HUSSAIN

4 Responses So Far:

Yasir said...

ஆமாம் காக்கா மைண்ட் வாய்ஸ் - சை கேட்டு கேட்டே கெட்டுப்போனவர்கள் ஏராளம்...ஒரு சில விசயங்களில் கவனம் தேவைதான் ஆனால் அந்த கவனம் நம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் எந்த வித இடையூறலும் செய்யமால் பார்த்துக் கொள்ளவேண்டும்....சில மனிதர்கள் தன்னுடைய கம்போர்ட் சர்க்கிலை விட்டு வெளிய வர மனமில்லால் வாய்ப்புகள் வாய்த்தும் தொலைத்து /தொலைந்து விடுகின்றார்கள்

ZAKIR HUSSAIN said...

சரியாக சொன்னீர்கள் யாசிர்...இதை புரிந்தாலே நிறைய முன்னேர முடியும்.....'

'என்ன எப்போதும் சொன்ன விசயத்தைதான் சொல்கிறார்கள் என நினைத்தால் நம்மை முந்தி பலபேர் முன்னேறியிருப்பார்கள்.

sheikdawoodmohamedfarook said...

//உங்களுடையபலவீனங்களைபார்க்கதொடங்கிவிட்டாலே தானாகவேஅது அடங்கும்// ஆனால்காலம்தவறியகண்டுபிடிப்புஇரவுநேரபூபாலம்தான்.பெரும்பாலோர் இந்தக்கணக்கில்தப்புசெய்துவிடுகிறார்கள்.உதாரணம்ஜெயலலிதாசொத்துக்குவிப்புவழக்கில்கர்நாடகஉயர்நீதிமன்றநீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஜெயலலிதாவின்சொத்துகணக்கைகூட்டிதில் பத்துக்கோடியே குறைத்துதவராககூட்டிஜெயலலிதாவைவிடுதலைசெய்ததார்.கணக்கில் எதிர்பார்ட்டி பிழை கண்டதும்மீண்டும் அம்மாவுக்கு சோதனை மேல் சோதனை வரும் போல்இருக்கிறது. //''அவன்போட்டகணக்கொன்றுஇவள்போட்டகணக்கொன்றுஇரண்டுமே தவறானது''!!''பாட்டையேமுணுமுணுக்கிறார்கள்.மனுஸாலுடைய தலைவிதியை பகவானேநிர்னைக்கிறார்.

sabeer.abushahruk said...

SWOT பற்றிய விளக்கம் SWEET

இந்தப் படிக்கட்டு ஜிவ்வென்று வேகமாக மேலெழுகிறது. அப்படியொரு வேகத்திற்கு வாசகனை வசப்படுத்துகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு