Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாள் நனா! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2015 | , , , ,


பிறைநா ளொன்றில் பெருநாள் வரும்
நிறைவா யன்று மகிழ்வே தரும்
இறைவா என்று ஏந்தும் கரம்
குறையா தன்று கொடுப்போ னருள்

முத்திரைத் திங்கள் மொத்தநாட் களும்
நித்திரை யின்றி நின்றநாங் களும்
இத்தரை மீது இன்ப மேவிட
உத்தர வாதம் உண்ணத தினம்

சிறுவர்கள் பாடி தெருக்குளம் ஓடி
படித்துறை கூடி முதற்பிறை தேடி
இறையருள் நாடி முகிழ்கலைந் தோடி
வானம் வெடிக்கும் வளையல் துண்டென

கலையாது கட்டிய கைலிக் கச்சலில்
முளைக்காது கிடைத்த சிறகு விரித்து
நடக்காது பறந்து வீட்டினுள் புகுந்து
பிறைகண்ட செய்தி பெற்றோர்க்குச் சொல்ல

கழுவிவைத்த வீட்டில் கமழும் நறுமணம்
கைவளை குழுங்க மகிழும் பெண்களும்
வட்டிலப்பம் சமைக்க உடைத்த முட்டையின்
கூட்டினுள் வார்ப்பர் வர்ணக் கடற்பாசி

இஷாவுக்குப் பிறகே தக்பீர் துவங்க
இறைச்சிக் கடைகளில் கறிவெட்டும் சப்தம்
உறக்கம் சிதறியே இரவு கடக்கும்
உலகமே களிக்கும் பெருநாளும் விடியும்

எத்தனைப் பெருநா ளெங்கெலாம் கண்டும்
எண்ணவே இனிக்கும் இளமையின் நனா
விடியாதோ வென்ற விடலையின் பயம்
முடியாத இரா இல்லையென விடியும்

குளங்களில் குளியல் குதூகலப் பாய்ச்சல்
குழிமிய நண்பர்கள் களித்திடும் காட்சி
கைக்குட்டை அத்தர் கண்களில் சுருமா
கலைகட்டும் பள்ளியில் தக்பீர் முழக்கம்

'நகரா' அடித்து நாற்புறம் முழக்க
நகராமல் நிர்ப்பர் ஏழெட்டுச் சிறார்
தகறாறு வந்து தடுக்கப்படும் வரை
தவறாது முழங்கும் முரசுவின் சப்தம்

தொழுகை முடிந்தபின் தர்மம் செய்து
தழுவிச் சொல்வர் பரஸ்பரம் வாழ்த்து
பெருநாள் முடிந்து மறுநாள் வரை
தக்பீர் முழங்கும் எங்கள் ஊரெங்கும்

அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

லாயிலாக இல்லல்லாஹூ அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

2 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Wish you all brothers and sisters happy Eid Mubarak.

Eid poem is adding more feeling of happiness.

Jazaakkallah khair brothet Mr. AbuSharukh

B.Ahamed Ameen from Dubai.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சபீர் அஹமது அபுஷாரூக் அல்லது வலைப்பதிவாளருக்கு, நான் ஒரு இசையமைப்பாளன். மேற்படி கவிதை நன்றாக உள்ளது. இதை இசைக்கோர்க்க எனக்கு அனுமதி வேண்டுகிறேன். தங்கள் ஒப்புதலை zubair61u@gmail.com ல் தெரிவிக்கவும். என்னால் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்ட ஷிர்க் இல்லாத பாடலை கீழ் லிங்கில் காணவும்.https://www.youtube.com/watch?v=zYluBPv-2kc
வஸ்ஸலாம்.
கூ.செ.செய்யது முஹமது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு