Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபரின் நிழல்கள் ! [பழசுதான் இருந்தாலும் மவுசுதான்] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2015 | , , ,


அதிரைநிருபரில் வெளிவரும் பதிவுகள் மட்டுமல்ல அதன் பின்னூட்டங்களும் பேசுபொருளாக மாறி ஏராளமான இதயங்களில் இடம்பிடித்து வீடுகட்டி வாழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைதியின் ஆளுமையில் ஆராவரமாக அசத்திய ஏராளமான சகோதரர்களை சட்டென்று நினைவு கூறும் நேரத்தில் ஏராளமானோர் நினைவில் வராவிட்டாலும் பேச்சு வழக்கில் சிக்கிய சகோதரர்களின் சந்திப்பு ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு ரசனையான கற்பனையொன்றை அதிரைநிருபர் குழு மின்னாடல் சுற்றுக்கு விட்டது. அதன் பிரசவம் தான் இங்கே.... இந்த வலி எங்களோடது அதன் சிரிப்போ உங்களோடது..

இந்தப் பதிவில் நடைபோடும் உரிமையோடும் உறவாடியிருக்கிறோம், ரசனையின் உணர்வுகளை உள்வாங்கி ரசிக்கத் தெரிந்தவர்களோடு ரசனையாடியிருக்கிறோம். குட்டலோ, வெட்டலோ இருப்பின் இதோ மின்னஞ்சல் comments@adirainirubar.in அங்கே எழுதி கேட்டு ஃபோன் நம்பர் வாங்கி அப்புறம் திட்டுங்க. வேனும்னா அட்ரஸ்கூட தருகிறோம் டிக்கெட் போட்டு வந்து அடிச்சிட்டுப் போயிடுங்க... அதுக்காக கோபமாக மட்டும் இருப்பேன்னு இருந்திடாதீங்க ப்ளீஸ்...

நாங்கள் அதிரை நிருபர்கள்:

அந்தக் கனவு அழகாய் உதித்து அருமையாய்த் தொடர்ந்தது. ஓர் ஓளரங்க நாடகம்போல காட்சிகளாய் விரிந்தன அந்த உரையாடல்கள்:

சபீர்: என்ன ஜாயிரு
          இந்த நேரத்தில்
          வந்து நிற்கிறே?

ஜாகிர்: நேரம் முக்கியமல்ல, அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஒரு நிமிஷத்தைக்கூட ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் கழித்தால் அவனுக்கு அன்னை தெரசா ஆஸ்ரமதில்கூட அட்மிஷன் போடமாட்டாங்க 

சபீர்: சரிடா
          ஏன்
          கோபப்பட்றே?

ஜாகிர்: பிறகென்னடா? “நாங்கள் அதிரை நிருபர்கள்”னு நிகழ்ச்சியைப் ப்ரோப்போஸ் பண்ணிட்டு இன்னும் கிளம்பாம, மூனு ஆயுள் தண்டனை வாங்கின பிரேமானந்தா மாதிரி கிடக்கிறியே என்ன அர்த்தம்?

சபீர்: சரிசரி
         வாவா
         போவோம்
         போபோய்
         வருவோம்

ஜாகிர்: பார்த்தியாடா, எல்லோரும் நமக்காக காத்திருக்காங்க. அஸ்ஸலாமு அலைக்கும் அபு இபுறாஹிம். நல்லாருக்கியலா?

அபு இபுறாஹிம்: நா(ன்) நல்லா(த்தான்) இருக்கேன் காக்கா. நீங்க? அஸ்ஸலாமு அலைக்கும் (கவி)க்காக்கா.

சபீர்: வ அலைக்குமுஸ்ஸலாம்
          அபு இபுறாஹீம்
           நலம்தானே ?

ஹமீது: என்ன எல்லோரையும் வரச்சொல்லிட்டு நீங்க மட்டும் ராக்கெட் உட்றிய? நான் கெளம்பி அப்பர் கோதையாறு போய்டவா?

யாசிர்: சரியாச் சொன்னிய காக்கா. புருஷன் பொன்டாட்டிக்குள்ள ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருந்தா இப்படியெல்லாம் தாமதமா வரமாட்டாஙக. நான் வேணும்னா கட்டம்போட்டு விளக்கவா?

சபீர்: யாசிர்,
          அடங்குங்க.
          எம் ஹெச் ஜே
          என்ன
          மெளனமாயிட்டிய?

எம் ஹெச் ஜே: அதான் அங்கேயே கருத்துச் சொல்லியாச்சே காக்கா, இங்கேயும் எதுக்கு வரிக்குக்கீழ் வரின்னு மடக்கி மடக்கிப் பேசுறீங்க. அவஅவன் கொட்டுற பனிலே நடுங்குறான்.

அபு இபுறாஹிம்: அன்பு(ள்ள) தம்பி. உங்கள் குளிரை விரைவில் பதிவுக்கு(ள்) கொண்டுவ(ருகிறோம்)ர முயல்வோம்

எம் எஸ் எம்: எடிட்டராக்கா. இப்ப நான் சொல்றதையும் ஏற்கனவே சொன்னதோடு சேர்த்துக்கோங்க. அதாவது, நம்ம பெரியாப்பா மக்க சின்னாப்பா மக்களையும் உடன்பிறந்தவங்க மாதிரிதான் பாக்கனும். இல்லாட்டி நம்ம பிள்ளைலுவோ நமக்கு சோறு தண்ணி தராதுவோ. காசு பணத்தக் காட்டாதுவோ. விசிறி எடுத்து வீசாதுவோ.

எல் எம் எஸ்: அதத்தான் இப்பவே நிறைய கண்கூடாப் பாக்குறோமே. “விசிறி எடுத்து வீசாதுவோ” .நெய்னா,வெளிச்சம்போட்டு காட்டிட்ட.

அலாவுதீன்: என்ன வேணா பேசிக்கோங்க. ஆனா, கடன் வாங்காதீங்க. அல்லாஹ் ரசூல் சொன்னதை அருமருந்தாக பக்கத்திலேயே வச்சிக்கோங்க.

அர.அல: அலாவுதீன் காக்கா பேசுறது மட்டும்தான் பேச்சு. மத்தவங்கல்லாம் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

ஜாகிர்: அப்ப நான் என்ன மணிமண்டபத்திற்கா “படிக்கட்டு”கிறேன்?

அர.அல: ஜாகிர் காக்காவையும் அலாவுதீன் காக்காவையும் மட்டுமே பேசச் சொல்லி அதிரை நிருபரில் ஆதாரபூர்வமான அறிவுப்புகள் இருக்கு.

அதிரை அஹ்மது காக்கா: "நான் வேனும்னா, 'பேச்சு' - ஒரு பதிவரின் பார்வை"யைத் தொடங்கவா?

சபீர்: அருமை கவியன்பன். அழகான கவிதை. கலக்கிட்டிய

கவியன்பன்: நான் இன்னும் ஒன்னும் சொல்லவே இல்லையே?

சபீர்: உங்கள் மெளனம்கூட வாய்ப்பாடும் விருத்தமுமாய் அழகாய்த்தான் இருக்கிறது.

தலைத்தணையன்: மாப்ளே கலாம், நீ இங்கேயா இருக்கே. நான் உன்னையத் தேடி யு எஸ் வரைப் போயிட்டு வந்தேனே?!

கவியன்பன்: மச்சான், 
            நான் காண்பது கனவா நெனவா?
            நீதானா இது நீதானா
            நிஜம்தானா சொல் நிஜம்தானா
            வேர்போல என் வாழ்வுதனில்
            ஊரி லிருந்தது நீதானா

அர அல : கவிஞர்களை வழிகேடர்களே பின்பற்றுவர்

…சலஃபி: “ஹு வல்லாஹு அஹத்” அல்லாஹ் ஒருவனே என்று விளங்கிக்கொண்டால் சர்ச்சை வராது

சபீர்: நல்ல வேளை
          நான்
          பேசுவது
          கவிதை
          இல்லை

கிரவுன்: ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லவேளை எனும் சொல்லுக்குள் நல்ல ஆளைப் பார்க்கிறோம்; நல்ல வேலைப்போல விருட்சம் பார்க்கிறோம்; நல்ல வேலென கூர்மையைப் பார்க்கிறோம்

அபு இபுறாஹிம்: கிரவுன்(னு), எங்கேடா(ப்பா) ஆளை(யே) காணோம்?

என்.ஷாஃபாத்: எலெக்ட்ரான் ப்ரொட்டான்
            என எத்தனை அணுக்கள்
            பொக்ரானிலும் போட்டுடைத்தது போதாதா
            கூடங்குளத்தின்
            சிறு அங்குலமும் சிதைய விடமாட்டோம்

அபு இஸ்மாயில்: இந்த மீட்டிங்கை ஊரில் நடத்தி போராடினால் ஜெயிக்கலாம். எதற்காக போராடனும் என்பதை பிறகு தீர்மாணிக்கலாம்.

சபீர்: யாசிர், யாரது எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது?

யாசிர்: ரஃபீக் காக்கா மாதிரிதான் தெரியுது

சபீர்: உள்ளே வாங்களேன்

ரஃபீக்: நடத்துங்க நடத்துங்க. நான் மட்டுமில்லை. என்னைப் போல பலபேர் இங்கிருந்து சைலன்ட்டா வாட்ச் பண்ணிட்டிருக்கோம்.  நாங்கெல்லாம் உள்ளே வந்தால் நீங்க எல்லோரும் வெளியாக வேண்டியிருக்கும் பரவால்லயா? வந்தமா பேசுனோமா புறாக்கறியைத் திண்ணமா போனாமான்னு இருங்க.

தாஜுதீன்: சபீர் காக்கா நல்லாயிருக்கியலா? ஜாகிர் காக்கா நலமா? ஹமீது காக்கா பார்த்து ரொம்ப நாளாச்சு? கோவை அயூப் அவர்களை நேரா வரச்சொல்லிடுவோம். இதோ இப்ப வந்துட்டேன்.

யாசிர் & ஹமீது: இருங்க நாங்களும் வந்துர்றோம்.

சபீர்: இருங்கப்பா. எல்லோருமே இன்னும் கொஞ்ச நேரத்தில போயிடலாம். உஷ்ஷ்ஷ்…அமைதி அமைதி…காக்கா வர்ராஹ.

ஜமீல் காக்கா: பேசும்போது பிழை இல்லாம பேசனும். கொஞ்சமாப் பிழையாப் பேசுறவங்களை மட்டும்தான் லேஸா அதட்டுவேன். உங்கள மாதிரி நிறைய தப்பாப் பேசினா அப்புறம் கண்டுக்கவே மாட்டேன்.

N.ஜமாலுதீன் : நான் என்னமோ புதுசா ஆரம்பிச்ச இயக்க கூட்டமோன்னுல மெதுவா வந்தேன், நானும் உள்ளே வரவா ?

அபுஇபுறாஹிம் : (அட!) வாங்க தம்பி ! எங்கள் உள்ளம் என்றுமே திற(ந்தே இரு)க்கிறது... தெரிந்ததுதானே உங்களுக்கு

சபீர் : நீங்கள் வோ
           தெளிவாத்தான்
           இருக்கிய !

மர்மயோகி: (நல்லவேளை, நாம இருக்கிறத யாரும் கவனிக்கல. நடத்துங்க மக்களே. நாளைக்கு வச்சிக்கிறேன் தனி மெயில்ல).

யாசிர்: வாங்க மாமா, இங்கே வந்து பேசுங்க

இபுறாஹிம் அன்சாரி காக்கா: என்ன நடக்குது இங்கே? கொஞ்ச நேரம் குறுந்தாடி ஒதுக்கிட்டு…சாரி…குறுந்தொடர் எழுதிட்டு வருவதற்குள் இந்த 16 பேரும் 26 நிமிடம் 48 நொடிகளில் ஆயிரத்தி இருநூறு வார்த்தைகளைப் பேசியிருக்கீங்க. தாங்குமா இந்த சபை?

ஹமீது: மாமா பேச்சைச் சின்னப்பிள்ளைலேயே கேட்டிருந்தா சபீர் ஜாயிர் மாதிரி கழிசறைட சகவாசம் இல்லாம சுவிட்ஸர்லான்ட்லே செட்டிலாயிருப்பேன்.

சபீர்: ஹமீது, யார் வந்திருக்கான்னு பாருங்க.

ஹமீது: அடடே வாங்கண்ணே. சட்டையெல்லாம் ஐயன் பண்ணி இன் பண்ணிக்கிட்டு எங்கே கிளம்பிட்டிய. பாஸெஞ்சரா இருந்துக்கிட்டே பின் சீட்டிலேர்ந்து பைக் ஓட்டுனத மறக்க முடியலண்ணே

என் ஏ எஸ் சார்: ஹாய் கேவலப்பயல்ஸ். சபீர், யு ஆர் ரியலீ அமேஸிங் யா. ஜாகிர்ஸ் பீஸ் ஆஃப் ரைட்டிங் இஸ் அப்சொல்யூட்லி சூப்பர்ப். கலாம் ராக்கிங். எம் எஸ் எம்ஸ் ரைட்டிங் இஸ் மைன்ட் ப்லோயிங்யா. அக்ச்சுவலி ஐ டோன்ட் ஹேவ் டைம். அதர்வைஸ் ஐ வில் ரைட் அபவுட் மை டேட்ஸ்…சாரி… டேய்ஸ் இன் வியட்நாம்.

நூர் முஹம்மது காக்கா: கி.மு. நாநூறுல துவங்கப்பட்டது அதிராம்பட்டினம். அப்ப எனக்கு ஏழு வயசு. ரெண்டாம் நம்பர் ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தேன். ஈ எம் ஹனீஃபாவோட ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாதான் எங்கேயும் ஒலிக்கும்.

ஜப்பர் காக்கா: இங்கே எவனாவது தொப்பி போட்டிருக்கானா? பேராண்டிவொலா, ராத்திரிக்கு முர்தபா வாங்கித் தரேன், போய் மார்க்கெட்டுல தேசப் பொடி இருந்தா வாங்கியாரியலா. யாருப்பா அது அபு ஈசா பேராண்டியா?

அபுஈசா: தொப்பி போட்டாத்தான் தொழ முடியும்னா யாரும் பள்ளிக்கே வர மாட்டங்க. பிச்சைக்காரவர்கள்தான் வருவார்கள். ஆனா, அவர்களுக்குப் பிச்சை போட்டால் பிச்சையை ஒழிக்க முடியாது.

சேக்கனா M.நிஜாம்: இந்த சப்தம் குறைவதே சமூகத்துக்கு நல்லது. அதற்கு நாம் செய்ய வேண்டியது.
      01) எல்லோரும் வரிசையா உட்காருங்க 
      02) ஒவ்வொருத்தரா கையைத் தூக்கி அனுமதி கேளுங்கள். 
      03) பேசி முடித்ததும் சோடா கேட்காதீர்கள்

அபுபக்கர் அமேஜான் : ஜாகிர் காக்கா நீங்கதான் ஆரம்பிச்சு வச்சியா. சபீர் காக்க பதில் சொன்னாக. வரிசையா எல்லோரும் பேசுறாங்க. அதனால்தான் நானும் துபாய் வந்துட்டேன்.

இர்ஃபான் சி எம் பி: இதேபோலொரு சந்திப்பை ஐ நா சபையில் நிகழ்த்தினால் நம்ம பிரச்னைகளைத் தீர்த்துவிடலாம். ஏற்பாடு செய்யுமா அதிரை நிருபர்?

யாசிர்: ச்சான்ஸே இல்ல. காக்கமார்களெல்லாம் அசத்துறீங்க. யாருமே பரோட்டா மட்டும் சாப்ட்டுடாதிய. பரோட்டாய்ட் பீடியா(Parotta pedia) எனும் நோய் தாக்கிடும். பொன்டாட்டிப் பேச்சுக்கு ஆமாம் சொல்றவங்களைத் தவிர மற்ற எல்லோரையும் தாக்கிடுமாம்.

சபீர்: அப்ப எனக்கு வராதுப்பா.

ஹமீது: ப்பாயாவோடு தொட்டு திண்ணாலுமா? எனக்கு அண்டவே செய்யாது.

ஜாகிர்: ஆட்டு பார்ட்ஸ் சாப்பிட்டா நம்ம பார்ட்ஸ் கெட்டுடும். சொன்னா பைதிக்காரேம்பாய்ங்க. நான் மேல்மாடிக்குப் போறேன். படிக்கட்டுகள் எங்கேப்பா.

சபீர்: இருடா நானும் வரேன். யாராவது என் கம்ப்யூட்டரை ரிப்பேர் பண்ணித்தாங்களேன்.

புதுசுரபி: கொஞ்சம் லேட்ட்டாயிடிச்சு. வர்ர வழியிலே ஒரு டாக்ஸி ட்ரைவருக்கு “இறைவனிடம் கையேந்துங்கள்”பாடலுக்கு விளக்கம் சொல்லிட்டு வர தாமதமாயிடிச்சு.

ராஸிக்: எல்லோரும் சொல்லிட்டீங்க. நான் ஏதாவது சொன்னா ஏற்கனவே சொல்லியாச்சுன்னு ஒன்னுமே சொல்ல விடமாட்டேங்கிறீங்களேப்பா.

அப்துல் மாலிக்: சாதிக்கனும்னா அதற்காக முயற்சி செய்யனும். அவ்வ்வ்வ்வ்!

அப்துல் ரஹ்மான்: வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்கள் வரைந்ததா விலைகொடுத்து வாங்கி யணிந்ததா?

அதிரை முஜீப்: ஆக்கபூர்வமான பேசுபொருள் இல்லாததால் இந்த சபையிலிருந்து வெளிநடப்புச் செய்கிறேன்.

(நியூ காலேஜ் புற்பூண்டுகளை வளர்த்ததோ இல்லையோ நல்ல கழிசடைகளை வளர்த்து விட்டிருக்கு)

NM.மீரா : என்ன தம்பி எண்டரன்ஸ் எக்ஸாமுக்கு பசங்கள தயார் செய்றதுக்குதான் கூடியிருக்கீங்கன்னு வந்தா என்ன இது ? சரி சரி சீக்கிரம் பேசுங்க கல்வி மாநாட்டு தேதியை முடிவுபன்னுவோம்...

அதிரை அஹ்மது காக்கா : 'தம்பி மீரா செயல் வீரர்'

குதுப்: ஏதாவது சொல்லவந்தா நீங்க அவரான்னு கேட்டு ஓச்சிப்பிடறாய்ங்களேப்பா.

ஃபதுதீன்: மேற்கொண்டு விளக்கங்களுக்கு ப்ளீஸ் விசிட் டபிள்யு டபிள்யு டபிள்யு...

சபீர்: காப்பரிட்சையோடு கழண்டுக்கிட்ட மச்சான் ஜலால் வந்திருக்கானா?

ஜலால், யு எஸ்: இங்கேதான் மச்சான் இருக்கேன். பேச்சக்குறைச்சிட்டேன் அவ்ளோவ்தான்.

சபீர்: ஏன் மச்சான் ஆம்பிளப் பிள்ளையா பொறந்தே? பொம்பிளப்பிள்ளையாப் பொறந்துருந்தா உன்னயதான் கல்யாணம் செய்து வச்சிருப்பேன்னு ஆத்தா சொன்னிச்சு தெரியுமா?

ஜலால்: உன்னயத்தான் கட்டிக்கிடனும்னா நான் மாறுவேஷம் போட்டுக்கிட்டு ஊரைவிட்டே ஓடிப்போய்டுவேன். வெளங்குமா?

இர்ஷாத்: காமெடி தூக்கலா இருக்கு. ஆனா, இதை நான் சொல்லல.

ஷாஃபி: பாசக்காரப் பயலுவன்னு மட்டும்தான் நெனச்சேன். பயங்கரமா கலாய்க்கிறாய்ங்களே.

தாஜுதீன்: எங்கே ஒரு காக்காமாரையும் காணோம். லேட்டா வந்துட்டேனோ?! ஓ வெளியே நிக்கிறீங்களா. கொஞ்சம் வேலை ஜாஸ்தியாப் போச்சு. மீட்டிங்கை ஆரம்பிப்போமா?

ரியாஸ் சிங்கப்பூர்: மீட்டிங்குன்னு சொன்னானுவ, என்ன ஒருத்தரையும் காணோம். ரொம்பத்தான் லேட்டா வந்துட்டமோ?

பி.கு.: ச்சும்மா மனச லேசாக்க மட்டும்தான் இந்தப் பதிவு. மீறியும் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மனசுல வச்சிக்காம என் மேல் உள்ள கோபத்தை நெறியாளரின் அலைபேசி எண்ணுக்கு அழையுங்கள் இரண்டு நாட்களுக்கு மட்டும் அவருடைய அலைபேசியை நான் தான் வாங்கி் அவரிடமே அதனை வைத்திருக்க சொல்லியிருக்கிறேன் என்ன வேணும்னாலும் திட்டிக்கோங்க. எனக்கு கோபமே வராது பாருங்களேன்.

மின்னஞ்சல் வழி : இந்த புள்ளயளுவோ நல்ல புள்ளையலுவொலாதானேமா இருந்திச்சு ஏம்மா சேட்டை செய்திட்டு இருக்குதுவோ, சேர்மன் கிட்டே சொல்லி சரி செய்ய சொல்லனும் அவ்வோதான் கச்சல கட்டிகிட்டு இறங்கிறவொ

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
comments@adirainirubar.in

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மவுனமான மக்களை தட்டியெழுப்ப இந்த பதிவும் மீண்டும் அவசியம் தான்.

பழைய பதிவுகளில் சுவையும் மவுசும் நிறைந்த பதிவு இது!

Yasir said...

மீண்(டு)ம் வருவோம் (வர வேண்டும்) இக்காலம்...முகநூல் என்ற பாஸ்ட் ஃபுட் சிற்றின்பத்தில் திளைத்திருக்கும் நான் அனைவரும் ..வீட்டு சாப்பாடு போன்ற தளங்களில் களம் அமைக்க. உடனடியாக வர வேண்டும்

sheikdawoodmohamedfarook said...

ரசிக்கலாம்!பசியெடுத்தபோதிலும்அதைமறந்துரசிக்கலாம்.இதுமாற்றி யோசிக்கும்புதியசிந்தனை!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பதிவு ரொம்ப மொத்தியா இருந்தாலும் அழஹாதிய யாஃபொவங்கள். யாசிரின் கருத்தை வழிமொழிய வேண்டியுள்ளது.

Unknown said...

தம்பி சபீரு,
உங்கட கிரேன் rigger கால்லே steel channel விழுந்து ஆள் துடிக்கிறாரு. நீங்க என்னடான்னா வேற பக்கம் திரும்பி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறீங்க! அதுவும் தலைலெ helmet இல்லாமெ !

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய அஹ்மது காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹஹ்ஹஹா!

Komatsu bull dozerன் push armஐ commission செய்துகொண்டிருக்கும் வேலை அது.

நெஜமா இருந்தா ஃபோட்டோ போட்டிருப்போம்ல?

"இப்படிப் போட்டுவிடும் வாய்ப்புள்ளது. safety shoe போட்டுக்கோ"ன்னு சொல்லத்தான் படம் வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறோம்.

helmet இன்னும் இங்கு கட்டாயச் சட்டம் ஆக்கப்படவில்லையாக்கும் :-)

ZAKIR HUSSAIN said...

ஏம்ப்பா....எனக்கு மறுபதிவிலாவது சட்டை கலரை மாற்றியிருக்க கூடாதா?.....ஏதோ மாரியாத்தாவுக்கு கூழ் காய்ச்சிர ஆட்கள் யூனிஃபார்மை போட்டிருக்கீங்க...

அதிரை.மெய்சா said...

என்னா சபீரு லிஸ்ட்டுல நம்மபேர உட்டுபுட்டே. நீயும் மத்தவங்கள போல கால வாரி உட்டுடாதே. இந்த ஒலகத்துல யாரையிம் நம்பமுடியலப்பா

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Shameed said...

பதிவு சுப்பர் இருந்தாலும் என்கையில் கொடுத்துள்ள கேமரா ஹைதர் காலத்து கேமரா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு