பேசும் படம்.. தொடர்கிறது !

இன்றைய காலகட்டத்தில் ஆளாளுக்கு செல்ஃபி எடுத்து  பேசாத படங்களை எல்லாம்  பேசும் படங்களாக போட்டதும் அதிரைநிருபரின் ஆஸ்தான புகைப்பட கலைகர் அமைதியாய் இருந்து விட்டாரே அவருக்கு சரக்கு தீர்ந்து போய் விட்டதோ என்று  யாரும் எண்ணி விடவேண்டாம் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தியதால் அதிரைநிருபரில் கொஞ்சம் கவனம் செலுத்த முடியாமல் போய் விட்டது இன்ஷா அல்லாஹ்  இனி  இரண்டிலும் கவனமாக கவனம் செலுத்த முயற்சி செய்கின்றேன்.


நாங்களெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்ப தும்பி பிடிக்க அலையாத இடம் கிடையாது இந்த  காலத்து `தம்பி`களுக்கு அதுகெல்லாம் குடுப்பினை இல்லை 


இது  கிட்டாப் பார்வையா?  அல்லது எட்டப் பார்வையான்னு ? கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்க 


கூட்டு குர்பானிக்கு வசமான மாடு 


ஒரு  பூச்சி பல்லு கூட  இல்லை என்ன பேஸ்ட் போட்டு பல் விலக்குதோ ?


ஆங்கிலலேயர்கள்  ஆட்சி காலத்தில் கட்டிய கட்டிடம் சுதந்திர இந்தியாவில் எலும்பு கூடாய் தற்போது நிற்கின்றது (இடம் தனுஷ்கோடி) 


இது என்ன கரசேவகர்களின் கயவாளித்தனமா? இல்லை இல்லை கடல் காற்றின் சீற்றம் (இடம் தனுஷ்கோடி) 


போட்டோ எல்லோரும் எடுத்துவிடலாம் ஆனால் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பது தான் ரொம்ப முக்கியம் 


அறிவியையும் அதன்  நீர் சாரலையும்  ஒருசேர போட்டோ எடுக்கணும் என்ற ஒரு முயற்சியின் விளைவே இந்த போட்டோ 


மூனாரின் முதுகெலும்பே இந்த  ரோடுதாங்க! 

Sஹமீது

7 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

உண்மையில் உணமையைப் பேசும்படமே!

sabeer.abushahruk சொன்னது…

வித்தியாசமான புகைப்படங்கள்
வித்தைக்காரரின் கைங்கர்யத்தில்

சூப்பர்

sabeer.abushahruk சொன்னது…

தெருவோரம் தழைத்த
கருவேலங் காடுகளில்
தட்டான் - பிடி
பட்டான் என்றால்
சிட்டாய்ப் பறந்த காலம் அது

மோதிரக் கல் தும்பி
பிடிபட்டால்
பி எம் டபிள்யு
வாங்கிவிட்ட மிதப்பு

இருப்பினும்
இயல்பாய் மாட்டுவதென்னவோ
கள்ளன் தும்பியோ
சோவையோ மட்டுமே!

sabeer.abushahruk சொன்னது…

சிதிலமடைந்து கிடக்கும்
கட்டட எச்சம்
யார் கண்ட கனவின் மிச்சமோ

sabeer.abushahruk சொன்னது…

நெறியாளர் அவர்களே,

எல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்
முதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.

பல்லு பயமாருக்கு அப்பு.

Shameed சொன்னது…

//நெறியாளர் அவர்களே,

எல்லா படங்களிலும் ஹமீது இருந்தாலும்
முதலையின் வாய்க்கு மிக அருகில் இருக்கும் ஹமீதைச் சற்று தள்ளி நிறுத்தவும்.//

நெறியாளர் முதலை போட்டோவை பார்த்ததும் தான் புகைப்படம் எடுத்தவரின் படத்தை பதியும் எண்ணம் வந்திருக்குமோ!

Shameed சொன்னது…

//மோதிரக் கல் தும்பி
பிடிபட்டால்
பி எம் டபிள்யு
வாங்கிவிட்ட மிதப்பு//

ஆகா சூப்பர்