Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 009 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
'உங்களில் ஒருவர் மீது ஒவ்வொரு உடல் மூட்டுக்களுக்காக காலையில் தர்மம் செய்வது அவசியமாகும். (சுப்ஹானல்லாஹ் என்ற) ஒவ்வொரு தஸ்பீஹூம் தர்மமாகும். (அல்ஹம்துலில்லாஹ் என்ற) ஒவ்வொரு தஹ்மீதும் தர்மமாகும். (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) ஒவ்வொரு தஹ்லீலும் தர்மமாகும். (அல்லாஹூஅக்பர் என்ற) ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நல்லதை ஏவுவதும் தர்மமே. தீமையிலிருந்து தடுப்பதும் தர்மமே ஆகும். ளுஹா(பகல்) நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது, இதற்கு பகரமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள்  (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 118)
'நல்லவற்றில் எதையும் நீங்கள் மதிப்புக் குறைவாக கருதி விட வேண்டாம். உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதாயினும் சரியே'' என்று நபி(ஸல்)கூறினார்கள். ''    (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 121)

'மனிதர்களின் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் அதற்கு தர்மம் செய்தல் வேண்டும். இரண்டு பேர்களுக்கிடையே நீதமாக நடப்பது தர்மம் ஆகும். ஒருவருக்கு ஒரு வாகனத்தை வாங்கித் தந்து, அதில் அவரை ஏற்றி அனுப்புவதும் தர்மம் ஆகும். அல்லது அவருக்கு அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மம் ஆகும். நல்ல வார்த்தை (பேசுதலும்) தர்மம் ஆகும். தொழுகைக்காக அவன் நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும். பாதையில் இடையூறாக இருப்பதை அகற்றுவதும் தர்மம் ஆகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்).  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 122 ) 
'முஸ்லிம் பெண்களே! ஆட்டுக்கால் குழம்பாயினும் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் கொடுப்பதை மற்றொரு பெண் இழிவாகக் கருத வேண்டாம்'' என்று  நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 123 )
‘'இறை நம்பிக்கை, எழுபது அல்லது அறுபது கிளைகளாகும். அதில் மிகச் சிறந்தது, 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதாகும். அவற்றில் மிகச் சாதாரணமானது பாதையில் இடையூறு தருபவற்றை நீக்குவதாகும். வெட்கப்படுதல், இறை நம்பிக்கையின் கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:125 )
‘'பாதையின் நடுவில் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய ஒருவர் சொர்க்கத்தில் உலாவுவதை நான் பார்த்தேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 

மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது:-
''பாதையின் நடுவில் கிடந்த ஒரு மரத்தின் அருகே ஒருவர் நடந்து சென்றார். முஸ்லிம்களுக்கு இடையூறு தராதவாறு இதை அகற்றுவேன் என்று கூறி அதைச் செய்தார். எனவே (இறந்த பின்) சொர்க்கத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டார்.     (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்)                                 (ரியாளுஸ்ஸாலிஹீன்: 127 )

நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:215)

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.(அல்குர்ஆன்: 99:7)

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது. (அல்குர்ஆன் : 45:15)  
    
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)


'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


-S.அலாவுதீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு