Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படங்கள் பேசுகிறதா ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 15, 2015 | , , , ,


மூன்றாம் கண்ணுக்கு முகவுரை மட்டுமல்ல முத்திரையும் தந்த Sஹமீது (காக்கா) அவர்கள் இப்போது பிஸியாக இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு அப்புறம் ஏன் பச்சைப் பசேல்னு கேட்கத்தோனுமே ? அம்மாவின் ஆதரவாளர்கள் ஏதோ உள்ளே நுழைந்து விட்டார்களோனு கருத்து போடக் கூட எண்ணம் வருமே !?  ஷஃபி அஹ்மது தீட்டிய கேமராச் சித்திரங்கள் சிந்திக்க தூண்டிவிட்டு அடுத்து எங்கே சென்றது என்று கேட்கவும் தோனுமே....!?

எதுக்கு வம்பு என்று உங்க கிட்டேயே கேட்டுடலாமேன்னு தலைப்பிலேயே கேட்டு வைச்சுட்டேன்...!


விரித்து வைத்த பச்சைப் போர்வைக்குள் செல்ல இந்த செம்மண் பாதை மறக்க முடியாத இடம் (நிறைய கேமராக் கலைஞர்களுக்கு).


ஊட்டிக்குச் சென்று இந்த இயற்கை ப்யூட்டியை காட்சிப் படுத்தாமல் வந்தால் கேமராவை கண்டுபிடித்தவன் வருத்தப்படுவான்.


இவர் உலகம் சுற்றும் வாலிபன் அல்ல, ஊட்டியைச் சுற்றும் வயதில் சிறியவன் 


தோட்டக்கலைப் பூங்காவின் ஒரு பகுதி, பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற போர்டு போட்டவர்கள் அங்கு வரும் பூக்களையும் படங்கள் எடுக்காதீர்கள் என்றும் எழுதிப் போட்டு வைத்திருக்கலாம்...


மலை ஏறச் சென்றோம் மழை ஏறிட்டு வரவேற்கிறது...


வரைந்த படத்தில் தண்ணீர் ஊற்றிக் கலைந்த சாயம் அல்ல... நிஜமான நிழற்படம் மேகங்களின் சுழற்படம்.


மழை விட்டதும், சறுக்கிவிடும் சாலை, கோடுபோட்டு வழிகாட்டுகிறது...


மயக்கும் மலைகள் - அதனை
மறைக்கும் மழை !


சட்டென்று தலைக்கு மேல் போர்வை போர்த்திய கருமேகம்... நண்பகல் பொழுதை இரவாக்கிய அதிசயம் !


மூனாறு சறுக்கும் இடமெல்லம் மனதை மயக்கும் பசுமை அதில் பல்லாங்குழி சைசில் பள்ளங்கள் நெருங்கியதும் பாதாளம் சைஸாக இருந்தது.


எறும்புபோல் தெரியும் இந்த மாடுகளைக் காட்டி ஒருவர் சொன்னார், பக்கத்தில் போகாதீர்கள் அவைகள் காட்டு மாடுகள் என்று ! இங்கிருந்து அதனை காட்டிவிட்டு !


உச்சி வெயில் மணி பண்ணிரெண்டு, இருந்தாலும் குளிர் அப்போதும் கிடு கிடு நடுக்கம் அடித்த காற்றின் வேகம்.


கோடையில் நீர் தேடி ஏங்கும் நிலங்களின் வெதும்பல் எப்படி இருக்கும் என்று பச்சை போர்த்திய மலைகள் சொல்லிக் காட்டுகிறது.


கேமராவுக்கு பின்னால் 'இபு', வுக்கு பின்னால் அபு... கிளிக்கியது யாருன்னு சொன்னால் தான் தெரியுமா ?


அங்கே போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (தலை சுற்றுமாம்)...


இங்கிருந்து போகாதீங்க போகாதீங்கன்னு தடுக்கப்பட்டோம் (மலைகள் சுற்றி இருக்கிறதாம்)

அபூஇப்ராஹீம்

4 Responses So Far:

sabeer.abushahruk said...

படங்களும் குறிப்புகளும் அருமை.

Ebrahim Ansari said...

வாழ்த்துக்கள்.
கிளிக்குக்கு மட்டுமல்ல கிளிக் ஆனதுக்கும் சேர்த்துத்தான்.

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

//தோட்டக்கலைப் பூங்காவின் ஒரு பகுதி, பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற போர்டு போட்டவர்கள் அங்கு வரும் பூக்களையும் படங்கள் எடுக்காதீர்கள் என்றும் எழுதிப் போட்டு வைத்திருக்கலாம்...// ம்ம் NOTED.பெயர் மாத்துனதை சொல்லவே இல்லே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு