Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவனா யிரு: 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2015 | , , , , ,


உழுது  விதைப்பவன்
உணவை  விளைக்கிறான்
எழுதிப்  படைப்பவன்
எண்ணம்  விதைக்கிறான்.

தொழுது  துதிப்பவன்
தூய்மை  யுறுகிறான்
பழுது  அற்ற  நற்
பண்பைப்  பெறுகிறான்

பொழுது  புலர்கையில்
ஒழுகும்  கதிரைப்போல்
முழுதும்  நல்லதாய்
ஒழுக்கம்  வளர்க்கிறான்

விழுது  விட்ட  பழம்
ஆலைப்  போலவே
தழுவும்  குளிர்ச்சியாய்
நிழலும்  விரிக்கிறான்

எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
அழுது புலம்பும் சிலர்
அறிவைப் பழிக்கிறான்

கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்

மெழுகு உருகவே
துலங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்

காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்

சின்னஞ் சிறியதாய்
வார்த்தை கோக்கிறான்
பெற்றம்  பெரியதாய்
ஞானம் வார்க்கிறான்.

தனக்கு வாய்த்த சந்
தோஷம் பகிர்கிறான்
தன்னைப் போல யவர்
சிறக்க நினைக்கிறான்

பட்டுத் தெளியுமுன்
பலதும் சுட்டுவான்
பசிக்கும் செவிக்குத் தேன்
பாகை யூட்டுவான்

ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

13 Responses So Far:

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

First class poem, motivating to write, each elegant stanza of eight eight words, looks so formal.
//உழுது விதைப்பவன்
உணவை விளைக்கிறான்
எழுதிப் படைப்பவன்
எண்ணம் விதைக்கிறான்.//

Like each and every stanza.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Ebrahim Ansari said...

ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்

தம்பி ! கையைக் கொடுங்கள் குலுக்க அல்ல முத்தமிட.

Ebrahim Ansari said...

//ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!//

எழுதி நிலைத்திடும் இவனாய் இருந்திடுவோம்.

இப்படிக்கு,

இவனில் ஒருவன். .

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அவனா இராதே தந்த அருமை வித்து!

sabeer.abushahruk said...

Dear brother B.Ahamed Ameen

wa alaikkumussalam

jazakkallahu khairan

அன்பிற்குரிய காக்கா,
நன்றி

ஆம் MHJ

எங்கே ஆளையே காணோம்?

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். இருளகற்றும் இவன் ஞாயிறு!

crown said...

உழுது விதைப்பவன்
உணவை விளைக்கிறான்
எழுதிப் படைப்பவன்
எண்ணம் விதைக்கிறான்.
--------------------------------------------------
உயிர் வாழ உணவும்!.உயர்வு அடைய நல் எண்ணமும் தேவை!பசுமையாய் ஆரம்பித்து இதயமெல்லாம் வியாபித்து இருக்கு!

crown said...

தொழுது துதிப்பவன்
தூய்மை யுறுகிறான்
பழுது அற்ற நற்
பண்பைப் பெறுகிறான்
----------------------------------------------
நடை முறை எதார்த்தம்!!!! இதன் அர்தம் புரிந்து நடந்தால் முறையான நடையாக வாழ்கை அமையும் இம்மைக்கும் மறுமைக்கும்.

crown said...

பொழுது புலர்கையில்
ஒழுகும் கதிரைப்போல்
முழுதும் நல்லதாய்
ஒழுக்கம் வளர்க்கிறான்

விழுது விட்ட பழம்
ஆலைப் போலவே
தழுவும் குளிர்ச்சியாய்
நிழலும் விரிக்கிறான்
-----------------------------------------------
நல்லவர்களின் நடத்தைக்கு நற்சான்று!ஒழுகும் கதிர் அது ஒழுகும் போது இருக்கரம் ஏந்தி பிடிப்பதுபோல் கதிர் தோன்றும் முன் தொழுது இருக்கரம் ஏந்தி தூஆ கேட்டால் நன்மை வெளிச்சம் நம் ஈமானை சுத்தமாக்கி அடங்கியபின்னும் வெளிச்சம் தரும்.முகத்தில் விழுது போல் சுன்னத்தான தாடி விட்டால் அது நம்மை இன்பமாய் தழுவும் நிழல் தரும் நிஜம்!

crown said...

எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
அழுது புலம்பும் சிலர்
அறிவைப் பழிக்கிறான்
---------------------------------------------------
அழுது புலம்பும் சிலரையும் எழுது கோல் பிடித்தேனும் எழுந்துவா என எழுப்பும் நெம்பு கோல் இந்த எழுது கோல் என நம்பினால் துயரம் தொடமுடியா உயரம் பறந்து போகும் நம்மை மறந்து போகும் பின் எல்லாம் இன்ப மயம்!

crown said...

கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்
---------------------------------------------------
சிலருக்கு கழுத்துவரையும் கெட்ட எண்ணம் நீண்டு நிற்க்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் பருந்துக்கு இரையாகும் கோழி போல் அந்த எண்ணமே அவனை அழிக்கும் என சொல்ல வந்த உவமானம் கவிஞரின் சிந்தனை கிரீடத்தில் பதிந்த நல் வைரம்!

crown said...

மெழுகு உருகவே
துலங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்
-------------------------------------------
தந்தைக்கு சிந்தையில் வந்த உதாரணமாக இதைப்பார்க்கிறேன்!மெழுகே உருகும் அவரின் அன்பு உருவமும் உழைப்பும் எம் எச்சத்துக்கே மிச்ச வெளிச்சமும் பரப்பும் அற்புதம் அல்ஹம்துலில்லாஹ்!

crown said...

ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!
---------------------------------------------
புத்திக்கு எட்டு"ம்படி மனதாற எழுதியதை வைத்து எழு! நீதி வழுவாது வாழ்! இவன் நாய் என யாரும் சொல்லாமல் உன்னை குறைத்து மதிப்பிடமுடியாத இவனாயிரு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு