Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இளமையின் ரசனை ஏராளம் - ஏழு மட்டும் இங்கே ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய வாசக நேசங்களே:

இளமை துள்ளும் எக்காரியமும் ரசிக்கத்தூண்டும் அதன் வேகம் மற்றும் விவேகமும் அதே நேரத்தில் அசர வைக்கும். அவ்வகையில் தனித்திறன் வாய்ந்த இளமையின் புதுமையை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னோடியாக இருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் கண்டெடுத்த மற்றுமொரு நிழற்பட கலைஞன்தான் அசத்தல் காக்கா ஜாகிர்ஹுசைன் அவர்களின் இளைய மகன் அஃப்ஸல் ஹுசைன். 

மலேசியாவில் தந்தையின் தனிப்பட்ட கனிவான கவனிப்பில் வளர்ந்து படித்து வரும் இவர் தமது மூன்றாம் கண்கொண்டு (அதாங்க கேமராவாமே) இறைவனின் படைப்புகளை உற்றுப் பார்ப்பதில் உவகை கொண்டவர் மட்டுமல்ல அப்படியே காட்சிப் படுத்தி ஆவணப்படுத்துவதில் கில்லாடி.

இவரை(யும்) ஊடகத்துறைக்கு அழைத்துவரும் முயற்சியாக இங்கு இவரின் கிளிக்ஸ் பதிவாக மட்டுமல்ல இளயவர் அஃப்ஸலை வரவேற்பதில் மகிழ்கிறோம்...!

அல்ஹம்துலில்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்


எழிலுறக்கம்:
ஆழிப் பேரலை யென
எழாத நீர்நிலை
அக்கினிக் குழம்போ வென
சுடாத வாநிலை 

பச்சை உறை யிட்ட
பெருமலையே தலையணை
பாதத்தில் புல்லுரசும்
பூமியே பஞ்சணை 

ஆரும் சீண்டாத
அமைதியே அதன் துணை
அதனைப் படம் பிடித்தது
அஃப்ஸலின் நல் ரசனை 


பால் வழியும் பாறை: 

ஈரம் இருக்கும் கல்
நீரை நிறுத்தாது
அருவி கொட்டும் பாறையோ
அருகி லிழுக்கும் யாரையும் 

கால் நனைத்துக் கடந்திருப்பர்
கண்விழித்துக் களித்திருப்பர்
அஃப்ஸல் கண்டதால்தான்
அழகாகப் பதிவு செய்தான் 



பசுமைக்கொடி:

கொடிகொண்ட வர்ணங்களாய்
பிடித்திருக்குப் படம்
பசுமைக்கு நடுவே
பாலென சிற்றருவி 

புற்குண்டு பிரித்து
புறப்பட்டதா அருவி
அருவியைக் குழந்தையென
பிரசவிக்கிறதா மலை

அருகிருந்து
அவதானித்த 
அஃப்ஸலுக்கே வெளிச்சம்



வெளிச்ச மழை: 
வெளிச்ச மழை
வீதியில் விழுகிறது
சிலிர்த்த இலை
சிந்தையில் உழுகிறது 

மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது 

பச்சைக் கானகத்தில்
வெள்ளை யடிக்கிறது
பசுமை புரட்சி செய்து
வெயிலையே எதிர்க்கிறது 

அஃப்சல் அழகியலில்
அசல் இந்த ஆதாரம்



பசுந் தென்றல்: 

கரும் பச்சையும்
கிளிப்பச்சையும் இரட்டையர் 

இங்கு
வசிக்க வொரு இடம்
வாய்த்துவிட்டால்
கதவில்லா வாயிலும்
கம்பியில்லா சாளரமும்
கூரையில்லா குடிசையுமாய்
வீடு ஒன்று வைக்க வேண்டும்
விடுமுறையைக் கழிக்க வேண்டும் 

படம்பிடித்த அஃஸல்
இடம்பிடித்துத் தருவானா?



மந்தகாச மந்தாரம்:

மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா

மெல்ல விடிகிறதே அது
கிழக்கா விளக்கா

எத்தனை ஓவியங்கள் அது
வானமா வண்ணத்திரையா

அருமையாய் கைப்பற்றியது 
அஃப்சலா அம்சமா



தோற்ற மயக்கம்: 

பூக்களின் உடை உடுத்தி 
புது வர்ணத்தில் 
இலைகள் 

பச்சையம் இல்லாது 
பயனென்ன 
பார்க்கவும் ரசிக்கவும் 
பயமென்ன

அணிவகுப்பைத் தொடர
அஃசலுக்குத் தயக்கமென்ன

- Z. அஃப்சல் ஹுசைன்

- சபீர்

12 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

வெண் துகிலை பாதம்வரைபடரவிட்ட மலைக்கன்னி[படம் 3] பேரனுக்குபாட்டனின்வாழ்த்தும்வரவேற்ப்பும்.தொடர்க சபீரின்கவிதைகள் சர்க்கரை பந்தலில்தேன் மாரி!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். கண்ணில் படுவதெல்லாம் காட்சி படுத்தல் எண்பது கலைரசிகனுக்கு மட்டுமே வாய்க்கும் எட்டாம் அறிவு!எமக்கோ அது எட்டா அறிவு!ஆனாலும் காட்சியின் பதிவு என்மையும் பதிவிடதூண்டுகிறது!கவிகாக்காவின் கவிதை மழையில் இந்த இயற்கையே நனைந்தது போல் மேனியெல்லாம் சில்லென பரவுகிறது ஒரு வித பரவசம்!அப்ஸல் அப்ளாஸ் அள்ளிக்கொள்ளட்டும்.

crown said...

நேர்த்தியை போர்த்திருக்கும் இயற்கை அழகுக்கு அணி சேர்ப்பதுபோல் (ஹனி)தேன் கவிதை கொழைத்து தந்திருக்கும் கவிகாக்காவின் ஒவ்வொரு வரிக்கும் எழுத தூண்டுகிறது மனம். காட்சி படுத்தலை காட்சிப்படுத்தல் என்பது சாதாரனவிசயமன்று!அப்ஸல் சொல்லிக்கொண்டே போகலாம் திறமையின் சான்றுக்கு இங்கே சில புகைப்படங்கள்!மிகையில்லா இயற்கைப்படங்கள்!வகை,வகையாய் எம்மை தன்வசம் வாரிக்கொள்கிறது!இதுவும் வாரிசு"களின் திறமைக்குச் சான்று!.

crown said...

பச்சை உறை யிட்ட
பெருமலையே தலையணை
பாதத்தில் புல்லுரசும்
பூமியே பஞ்சணை
-----------------------------------------------------------------
இன்று என்னை உறங்கவிடாத வரிகள்!என்னை தழுவியதால் உறக்கம் நழுவபோவது நிச்சயம்!உறங்காமலே கணா கானப்போகிறேன்,இவ் இரவு!.

crown said...

ஈரம் இருக்கும் கல்
நீரை நிறுத்தாது
அருவி கொட்டும் பாறையோ
அருகி லிழுக்கும் யாரையும்
-------------------------------------------------------------
கல்கூட தாரைவார்க்கும் நீரை அதில் ஈரம் இருப்பதால் நெஞ்சில் பாரம் நீக்கிய பக்குவ வார்த்தை!ஈரமற்ற சில கூட்டங்களால் நாடு பாலை வார்க்காமல் பாலையாகிறது!

crown said...

இங்கு
வசிக்க வொரு இடம்
வாய்த்துவிட்டால்
கதவில்லா வாயிலும்
கம்பியில்லா சாளரமும்
கூரையில்லா குடிசையுமாய்
வீடு ஒன்று வைக்க வேண்டும்
விடுமுறையைக் கழிக்க வேண்டும்
---------------------------------------------------------------
வானமே கூரையாய்!தென்றல் நுழையும் வாயிலாய்!காட்சிக்கு சிறுதடைபோடும் கம்பியில்லா சாளரமும் வாய்க்கும் போது இவ்விடமே நமக்கென எழுதிய புத்தம் புது பூமியாய் மாறிவிடும்! சும்மா இதமான சிந்தையை தூண்டும் கற்பனையும், வேண்டுதலும்.

crown said...

மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா
-------------------------------------------------
கவிமேகத்தின் தீராத தாகம்!

அதிரை.மெய்சா said...

நண்பர் ஜாகீர் ஹுசைனின் புதல்வர் அஃப்ஸல் ஹுசைனின் கிளிக் அருமை. வாழ்த்துக்கள்.

அ.நி.யில் இணைந்து இன்னும் உங்களது திறமையை வெளிப்படுத்துங்கள். மனக்கிடப்பில் அடைந்து கிடக்கும் உங்களது ஆர்வமிக்க எண்ணங்களை கட்டவிழ்த்து விடுங்கள்.

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இப்படி தொடர்புடைய அனைவரும் அசத்திய ஒரு பதிவு இதற்கு முன் வந்திருக்கிறதா?

கண்டு நேரம் பல கடந்தாலும் கண்ணுக்குள் நிற்கும் காட்சிகள். படித்துப் பலமணி நேரம் ஆனாலும் மனதில் ஊறிக்கொண்டு இருக்கும் வர்ணனைகள் .

அசத்தல்தான்.

மகனார் அஃப்ஸல் ஹுசைனுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Afsal Hussain,

Meanings nicely unfold for each scenary through beautiful and short narrations. Simply unique vision. Keep it up.

Jazakkallah khair,

B. Ahamed Ameen from Dubai.

Iqbal M. Salih said...

impressive images!
warmful greetings to Afzal.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு