Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் 3 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2015 | , ,

எங்கு தேடியும் பாத்துமாயி யார் கண்ணிலும் அகப்பட வில்லை ‘தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் தனியா விட்டு விட்டு அவள் மாயமாய் எங்கு மறைந்தாள்?’ என்பதே ஊரார்களின் நெஞ்சில் ஊசலாடிய கேள்வி. நேரம் இரவு மணி பத்தரை ஆனாலும் ஊர் உறங்கவில்லை. யாரும் சோறு உங்கவில்லை. தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீ கூடகுடிக்காமல் ‘பாத்துமாயி எங்கே போனாள்?’ என்ற கேள்வியோடு கவலையும் கொண்டிருந்தார்கள். கடைசியாக. ஒரு பெரியவர் ’’தெருக் கோடியிலே ஈக்கிற பாழடஞ்ச குப்பை கெனத்தை பாத்தியலா?’’ என்ற கேள்வி ஒன்றை போட்டார்.

இதைக் கேட்டஎல்லாருடைய நெற்றி புருவமும் சுருங்கி விரிந்தது. அந்தக் கோணத்தில் யாரும் அங்கே அதை அப்படி யோசிக்கவில்லை! ‘அந்த அளவுக்கு போகும் படியான சூழல் பாத்துமாயிக்கு ஏதும் இல்லையை’’ என்றே எல்லோரும் எண்ணினார்கள். ‘’சரி! தேடியது தான் தேடினோம் இதையும் போய் பார்த்து விடுவோமே!’’ என்று. அரிக்கன் லாம்பு பினாங்கு பேட்டெரி லைட் எல்லாம் எடுத்துக் கொண்டு எல்லோரும் கிணத்தங்கரைக்கு போனார்கள். 

கிணற்றில் விளக்கை அடித்து பார்த்தபோது வெள்ளைதுணி ஒன்று நீரில் மிதப்பது போல் தெரிந்தது. கிணறுற்றில் நீர்மட்டம் வற்றி இருந்ததால் விளக்கு வெளிச்சம் அங்கே சென்றுயேற முடியவில்லை. இறங்கி பார்த்தாலே அது என்ன என்று தெரியும்! அங்கே கிடப்பது என்ன என்று தெரியாமல் எப்படி இந்தப்பாழுங் கிணற்றில் இறங்குவது’ என்ற கேள்வியும் வந்து கிணற்றில் இறங்கலாமா? வேண்டாமா என்ற Dilemmaவில் சிக்கி என்ன செய்வது என்று யோசித்த போது அங்கே நின்றவர்களில் வயதில் குறைவான பதினெட்டு வயதுடைய பையன் சொன்னான் ’’யாரும் கிணற்றில் இறங்க வேண்டாம். பட்டெரி விளக்கை கைற்றில் கட்டி சுச்சை தாட்டி அதை கிணற்றுக்குள் விடுங்கள். அந்த வெளிச்சத்தில் கிணற்றில் மிதப்பது என்ன? என்று தெரியும்’ என்றான். அந்த இளம் வயது பொடியனின் மதிநுட்பம் கண்டு அங்கிருந்த அனுபவசாலிகள் ஆடிப்போனார்கள். ’ஓட்டை பானைக்குள் சர்க்கரை இருக்கும்’  என்ற முதுமொழி மெய்யானது.

அவன் சொன்னது போல்விளக்கு கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் கிணற்றில் மிதந்தது ஒரு பெண்ணுடல். மூன்று ஆண்கள் கைலியை மடித்து கச்சை கட்டிக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார்கள். மிதந்தது ஒரு பெண் உடல். மிதந்த உடலை புறட்டி பார்த்த போது ’’பா...த்...து...மா.. யீ..... யீ...... யீ ..... யீ....’’ கிணற்றில் இறங்கிய மூவரும் ஒரே குரலில் அலரிய அலறல் ஓசை. அந்த ஓசை எதிரொலித்து-எதிரொலித்து அங்கு நின்ற ஆண் பெண் அனைவர் நெஞ்சையும் ஒரு ஆட்டு ஆட்டி கசக்கி பிழிந்தது. அவர்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல, ரத்தம்.! பாத்துமாயி கிணற்றில் விழுந்து உசிரை மாச்சு கிட்டா! ’’ஏன் மாச்சு கிட்டா’’? என்பது யாருக்கும் விளங்காத புதிர்! எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.! கண்ணீரில்லா கண்கள் அங்கில்லை!. தண்ணீரில் போன ஜீவனுக்கு கண்ணீரே காணிக்கையாக கொடுப்பதை தவிர மானிடரால் வேறு என்னதான் செய்ய முடியும்? .பாத்துமாயை பத்துமாசம் சுமந்து பெற்ற தாய்க்கு அந்தசுமை சுமையல்ல; பாத்துமாயீ தன்னை சுமந்து பெற்ற தாயின் நெஞ்சில் தூக்கி வைத்த இந்த சுமையை அவள் கண் மூடும் வரை சுமந்தே ஆகவேண்டும்.

’’அடி யென் மகளே! உன்னை பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு கூலியாக நீ கொடுத்தது இதுதான?’’ என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழுது புலம்பி நிலை குழைந்து விழுந்தாள். அப்பொழுதே காதும் காதும் வச்ச மாதிரி மையத்து எடுத்து முடிந்துவிட்டது.

‘’இது தாண்டா பாத்துமாயியோட கதே!’’ என்று மம்மசங்கனியோட உம்மா சொல்லி முடிச்சாங்க. ’’மவுத்தா போனவங்கலேல்லாம் பேயாவா வருவாங்க’? ன்னு  மம்மசங்கனி கேட்டான். ‘’தூக்கு போட்டுக்கிட் டுமவுத்தா போரவங்க, தண்ணிலே உலுந்து மொவுத்தாப் போனவங்க, கொலே செஞ்சி மவுத்தா போனவங்க அம்மா பாத்து மவுத்தா போனவங்க புருஷனுட்டே நல்லா வாழாமே போனவங்கள் குளியிலே அடங்கியதும் பேயாக கெளம்பி ராத்திரியெல்லாம் அலஞ்சு திரிஞ்சுட்டு அவங்க மையத்து போன வழியிலேயே வந்துட்டு வந்த வழியே திரும்பி போய்டுவாங்க.!” என்று மம்மசங்கனியோட உம்மா சொன்னாங்கோ. ’’பேயே கண்டு நாய் ஏம்மா கொலைக்கிது?’’ என்றான் மம்மசங்கனி. ’’அதா? பேய் வர்றது-மனுச கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பெல்லாம் நாய்கன்னுக்கு மட்டும் தான் தெரியும்.. அது வாறதே மனுஷருக்கு தெரியப்படுத்த கொலைக்கிது.

பேய் வரும் போது மனுஷங்க, புள்ளே உண்டாவுன சூலிய, தீட்டு தொடக்கு பட்டபொம்பளைய தலேபுல்லேயளுவோ, மாப்புளேகிட்டே படுத்து கெடந்துட்டு போற பொம்புலேயளுவோ, பொண்டாட்டிகிட்டே படுத்துகெடந்துட்டு போற ஆம்புளேயளுவோ இவங்கள்லாம் பேய் வர்ற அந்த அஹால நேரத்திலே அதுக்கு எதுக்கே போனா ஓங்கி ஒரே அடிதான். அப்புறம் வாயாலே ரத்தம் ரத்தமா கக்கிசாவ வேண்டியதுதான். பேய் யாரையும் பொம்பளையான்டும் ஆம்புளையாண்டும் பாக்காது! செலசமயங்களுலே பெத்த உம்மா, வலத்த வாப்பான்டும், மாமா-மச்சான்டும்கூட மொரேயெல்லாம் வச்சுபாக்காது! யாரா   இருந்தாலும் அடிக்கனுண்டு நெனச்சா அடுத்தது அடிதான் உளுவும். அதுக்கு மேலே வேறே பேச்சுக்கு எல்லாம் இடமே இல்லே!’’ என்றாங்கோ  மம்மசங்கனியோட உம்மா. ’’யாம்மா! பேயிண்டும் சொல்றாஹ்ஹ, கவுஸ்ஸுண்டும். சொல்றாஹ்ஹ, ரெண்டும் ஒன்னா? இல்லே வேறே வேறேயா?’’ என்று கேட்டான் மம்மசங்கனி.

கவுஸ்சுண்டா மௌத்தா போன ஆம்புளேயோ கபுறு குலிலேந்து கிளம்பி வந்தா அதே கவுஸுன்னு சொல்லு வாங்கோ! பொம்பளைங்க கபுறை உட்டு கெளம்பி வந்தா பேய்ம்பாங்க. என்று மம்மசங்கனியோடசொன்னாங்கோ. ‘’சரிடா! எனக்கு நெத்திரே கண்ணே சுத்திக்கிட்டு வருது! நீனும் கப்பலுலே வந்த கலப்பா இருப்பா! போய்படு!’’ என்றதும் .மம்மசங்கனி கூடத்துக்கு படுக்க போய்ட்டான்.
[தொடரும்].
S.முஹம்மது பாருக்

12 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.பி.டி.சாமியின் பேய்கதைகள் படித்தது போல இருக்கு!எனக்கு பேய் பிடிகாது,பேயும் பிடிக்காது.ஆனால் இந்த பேய்(பாய் சொல்லும்)கதை சுவாரசியம்!ஆனாலும் நம்மூரில் முன்பிருந்த மூட நம்பிக்கை அந்த அளவிற்கு இல்லாமல் போனது ஒரு இதம்!

crown said...

கிணறு!
-------------------
கால பூதம் விழுங்கிவிட்டதே!
பாலும் சமூகம் மறந்து விட்டதே!
பாலாய் நீர் சுமந்த
ஈரமிக்கதாய் இருந்த நிலத்தாய்!
இன்று ஈரமில்லாதாரின்
ஈனசெயல் கண்மூடி விட்டதே!
இதில் மண்னை அள்ளி போட்டவர்கள்
எக்காலத்துக்கும் ....
தண்ணீருக்கு
ஏங்கிசாக சாகாவரம் வாங்கியவர்கள்!
இந்த வட்ட சிறு ஊற்றில்
நிலா தன் முகம் பார்க்கும்
அந்த நாள் மீண்டு வாராதா?
தாகத்துடன் நானும் தவிக்கிறேனே!
-------------------------
குறிப்பு: கிணறு பற்றிய நினைவு கிளறிவிட்டதால் ஏக்கத்தில் தினரும் இதயத்துக்காய் இப்ப எழுதிய கிருக்கல். பெரியோர்களே,பெரும் எழுதாளர்களே,கவிதை பேரரசு,சிற்றறசுகளே தவறுகண்டால் என்னை மன்னியும்! நான் சாதாரண கிணத்து தவளை மட்டும்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மண்வாசனை எழுத்தோடு அந்தக் காலச் சூழலின் நிகழ்வுகளைத்தான் இந்த பதிவு எடுத்துரைக்கிறது.. பேய், பிசாசு என்று பதிக்கப்பட்டிருக்கும் பதிவின் உரையாடல்களில் எதுவும் நமக்கு நம்பிக்கை இல்லை, மாறாக நோக்கம் அந்தக் காலங்களில் எவ்வாறு மக்களின் மனநிலை இருந்தது இப்போது எவ்வாறு மாற்றம் கண்டு இருக்கிறது விளங்கும் விதமாகத்தான் உணரப்பட வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த வட்ட சிறு ஊற்றில்
நிலா தன் முகம் பார்க்கும்
அந்த நாள் மீண்டு வாராதா?
தாகத்துடன் நானும் தவிக்கிறேனே!//

ஏன் ஊருக்கு போவோம் வாயேன்... செக்கடிக் குளம் விரித்திருக்கும் விரிப்பில் படுத்துக் கொண்டு அன்னாந்து பார்க்கலாம் அந்த வட்ட நிலவை (வானில்) ! :)

கிரவ்னு... !

சிதறும் ஆற்றோடையாக இல்லாமல் ஒரு குளமாக கட்டிக் குளிக்க கவிதை மழை பொழியடா(ப்பா) அது பதிவுக்குள் அடைத்து பரவசப்பட...!

crown said...

கிரவ்னு... !

சிதறும் ஆற்றோடையாக இல்லாமல் ஒரு குளமாக கட்டிக் குளிக்க கவிதை மழை பொழியடா(ப்பா) அது பதிவுக்குள் அடைத்து பரவசப்பட...!
---------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா!கவிகாக்காவுக்கு அனுப்பி உங்களிடம் கொடுக்க சொன்னேனே ஓர் உணர்சி பிம்பத்தை இன்னும் பார்க்கலையா?

Ebrahim Ansari said...

’ஓட்டை பானைக்குள் சர்க்கரை இருக்கும்’ என்ற முதுமொழி மெய்யானது.

மிதந்த உடலை புறட்டி பார்த்த போது ’’பா...த்...து...மா.. யீ..... யீ...... யீ ..... யீ....’’

அவர்கள் கண்களில் வழிந்தது கண்ணீரல்ல, ரத்தம்.! பாத்துமாயி கிணற்றில் விழுந்து உசிரை மாச்சு கிட்டா! ’’ஏன் மாச்சு கிட்டா’’? என்பது யாருக்கும் விளங்காத புதிர்! எல்லோர் கண்ணிலும் கண்ணீர்.! கண்ணீரில்லா கண்கள் அங்கில்லை!. தண்ணீரில் போன ஜீவனுக்கு கண்ணீரே காணிக்கையாக கொடுப்பதை தவிர மானிடரால் வேறு என்னதான் செய்ய முடியும்? .பாத்துமாயை பத்துமாசம் சுமந்து பெற்ற தாய்க்கு அந்தசுமை சுமையல்ல; பாத்துமாயீ தன்னை சுமந்து பெற்ற தாயின் நெஞ்சில் தூக்கி வைத்த இந்த சுமையை அவள் கண் மூடும் வரை சுமந்தே ஆகவேண்டும்.

’’பேயே கண்டு நாய் ஏம்மா கொலைக்கிது?’

’’யாம்மா! பேயிண்டும் சொல்றாஹ்ஹ, கவுஸ்ஸுண்டும். சொல்றாஹ்ஹ, ரெண்டும் ஒன்னா? இல்லே வேறே வேறேயா?’

சித்திரம். ஓவியம். உள்ளூரின் காவியம்.

மண்ணின் மரபு மொழி. நாம் மறக்கவே இயலாத மொழி.

பிச்சிக்கிட்டு ஓடுது.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய ஃபாருக் மாமா,

இந்த அத்தியாயம் த்ரில்லர். ஆல்ப்ரெட் ஹிச்காக்கின் Birds மாதிரி ஃப்ரேம் ஃப்ரேமா த்ரில்.

சூப்பர்ப்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!

sabeer.abushahruk said...

எங்கும்மாவின் ஒத்தப்பொடவயிலே ஒண்டிக்கொண்டு தூங்க மறுக்கும் காலங்களில் எங்கேயோ ஒலிக்கும் நாராசுரமான ஓசையைக் கேட்டு பயந்து "என்னமா கத்துது?" ண்டு கேட்டா உம்மா சொல்லும்

"ஆவுசங்கத்துது...தூங்கு" என்று போட்டு அமுக்குவாங்க.

ஆவுசம் என்றால் என்ன?

sabeer.abushahruk said...

கிணறு வெட்ட பூதம் வரும் என்பார்கள் இங்கு ஃபாருக் மாமா பேய்காட்ட கிணறு என்ற கவிதை வந்திருக்கிறது.

//இந்த வட்ட சிறு ஊற்றில்
நிலா தன் முகம் பார்க்கும்
அந்த நாள் மீண்டு வாராதா?//

1000 லைக்ஸ்!

sheikdawoodmohamedfarook said...

//ஆ வுசம் என்றால்என்ன//பேய்'ஆவேச'[பெரும்கோபத்தோடு] கத்துவதை ''ஆவுசம்''என்றுசொல்லிவிட்டார்கள்.[இது நம்மகற்பனை]

sheikdawoodmohamedfarook said...

கவிதைவழிபாராட்டிய தம்பிCrownனுக்குநன்றி! எழுத்துவாசனையைசுவாசித்த மைத்துனர்இப்ராஹீம்அன்சாரிக்குநன்றி!

sheikdawoodmohamedfarook said...

'பேய்'பற்றிய கொள்கை-நம்பிக்கை விளக்கம் தந்த தம்பிநெய்னால் தம்பி அவர்களுக்கும்,கவிதைகைதட்டிபாராட்டியமருமகன்சபீருக்கும்நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு