Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பினாங்கு சபுறுமாப்புளே ! - தொடர் (1/2) 28

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2015 | , , ,

பகுதி - ஒன்று

பினாங்லேந்து வந்த எறங்கிய சாபுராளி மம்மசங்கனியை மெனவ பொம்பளைங்க ஒன்னும் ரெண்டுமா ஊட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தாங்க. வந்த பொம்பளைங்களிலே ஒரு பொம்புலே கேட்டுச்சு ’’ஏம்மா! பொண்டாட்டிக்காரி எட்டு மாஷசூலியா வவ்த்துலே புள்ளேயே வச்சுக்கிட்டு தத்தக்கா புத்தக்காண்டு நடக்குகும்போது பொரப்புட்டுப் போனவன்லோ? அவனுக்கு பொறந்த புள்ளேயேதூக்க உட்டு வாப்பாக்கரன் கண்ணுலே காட்டுனியலா? “ என்றாங்கோ..

"புள்ளேயே தூக்க உட்டதுக்குதான் பெத்த வாப்பாவையே வந்து தூக்கி பாக்க சொல்லு’’ண்டு உம்மா ஊட்டுகாரவோளே பதல் சொல்லி உட்டுட்டாவோளே! அதுக்கு மேலே நாம பேசுறதுக்கு என்ன ஈக்கிது’’ என்று சபுராலியின் சின்ன தங்கச்சி பதல் சொல்லியது. சின்னத்தங்கச்சியின் பேரும் சின்ன தங்கசிதான்.. அதுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே. அந்த கொமாரு கட்டி கொடுக்குற செமே மம்ம்சங்கனி தலை மேலே லேதான் உளுவும் ‘’வாப்பா எந்த ஊரு சபுரு?’’ அவருதான் தாருல் பனாவை விட்டுதாருல் பாக்கறா போயி மூனுவருசம் சொச்சம் ஆச்சே!. சின்ன தங்கசிக்கு மொதல்லே பொறந்த மூத்தது ஒன்னு இருக்கு. அது பேரு பாத்து முத்து.அதுக்கு கல்யாணம் ஆயி மூனு வருஷம் சொச்சமாச்சு. .கல்யாண முடிச்சுஏழுமாசம் மாப்புளே ஊருலே நின்னுண்டுட்டு பினாங்குக்கு பொறப்பட்டு போனாரு.

ஏழு மாஷம்மா. பாத்து முத்து மாப்புளே ஊருலே நின்டும் அவ வவுத்துத்துலே ஒரு பூச்சி புழுகூட உசும்பலே! பாக்காத வைத்தியம் இல்லே திங்காத மருந்து இல்லே ஒன்னும் கேக்கலே. .உம்மாவுக்கு ரெண்டு மகளோட கவலை சதுரத்தை ஒடா உருக்கிப் புடிச்சு. பாயே விரிச்சு படுத்தா கண்ணுலே தூக்கமில்லே. சின்ன தங்கச்சியை ஒருத்தன் கையிலே புடிச்சு குடுக்குற கவலையும், ரெண்டாவதா பாத்து முத்துக்கு வவுத்துலே ஒரு பூச்சிபுழு உஸும்பனுமேங்கர கவலையும் புடிச்சு ஆட்டி படைச்சு இமையோட இமை மூட முடியாமே தூக்கம் அத்து போயி படுத்த பாயிலேயே .பொறண்டு பொறண்டு படுத்துகிட்டு இருந்தாங்க! பினாங்குலேந்து கொண்டு வந்த மூனு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலில் ஒன்னை ஒடச்சு வந்தவங்களுக்கு கொவளே நிறய போட்டு வந்துருச்சு! அதே எடுத்து குடிச்சுபாத்த ஒரு பொம்பளை’’ பினாங்கு ஹார்லிக்சா?’’ என்றாள் ஆச்சரியத்தோடு! அந்த ‘பொம்பளையின் வெத்தலை கறை புடிச்ச பல்லுயெல்லாம் ஹார்லிக்ஸ் குடிச்ச சந்தோசத்தை வெளியை காட்டியது.

"ஆமா ராத்தா! காக்கா பினாங்குலேந்து கொண்டுகிட்டு வந்துச்சு! மூனு பெரிய போத்தல்! நீங்க வந்ததும் அதுலே ஒன்னே ஒடச்சு கலக்குனேன். நல்லா இருக்கா?’’ என்றால் பாத்து முத்து. ’’பினாங்கு ஹார்லிக்ஸுக்கு கேக்கவா வேணும். அதுக்குண்டு ஒருதனி வாசமும் மணமும் ஒரு ருசியும் குடிக்க-குடிக்க தெவட்டாது. ’கொண்டா-கொண்டா’ ன்டுகேக்கும். இந்த ஊரு ஹார்லிக்ஸ்ஸு குடிச்சா குடிச்ச மாதிரி இல்லேம்மா! என்னம்மாத்தான் இருந்தாலும் பினாங்கு ஹார்லிக்ஸ்ன்டா பினாங்கு ஹார்லிக்க்ஸ் தன்’’. என்று வந்தவங்க சொன்னாங்கோ. பினாங்குலேந்து வந்தசபுராளி மம்மசங்கனி அவனைமெனவ வந்தவங்களை பாக்க ஊட்டுகுளி கதவை தொறந்து கிட்டுநிலை படியை தாண்டி வலதுகாலை எடுத்து வச்சுவெளியே வந்தான்.

சபுராளி மம்மசங்கனி சட்டையில் பூசிய அத்தருவாசம் அவன் ஊட்டுக்குளியை உட்டு வெளியை வந்ததும் வீட்டுக்குள் இருந்தவர்கள்-வந்தவர்கள் தெருவிலே போனவங்க வந்தவங்க நாசியிலே பூந்து ஒரு புடுங்கு புடுங்கியது. இப்புடியா கொந்த வாசம் பினாங்கு அத்தருக்குதான் வரும் என்பது ஊர்அறிந்த உண்மை. மத்த ஊரு அத்தருக்கு இந்த வாசம் இருக்கவே இருக்காது என்பதும் ஊர் அறிந்த இன்னொரு உண்மையே! ஆக மம்மசங்கானி சட்டையில் பூசிய அத்தர் வாசத்திலிருந்து ஊர்அறிந்த இரண்டு உண்மைகளை நாமும் இப்போ அறிந்து கொண்டோம்! எனவேஒலிஞ்சு கிடக்குற உண்மைகள் ஒடச்சுகிட்டு வெளிச்சத்திற்கு வர மம்மசங்கனி பூசிய அத்தரை பூசுங்கள்!.

அத்தர் வாசம் கமகமக்க ஊட்டு குலி வாசலை உட்டு கதவை தொறந்துக்கிட்டு வலது காலை எடுத்துவச்சு பினாங்கு ஸ்டைலை காட்டி வெளியே வந்த மம்மசங்கனியை பாத்ததும்’’ நல்லா வந்தியா வாப்பா!? ரெம்போ எலச்சு போய்ட்டியேடா! எப்புடி கொளு கொளுன்டு போனவன்? ஓடம்பு ஓடாஎளச்சு போச்சே! இங்கேந்து போம்போது ஒரு கதவை தொறந்துகிட்டு பொறப்புட்டு போனவ நெல்லாம் அங்கேந்து வரும்போது ரெண்டு கதவை தொறந்து கிட்டு ஊட்டுக்குள்ளே வர்றான்! நீ மட்டும் ஓடா எளச்சு ஓலைக் கொத்தா தேந்ஜூ போயிநும் படையா வந் திக்கிரியேடா? கடேயிலேயா வேலே பாத்தா? கடையிலே இருந்தாத்தான் இப்புடி எளச்சு போயி முல்லும் தோலுமா வருவானுவோ! நாளுபூற ஒத்தாக்காளோட நிண்டு கிட்டு வேலே பாக்கணும். மாசம் முளுதும் மாங்கு-மாங்கு’ண்டு வேலே பாத்தாலும் முப்பதோ முப்பத்தஞ்சு வெள்ளியோ சம்பளமுண்டும், சோறுண்டும் வெந்தும் வேகா நாலு பருக்கையே தட்டுலே தூவி நாறிப்போன நசுக்கை பொடி போட்டு வெட-வெடன்டு காச்சுன அம்மி களுவுன மொலவா தண்ணி யாட்டம் ஆனத்தை தட்டுலே ஊத்தி ’’இந்தா! தின்னு’’ ன்டு தள்ளிவுடுவானுவோ.

நாமெலேல்லாம் ஊருலே இப்புடியா கறியாக்கி ஆனங்காச்சி திண்டோம்?. கடக்கரையிலே போயி வௌவா மீனுண்டும், வாளே மீனுன்டும்காளே, கொடுவா மீனுன்டும் துடிக்க-துடிக்க வால் புடிச்ச உசுருமீனு வாங்கி கொன்ணாந்து ஆக்கி திண்ட வாய்க்கி அதெல்லாம் லாயக்கு படாதுடா.! சும்மா ‘’கடே!கடே!’ண்டு அதுலேயே மாஞ்சுகிட்டு நிக்காமேகடை யேதூக்கி போட்டு புட்டு, வத்தைலே போயி நாலு மூட்டையே தூக்கி போட்டோமா? நாலு மூட்டையை தூக்கி கரயிலே அடுக்குனோ மாண்டு’’ வேலே முடிஞ்சு கரை ஏறி அலுப்பத்த பாடா துண்டைஒதறி தோளுளே போட்டுக்கிட்டு வந்துடலாமுளோ!?

ரெம்பனாளா அங்கேயே கெடந்துட்டியேடா! ஹும்! பெத்த புள்ளே நெனப்பு வந்திருக்கும்! புள்ளயே பாக்கனுண்டு ஓடி வந்திருப்பே! புள்ளேயே பாக்கனுண் தேட்டத்துலே ஆசையோடு கப்ப ஏறி ஓடிவந்த வாப்பாக்கு அவன் பெத்த இந்த பச்சே பாலவனே இந்த உம்மா ஊட்டுகாரவோ பெத்தவன் கண்ணுலே தூக்கி கொண்ணாந்து காட்டப்புடாது!?

நல்லாத்தாம்மா! புள்ளேயே வச்சுக்கிட்டு யாந்தான் இந்த மாமியா ஊட்டுகார-ஒ இப்புடி அலுச்சாட்டியம் பண்ணுது வோலோன்டு? தெரியேலை யேம்மா? இந்தா போறேன்! சொரணை வர்ற மாதிரி நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுபுட்டு புல்ளையே வாரி அணைச்சு முந்தானையை போட்டு மூடி மறச்சு தூக்கிட்டு வர்றேன்!’’ என்று கதவை தொறந்துகிட்டு வெளியே கெளம்புனாங்க மம்மாத்து ராத்தா. சபுராளியோட வீட்டை விட்டு அவசரம் அவசரமா வெளியே வந்த ஹார்லிக்ஸ் பார்ட்டியே பார்த்த எதுக்கே வந்த செலயாமா ‘’அ....டி.....யே! மம்மாத்து! எங்கேடி இந்தப் பக்கமா.........?’’ என்று கேட்டாள்.

"செலயாமாவா! என்னாடி இப்புடி ஒன்னும் தெரியாதவ கேக்குற மாதிரி கேக்குறா? ’பினாங்குலேந்து ரைம்மாம்மா மொவேன் மம்மசங்கனி இந்தக் கப்பலிலே வந்து எரங்கிட்டான்ல!.. போயி ‘’சொவமா வந்தியா வாப்பாண்டு ’’கேட்டுட்டு வர்ரேன் ஆமா .நீ போவலையா?’’

"யாரு மம்னாச்சியா மருமவன் மம்மசங்கனியா? மூனு நாலு வாருஸத்துக்கு முன்னாடி போனவன்லோ? வந்து எறங்கிட்டானா? தெரியாதேம்மா! தெரிஞ்சா போயி பாத்துட்டு வந்துருப்பேனே! ஒருத்தியும் சொள்ளலே யேம்மா!

பொண்டாட்டி ஒம்பதுமாச ’சூலியா வவுத்துலே புள்ளேயே வச்சுக் கிட்டு தத்தக்கா புத்தக்கான்டு நடக்கும் போது பொறப்புட்டு போனவன்லோ ! அவனுக்கு பொறந்த இந்த பச்சே பாலவனைக்கூட வந்து ’கையாலே தூக்கி கண்ணாலே பாக்காலே யேம்மா! அங்கேயே அடுகெடையும் படுகெடையுமா நாலு வருஷமா கெடேகெடேன்டு கெடந்துப் புட்டு இப்பத்தான் பொண்டாட்டி புள்ளேங்கற நெனப்பும் வந்து வந்திக்கிறானோ?! ஒரு நல்ல நாளு- பெரிய நாளுனுன்டு கூட நெனச்சுபாத்து ஒன்னறை காஸுகூடஇந்த கட்டுன பொண்டாட்டிக்கும் பெத்த புள்ளேக்கிம்’ அனுப்பலேயேம்மா!’’ இது செலயாமாவின் எதிர் கமெண்ட். அது இன்னும் தொடருது கேளுங்க!

"இந்த அஞ்சு வருஷமா மவ வவுத்துலே பொறந்த அந்த பச்ச பாலவனே வச்சுக்கிட்டு இந்த மம்னாச்சியா பட்ட பாடு! சுபுஹானல்லா! அந்த அல்லா ஒருதனுக்கு தாம்மா தெரியும்!. இந்த பாடு அந்தப் பாடா அவ பட்டா? என்னமோ! அதுவோ பாடுபட்டு பங்கப்பட்டு மான மாரியாதியே காப்பாத்தி ஒன்னத்தையும் வெளியே காட்டிக்காமே தண்ணிலே போட்டகல்லா எல்லாத்தையும் மூடி மறச்சு குடும்பத்தை ஒட்டுனுச்சுவோ! அதுவோட தலைலே அல்லா போட்ட நசீபு!! பத்து மாசம் வவுத்துலே செமந்து பெத்து சாமத்துலே கண் முளிச்சு யாமத்துலே கண் முளிச்சுஒருபூச்சிவட்டைகீச்சி வட்டைஅன்டாமே பாத்து-பாத்துவளத்த அந்தபச்ச பாலவனை தெரிஞ்சிருந்தும் இந்த பாலுங்கெனத்துலே கொண்டேய் தள்ளுனுச்சு வோளேம்மா! கிளியே வளத்து பூனை கைலே கொடுத்த மாதிரி போச்சு! அதுக தலைலே அல்லா போட்ட நசீபு அப்புடி! ரைம்மாமா மவன் மாம்மசங்கனிதான் எதுக்கே வந்த செலயாமா சொன்ன ’பாலுங் கெனறு’.

"என்னமா இது? நீ இப்புடி சொல்றா?‘ ’அஞ்சு வருஷமாவா மம்மசங்கனி அங்கே போயி கெடந்து புட்டான்டா’’ சொல்றா? அவன் பொறபுட்டு போயி மூனு இல்லாட்டி மூனறை வருஷந்தாம்மா ஈக்கீம்.’’ இது மாம்மாத்து தாக்கல் செய்த எதிர் மனு. ‘’என்னமோ? அஞ்சு வருஷம் கெடந்தாலும் பத்து வருஷம் கெடந்தாலும் இந்த கட்டுன பொண்டாட்டிக்கிம் பெத்த புள்ளைக்கிம்’ன்டு அதுக செலவு அளிவுக்கு ஒருநாலோ? பத்தோ? ‘’இதுதான் என்கையிலே கெடைச்சது ’இந்தாண்டு’ அனுப்பனுமுலோ?! அப்புடி ஒன்னும் செஞ்ஜாப்புலே தெரியலயே!’? ’இது எதுக்கே வந்த செலயமாவின் எதிர்வாதம்.

பினாங்குலேந்து வந்த மம்மசங்கனியே பாத்துட்டு அங்கே ஹார்லிக்ஸ் குடிச்ச மம்மாத்து, மாம்மசங்கனி மாமியா மம்னாச்சியா ஊட்டுக்கு போயி’’ யாம்மா! மம்னாச்சியா!? பெத்த இந்த புள்ளேயே தூக்கி கண்ணாலே பாக்கனுண்ட ஒஹப்புலேதானே வாப்பாக்காரன் அவசர அவசரமா கப்ப ஏறி ஓடி வந்தான்! இந்த புள்ளயே கொண்டேயி பெத்தவன் கண்ணுலே காட்டுனா என்னாம்மா? புள்ளயே கேட்டு உட்ட துக்கு ‘’குடுக்க மாட்டேன்டு’’ சொன்னியாமுலோ ?’’ என்று மம்மாத்து ராத்தா கேட்டாங்க.

"நல்லாத்தாம்மா! இப்புடியெல்லாம் அலுச்சாட்டியம் பண்ணுரியளுவோ.? கொண்டாமா புள்ளேயே!புள்ளேயேகண்ணாலேண் பாக்கநுண்டு தேட்டப்படுற வாபாக்காரேன் கண்ணுலே காட்டிபுட்டு யாரு கண்ணும் படாமே புள்ளேயே துண்டே போட்டுமூடி கொண்டுக்கிட்டு வர்றேன்’’ இது பினாங்கு ஹார்லிக்ஸ் குடிச்ச செலயாமாவை அதே ஹோர்லிக்ஸ் பேசச்சொன்ன வசனம்! என்ன செய்யிறது! இந்த செஞ்ஜோற்றுக்கு மட்டும்தான் கடனா? வாசமணம் வீசும்பினாங்கு ஹார்லிக்ஸ்க்கு கடன் இல்லையா?.

"கல்யாணம் முடிச்சு பொறப்புட்டு போயிமூனு வருஷம் சொச்சம் பினாங்குலே கெடே கெடேன்டு கெடந்துட்டு இப்ப வந்து “புள்ளயே கொண்டா! பாக்க தேட்டமா ஈக்கிது’’ன்டு சொன்னா என்னம்மா இது நாயம்? மூனுவருசமா பொண்டாட்டி புல்லேண்டு நெனச்சு பாத்து இதுகளுக்கு ஒண்ணரை காஸு இந்தாண்டு அனுப்புனது யாரு? இதுக செத்துச்சா? பொலச்சுச்சான்டு கேட்டு ஓரு கடுதாசி போட்டது உண்டுமா? இல்லே புள்ளே கருப்பா செவப்பாண்டு புள்ளேயே பெத்த அப்பான் கேட்டு ஒரு கடுதாசி போட்டாரா ? புள்ளளேக்கிண்டு ஒரு பால் போச்சி உண்டுமா?

ஒரு கிறைப் வாட்டர் போத்தல் உண்டுமா? ஓடிக்குலான் தைல போத்தல், கூதசட்டை உண்டுமா? அளுவுறபுள்ளேயே தூங்க வைக்க தொட்டியிலே கட்ட கிளுகிளுப்பை உண்டுமா? பினாங்குக்கு போனமத்தவங்கலெல்லாம் இப்புடியா ஈந்தாங்க? பொண்டாடிக்கி புள்ளே பொறந்த கடுதாஸி பாத்துட்டு பொறந்த புள்ளேகருப்பா செவப்பாண்டு தெரியாமே இறுந்தும் கூட வர்ற வர்ற ஆளுவோளுட்டே எல்லாம் கப்பலுக்கு கப்ப வகை-வகையா சாமானுண்டும் சட்டேண்டும் சாக்லேட்டுண்டும் பொங்சு-பொங்ஸா *[bundle]கட்டி அனுப்புனேதே இந்த வாப்பாக்காரன் கண்ணாலே பாக்கலே? அந்த மாதிரி இந்த பெத்தவாப்பா இந்த புல்லேக்கிண்டு ஏதாச்சும் அனுப்புனானா? அப்புடி ஒன்னுமே அனுப்பலே யேம்மா! அதுதான் போவுது. உடுங்க இந்த பெத்த அப்பந்தான் இப்புடி பொடு போக்கிதனமா இருந்துட்டான். இந்த வாப்புச்சின்டும் மாமின்டும் இருந்தாலுவோலே! அவளுவோலெல்லாம் ‘மகன் பெத்தபுள்ளே! காக்கா பெத்த புள்ளேன்டு’ புள்ளயே தூக்கி கக்கத்திலே இடுக்கிரெண்டு கண்ணத்துலேயும் மோந்து பொடவை தலப்பு முடிச்சே அவுத்து ஒன்ணர காஸு ‘இந்தான்டு இந்த பச்ச பாலவன் கைலே குடுத்த வாப்புச்சியாரு? இல்லே! மாமி மாருவோதான் யாரு? இந்த நல்ல நாள் கெட்ட நாளுக்கு ஒரு காரூவா காசே இந்த புள்ளேகைலே’ குடுத்து ‘’இந்தா! முட்டாயி வாங்கி தின்னு!“ண்டு சொன்ன வாப்புச்சியாரு? இல்லே மாமி மாறுவோதான் யாரு? 

நோம்பு பெருநா’ ஹஜ்ஜு பெருநா’ காசுண்டு எவளாவது ஒரு காரூவாகாசே இந்த புள்ளே கைலே ‘’இந்தாண்டு’’ கொடுத்தேன்டு வாயே தொறந்து சொல்லச் சொல்லுங்க? பாக்கலாம்! அப்புடி சொல்லுறவ வாயிலே பூக்கமலையே எடுத்து சோப்பு சோப்புன்டு சோப்பிபுடுவேன்’’ இது கிளியாட்டம் பொண்ணே பெத்து பூனை கைலே கொடுத்த மம்நாச்சியாவின் மனக் குமுறல். பத்து மாசம் செமந்து புள்லே பெத்த தாயி வவுறு பத்தி எரியுமுல! ஊரு ஜனமெல்லாம் பாத்து பாத்து வவ்த்தெரிஞ்சு ‘’இப்புடியும் உண்டுமா?’’ண்டு’’ மூக்கு மேலே வெறலே வச்சுச்சுவோ லேமா!’’ இதுமம்நாச்சியாவின் Additional comment. [பூக்கமலையாளே அடி உளுவுற komment எல்லாம் அடிtional commentதான் என்று அர்த்தப்படுதிக் கொள்ளுங்கள்.]

‘’அடி மம்னாச்சியா? இவ்வளவு கூத்தாடி நடந்தீக்கீது? ஒருத்தீயும் ஒண்ணுமே சொல்லலேயடி! இதெல்லாம் ஒன்னும் வெளியே தெரியலேயடி!.! இவளவு நடந்தும் ஒன்னும்மே வெளிலே உட்டுக்காமே கமுக்கமா ஈரத் துணியே போட்டு கோளியே மூடி மறச்சு வச்ச மாதிரி வச்சுக்கிட்டா? அதுகெனத்துலே போட்ட கல்லு மாதிரி அப்புடியே கெடந்து போச்சு! இந்த அநியாயத்தை நாலு பெரிய மனுஷியே கூப்புட்டு சொல்லி ‘’என்ன? ஏதுண்டு?’’ ஒரு வார்த்தை கேக்க சொல்லாமுல?! சும்மா இருந்துட்டியேடி! கேக்கப்புடாது? ‘’என்று செலயாமா ராத்த விசனப்பட்டாங்க!. ’’ஹும்! ஆசை அருமையா பெத்து ஒரு ஈ எறும் அண்டாமே ரா முளிச்சுபாக முளிச்சு பாத்து-பாத்து வளத்த ஒரே பொம்புளே புள்ளையோட நசீபு இப்புடி பொல்லா விதியா போச்சே’ன்ட’’ கவலையிலே ‘’என்ன செய்யிறது ஏது செய்யிறதுண்டு கையி ஓடாமே காலும் ஓடாமே மண்ணா மடிஞ்சு கல்லா சமஞ்சிட்டியேடி?

ஆமா!...... அப்புடித்தான் இருந்துச்சே! நானும் எட்டுலே தப்புலே இந்தப் பக்கம் போயீகிட்டு வந்துக்கிட்டு தானே இருந்தேன்! நீனும் கதவை தொறந்து கிட்டு வாசத்தின்னையிலே நிண்டு கிட்டு நா வர்ரதே போறதே பாத்துகிட்டுத்தானே இருந்தா? நீயாச்சும்’’ செலயாமா ராத்தா! இப்புடி கொஞ்சம் ஊடுக்குள்ளே செத்தே வாரியளா? உங்கட்டை ஒரு சேதி சொல்லன்னுண்டு’’ கூப்புட்டு என்னட்டை சொன்னியா? நீ கூப்புட்டா நா வராமே போவேனா?’’ யென்று செலயாமா ராத்தா மம்னாச்யாவை செல்லமா கோவிச்சு கிட்டாங்க! செலயாமா ராத்தா அந்த ஏரியாவுலே இந்த மாதிரி கேஸ்களையெல்லாம் தலையிலே வாரி போட்டு கிட்டு கருமமே கண்ணா இருப்பாங்க. அவங்கட்டை ஒரு Assignmentடை ஒப்படைச் சுட்டபோதும்’ ’செவ்வி அருமையும் பாரார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்!’’ என்பதற்கு ஒப்ப ‘எடுத்ததை முடிப்பவள் நான் நான் நான்’’ என்று அதை முடிக்கும் வரை ஊண் இல்லை; உறக்கம் இல்லை; ஓய்வில்லை’’ என்று ஓடியாடி காரியத்தை முடிச்சுட்டு வந்து ஊட்டு கூடத்துலே பனை ஓலை விசிறியே கைலே எடுத்து வீசிக்கிட்டு ‘அல்லா‘ண்டு பாயிலே படுப்பாங்க.அதுலே அவங்களுக்கு ஒரு தனிசுகம், மனதிருப்தி.

அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பொதுநல தொண்டிகளும் தொண்டர்களும் உண்டு. மத்தப்படி அங்கே குத்தி விட்டு இங்கே குத்தி விட்டு குட்டையே கலக்கி மீன் புடிக்கும் பழக்கம் அவங்களுட்டே இல்லே! ஆனா ஒன்னு! அவங்க ஊட்டுக்கு வந்தா சக்கரையோ வெல்லக்கட்டிய போட்டு கலக்குன தேத்தண்ணி குடுத்துடணும். அப்போவெல்லாம் தேத்தண்ணிக்கு இப்போபோலடி என்ற பேர் இல்லை. சீனி போட்டு தேத்தண்ணி கலக்கி குடிக்கிறதில்லே. பாலுலே போட்ட தேத்தண்ணியே பாக்குறது கார்த்திகை பிறையே பாக்குற மாதிரி! எல்லாம் வெறும் தேத்தண்ணிதான். தோப்பு தொறவு வச்சு இருக்குற .பெரிய பணக்காரவோ-சீமான் ஊட்டுலேதான் சீனிபாலு கலக்குன T குடிப்பாங்க.
தொடரும்..
S.முஹம்மது பாரூக்

28 Responses So Far:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

பிரியமுள்ள மாமா அவர்களுக்கு,

இது நம்ம ஊரில் நடந்த கதையா அல்லது கற்பனையா? நேரில் காண்பதைப் போல உணர்வு. இந்த அதிராம்பட்டினம் பினாங் மாப்பிள்ளை கதையை மற்ற தமிழ் தெரிந்த நல்லுலகத்திற்கு படித்தால் புரியுமா? நான் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த அதிரை கிளாசிக் ட்டச் கதை சூப்பர் மாமா.

அஹமத் அமீன் அமீரக துபையிலிருந்து.

sabeer.abushahruk said...

ஓஹ் மை காட்!!!

மாமா, என்ன ஓர் அழகான எழுத்து. கரிசல் காட்டுக்காரங்களோ கருத்தம்மாவென்றோ எழுதினால் அது இலக்கியம் என்போர் இதை எப்படிச் சொல்வார்?

மயக்கும் எழுத்துநடையும் கதை சொல்லும் லாவகமும் என்னை மிகவும் ஈர்த்தது.

நெய்தலும் பாலையும் கலந்த வாழ்வியலை அதன் கருவான நிகழ்வுகளை மிகவும் எதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

நானும் அதே நிலத்தைச் சார்ந்தவன் என்பதால் கண்முன் விரிகின்றன காட்சிகள்.

சமீபத்தில் வாசித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது இது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.

(இதை தொடர்ந்து எழுதி முழுமை செய்ய ஆதோக்கியத்தையும் நேரத்தையும் ஆயுளையும் அல்லாஹ் உங்களுக்குத் தந்தருள்வானாக, ஆமீன்.)

மனம் திறந்து சொல்கிறேன்: excellent script !!!!

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகன் அஹமதுஅமீன்!அஸ்ஸலாமுஅலைக்கும்!இது உண்மைகதையல்ல:வெற்றுக்கற்பனை.நம்ஊர்இஸ்லாமியப் பெண்களில் ஒருபகுதியினர்பேசும்மொழி.மற்றவர்களும்ஓரளவுபுரிந்துகொள்வார்கள். இதைவட்டாரசொல்என்றும்சொல்வார்கள்

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஆங்காங்கே நான் உங்கள் மகன் ஹமீதிடம் கண்ட நையாண்டி மிளிர்ந்தாலும் இது க்ளாஸ்:

//இதுமம்நாச்சியாவின் Additional comment. [பூக்கமலையாளே அடி உளுவுற komment எல்லாம் அடிtional commentதான் என்று அர்த்தப்படுதிக் கொள்ளுங்கள்.]//

sabeer.abushahruk said...

அ.நி.:

தொடரும் போட மறந்து விட்டீர்கள்

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகனே!ஷபீர்!அஸ்ஸலாமுஅலைக்கும்!உங்கள்பாராட்டுக்கு நன்றி!இதற்காகவரும்பாராட்டுக்களில்பாதிஉங்களுக்கே.ஒருஆண்டுக்கு முன்னே'பினாங்குசபுறுமாப்புளே' என்றதலைப்பில் ஒரு கட்டுரை எழுதிஇருந்தீர்கள். அதைப்பின்பற்றி நான் கொஞ்சம்மாற்றி எழுதினேன் பாராட்டுக்குநன்றி.

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகன்சபீர்!அஸ்ஸலாமுஅலைக்கும்!என்னுடல்நலத்திற்கும் ஆயுலுக்கும்அல்லாவிடம்கேட்டதுவாவுக்குநன்றி!அதுபோலவேஉங்களுக்கும் அல்லாவிடம் இறைஞ்சுகிறேன்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். சபீர்க்காக்காவின் கருத்தே என்னுடய கருத்தும். மண்வாசனை தூக்கள்!உயிரோட்டமான கற்பனை! நகைச்சுவையானாலும் நம்மூரின் நிலையை அருமையாய் வடித்த சிறு காவியம் எனலாம்!.அருமை!

அதிரை.மெய்சா said...

பினாங்கு சபுராலியை மையமாக வைத்து சுவராஸ்யமான அதிரையின் மூத்த குடி பெண்கள் பேசும் தமிழை அசலாக எழுதியுள்ளீர்கள் காக்கா.. அருமை.

ஆமா மம்மசங்கனி மறுபடியும் பினாங்குக்கு போனாரா. ஏங்கேக்குறேன்டா அப்போ உள்ளவங்களுக்கு பினாங்குல வப்பாட்டி ஈக்கிமாமுல. !?

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு...

ஒரு குறிப்பிட்ட காலத்தை திரைப்படம் எடுத்த மாதிரி உங்கள் எழுத்து அப்படியே இருக்கிறது.

பினாங்கு பற்றிய விசயங்களும் , நம் ஊர் ஆட்கள் அங்கு வேலை பார்த்த காலத்தில் நடந்த உரையாடல்களை நீங்கள் எழுதும்போது எனக்கு என்னவோ நான் நம் ஊர் ஹைஸ்கூலில் படித்த காலத்திற்கே போய்விட்டேன்.

அந்த காலங்களில் வசதிகள் இல்லாவிட்டாலும் அன்பு அதிகமாக இருந்தது. இப்போது வசதிகள் அன்பை கொஞ்சம் தூர வைத்திருக்கிறது. சொந்த பந்தங்கள் அப்போது இருந்த நெருக்கத்தில் இப்போது இல்லை.

உங்கள் எழுத்தை படித்தவுடன் முன்பு போஸ்ட்மேன் சவுரிநாதன் 'உங்க வாப்பா பார்சல் அனுப்பி ஈக்கிராவோடா" என்று என்னிடம் கையெழுத்து வாங்கிப்போவதும், மாலை 3 மணிக்கு அந்த பார்சலை அவரிடம் வாங்கி வந்து பிரிக்கும்போது இருக்கும் அந்த ப்ரவுன் கலர் பார்சல் பேப்பரும், பார்சலை திறந்தவுடன் வரும் வாசனையும், க்வாலிட்டி ஸ்ட்ரீட் சாக்லெட்டும், ஹன்ட்லி பால்மர்ஸ் பிஸ்கட் வாசனையும் அப்படியே மனதுக்குள் மறுபடியும் காட்சியாக தெரிகிறது.

அப்போது வந்த கடுதாசியில் இருந்த ஸ்டாம்பில் இருக்கும் ஊதா நிறப்புறா, அழுத்தி எழுதப்பட்ட அட்ரஸ் எல்லாம் அப்படியே தெரிகிறது.

ரெங்கு பெட்டியும், ரோத்தான் வக்குலும் இன்னும் கண் முன்னே இருக்கிறது.

கமென்ட்ஸ் எழுதும் பகுதியில் படத்தை வெளியிட
முடிந்தால் எல்லோருக்கும் காண்பிக்களாம். [இப்போது
உள்ள பினாங்கையும் சேர்த்து ]

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

உங்களின் இந்தக் காவியம் மண்ணின் (மைந்தர் ) மாதர்களின் மொழிநடை அனைத்தும் எங்கேயோ எப்போதோ நாங்கள் கேட்ட குரல்கள்தான்.

ஒரு சமுதாய வாழ்வை அப்படியே படம் பிடித்து இருக்கிறீர்கள்.

அந்த ஹார்லிக்ஸ் , அத்தர், ஆகியவை எங்களுக்கும் மணத்தது.

இதை எழுதி முடிக்க உடலால் மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். இப்படிஎல்லாம் சிரமப்படும் உங்களை வந்து பார்த்து நலம் விசாரிக்கக எங்களுக்குத்தான் நேரமே இல்லை.

ZAKIR HUSSAIN said...

நீங்கள் எழுதியிருக்கும் நம் ஊர்தமிழ் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

கி.ராஜநாரயணின் "கரிசல் கடுதாசிகள்"இல் வந்த தமிழ் மாதிரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேசப்படும் தமிழை இவ்வளவு இயற்கையாக [ ஒன்று கூட மறவாமல் ] உங்களால்தான் எழுத முடியும்.

Ebrahim Ansari said...

நீங்கள் எழுதியிருக்கும் நம் ஊர்தமிழ் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

கி.ராஜநாரயணின் "கரிசல் கடுதாசிகள்"இல் வந்த தமிழ் மாதிரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேசப்படும் தமிழை இவ்வளவு இயற்கையாக [ ஒன்று கூட மறவாமல் ] உங்களால்தான் எழுத முடியும்.

ZAKIR HUSSAIN said...

//ஏங்கேக்குறேன்டா அப்போ உள்ளவங்களுக்கு பினாங்குல வப்பாட்டி ஈக்கிமாமுல. !? //

To Meysa....எல்லோருக்கும் இருக்காது. மிக சிலர் மட்டும் தான். அவர்கள் வந்து அளப்பதில் சிறந்த வசனமாக தேர்வானது " பினாங்குலெ ரோட்டிலெ சோறு போட்டு திங்களாம்"

நான் வந்து பினாங்கை ரோட்டை பார்த்தேன்......சோறு போட்டு தின்றால் நேராக "மேல் நோக்கிய" பயணம் தான்.

sheikdawoodmohamedfarook said...

//ஏங்கேக்குறேன்ண்டா அப்போ உள்ளவங்களுக்கு பினாங்குலே வப்பாட்டி ஈக்கிமா முலோ?// .பயந்துபயந்துவப்பாட்டிவச்சுக்கிடவேண்டிய அவசியம் அங்கே இல்லை .நமக்குபிடித்திருந்தால் ''உன்னைநான்விரும்புகிறேன்!'' என்றுசொன்னால் அவர்களுக்கும் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். அந்நாளில்[ இரண்டாம் உலகப்போரின் போது] திருமணம்செய்து கொண்ட நம்மவர்கள் [maamak*] போர்முடிந்ததும் கட்டியமனைவியேயும் பெற்றபிள்ளையையும் அம்போ என்றுவிட்டுவிட்டுகப்பல்ஏறிவந்துவிட்டார்கள்.மானம்மரியாதைஏலம் போச்சு.

sheikdawoodmohamedfarook said...

Mamak*தமிழ்முஸ்லிம்களைஅப்பாவிமலாய்காரர்கள்மரியாதையுடன் அழைத்தபெயர்இது.இப்பொழுதுஇந்த வார்த்தை அவமரியாதை சொல்லாக எண்ணப்படுகிறது !

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளமருமகன்ஜாஹிர்!ஒவ்வொருஇரவும்நான்தூங்குகிறேன்!என்னை தூக்கத்தில்கிடத்திவிட்டுஎன்ஆத்மாபினாங்குகோலாலம்பூர் என்றுபலஊர்களில் சுற்றி திறிந்துதுவிட்டு மீண்டும்தான் குடிஇருந்த வீ ட்டுக்கே திரும்பி விடுகிறது.இதுஒருஆத்மீகபயணம்போலும்.

sheikdawoodmohamedfarook said...

/..........இப்படியெல்லாம்சிறமப்படும்உங்களைவந்துபார்க்கத்தான் எங்களுக்கு நேரமில்லை//மைத்துனர் இப்ராஹீம்அன்சாரியார்சொன்னது . //.என்னுடை யபதில்// நீங்களெல்லாம்என்னைவந்துபார்க்கவேண்டும்என்பதற்காகநான் சிரமப்படவில்லை!அல்லாகொடுத்தான்.வாங்கிக்கொண்டேன்.நன்றி

அதிரை.மெய்சா said...

பாரூக் காக்கா அவர்களுக்கு,

எனது பின்னூட்டத்தில் நான் தமாஷாக குறிப்பிட்ட

// ஏங்கேக்குறேன்டா அப்போ உள்ளவங்களுக்கு பினாங்குல வப்பாட்டி ஈக்கிமாமுலோ //

இந்த வரிகள் தாங்கள் மனதை காயப்படுத்தியிருப்பின் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அக்காலத்தவர்கள் கல்வியறிவில் பின்தங்கி இருந்ததால் மலேசியா இலங்கை பர்மா ஆகிய நாடுகளுக்கு சென்று கடும் உழைப்பு உழைத்து குடும்பத்தை நல்லபடியாக கவனித்து கொண்டதுடன் தன்னை நாடி மலேசியா வருவோர்க்கும் தானதர்மம் பல உதவிகளும் செய்வார்கள்.)

Iqbal M. Salih said...

நீங்கள் எழுதியிருக்கும் நம் ஊர் தமிழ் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம்.

கி.ராஜநாராயணின் "கரிசல் காட்டுக்கடுதாசிகள்"இல் வந்த தமிழ் மாதிரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பேசப்படும் தமிழை இவ்வளவு இயற்கையாக [ ஒன்று கூட மறவாமல் ] உங்களால்தான் எழுத முடியும்.

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ள சகோதரர்மெய்சா அவர்களுக்கு தங்களின் கேள்வி எந்த வகையிலும் என்னை பாதிக்கவில்ல தெரியாதவிஷயத்தைகேட்டுதெரிவதில் தப்பில்லை.

sheikdawoodmohamedfarook said...

ஊர்மனைவிபிசாசைபோல்இருப்பாள் ; மலேசியாவைப்பாட்டிதேவதைபோல்இருப்பாள்.

Ebrahim Ansari said...

//ஊர்மனைவிபிசாசைபோல்இருப்பாள் ; மலேசியாவைப்பாட்டிதேவதைபோல்இருப்பாள்.//

இதற்காக உங்கள் மீது வழக்குத் தொடரலாம். ஆனாலும் போயிட்டுப் போகுது.

sheikdawoodmohamedfarook said...

/கிளிபோல மனைவி இருந்தாலும் குரங்கு போல வப்பாட்டிவைத்துக்கொள்/ இதுமூத்தோர் சொல். குரங்குபோல்மனைவிஇருந்தால்..............?

Unknown said...

குரங்குபோல்மனைவிஇருந்தால்...அப்படியே தோசையை திருப்பி பொட்டுக்கொள்ள வேண்டியது தானோ? கிளிபோல் வைப்பாட்டி...? Anyway வைப்பு is haram but wife is halal....

Yasir said...

எங்களை சிறுபிரயத்திற்க்கு அழைத்துச் சென்றதற்க்கு நன்றி மாமா.....அதிரை தமிழ் உங்கள் எழுத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி இருக்கின்றது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு