Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒற்றையாய்...! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2015 | , , , ,

வயது முதிர்ச்சி எனும்
வண்டியில்
என்னை
காலம்  ஏற்றிவிட்டுவிட்டது!

பின் ..
வாழ்க்கையில்
நான்
பார்த்து
ரசித்து
செதுக்கி வைத்திருந்த
இளைமையெனும் சிற்பம்
காணாமலேயே போய்விட்டது!

காணும் காட்சியெல்லாம்
காலைப்பணிபோல
தெளிவற்றுத் தெரிகிறது.

அறிந்த முகம் கூட
சிதிலமடைந்த ஒவியமாய்
மங்கி மறைகிறது.

உடன் பிறந்த உறவுகளும்
நான் பெற்ற உறவுகளும்
என்றாவது வரும் திருநாள் போல
வந்து
விசாரித்துவிட்டுப் போகிறது!

குடல் இருப்பதும்
அது
பசியென்று சில நேரம் அழுவதும்
அவ்வப்போது
நிகழும் நாடகமாகிவிட்டது

ஆகாரம் தவிர்த்தாலும்
மருந்தும் மாத்திரையும்
தவிர்க்க முடியாத உணவாய்ப் போனது!

வாழ்க்கை வண்டியின் அச்சின் கரு"மை"போல
என் உடலில்
இன்னும் கொஞ்சம்
உயிரின் பிசிரு
ஒட்டிக்கொண்டிருக்கிறது

ஊரும்
தெருவும்
பள்ளிவாசலும்
இதமாய் ஒத்தடம் தரும் ஆறுதல்
என்றாலும்
இப்போதைக்கு
சாய்வு நாற்காலியும்
என்னவளுமே
என் சோக இருள் கிழிக்கும்
சந்தோஷ வெளிச்சம்!

CROWN

25 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வலி சுமக்கின்றன வார்த்தைகள் எனினும் ஒரு வருடலும் வாசிப்பின் வழிநெடுகக் கிடைக்கிறது.

ஒரு வார்த்தை சேர்த்தாலோ அல்லது ஒரு வார்த்தையை நீக்கினாலோ ஒட்டுமொத்த உணர்வையும் பாதித்துவிடும் அளவிற்கு தமிழை துல்லியமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்!

அழகு ! சோகமும் சுகம்தானோ!

வாழ்த்துகள்!

sabeer.abushahruk said...

//வாழ்க்கை வண்டியின் அச்சின் கரு"மை"போல
என் உடலில்
இன்னும் கொஞ்சம்
உயிரின் பிசிரு
ஒட்டிக்கொண்டிருக்கிறது//

என்னும் முடிச்சு என்னை ரொம்பவே பாத்த்தது. உங்கள்மேல் 'ஏன் இந்த விரக்தி?' என்று கோபம்கூட வந்தது. ஆனால்...

//ஊரும்
தெருவும்
பள்ளிவாசலும்
இதமாய் ஒத்தடம் தரும் ஆறுதல்
என்றாலும்
இப்போதைக்கு
சாய்வு நாற்காலியும்
என்னவளுமே
என் சோக இருள் கிழிக்கும்
சந்தோஷ வெளிச்சம்!//

என்று அற்புதமாக அந்த முடிச்சை அவிழ்த்து முடித்திருந்தது சிம்ப்ளி பொயட்டிக்!

sabeer.abushahruk said...

இதையும் முழுமைப்படுத்திப் பதிய தங்கள் அனுமதி வேண்டும்:

//குழந்தை!

உயிரும் உயிரும்
ஒருங்கே உருகி
வார்த்த
உயர் ஓவியம் ! //

Ebrahim Ansari said...

அன்பான எனது இளமைக் கால நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

நான் எப்படி இருக்கிறேன் என்று நீங்கள் அடிக்கடி என்னை நலம் விசாரிக்கிறீர்கள். துள்ளித்திரிந்த காலங்களில் - கல்லூரிக் காலங்களில் நாம் அனுபவித்த மகிழ்வான தருணங்களை எல்லாம் நினவு கூறுகிறீர்கள். இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று நீங்கள் அறிய ஆவலாக இருந்தால் இந்தக் கவிதைப் படியுங்கள் . நான் இப்போது இப்படித்தான் இருக்கிறேன்.

வயது முதிர்ச்சி எனும்
வண்டியில்
என்னை
காலம் ஏற்றிவிட்டுவிட்டது!

பின் ..
வாழ்க்கையில்
நான்
பார்த்து
ரசித்து
செதுக்கி வைத்திருந்த
இளைமையெனும் சிற்பம்
காணாமலேயே போய்விட்டது!

காணும் காட்சியெல்லாம்
காலைப்பணிபோல
தெளிவற்றுத் தெரிகிறது.

அறிந்த முகம் கூட
சிதிலமடைந்த ஒவியமாய்
மங்கி மறைகிறது.

உடன் பிறந்த உறவுகளும்
நான் பெற்ற உறவுகளும்
என்றாவது வரும் திருநாள் போல
வந்து
விசாரித்துவிட்டுப் போகிறது!

குடல் இருப்பதும்
அது
பசியென்று சில நேரம் அழுவதும்
அவ்வப்போது
நிகழும் நாடகமாகிவிட்டது

ஆகாரம் தவிர்த்தாலும்
மருந்தும் மாத்திரையும்
தவிர்க்க முடியாத உணவாய்ப் போனது!

வாழ்க்கை வண்டியின் அச்சின் கரு"மை"போல
என் உடலில்
இன்னும் கொஞ்சம்
உயிரின் பிசிரு
ஒட்டிக்கொண்டிருக்கிறது

ஊரும்
தெருவும்
பள்ளிவாசலும்
இதமாய் ஒத்தடம் தரும் ஆறுதல்
என்றாலும்
இப்போதைக்கு
சாய்வு நாற்காலியும்
என்னவளுமே
என் சோக இருள் கிழிக்கும்
சந்தோஷ வெளிச்சம்!

இப்படிக்கு
என்றும் உங்கள் நட்பு மறவாத ,

இப்ராஹீம் அன்சாரி.

sabeer.abushahruk said...

//இப்போதைக்கு
சாய்வு நாற்காலியும்
என்னவளுமே
என் சோக இருள் கிழிக்கும்
சந்தோஷ வெளிச்சம்!//

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

அதிரையெனில்
அண்டைவீட்டின் சப்தங்களும்
ஒத்த வயதுத் தோழர்களும்
சுற்றிவளைத்தேனும் சொந்தமாவோரும்
தனிமை நிலையைத்
தொடர விட மாட்டார்!

கலிஃபோர்னியக் காற்றில்
பிராணவாயுகூட
பிரிந்து
தனியாகவே கிடைத்துவிடும்

நாகரிகம்
மனிதனைக் கூட்டு குடும்பமாக்கியது
சுயநலம்
தனிமைப்படுத்துகிறது.

sabeer.abushahruk said...

காக்கா,

தங்கள் கருத்து, கருத்திடுவதில் புதுமையான கோணம்!

க்ரவ்ன்,

காக்கா அவர்களின் கருத்து உங்கள் கவிதையின் யதார்த்தத்தை பறைசாற்றுகிறது.

Ebrahim Ansari said...

சில கவிதைகள் கடலில் இருந்து வீசும் காற்றாக இருக்கும். சிலகவிதைகள் ஆசுவாசபடுத்தும் விசிறியின் காற்று. சில கவிதைகள் இதயத்தில் ஐஸ் கட்டியை வைத்தது போல் ஜில் என்று இருக்கும். சில கவிதைகள் மூளையில் ஒரு மூலையில் படுத்துறங்கும் பழைய நினைவு நண்பனை உசுப்பிவிடும். சில கவிதைகள் படகில் ஏறிப் பயணம் செய்வது போல Thrill of Joy ஆக இருக்கும். சில கவிதைகள் அறிந்து அறியாமல் செய்த தவறுகளை சுட்டி அறிவுரை பகரும்.
சில கவிதைகள் தடம் தரும்; சிலகவிதைகள் ஒத்தடம் தரும்; சில கவிதைகள் தடம் புரளச் செய்யும்.

சில கவிதைகளின் வரிகள் இதயத்தின் நரம்புகளை வீணையின் நரம்புகளை மீட்டிவிடுவது போல் மீட்டிவிட்டுவிடும். அப்போது புறப்படும் இசையில் ஆனந்தபைரவியும் இருக்கும் முகாரியும் இருக்கும்.

இந்தக் கவிதை அவ்வாறு இதயத்தை சீண்டிவிட்டது.

Shameed said...

//ஆகாரம் தவிர்த்தாலும்
மருந்தும் மாத்திரையும்
தவிர்க்க முடியாத உணவாய்ப் போனது!// நிதர்சனம்

Unknown said...

//இப்படிக்கு
என்றும் உங்கள் நட்பு மறவாத ,

இப்ராஹீம் அன்சாரி.//

இல்லை!

உடல் பருமனைக் குறைக்க
நடை பயிலுந்தொலைவில்
'அல்மஹா' பெண்கள் கல்லூரி.
அறிவுப் பெருக்கமும் ஆய்வுகளும்!

இயற்கைச் சூழலில் இல்லம்.
இல்லத்தரசியின் அரவணைப்பு.

கொஞ்ஞ்ஞ்சம் கையில் 'பசை'

வேறென்ன வேண்டுமையா, எழுத்தறிஞரே?

sabeer.abushahruk said...

ஒற்றையாய்... ஓர் அலசல்:

கவிதைகளில் சில
கடலோரக் காற்றென
குளிரோடிருக்க

பிற
கைவிசிறிக் காற்றென
உயிர்க்காற்றோடு உரவாடி
உயிரை ஆசுவாசப்படுத்த

இன்னபிற கவிதைகளோ
உறைந்த நீர்க்கட்டியாய்
உள்ளத்தில் சிலிர்க்க

நேலும் சில
அடிமனத்தில் ஆழ்ந்துறங்கும்
அறுமை நட்பின்
அருகாமை நினைவுறுத்த

எஞ்சியவை
பரந்த கடற்பரப்பில்
விரையும் விசைப்படகில்
முகத்தில் மோதிக் கடக்கும்
கடுங்காற்றாய் பயமுறுத்த

சில
குற்றம் கடிதலிலும்
சிறக்கும்

அறிவும் அனுபவமும்
வழித்தடம் சுட்ட
வாழ்ந்து வென்றவர்
வார்த்தை ஒத்தடம் கொடுக்க
மிகச் சில கவிதைகளே
தடம் புரள அடம் பிடிக்கும்

இருப்பினும்
வெகு சில கவிதைகள் மட்டுமே
இதயத்தில்
ஆனந்த யாழ் மீட்டும்
ஆயிரம் தேன் ஊட்டும்
அதில்
சுகமும் சோகமும்
சொக்க வைக்கும்

அது
இசைக்கட்டுகளின்
சோக முகாரியும்
ஆனந்த பைரவியும்
மீட்டி இதயம் சீண்டும்

இது சீண்டியது!

-நன்றி ஈனா ஆனா காக்கா.

Ebrahim Ansari said...

எல்லோருக்கும் நான் காக்கா ! எனக்குக் காக்கா அறிஞர் அஹமது காக்கா.

விரக்தியில் எழுதவில்லை. தம்பி சபீர் அவர்கள் சொன்னபடி கருத்திடுதலில் ஒரு கோணம்.

என்னை அறிந்த நீங்கள் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. அல்ஹம்துலில்லாஹ்.

ஆனால் அந்த //கொஞ்ஞ்ஞ்சம் கையில் 'பசை'//

எல்லாம் எங்கோ ஒட்டிக் கொண்டது காக்கா. பசைதானே அப்படித்தான் ஓட்டும் . உறவுகள் கூட பசை இருந்தால்தான் ஒட்டுகிறது.

அன்புக்கும் அரவணைப்புக்கும் அறிவுரைகளுக்கும் கடமைப்பட்டவன்.

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி சபீர்!

விட்டு விட்டு மழை பெய்யும் என்று திரு. ரமணன் வானிலை அறிக்கை சொன்னார்.

முதலில் ஒரு சிறு மேகம் வந்தது. தூறலைப் போட்டுவிட்டுப் போனது.

அடுத்து ஒரு மேகம் வந்தது. அடைமழையாகப் பிடித்துக் கொண்டது.

முதலில் வந்த மேகத்தின் பெயர் : இப்ராஹீம் அன்சாரி.

பிறகு வந்த மேகத்தின் பெயர். B. சபீர் அஹமது ( சபீர் அபுஷாருக்)

இங்கு கவி மேகங்கள் தலைமை மேகத்துடன் சுற்றி வருகின்றன. இன்னும் எவ்வளவு மழையைப் பொழியப் போகின்றனவோ. எங்களின் மன ஏரிகள் தூர்வாரப்பட்டு தயாராக இருக்கின்றன. அவ்வளவு மழையையும் ஏற்றுக் கொள்வோம். நிரம்பும் ; வழியாது; நடு இரவில் திறந்துவிட தேவையும் இருக்காது.

ஒரு வேண்டுகோள் இந்தக் கவி வெள்ளத்திலிருந்து எங்களை மீட்க யாரும் வந்துவிட வேண்டாம்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய க்ரவ்ன்,

வலி சுமக்கின்றன வார்த்தைகள் எனினும் ஒரு வருடலும் வாசிப்பின் வழிநெடுகக் கிடைக்கிறது.

ஒரு வார்த்தை சேர்த்தாலோ அல்லது ஒரு வார்த்தையை நீக்கினாலோ ஒட்டுமொத்த உணர்வையும் பாதித்துவிடும் அளவிற்கு தமிழை துல்லியமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்!

அழகு ! சோகமும் சுகம்தானோ!

வாழ்த்துகள்!
---------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... கண்டிப்பாக கண்ணீர் எல்லாம் கவலையான கண்ணீர் அல்லவே? வாழ்கை என்பது முரன்பாட்டின் அழகிய கோலம் எனலாம்!எனவேதான் சில வலிகளும் சுவையாகவும்,சில சில சுமைகளும் சுகமான சுமையாகவும் இருக்கு!தங்களின் வாழ்த்துக்கு நன்றி!

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//வாழ்க்கை வண்டியின் அச்சின் கரு"மை"போல
என் உடலில்
இன்னும் கொஞ்சம்
உயிரின் பிசிரு
ஒட்டிக்கொண்டிருக்கிறது//

என்னும் முடிச்சு என்னை ரொம்பவே பாத்த்தது. உங்கள்மேல் 'ஏன் இந்த விரக்தி?' என்று கோபம்கூட வந்தது. ஆனால்...
-------------------------------------------------------
விரக்தி என்னுடையதல்ல முதியவர்களின் விரக்தி அதற்கு பல காரணம் அவர்களின் பார்வையில் உண்டு! எப்படி இருக்கீங்க? ஏதோ இருக்கேன் இப்படித்தான் பெரும்பாலான முதியவர்களின் பதிலாக இருக்கிறது அதை பதிவு செய்தேன்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

இதையும் முழுமைப்படுத்திப் பதிய தங்கள் அனுமதி வேண்டும்:

//குழந்தை!

உயிரும் உயிரும்
ஒருங்கே உருகி
வார்த்த
உயர் ஓவியம் ! //
--------------------------------------------
அனுமதி வேண்டுமா உங்களுக்கு?அதற்க்காகத்தானே அனுப்பினேன்!

crown said...

Ebrahim Ansari சொன்னது…

அன்பான எனது இளமைக் கால நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். நலம். நலமறிய ஆவல்.

நான் எப்படி இருக்கிறேன் என்று நீங்கள் அடிக்கடி என்னை நலம் விசாரிக்கிறீர்கள். துள்ளித்திரிந்த காலங்களில் - கல்லூரிக் காலங்களில் நாம் அனுபவித்த மகிழ்வான தருணங்களை எல்லாம் நினவு கூறுகிறீர்கள். இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று நீங்கள் அறிய ஆவலாக இருந்தால் இந்தக் கவிதைப் படியுங்கள் . நான் இப்போது இப்படித்தான் இருக்கிறேன்.
-------------------------------------------------
அஸ்ஸலாமுலைக்கும்.காக்கா! இப்படி தடாலென ஒரு மெல்லிய அதிர்வு தரும் இடி,இடிக்கும் என நான் நினைக்கவில்லை!கண்னில் கண்ணீர் மழை!இருந்தாலும் உண்மை நிலைதான் தம்பி என்று சொன்னதும். கவலை!ஆனாலும் அதைத்தான் நான் பதிவு செய்தேன்!என் கோணம் வயோதிகர்களின் நிலையில் நின்று சொல்வது!உங்கள் பதில் இதயத்தை சற்று உலுக்கிய வாக்குமூலம்!

அதிரை.மெய்சா said...

முதுமை அடைந்ததும் ஒருமனிதனின் மனதினில் ஏற்படும் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் அம்முதுமையில் நிகழும் நிகழ்வையும் உங்கள் கவிவரிகளில் அழகாக சொல்லிக் காட்டி இருக்கிறீர்கள்..அருமை. வாழ்த்துக்கள்.

முதுமையின் விழிம்பில் உள்ளவர்களின் மனதை இக்கவிதை மிகவும் பாதிக்கும்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…

சில கவிதைகள் கடலில் இருந்து வீசும் காற்றாக இருக்கும். சிலகவிதைகள் ஆசுவாசபடுத்தும் விசிறியின் காற்று. சில கவிதைகள் இதயத்தில் ஐஸ் கட்டியை வைத்தது போல் ஜில் என்று இருக்கும். சில கவிதைகள் மூளையில் ஒரு மூலையில் படுத்துறங்கும் பழைய நினைவு நண்பனை உசுப்பிவிடும். சில கவிதைகள் படகில் ஏறிப் பயணம் செய்வது போல Thrill of Joy ஆக இருக்கும். சில கவிதைகள் அறிந்து அறியாமல் செய்த தவறுகளை சுட்டி அறிவுரை பகரும்.
சில கவிதைகள் தடம் தரும்; சிலகவிதைகள் ஒத்தடம் தரும்; சில கவிதைகள் தடம் புரளச் செய்யும்.

சில கவிதைகளின் வரிகள் இதயத்தின் நரம்புகளை வீணையின் நரம்புகளை மீட்டிவிடுவது போல் மீட்டிவிட்டுவிடும். அப்போது புறப்படும் இசையில் ஆனந்தபைரவியும் இருக்கும் முகாரியும் இருக்கும்.

இந்தக் கவிதை அவ்வாறு இதயத்தை சீண்டிவிட்டது.
------------------------------------------------------------
நன்றி காக்கா! ஆனால் என் கவிதை சிறு தும்மல் போன்றது!

crown said...

Shameed சொன்னது…

//ஆகாரம் தவிர்த்தாலும்
மருந்தும் மாத்திரையும்
தவிர்க்க முடியாத உணவாய்ப் போனது!// நிதர்சனம்
-----------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நலமா? மருந்துக்கு வருவது போல வந்து போய்விடுறீங்க!இந்த மருந்து விசயம் மறந்து போகாமல் எழுத சொன்னது உங்க மாமா எங்கள் மேதை இ.அ.காக்கா!

crown said...

இருப்பினும்
வெகு சில கவிதைகள் மட்டுமே
இதயத்தில்
ஆனந்த யாழ் மீட்டும்
ஆயிரம் தேன் ஊட்டும்
அதில்
சுகமும் சோகமும்
சொக்க வைக்கும்
-----------------------------
அது"

crown said...

எல்லாம் எங்கோ ஒட்டிக் கொண்டது காக்கா. பசைதானே அப்படித்தான் ஓட்டும் . உறவுகள் கூட பசை இருந்தால்தான் ஒட்டுகிறது.
----------------------------------
உறவுகள் கூட பசை இருந்தால்தான் ஒட்டுகிறது. இல்லையென்றால் ஓட்டுகிறது!துரதிஸ்டவசமாக உண்மை!

crown said...

Ebrahim Ansari சொன்னது…

அன்புத்தம்பி சபீர்!

விட்டு விட்டு மழை பெய்யும் என்று திரு. ரமணன் வானிலை அறிக்கை சொன்னார்.

முதலில் ஒரு சிறு மேகம் வந்தது. தூறலைப் போட்டுவிட்டுப் போனது.

அடுத்து ஒரு மேகம் வந்தது. அடைமழையாகப் பிடித்துக் கொண்டது.

முதலில் வந்த மேகத்தின் பெயர் : இப்ராஹீம் அன்சாரி.

பிறகு வந்த மேகத்தின் பெயர். B. சபீர் அஹமது ( சபீர் அபுஷாருக்)

இங்கு கவி மேகங்கள் தலைமை மேகத்துடன் சுற்றி வருகின்றன. இன்னும் எவ்வளவு மழையைப் பொழியப் போகின்றனவோ. எங்களின் மன ஏரிகள் தூர்வாரப்பட்டு தயாராக இருக்கின்றன. அவ்வளவு மழையையும் ஏற்றுக் கொள்வோம். நிரம்பும் ; வழியாது; நடு இரவில் திறந்துவிட தேவையும் இருக்காது.

ஒரு வேண்டுகோள் இந்தக் கவி வெள்ளத்திலிருந்து எங்களை மீட்க யாரும் வந்துவிட வேண்டாம்.
-----------------------------------------
இங்கே கவிமேகங்களுக்கு தாகம்! கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது! அழகிய முரண்!

crown said...

அதிரை.மெய்சா சொன்னது…

முதுமை அடைந்ததும் ஒருமனிதனின் மனதினில் ஏற்படும் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் அம்முதுமையில் நிகழும் நிகழ்வையும் உங்கள் கவிவரிகளில் அழகாக சொல்லிக் காட்டி இருக்கிறீர்கள்..அருமை. வாழ்த்துக்கள்.

முதுமையின் விழிம்பில் உள்ளவர்களின் மனதை இக்கவிதை மிகவும் பாதிக்கும்
----------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். எவ்வளவு இளைமையாக சொல்லிவிட்டார். நன்றி!

crown said...

ஒற்றையாய் என் கவிதை தவித்திருக்கு! ஒளி கற்றை கொண்டு வந்து வெளிச்சம் பாய்ச்ச வராமல் அபு.இபு காக்கா எங்கே சென்றார்?சாய்வு நாற்காலியில் சோர்வாய் படுத்தபடி என் கவிதை!

adiraimyag.blogspot.com said...

Ungalin paychchukkalai DMK meetings il kayttirukkirayn.ippozhudhu thaan ungalin azhagaana pudhuk kavidhai kandayn vaazhththukkal

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு