Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 022 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 05, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

தான் விரும்பிய தரமானப் பொருட்களை செலவு செய்தல்:

நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை (நல் வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 3:92)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! (அல்குர்ஆன் : 2:267)

அபூதல்ஹா(ரலி) அவர்கள் மதீனாவிலேயே அன்சாரிகளில் பேரீத்தம் பழத் தோட்டங்கள் அதிகம் உள்ளவராக இருந்தார். அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக 'பய்ரூஹா' தோட்டம் இருந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் அது அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அதன் உள்ளே போய், அதன் சுவையானத் தண்ணீரைக் குடிப்பார்கள்.

இந்த 3:92 வசனம் இறங்கியதும், நபி(ஸல்) அவர்களிடம் அபூதல்ஹா வந்தார். ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்கள் மீது 3:92 வசனத்தை இறக்கி உள்ளான். என் சொத்தில் எனக்கு மிகவும் விருப்பமானது 'பய்ரூஹா' தோட்டம்தான். அதை அல்லாஹ்வின் வழியில் (நான்) தர்மம் (செய்கிறேன்). அதன் நன்மையை, நற்கூலியை அல்லாஹ்விடமே ஆதரவு வைக்கிறேன். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் நாட்டப்படி அதை நீங்கள் (செலவு) செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ''நல்லது. இது லாபம் தரும் சொத்தாகும். இது லாபம் தரும் சொத்தாகும் என (இருமுறைக்) கூறிவிட்டு, ''இது விஷயமாக நீ கூறியதைக் கேட்டேன். உன் நெருங்கிய உறவினர்களுக்கு இதை பங்கீடு செய்வதை நான் விரும்புகிறேன்'' என்றும் கூறினார்கள். உடனே அபூதல்ஹா அவர்கள் ''இறைத்தூதர் அவர்களே! அப்படியே செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, அபூதல்ஹா அந்த தோட்டத்தை தன் நெருங்கிய உறவினர்களுக்கும் தன் சிறிய தந்தையின் மக்களுக்கும் பங்கீடு செய்தார். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)           (ரியாளுஸ்ஸாலிஹீன்: 297)

தன் மனைவி, மக்கள், தன் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் ஆகியோரை இறைவனுக்குக்கட்டுப்பட ஏவுதல்! தீமைகளை விட்டும் தடுத்தல்!

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன்: தாஹா 20: 132)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன்: அத்தஹ்ரீம் 66:6)

(ஒருமுறை) ஹஸன்(ரலி) அவர்கள் தர்மப்பொருளாக இருந்த பேரீத்தம் பழத்தை எடுத்து, தன் வாயில் வைத்தார்கள். (உடனே தமது அன்பு பேரரிடம்), ''துப்பு, துப்பு! அதை எறிந்து விடு, நாம் தர்மப் பொருளை உண்ணக் கூடாது என்பது நீ அறியாததா?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 298)

நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வளர்ந்தவரான அபூஹஃப்ஸ் என்ற உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-

நான் நபி(ஸல்) அவர்கள் வீட்டில் சிறுவனாக இருந்தேன். உணவுத்தட்டில் என் கை அங்குமிங்கும் அலைந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ''சிறுவரே! (சாப்பிடும் போது) 'பிஸ்மில்லாஹ்' கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உன் அருகில் உள்ள பகுதியிலிருந்து (எடுத்துச்) சாப்பிடு என்று கூறினார்கள். இதன்பின் இதுதான் என் உண்ணும் பழக்கமாக இருந்தது. (அறிவிப்பவர்: உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 299)

''நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரரே! அவர் தன் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். ஒரு மனிதர் அவரின் மனைவி குறித்து பொறுப்புதாரர் ஆவார். அவரின் பொறுப்பு பற்றி அவர் கேட்கப்படுவார். ஒரு பெண்ணும் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்புதாரர் ஆவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி கேட்கப்படுவாள். ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரர் ஆவார். ஒவ்வொருவரும் பொறுப்புதாரரே! அவரவர் தம் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)           (ரியாளுஸ்ஸாலிஹீன்: 300)

அம்ரு இப்னு ஷுஐப்(ரலி) அவர்கள் தன்பாட்டனார் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:-

உங்களின் குழந்தைகளை அவர்கள் 7 வயது ஆகும் சமயம் தொழும்படி ஏவுங்கள். அவர்கள் 10 வயது ஆகும் போது இதற்காக அவர்களை அடியுங்கள். ''மேலும், அவர்களுக்கிடையே படுக்கைகளைப் பிரித்துப் போடுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப்(ரலி)  அவர்கள் (அபூதாவூது)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 301)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு