Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மீளுதல்...! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2016 | , , , , ,

நகர்ந்து கொண்டிருக்கும்
இதே வரிசையில்தான்
நானும் நின்று கொண்டிருக்கிறேன்

இலக்கை நோக்கிய
இந்த நகர்வு
இடர்பாடுகளின்றித் தொடர்கிறது

இடையிடையே
குறுக்கே புகுந்தும்
சறுக்கி விழுந்தும்
இலக்கை அடைபவர்கள்
ஏராளம் வந்தாலும்
என் நகர்தலில் பாதிப்பில்லை

இந்த வரிசையில்
நிற்கத் துவங்கியது
எப்பொழுது என்று
நினைவிலில்லை என்றாலும்
இந்த அனிச்சை நகர்வு
ஓர் அசாதாரணத் தருணத்தில்
நின்றே தீரும்
என்பதைக் குறித்து
எதிர்வாதம் ஏதுமில்லை

என் முறைக்கானக் காத்திருப்பின்போது
ஞாபகங்கள் சூழ்ந்து கொள்கின்றன

வரிசையில் நகர்தலினூடேதான்
வாழ்வை நுகர்தலும் தொடர்ந்திருக்கிறது

பிறப்பென்றத் துவக்குமும்
வளர்ப்பென்றத் தொடர்தலும்
கற்றல் விதிகளும்
காதல் களிகளும்

பரஸ்பரம்
ஆடையாய் அமைய வாய்த்தவளோடான
சுக துக்கங்களும்

குளிரூட்டப்பட்ட அறையிருப்புகளும்
உயிரூட்டப்பட்ட வாரிசுகளும்

இனம் பெருக்கியதும்
இடம் பெயர்ந்ததுவும்

சினேகிதர்களுடனான
மாறுபட்ட காலகட்டங்களும்

தேடல் சுவாரஸ்யங்களும்
தெளிவில்லா அனுமானங்களும்

எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
காத்திருப்புகளும் கைவிடுதல்களும்

மெய்வருத்தி வாங்கிய கூலியும்
மேம்படுத்திச் சேர்த்தச் செல்வமும்

என
எல்லாம்
எடுத்துச் செல்லவியலாத
சுமைகளாகப்
பின் தங்கிவிட...
என்
எண்ணங்களும் செயல்களும் மட்டுமே
என்னுடன் மீளும்

தவிர்க்க முடியாத
அத் தருணம் மட்டுமே
முற்றுப் புள்ளியில் துவங்கும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

9 Responses So Far:

N. Fath huddeen said...

//என
எல்லாம்
எடுத்துச் செல்லவியலாத
சுமைகளாகப்
பின் தங்கிவிட...
என்
எண்ணங்களும் செயல்களும் மட்டுமே
என்னுடன் மீளும்//

சத்தியமான வார்த்தைகள்.

N. Fath huddeen said...

//தவிர்க்க முடியாத
அத் தருணம் மட்டுமே
முற்றுப் புள்ளியில் துவங்கும்!//

"முற்றுப் புள்ளியில் முடியும்" என்று படிக்க இருந்த எனக்கு ஷாக்!
தொடர்ந்து "துவங்கும்" என்றுக் கூறி சிந்திங்க வைத்துவிட்டீகள் ஜோ!

N. Fath huddeen said...

கடைசி வரிகள் கப்ர் ஜியாரத் செய்ததுபோல் இருந்தது.
ஜசாகல்லாஹு ஹைரன் வால் ஆஃபியா.

sheikdawoodmohamedfarook said...

//எண்ணங்களும்செயல்களும்மட்டுமேஎன்னுடன்மீளும்//சிந்திக்கவைக்கும்வரி .

sheikdawoodmohamedfarook said...

//எண்ணங்களும்செயல்களும்மட்டுமேஎன்னுடன்மீளும்//சிந்திக்கவைக்கும்வரி .

sabeer.abushahruk said...

ஜோ,
ஃபாரூக் மாமா

ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்

மறுமை வாழ்வின் துவக்கம் இம்மையின் முற்றுப்புள்ளியே என்ற தெளிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வந்த செய்தி.

Ebrahim Ansari said...

வரிசையில் நிற்பவர்களில் கவுண்டரை நெருங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்பதைவிட இந்தக் கவிதை ஏற்படுத்துகிறது.

இந்த எண்ணத்தை ஏற்படுத்தியதில் இந்த கவிதைக்கு வெற்றி.

அதே நேரம் உள்ளுணர்வை தட்டி எழுப்பி இருக்கிறது என்பதையும் சொல்லவேண்டும்.

Unknown said...

Assalamu alaikkum

Dear brother Mr.Sabeer AbuShahruk,

Good reminder of non stop moving towards ultimate point. (The hearafter).

Jazakkumullahu khair

B.Ahamed Ameen from Dubai.

Unknown said...

Assalamu alaikkum

Dear brother Mr.Sabeer AbuShahruk,

Good reminder of non stop moving towards ultimate point. (The hearafter).

Jazakkumullahu khair

B.Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு