Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 044 6

அதிரைநிருபர் பதிப்பகம் | June 24, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அதிகாரத்தை கேட்டுப் பெறுதல் கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில்  ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம்.  நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.(அல்குர்ஆன்: 28:83)

''எனக்குப்பின் வசதியான நிலையும் நீங்கள் விரும்பாத பல செயல்களும் உண்டாகும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! அந்த நிலையை அடைந்து விட்ட எங்களில் ஒருவருக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். ''உங்கள் மீதுள்ள கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள். உங்களுக்குரியதை அல்லாஹ்விடம் கேளுங்கள் என நபி(ஸல்)  கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 670)

'இறைத்தூதர் அவர்களே!  எனக்கு நீங்கள் பொறுப்புத் தரக் கூடாதா? என்று நான் கேட்டேன். உடனே அவர்கள் என் தோள்பட்டை மீது என் கையை வைத்து விட்டு, ''அபூதர்ரே! நீர் பலவீனராக உள்ளீர். பொறுப்பு என்பதோ, அமானிதமாகும். அதை ஒருவன் அதன் உரிமையுடன் எடுத்து, அதை முறைப்படி நிறைவேற்றினாலே தவிர, மற்றவருக்கு அது மறுமை நாளில் இழிவும் கைசேதமும் தரும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 676)

'நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு ஆசை கொள்வீர்கள். மறுமை நாளில் பெரும் கவலையை அது ஏற்படுத்தும்'' என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 677)

ஆட்சியாளர், நீதிபதி, மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்:

உற்ற நண்பர்களாக இருந்தோரில் (இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர(மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 43:67)

'ஒரு தலைவருக்கு அல்லாஹ் நன்மையை நாடிவிட்டால், அவருக்கு உண்மையான அமைச்சரை அல்லாஹ் ஏற்படுத்துவான். தலைவர் மறந்து விட்டால், அவருக்கு நினைவூட்டுவார். அவர் கூறினால், அவருக்கு இவர் உதவி புரிவார். நன்மை அல்லாத ஒன்றை அல்லாஹ் நாடிவிட்டால் அவருக்குத் தீய மந்திரியை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவர் மறந்தால், அதை  நினைவு படுத்தமாட்டார். அவர் கூறினால், அவருக்கு உதவமாட்டார் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (அபூதாவூது)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 679)

'நானும், என் சிறிய தந்தையின் இரண்டு மகன்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவ்விருவரில் ஒருவர், ''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள பகுதியில் எங்களை (அதிகாரியாக) நியமியுங்கள்'' என்று கேட்டார். இன்னொருவரும் இதே போல் கூறினார். அப்போது நபி(ஸல்)அவர்கள், ''நிச்சயமாக நாம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இப்பதவியை கேட்கின்ற எவருக்கும், இதை ஆசை கொள்கின்ற எவருக்கும் இந்த அதிகாரத்தை வழங்கிட மாட்டோம்'' என்று கூறினார்கள்
(அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 680)

வெட்கப்படுதலின் சிறப்பு:

''நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் தன் சகோதரருக்கு, ''வெட்கப்படுதல்'' பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடு! வெட்கம் என்பது, இறை நம்பிக்கையில் உள்ளதாகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 681)

'வெட்கம் என்பதுநல்லதைத்தவிர வேறொன்றைக் கொண்டு வராது என நபி(ஸல்) கூறினார்கள்.  (புகாரி,முஸ்லிம்)  ''வெட்கம் அனைத்தும் நல்லதே'' என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது. (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 682)

'இறைநம்பிக்கை (ஈமான்), எழுபது அல்லது அறுபது சில்லரை கிளைகளாகும். அவற்றில் மிக மேலானது, ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்று கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்வானது, பாதையில் உள்ள இடையூறு தரக்கூடியதை நீக்குவதாகும். மேலும் வெட்கம் கொள்வது, இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 683)

'கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதை விட மிகக் கடுமையாக வெட்கம் கொள்பவர்களாக நபி(ஸல்) இருந்தார்கள்.  (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 684)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டானோ அவருக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை. (அல்குர்ஆன்: 39:36)

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவரை வழி கெடுப்பவன் இல்லை. (அல்குர்ஆன்: 39:37)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' 

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

6 Responses So Far:

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் . ஜசக்கல்லாஹ் ஹைரன்.

அரிய பொக்கிஷங்களின் தொகுப்பை நாங்கள் அறிய வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா பாக்கியங்களையும் வழங்குவானாக.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அரிய, அழகிய, அருந்தொகுப்பு!
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
------------------------------

ரமலானை நோக்கி- 4 / 5 நாட்கள்.

sabeer.abushahruk said...

நேர்த்தியான தொகுப்பு. வெள்ளிக்கிழமைகளில் வாய்க்கும் வரம்.

நன்றி, அலாவுதீன்.

Unknown said...

வெட்கப்படுதலில்தான் எத்தனை சிறப்பு,

அது இறை நம்பிக்கையின் பார்ப்பட்டது . ஆதலால் அது தானாக வரவேண்டும்
என்னும் அருள் தூதர் (ஸல்) அவர்களின் போதனை அது ஒவ்வரு மனிதனின் உடலோடு ஒட்டிப்பிறந்த ஒரு குணமாக இருக்க வேணும் என்பது தெளிவாகிறது.

நாம் தனிமையில் இருந்தாலும் , சக மனிதர்களுடன் இருந்தாலும் , வெட்கம் என்பது ஒரு நற்குனமாகும் . தனிமையிலும் அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்று நினைத்து அதிக வெட்கமுள்ள மனிதானாக நம்மை நாம் அடையாளப்படுத்த வேணும்.

அன்று சஹாபாக்கள் தலைமைப்பொறுப்பை கேட்டும் , ரசூலுல்லாஹ் (ஸல்)
கேட்டுபெருபவர்களுக்கு உள்ளதல்ல தலைமைப்பொறுப்பு, அது தானாக அவர்களை தேடிச்செல்வது என்று கொடுக்க மறுத்து இருக்கின்றார்கள்.

அனால் இந்த தலைமைப்பொறுப்பை , எப்படியேனும் குறுக்கு வழியிலாவது , அடைந்து விடவேணும் என்று துடிப்பவர்கள் எத்தனை பேர். நாளை மஹ்ஷரில் இதன் விளைவை அறிந்தால் இப்படி அடைய துடிப்பார்களா ?

தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் சிந்திக்க வேண்டிய தொடர்.


அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சட்டங்களின் தொகுப்பு அருமருந்தாக ஊட்டப்படுகிறது !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . ஜசக்கல்லாஹ் ஹைரன்.

அரிய பொக்கிஷங்களின் தொகுப்பை நாங்கள் அறிய வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா பாக்கியங்களையும் வழங்குவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு