நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046 8

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூலை 08, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அல்லாஹ் கூறுகிறான்:

எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் வாருங்கள் எனது புத்தகத்தை வாசியுங்கள்  நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன் எனக் கூறுவார். (அல்குர்ஆன்: 69:19,20)

'நபி(ஸல்) அவர்கள் சுத்தம் செய்தல், தலைவாருதல், செருப்பு அணிதல் போன்ற அனைத்துக் காரியங்களிலும் வலது புறத்தில் துவக்குவதையே விரும்புபவர்களாக இருந்தனர்.'' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 721)

''உங்களில் ஒருவர் செருப்பை அணிந்தால், வலது பக்கத்தில் ஆரம்பிக்கட்டும். அதைக் கழற்றினால், இடது பக்கத்தில் ஆரம்பிக்கட்டும்! முதலில் வலது காலில் அணிவிக்கப்படவும், கடைசியில் கழற்றப்படவும் என்று அமையட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 724)

'நீங்கள் ஆடை அணிந்தால், உளுச் செய்தால் உங்களின் வலது கைகளால் ஆரம்பியுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 726)

உண்ணும் போது ஆரம்பத்தில் 'பிஸ்மில்லாஹ்' கூறுவது கடைசியில் 'அல்ஹம்துலில்லாஹ்' கூறுவது:

''உங்களில் ஒருவர் சாப்பிட்டால், அல்லாஹ்வின் பெயரை நினைவு கூரட்டும்! அதன் ஆரம்பித்திலேயே அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர மறந்து விட்டால் அவர், 'பிஸ்மில்லாஹி அவ்வலஹுவஆகிரஹு'' (ஆரம்பத்திலும், இறுதியிலும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு உண்ணுகிறேன்) என்று கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 729)

''ஒரு மனிதர் தன் வீட்டில் நுழையும் போதும், அதை உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், தன் தோழர்களிடம் ஷைத்தான், ''உங்களுக்கு (இன்று) இரவு தங்குமிடமோ, இரவு உணவோ இல்லை'' என்று கூறுவான். வீட்டில் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராமல் நுழைந்துவிட்டால், ''நீங்கள் இரவு தங்குமிடத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள்'' என்று ஷைத்தான் கூறுவான். மேலும் உண்ணும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ''நீங்கள் இரவு தங்குமிடத்தையும், இரவு உணவையும் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்'' என்று ஷைத்தான் கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 730)

'நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் 'பிஸ்மில்லாஹ்' கூறவே இல்லை. அவரின் உணவில் ஒரு கவளம் மட்டுமே இருந்த சமயம், தன் வாய் அருகே அதை உயர்த்திய போது, ''பிஸ்மில்லாஹி அவ்வலஹு வஆகிரஹு''என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பின்பு, ''இவருடன் ஷைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவர் ''பிஸ்மில்லாஹ்'' 'கூறியதும் தன் வயிற்றில் உள்ளதை வாந்தி எடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். '' (அறிவிப்பவர்: உமய்யா இப்னு மக் ஷிய்யி ஸஹாபி (ரலி) அவர்கள் (அபூதாவூது, நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 732)

''நபி(ஸல்) அவர்கள் (தான் சாப்பிட்டு முடித்து) தன் தட்டை உயர்த்துவார்களானால், ''அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹா ஙைர மக்ஃபிய்யி வலா முவத்தஇன், வலாமுஸ்தஹ்னன் அன்ஹுரப்புனா '' என்று கூறுவார்கள். 

துஆவின் பொருள்:

அபிவிருத்தி மிக்க தூய்மையான அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அப்புகழ், போதுமாக்கப்படமாட்டாது. அதை விட்டும் தேவையற்றதாகப்பட மாட்டாது. நீயே எங்களின் இறைவன்.
(அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி)  அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 7340)

'நபி(ஸல்) அவர்கள் அறவே உணவைக் குறை கூற மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் அந்த உணவைச் சாப்பிடுவார்கள். அந்த உணவை வெறுத்தால் சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 736)

''நபி(ஸல்) அவர்களின் வீட்டில் நான் சிறுவனாக இருந்தேன். (உணவுத்)தட்டில் இங்கும் அங்கும் என, என் கை அலைந்து கொண்டிருந்தது. அப்போது என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ''சிறுவரே! பிஸ்மில்லாஹ் கூறு! உனது வலது கையால் சாப்பிடு! உனக்கு அருகில் உள்ளவற்றில் சாப்பிடு என்று கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அம்ரு இப்னு அபீ ஸலமா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 740)

'உணவின் (தட்டின்) நடுவில் பரக்கத் இறங்குகிறது. (எனவே) அதன் ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள். அதன் நடுவிலிருந்து சாப்பிடாதீர்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (அபூதாவூது,திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 744)


''விரல்களையும்,தட்டையும் வழித்து உண்ண நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு நீங்கள் ''உங்கள் உணவில் எதில் பரக்கத் இருந்தது என்பதை அறியமாட்டீர்கள்''என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 750)

'உங்கள் ஒருவரின் உணவு (கீழே சிதறி) விழுந்து விட்டால், அதை அவர் எடுத்து, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதைச் சாப்பிடட்டும்! ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம். தன் விரல்களை சூப்பும் வரை துண்டால் தன் கையைத் துடைக்க வேண்டாம். தன் உணவில் எதில் ''பரக்கத்'' உண்டு என்பதை அவர் அறியமாட்டார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 751)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டானோ அவருக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை. (அல்குர்ஆன்: 39:36)

அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவரை வழி கெடுப்பவன் இல்லை. (அல்குர்ஆன்: 39:37)

  "திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்"  

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

8 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

பிஸ்மில்லாஹ் சொல்வோம்
சலாம் சொல்வோம்
வலது கரத்தால் துவங்குவோம்
அனைத்திலும் நபி வழி முறையில் வாழ்வோம்

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

sabeer.abushahruk சொன்னது…

பிஸ்மில்லாஹ் சொல்வோம்
சலாம் சொல்வோம்
வலது கரத்தால் துவங்குவோம்
அனைத்திலும் நபி வழி முறையில் வாழ்வோம்

ஜஸாக்கல்லாஹ் ஹைர்

Unknown சொன்னது…

எல்லா சந்தர்ப்பத்திலும் இறைவனை நினைவு கூறுவோம்.

வாழ்க்கைப்பாதையை இறையின் ஆணைப்படியும், அந்த ஆணையின் செயல் விளக்கம் ரசூ (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டையும் மூச்சுக்காற்றின் முற்றுப்புள்ளி வரை தொடர்வோம்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari சொன்னது…

மதரசா சென்று பார்க்கக் கல்வி பயில வாய்ப்பில்லாத பலருக்கு சிறந்த போதனைகளை திரட்டித்தரும் சகோதரர் அலாவுதீன் அவர்களின் அரும்பணி பாராட்டுக்கு உரியது. நமமுடைய பயன்பாட்டுக்கும் உரியது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

ஸ்டெல் பை ஸ்டெப் !

நபிவழிப் பாடம் அருமை !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

அலாவுதீன்.S. சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)! கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு