இயற்கை இன்பம் – 16

காடுகள்

காடதுவே  பசுமையினால்  முகிலை  ஈர்க்கும்
                  காதலினால்  கார்முகில்கள்  மழையைப்  பெய்யும்
ஓடிவரும்  பெருவெள்ளம்  மிகைக்கா  வண்ணம்
                  உறுதியுடன்  தடுத்ததனைத்  தேக்கி  நிற்கும்
நாடுநகர்  வளங்கொழிக்க  வகையைச்  செய்யும்
                  நன்னீரால்  உயிரினங்கள்  தாகந்  தீர்க்கும்
பாடுபடும்  விலங்கினங்கள்  இணைக  ளோடு
                  பதுங்கிடவும்  காடுகளே  இல்ல  மாகும்.

அதிரை அஹ்மத்

கருத்துகள் இல்லை