புதுப்பிக்கப்படாத திருமணங்கள் !

வாழ்க்கையின் முதல் 20 - 25 வருடம்  வரைதான் பெற்றோர்...பிறகு குப்பை கொட்டுவது என்னவோ கட்டிய மனைவியிடமோ அல்லது பெண்ணாய் இருந்தால் கணவனிடமோதான். ஆனால் பொருளாதாரத்தை துரத்தி, துரத்தியே தாரத்தை தூர விரட்டும் ப்ரொக்ராமிங் இப்போது பெரும்பாலானாவர்களிடம் பை-டிஃபால்ட் ஆக இன்ஸ்டால் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.

எல்லோருக்கும் தனது துணையுடன் ஒரு நெருக்கம் கல்யாண காலத்தில் ஏற்படும். அது தொடராமல் போவதற்கான காரணம் , மற்றும் நாம் பெருமை அடித்துக்கொள்ளும் சமுக நீதி , மனைவியை புரிந்து கொள்வது , அல்லது மனைவிக்குபிடித்த விசயங்களை சபையில் பேசினால் அது 'பெண்டாட்டி தாசன்' என்ற பெயருக்கு பயந்தே ஏறக்குறைய கட்டிய மனைவியை ஒரு "கெளரவ வேலைக்காரி' மாதிரி நடத்தும்  நாரிப்போன விசயத்தை எனது எழுத்துக்கும் வாசகர்களின் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்.

50'  60' வருடங்களின் காலகட்டத்தில் வீட்டில் 3 வேலை உணவுக்கே சொந்த நாட்டில் ஸ்யூரிட்டி இல்லை என்ற சூழ்நிலையிலும் , ' அவன் போரான்...நீ எதுக்கு வெட்டியா இருக்கே' என்ற திட்டுக்கும் பயந்து பல பேர் வெளிநாடு புறப்பட்டனர்.

கப்பலில் வரும் வழியெல்லாம் வாந்தி, தலை சுத்தல் எதுவும் பெரிதாக தெரியாத அந்த தியாகிகள் நினைத்தது என்னவோ 'காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்" என்ற நம்பிக்கைதான். 

இளமை...கல்யாண காலம், முதன் முதலில் கல்யாணத்துக்கு பிறகு வந்து இறங்கும் போது   'பொட்டி பிரிக்கும் வைபவம்" இதில் சொந்தங்கள் பொருள்களுக்கு ஆலாய் பறக்கும் சூழ்நிலை இதில் எதிலுமே சம்பாதிக்கும் கூட்டம் 'எதையும்" கற்றுக்கொள்ளவில்லை. சின்ன குழந்தைகள் பொருள்களுக்கு ஆசைப்பட்டால் பரவாயில்லை..வயதானபெண்களும் மாடர்ன் புடவைக்கும் , கூலிங் கிளாஸ் கண்ணாடிக்கும் ஆசைப்படும் கொடுமை.

இந்த விசயங்கள் ஏதோ அந்த காலத்தில் மலேசியா / சிங்கப்பூர் போன் ஆட்களை பற்றி எழுதியிருக்காப்லெ...என்று ஒற்றை வரியில் சொல்லி விட வேண்டாம் மக்களே!!

இப்போது துபாய் / சவூதி மற்றும் அமெரிக்கா , யூ.கே , ஆஸ்திரேலியா மற்றும் கோபால் பல்பொடி போன அத்தனை நாடுகளில் வசிக்கும் ஆட்களுக்கும் மற்றும் இந்தியாவிலேயே இருக்கும் ஆட்களுக்கும் பொருந்தும்.

ஏனெனில் ஸ்கிரிப்ட் ஒன்றுதான் அதை ஏற்றுக்கொண்டு வாழும் பாத்திரங்கள்தான் வேறு. ஒரு ஞாயமான மனித ஆசையில் பெரும்பாலும் மண்ணைத்தூவுவது  ஈகோ பிடித்த இன்னொரு மனுசி / மனுசன் தானே தவிர எந்த ஒரு கொடூர மிருகமும் அல்ல.

முதலில் இந்த பிரச்சினைகள் அதிகமாகி வெடிக்காமல் எப்போதும் முள்மீது உட்கார்ந்திருப்பதற்கு காரணம் சில முதுகெலும்பு இல்லாத ‘Mummy Boy’  [அம்மா பையன்] களால்தான்.

ஒருவன் திருமணம் செய்து விட்டால் அவனது கட்டில் வரை சென்று அறிவுரை வழங்கும் பெரியவர்களால்தான் சந்தோசமாக இருக்க வேண்டிய திருமண வாழ்க்கை 'சிங்கி'அடிக்க ஆரம்பிக்கிறது.

சம்பாதிக்க கணவன் வெளிநாடு போய்விட்டு வரும்போது 'நீ ஊரில் இல்லாத போது உன் மனைவி என்னை மதிக்கவில்லையில் ஆரம்பித்து அந்த பெண்ணின் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக அடிமை மாதிரி மன்னிப்பு கேட்க வைக்கும் கலாச்சாரம் இப்போது நாம் வாய் கிழிய பேசும்  ஹையர் செக்கன்டரியில் 98 % 99 % எனும் நவீன காலத்தில்தான்.  

பரீட்சைகள் எதுவும் வாழ்க்கையை கற்றுத்தரவில்லை. 

வாழ்க்கையை கற்றுத்தரும் பெரியவர்களும் 'ஈகோ" பிடித்த மனிதர்களாய் இருந்து விட்டால் இளைய சமுதாயம் ஒரு நோய் தாக்கிய மாதிரி. ' நான் வந்து இறங்கியவுடன் என்னை பார்க்க வரவில்லை, ஆஸ்பத்திரிக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலுடன் வந்து பார்க்கவில்லை, " என்று பிதற்ற ஆரம்பித்து விடுகிறது.

இப்படி குற்றம் குறைகள் பார்க்கும் அத்தனை விசயமும் திருமணத்தில் இருந்த அன்யோன்ய உணர்வு புதுப்பிக்கப்படாததால் திருமணமே புதுப்பிக்கப்படவில்லை என்பது என் கருத்து.

புதுப்பிக்கப்பட எத்தனையோ விசயங்கள் இருந்தும் வெளியூர் போகும்போது வேன் பிடித்து தெருவில் உள்ள பாதி சொந்தத்தை அழைத்துப்போய் வெளியூர் போனாலும் என் சாப்பாட்டு சிஸ்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் ஆட்களை சமாளித்து, வெளியூரிலும் பெண்களை சமைக்க வைத்து [குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை.... தன்னுடன் சமையல் செய்பவர்களைத்தான் அழைத்துப்போய் இருக்கிறார்கள் ]. 

தனியாக பேச கூட வாய்ப்பில்லாத தாம்பத்யம் எந்த ஒரு அன்பை தந்துவிடும் என எனக்குத்தெரியவில்லை. இப்போது ட்ரன்ட் மாறினாலும் புதிதாக கல்யணம் செய்து கொண்ட  ஒரு தம்பதியினர் ஒரு நல்ல ஹாலிடே ரிசார்ட் போய்வருகிற மாதிரி இந்திய சூழ்நிலைகள் பாதுகாப்பு இல்லாமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது.

ஹனிமூன் போறவங்க இப்போது இன்னும் சில தம்பதியினரையும் அழைத்துப்போகும் அவலம்.....பாதுகாப்புகள் இல்லாத சூழ்நிலைதான்.

சொந்த நாட்டிலேயே இப்படி பயந்து மூவ் பன்னுவது இந்திய குடிமகன் கள் மட்டும் தானா?...இல்லை 'குடி' மகன் களால்தான் இந்த சூழ்நிலையா? .

இப்போது ஏற்பட்டிருக்கும் வசதிகள் அன்பை அதிகரிக்குமா என்றால் கேள்விக்குறிதான். நான் ஸ்கைப்பில் பேசுகிறேன், டாங்கோவில் பேசுகிறேன் என்றாலும் கூடவே வெட்டியான விசயங்களுக்கும் கவனம் சிதறும். யாரோ ஒரு நடிகை எங்கே தொலைந்தால் என்று எழுதும் ஆர்டிக்கிளுக்கு குறைந்தது 15 பேர் வேலை மெனக்கெட்டு கமென்ட் எழுதுகிறார்கள்.  மத ரீதியாக திட்டிக்கொள்ளும் ஆட்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். தெருவில் நாய் நின்று குரைத்தால் நாமும் ஏன் குரைக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமலா கீபோர்டில் நம் கை இருக்கிறது??? தினன் தினம் இதை எல்லாம் மீறி பதில் எழுதி  மிஞ்சிய நேரத்தில் கட்டிய மனைவி மீது அன்பு செலுத்த நேரத்தை தேடினால் எப்படி நேரம் கிடைக்கும்?.

இன்னொரு புதிய நோய்....குறைந்த வருவாயில் இருக்கும்போது நன்றாக தெரிந்த மனைவி, வசதி வாய்ப்புகள் கிடைத்த பிறகு இன்டெலெகச்சுவல் குறைந்து  “அவ்லோ பெரிய ப்யூட்டி ஒன்னும் இல்லே” என்று சொல்லும், கம்பேர் பன்னும் புத்தி. வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெட்டரா பார்த்துக்கொண்டே போனால் அதற்கு முடிவே இருக்காது.

இது ஆண்களுக்கு மட்டுமல்ல....பெண்களும் கம்பேர் செய்ய ஆரம்பிப்பதால் இப்போதைய சூழ்நிலையில் நிறைய "உடைந்துபோன திருமணங்கள்' பெருகிவிட்டது.  கணவனை சரியாகப்புரிந்து கொள்ளாத பெண்கள் தான் மிகவும் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கணவனின் மரியாதை குறையும் அளவுக்கு பேசும்போது நீண்ட காலம் வாழ வேண்டிய தம்பதிகள் சில சமயங்களில் கசப்பான அனுபவத்துடன் பிரியவும் வேண்டியிருக்கிறது.

கணவனின் பொருளாதார சூழ்நிலைகள் சரியாகும் வரை பொருமை காக்காத பெண்கள் சமயங்களில் சபையில் வைத்தே கணவனுக்கு இன்வஸ்ட்மென்ட் அனலிஸ்ட் மாதிரி  பாடம் எடுக்கும்போது "ஜக்கி" யாவது கணவன் மட்டுமல்ல...கேட்டுக்கொண்டிருக்கும் நாமும்தான்.

இதற்கெல்லாம் காரணம் சம்பாதிக்கும் ஆண்கள் மனைவி மீது செலுத்தும் அன்பில் குறை வைப்பதாக கூட இருக்கலாம்.

நான் அவதானித்த சில விசயங்கள்:

* கல்யாணம் கட்டிக்கொடுத்த பிறகு பெரியவர்களின் தலையீடு எல்லாவற்றிலும் இருந்தால் அந்த கல்யாணம் வெகுதூரம் செல்லாது. அது கடமைக்காக நடந்த நிகழ்வுதான்.

* பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்துக்கு தொடர்ந்து செய்யப்படும் உதவி அந்த குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் கெடுதி. இது உணவுக்காக / மருத்துவத்துக்காக செய்யப்பட்டால் பரவாயில்லை.


* தாய்க்கு கொடுக்கும் மரியாதையால் கட்டிய மனைவியை துச்சமாக மதிக்கும் செயல் , கர்ம விதியின்படி மகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.

* வெளியூருக்கு குடும்பத்துடன் போய் டி.வி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதில் வீட்டிலேயே இருந்துவிடலாம்.

* நம் ஊர் பகுதியில் இருக்கும் 'பெண் கொடுத்து பெண் எடுக்கும்' சூழலில் நடக்கும் விவாகரத்துகள் தேவையில்லாத ஈகோ விலும் , "திடீர்" சகோதரப்பாசத்திலும் நடப்பதை தவிர்க்க சரியான மெக்கானிசம் தேவை. 

* அடிக்கடி அன்பு செலுத்த வாய்ப்பில்லாமலும் , வாய்ப்புகள் இருந்தும் காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொள்வதிலும் காட்டும் ஆர்வத்தின் முக்கியத்தை விட அன்பும் அன்யோன்யமும் முக்கியம்.

* பிரச்சினைகளில் முடிவெடுக்காத கணவன் அம்மாவிடம் / தந்தையிடம் கேட்டு சொல்கிறேன் என்றாலே அவனுக்கு முடிவெடுக்க / பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரியாத "வெட்டிபீஸ்" என்று நாம் முடிவுக்கு வந்து விடலாம்.

குடும்பத்துக்குள் நடக்கும் விசயம் ராய்ட்டர் நியூஸ் மாதிரி பரவிக் கொண்டிருந்தால்.... சில ஜோடிகளின் திருமணம்… due for renewal.

ZAKIR HUSSAIN

17 கருத்துகள்

Unknown சொன்னது…

நிதர்சனம்! அருமையான அலசல். அது சரி....

//கணவனை சரியாகப்புரிந்து கொள்ளாத பெண்கள் தான் மிகவும் சரியாக பேசுவதாக நினைத்துக்கொண்டு கணவனின் மரியாதை குறையும் அளவுக்கு பேசும்போது நீண்ட காலம் வாழ வேண்டிய தம்பதிகள் சில சமயங்களில் கசப்பான அனுபவத்துடன் பிரியவும் வேண்டியிருக்கிறது.//

என்னமாவது பிரச்சனையா? ஊருக்கு வாங்க. கவுன்சலிங்குக்கு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணி, நாம் கூடிப் பேசிக்கொள்ளலாம். இப்பல்லாம் மலேசியன் ஏர்லைன்ஸ் ரேட் கட்டிங் நல்லருக்குதுன்னு கேள்வி?!

sheikdawoodmohamedfarook சொன்னது…

//பிரச்சனைகளில்முடிவெடுக்கதெரியாதகணவன்.......// அவன்கல்யானமுடித்தபோதும் ஒருபெண்ணுக்கு கணவன் அல்ல. முடிவெடுப்பதைதென்ன ?மனைவியோடுபடுப்பதற்க்கேஅவன்உம்மா வாப்பாபெறியமச்சான் சின்னமச்சான்கல்யாணத்துக்கு நிக்கிறதங்கச்சிகள்ஆகியோரின் பூரணசம்மதம் பெற்றபின்தான் சபுராளியின்மனைவியின்பத்தைகைலிமறுநாள்காலைவெயிலில்காயும். இது அந்தக்காலபினாங்குசபுறு மாப்புளே கதே!

sheikdawoodmohamedfarook சொன்னது…

மருமகனேஜாகிர்!உன்மகன்கல்யாணம்முடிந்ததும்ஊருபக்கம் வா!ராமேஸ்வரம்போகும்வழியில்உப்பூர்என்றமீன்கறிசோறுசாப்பிட்டிட்டு அதேவழியில்இருக்கும்அரியாமான்பீச் சஉக்குமரநிழலில் அந்தக்கால பினாங்குசபுறுமாப்பிள்ளைகளின்சோககதைகளை சொல்லிஅழுகிறேன்

Adirai anbudhasan சொன்னது…


//// கணவனின் பொருளாதார சூழ்நிலைகள் சரியாகும் வரை பொருமை காக்காத பெண்கள் சமயங்களில் சபையில் வைத்தே கணவனுக்கு இன்வஸ்ட்மென்ட் அனலிஸ்ட் மாதிரி பாடம் எடுக்கும்போது "ஜக்கி" யாவது கணவன் மட்டுமல்ல...கேட்டுக்கொண்டிருக்கும் நாமும்தான்.///

கணவனின், குடும்பத்தின் எதிரகாலத்தை கருதி. தனிமையில் பலமுறை சொல்லியும் கேட்காது இருந்திருந்தால் ?.......... பெண்ணின் ரோல் இல் ஒன்று " மந்திரி " இல்லையா ?
அனலிஸ்ட் அளவிற்கு பேசினால், கண்டிப்பாக விஷயம் உள்ளவராக தான் இருப்பார்!!!. காது கொடுத்தல் நலமே,

பெரும்பாலான பிரச்சினை களுக்கு மூல காரணம், ஈகோ தான என நம்புகிறவர்களில் நானும் ஒருவன்.

கட்டுரை பொதுவான நல்ல அலசல்

Yasir சொன்னது…

அனைவரும் படித்து மற்றவங்களுக்கும் எத்தி வைக்க வேண்டிய ஆக்கம்

இந்த ஈகோ-வை ``கோ`` என்று சொல்லிட்டாலே பாதி குடும்பங்களில் இன்று நடக்கும் பிரச்சனைகள் குறைந்து இருக்கும்
நிறைய கணவன்/மனைவி மார்களின் கம்பிளய்ண்டே அவ/அவர் உம்மா பேச்சைக்கேட்டு ஆடுறா(ர்) என்பதே
இதில் ஆரம்பிக்கும் பிரச்சனை பின்னர் புளியமரத்தடியில் பஞ்சாயத்தில்தான் போய் முடிகின்றது
பெரும்பான்மையான ஆண்களுக்கும் கல்யாணமான புதிதில் உள்ள தில்/திரில் படிப்படியாக குறைந்து /குறைத்து, மனைவிக்கு ``ஆரம்பி``க்கும் வயதில் இவன் கிரிக்கெட் விளையாடவோ அல்லது முகநூலில் யாரையாவது வறுத்தெடுக்க கிளம்பி விடுகின்றான்… …கணவன் மனைவி நெருக்கதிற்க்கும்/புரிதலுக்கும் தாம்பத்யம் ஒரு தலையாய காரணம், அதனை தவற விடுவது தவறு நடப்பதற்க்கு வழி வகுக்கும் குடும்பத்தில் விரிசலை உண்டாக்கும்

ஜாகிர் ஹீசைன் சொன்னது…

"தாய்க்கு கொடுக்கும் மரியாதையால் கட்டிய மனைவியை துச்சமாக மதிக்கும் செயல் , கர்ம விதியின்படி மகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்"
இதற்கு கொஞ்சம் விரிவுரைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்

Unknown சொன்னது…

Oh...No...No... No...!
"பஹ்லே ராத் மே பில்லி மார்னா." கேள்விப்பட்டதுண்டா இந்த உர்து வாக்கை? முதலிரவிலே எல்லாம் செட்டப் ஆயிடனும், தெரியுமா?
"இன்றுவரையும் - இனியும் என் வாழ்க்கையின் சீரமைப்பிற்குக் காரணமானவள் பெண்ணொருத்திதான்! அவள்தான் என் தாய்!
என் வாழ்க்கை என்ற வண்டி ஓடிவந்து இந்த ஸ்டேஷனில் நின்றபோது, நீயும் இதில் பயணியாக ஏறிக்கொண்டாய்! தாயின் இருக்கையில் தாய். உனக்காகக் காலியாக இருக்கும் இருக்கையில் நீ. நாம் மூவரும் ஒன்றாய்ப் பயணம் செய்யவேண்டியவர்கள். எதிர் காலத்தில் உனக்கும் புனிதத் தாய்மைப் பதவி உயர்வு கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!"

முடிந்தது கதை! Life will be full of joy and peace. இன்ஷா அல்லாஹ்!

Ebrahim Ansari சொன்னது…

சொல்ல முடிந்தகதை
சொல்லத்தான்
நினைக்கிறேன்
சொல்வதெல்லாம் உண்மை
சிலருக்கு முதல் இன்னிங்ஸ் டக் அவுட்
இரண்டாம் இன்னிங்ஸ் டபுள் செஞ்சுரி மேன் ஆப்த மேட்ச்

கட்டுரை நல்ல மே்ட்ச்்

ZAKIR HUSSAIN சொன்னது…

//"தாய்க்கு கொடுக்கும் மரியாதையால் கட்டிய மனைவியை துச்சமாக மதிக்கும் செயல் , கர்ம விதியின்படி மகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்"
இதற்கு கொஞ்சம் விரிவுரைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் //

To Brother ஜாகிர் ஹுசைன்

சில ஆண்கள்அம்மா "மட்டும்" தான் முக்கியமானவர்...மனைவி ஒரு 'திருமண உறவுக்குள் வந்த வேலைக்காரி" என்ற நினைவில் மனைவியை நடத்த நான் பார்த்திருக்கீறேன்....அது நாளடைவில் அவனது மகள் மாமியார் வீட்டில் அதே போல் நடத்தப்படும் போது அந்த ஆணுக்கு நிச்சயம் அளவு கடந்த கவலையே தரும் [ கர்ம விதி...முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.]

ZAKIR HUSSAIN சொன்னது…

//என்னமாவது பிரச்சனையா? ஊருக்கு வாங்க. கவுன்சலிங்குக்கு ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணி, நாம் கூடிப் பேசிக்கொள்ளலாம். இப்பல்லாம் மலேசியன் ஏர்லைன்ஸ் ரேட் கட்டிங் நல்லருக்குதுன்னு கேள்வி?!//

No Not at all....29 வருட திருமண வாழ்வில் அப்படி ஏதும் எனக்கு நடந்ததில்லை....

எழுத அப்சர்வேசன் தான் காரணம்

ZAKIR HUSSAIN சொன்னது…

//மருமகனேஜாகிர்!உன்மகன்கல்யாணம்முடிந்ததும்ஊருபக்கம் வா!ராமேஸ்வரம்போகும்வழியில்உப்பூர்என்றமீன்கறிசோறுசாப்பிட்டிட்டு அதேவழியில்இருக்கும்அரியாமான்பீச் சஉக்குமரநிழலில் அந்தக்கால பினாங்குசபுறுமாப்பிள்ளைகளின்சோககதைகளை சொல்லிஅழுகிறேன் //

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு...நீங்கள் சொன்ன விசயம் நிச்ச்யம் [ இன்ஷா அல்லாஹ் ] பேசுவோம்..இன்னும் நிறைய உங்களுடன் பேச வேண்டியிருக்கிறது. அதில் நான் / சபீர் / இப்ராஹிம் அன்சாரி அண்ணன் அனைவரும் உண்டு.

ZAKIR HUSSAIN சொன்னது…

Thanx to Bro Yasir & Brother Ebrahim Ansari for your valuable comments...

உங்கள் இருவரின் கமென்ட்ஸ் படித்த பிறகு என் மனதுக்குள் சமீப காலமாக ஓடிக்கொண்டுருக்கும் விசயத்தை ஒரு தொடராக எழுத ஆசை இருக்கிறது. அது நான் மற்றவர்களிடம் கேட்ட விசயங்கள் .

அதற்கு தலைப்புகள் கூட ' உண்மை கதைகள்' என்று பழைய ஸ்டைலிலும்....'என் ஜன்னலுக்கு வெளியே" என்று கொஞ்சம் புதுமையாகவும் தேர்ந்தெடுத்தேன்.

நேரம்தான் கிடைக்கவில்லை எழுத.

sabeer.abushahruk சொன்னது…

வாழ்வியல் தத்துவத்தின் மிக முக்கிய பகுதியான இல்லறம் குறித்த ஆழமான அலசல்.

இன்னும் விரிவாகச் சொல்லப்பட வேண்டும்.

Ebrahim Ansari சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

தம்பி

ஜாகிர்

உங்களுக்கு நேர நிர்வாகம் நன்றாகத் தெரியும் நேரம் ஒதுக்கி எழுத வேண்டுகிறேன்

Ebrahim Ansari சொன்னது…

ஒரு கருத்தை கவனிக்க வேண்டும்.
இனிய வாழ்வு அமைந்ததை அதிரையின் அறிஞர் பெருமகன் சொல்கிறார்.
அதில் இடையூறுகளை அதிரையின் பெரியவர் சொல்கிறார்.

ஆனால் இரண்டுக்குமே ஒரே காரணம். தாய்.

தம்பி ஜாகிர் ! முன்பு புஷ்பா தங்க துறை எழுதியது போல் உண்மைக்கதைகளை எழுதவேண்டும்.

அப்துல்மாலிக் சொன்னது…

எனக்கு என்னவோ மேலோட்டமாகவே எல்லாவற்றையும் தொட்டுச்சென்றுள்ளதாகவே தோணுது காக்கா,,,, ஆழமாக சொல்லப்பட வேண்டிய கருத்துக்கள் நிறைய.. எப்படி சொன்னாலும் “அப்படி”யேதான் வாழ்வாங்க(வாழ்க்கைக்குள்) தள்ளப்படுறாங்க என்பது மறுக்கமுடியாத உண்மை.. //மனைவிக்குபிடித்த விசயங்களை சபையில் பேசினால் அது 'பெண்டாட்டி தாசன்' என்ற பெயருக்கு பயந்தே ஏறக்குறைய கட்டிய மனைவியை ஒரு "கெளரவ வேலைக்காரி' மாதிரி நடத்தும் நாரிப்போன விசயத்தை// முற்றிலும் உண்மை, பொண்டாட்டிக்கு அடங்கிருக்கான் என்ற அவப்பெயர் சமுதாய மத்தியில் எவனுக்குமே தகிரியமிருக்காது.. பொண்டாட்டியை பற்றி பேசினால்/அவதானித்தால் மட்டுமே நீங்க சொன்ன அந்த நீ|ண்டவாழ்க்கை நிலைக்கும்