Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உணர்ந்தவை 24

ZAKIR HUSSAIN | September 14, 2016 | ,

  • வளர்ந்த பிள்ளைகள் அதிகம் பெற்றோரிடம் பேசுவது "இவ்வளவு பணம் தேவைப்படும்" என்ற ஒரே வார்த்தை தான்.
  • வீட்டில் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சம்பாத்யம் போதவில்லை என்று குற்றம் சாட்டுமுன் ஒருமாதம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வந்து புத்திமதி சொல்லட்டும்.
  • வளைத்தளம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அறிஞர்கள் அல்ல.
  • எல்லா விசயத்திலும் விதியை காரணம் காட்டி தப்பிக்க முடியாது. நீங்கள் தான் அதை எழுதியது என்பது மற்றவர்களுக்கும் ஈசியாக தெரியும் இந்த காலத்தில்.
  • காலத்தால் மறக்கக்கூடாதது சமயம் அறிந்து செய்யப்பட்ட உதவி.
  • ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு கணவன் மீதான கவனம் குறைந்து பிள்ளைகள் மீதான கவனம் அதிகம் ஆகும்போது கணவன் மனைவியிடையே எல்லா விசயத்துக்கும் ஈகோ உருவாகும். 'கணவன்' நொய்யல் பார்ட்டியாகவும் ' மனைவி ' சனியாக ' தெரிவதும் இந்த கால கட்டத்தில்தான்.
  • காலக்கட்டாயத்தால் தூரமாய்ப் போன உறவுகள் அதே அன்புடன் மறுபடியும் கிடைத்தால் அதுவே சந்தோசம். எதிர்பார்த்தால் ஏமாறவும் தயாராக இருக்க வேண்டும்.
  • எதையும் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்வதால் மற்ற விசயங்களை மறைத்துவிடும்..உண்மையையும் சேர்த்துதான்.
  • Financial Independence  என்பது பணம் சம்பாதிக்க பொறுப்பு எடுத்துக் கொள்வது.

  • ஒரே நதியில் எப்போதும் குளிக்க முடியாது – ZEN தத்துவம்.
  • வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
  • சின்ன வயதில் ரொம்ப நாள் சம்பாதிக்காமல்  இருப்பவர்களுக்கு சூடு சொரணை இவைகளை எந்த லேப் ரிப்போர்ட்டிலும் கண்டுபிடிக்க முடியாது.
  • வயதான காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அதிகம் சார்ந்திருப்பது இந்த கால கட்டத்தில் அவ்வளவுக்கு சரியல்ல. பிள்ளைகள் வயதான காலத்தில் பெற்றோர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது அதைவிட தவறு.
  • உங்களை அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனம்.
  • தாய்ப்பாசம் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு தந்தை பாசத்தைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.
  • பொழுதுபோக்குக்கு அதிகம் நேரம் ஒதுக்கிய இளமை, முதுமையில் பொழுது போகாமல் யோசிக்க வைக்கப்படலாம்.
  • பணம் , பெண் இரண்டு விசயத்திலும் எந்த ஒருவனும் நிரந்தரமாக நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை.
  • மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.
  • உங்களின் முயற்சியில் எப்போதும் அவநம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள் நரபலி சாமியார்களைவிட கொடுமையானவர்கள்.
  • எப்போது பார்த்தாலும் ' உங்க வீட்டு ஆட்கள்' என்று பிரித்துப்பேசும் தம்பதியினரிடம் அவ்வளவு அன்யோன்யம் இருக்காது. அப்படி இருந்தால் அது ஒரு பிசினஸ், தாம்பத்யம் அல்ல.
  • தரமற்றவர்களிடம் செய்யும் விவாதம் ஒரு வீண்வேலை
  • எப்போதோ செய்யப்போகும் வேலைக்கு இப்போதைக்கு டென்சன் வேண்டாம்.
  • நமக்கு பிரியாணி கிடக்கவில்லை என்று கவலைப்படும் வேலையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க. 
  • நாம் வாங்கி வந்த இந்த உடம்பே இரவல்தான் என்ற நிலையில் ஏன் நிறந்தரமில்லாத பல விசயத்தில் அனியாயத்துக்கு கவலை கொள்கிறோம்?
  • தேவையற்றவைகளை வாங்கி சேர்ப்பவன், தேவையான பொருளை விற்க நேரிடும்.
  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது வெற்றியடைகிறோம்..தோல்வியடைய வில்லை.
ZAKIR HUSSAIN

24 Responses So Far:

Ebrahim Ansari said...

இவை உணர்ந்தவைகளாக இருக்கலாம். உணர்த்தியவைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

பட்டியலில் உலா வரும் பல கருத்துக்கள் , இன்னும் பலரால் உணரப்படாமலேயே இருக்கன்றன. அவைகள் யாவை என்று ஒன்றுக்கு ஐந்து முறை படித்து உணர்ந்து , இதுவரை உணராதவைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்தது

// நமக்கு பிரியாணி கிடக்கவில்லை என்று கவலைப்படும் வேலையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க. //

உனக்கும் கீழே உள்ளவர் கோடி! நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

- கண்ணதாசன்.

செருப்பில்லையே என்று அழுது கொண்டிருந்தேன். காலில்லாதவனைக் காணும் வரை.

- யாரோ.

செவ்வாய்க் கிழமைக்குரிய சிறந்த சிந்தனைகளைத் தந்த தம்பி ஜாகிருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் கற்றுக் கொள்கிறோம், அல்லது வெற்றியடைகிறோம்..தோல்வியடைய வில்லை.//

அருமை

adiraimansoor said...

ஜாஹிர்
மிக உன்னதமான உணர்வுகள்
இதில் மிகவும் ஹைலைட்
///வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள

உங்களை அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனம்.
தாய்ப்பாசம் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு தந்தை பாசத்தைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை.

பொழுதுபோக்குக்கு அதிகம் நேரம் ஒதுக்கிய இளமை, முதுமையில் பொழுது போகாமல் யோசிக்க வைக்கப்படலாம்

மார்க்க விசயத்தில் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று பீத்துபவர்களின் பெர்சனல் வாழ்க்கை அவ்வளவுக்கு சொல்லிக்கொள்வது போல் இருக்காது.
உங்களின் முயற்சியில் எப்போதும் அவநம்பிக்கையை விதைக்க நினைப்பவர்கள் நரபலி சாமியார்களைவிட கொடுமையானவர்கள்.
எப்போது பார்த்தாலும் ' உங்க வீட்டு ஆட்கள்' என்று பிரித்துப்பேசும் தம்பதியினரிடம் அவ்வளவு அன்யோன்யம் இருக்காது. அப்படி இருந்தால் அது ஒரு பிசினஸ், தாம்பத்யம் அல்ல.

தேவையற்றவைகளை வாங்கி சேர்ப்பவன், தேவையான பொருளை விற்க நேரிடும்.

அவசியமான உணர்வுகளுக்கு ஒரு ஜே
வாழ்த்துக்கள்

Unknown said...

Assalamu Alaikkum
Dear brother Mr. Zakir Hussain,

All of your observations are true, mostly valid and very useful ones.
Thanks for sharing them with your short and succinct wordings.

Best regards,

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook said...

// வீட்டில்உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த பெரியவரிடம்.....வசதியாக மறந்து விடுகிறார்கள்// அப்படிமறந்தால் கூட மறதிமனிதருக்குசகஜமென்று நினைவு படுத்தலாம். ஆனால் மறுத்து விடுகிறார்களே ?

sheikdawoodmohamedfarook said...

''நான் சபுராளியா இருந்தபோது ''வாப்பா! வாப்பா!' என்று வாஞ்சையுடன் கூப்பிட்ட மகன் நான் சபுரை விட்டதும் என்னை கபுராளியாகிவிட்டான்'' இது சமிபத்தில் ஒருவர்என்னிடம் சொல்லி கண்ணீர்விட்ட உண்மை கதை.அதிரையில் நிலத்தடிதண்ணீர் 150 அடிக்கு கீழேபோய்விட்டது.எல்லா குளங்களும் அற்றுபோய் விட்டன ஆனால் தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல ஆயிரம் ஆயிரம் கண்கள் காத்திருக்கிறது கண்ணீர் தர.பிள்ளைகளின்எதிர் காலவாழ்வைஎண்ணிகண்ணீர் விட்டவன் தன்னை எண்ணி கண்ணீர்விட சபுரைவிட்டானோ?

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Yasir said...

ஆழ்ந்து எடுத்த ஏதார்த்தமான முத்துக்கள் இவை...சிந்தனைக்கு பிரியாணி போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்....நான் என் குழந்தைகளிடன் அடிக்கடி சாப்பாடு விசயத்தில் அடம் பிடித்தால் யூடிப்பில் சோமாலி நாட்டு பட்டினி அவதி காணொளியை காண்பிப்பேன்...அவர்களும் ஓரளவு புரிந்தவர்களாக இன்று கொடுத்ததை அல்ஹம்துலில்லாஹ் சொல்லி சாப்பிட பழகிவிட்டார்கள்

Yasir said...

//''நான் சபுராளியா இருந்தபோது ''வாப்பா! வாப்பா!' என்று வாஞ்சையுடன் கூப்பிட்ட மகன் நான் சபுரை விட்டதும் என்னை கபுராளியாகிவிட்டான்'' // சிரிப்பை வரவழைத்தாலும்- இந்த வார்த்தைகள் சொன்னவரின் உண்மை நிலையை நினைத்தால் மனத்தை கனக்க வைக்கின்றது...

Meerashah Rafia said...

Lines of Life - Simply the Best

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உணர்ந்தவை அனைத்தும் உண்மை!

sheikdawoodmohamedfarook said...

//வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கற்றுக்கொள்கிறோம்.வெற்றியடைகிறோம்.தோல்வியடையவில்லை// பிறர்ஏன் அல்லது எப்படி தோல்விஅடைந்தார்கள் என்பதை தெரிந்து கொண்டால் நாம்தோல்விஅடைவதற்கான வழிகளை தவிர்த்து விடலாம்.How to Fail என்னும்பெயரில் ஒருபுத்தகம்வெளியாகியுள்ளது Learn your lessons from other people's failureஎன்பதே இந்தபோதிக்கும் உண்மை.இதேபெயரிலும் ஒருபுத்தகம்வெளியானநினைவுஉண்டு.பேய் எங்கேஇல்லை என்றுதெரிந்துகொள்வதைவிட அதுஎங்கேஇருக்கிறதுஎன்பதைதெரிந்துகொள்வது நல்லது.ஒருவேளை அதைபார்க்க ஆசைவந்தால்தேடிஅங்குமிங்கும் அலையாமல் நேரடியாகஅதன்வீட்டுக்கேபோய் கதவை தட்டிபார்த்து விடலாமல்லவா?

sabeer.abushahruk said...

//// நமக்கு பிரியாணி கிடக்கவில்லை என்று கவலைப்படும் வேலையில் ஆப்ரிக்கா நாடுகளில் மக்கள் வெகுதூரம் வெயிலில் தண்ணீருக்காக நடக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க. //

அம்பி, ஆப்ரிக்க நாடு என்னும் இடத்தில் அதிராம்பட்டிணத்தில் என்று இருக்க வேண்டும். இப்பத்தான் ரெண்டு நாட்கள் ஊருக்குப் போய் வந்தேன்.

குளங்களும் ஏரிகளும் வறண்டு கிடக்க, உடல்களில் மட்டும் வேர்வை நீர் வார்க்கிறது.

sheikdawoodmohamedfarook said...

நான் சொல்ல வந்தது வெற்றியடைடைந்தவனை விட தோல்வி அடைந்தவனே அதிக பாடம்படிக்கிறான் அல்லது அனுபவம் பெறுகிறான்.எளிதாகவெற்றியடைந்தவன் புகழ்போதையில் மிதக்கிறான்.அவன் கப்பல்ஒருசிறியசுழல்காற்றைகூடதாங்கமுடியாமல் மூழ்கிவிடுகிறது.ஆனால் பலசூறாவளி கண்டவனின் படகோ பாது காப்புடன்கரை சேர்கிறது.நான் என்னசொல்கிறேன் என்பது புரிந்துகொள்ள முடியும்/.read between the lines./

ZAKIR HUSSAIN said...

வேலைகளின் இறுக்கத்துக்கிடையில் வெகு தூரம் பயணம் செய்யும் டிரைவிங்கில் கிடைத்த நினைவுகள்.

உங்கள் எண்னங்களையும் இங்கு பதிந்த சகோதரர்கள் யாசிர், மன்சூர், அஹமது அமீன், மீராசா ரஃபியா , எம் ஹெச் ஜே. அனைவருக்கும் மிகவும் ஹீட்டான தேங்க்ஸ். [ இங்கும் வெயில் / தண்ணீர் வராத பைப் எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது ]

ZAKIR HUSSAIN said...

அன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு...நீங்கள் சொன்ன சபுராளி / கபுராளி எதேச்சையான உண்மை. ஆம் பெண்கள் மறந்தால் பரவாயில்லை...மறுத்து விடுகிறார்கள் உண்மையை .

சபீர்...நீ சொன்ன ஹீட் இங்கும் உணர ஆரம்பித்து விட்டது.

bro இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு....உணர்ந்ததை ரசித்ததில் சந்தோசம். இன்னும் எழுதலாம் ரொம்ப போரடிக்க கூடாதென்று ஒரளவில் பின்னாளில் தொடரலாம்.

அப்துல்மாலிக் said...

ரொம்பா நாள் கழித்து ஒரு பின்னோட்டம், சூப்பர் காக்கா..

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

//வீட்டில் ஹவுஸ் ஒய்ஃபாக இருக்கும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சம்பாத்யம் போதவில்லை என்று குற்றம் சாட்டுமுன் ஒருமாதம் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு வந்து புத்திமதி சொல்லட்டும்.//
//ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பிறகு கணவன் மீதான கவனம் குறைந்து பிள்ளைகள் மீதான கவனம் அதிகம் ஆகும்போது கணவன் மனைவியிடையே எல்லா விசயத்துக்கும் ஈகோ உருவாகும். 'கணவன்' நொய்யல் பார்ட்டியாகவும் ' மனைவி ' சனியாக ' தெரிவதும் இந்த கால கட்டத்தில்தான்.//
//வீட்டில் ரிட்டையர் ஆகி உட்கார்ந்த பெரியவர்களிடம் அதிகம் அறிவுரை வழங்கும் வீட்டுபெண்கள் ஒரு காலத்தில் அவருடைய சம்பாத்யத்தில்தான் தன் பசி ஆற்றப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.//
//பணம் , பெண் இரண்டு விசயத்திலும் எந்த ஒருவனும் நிரந்தரமாக நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை.//

அமோக வாக்கு வித்தியாசத்தில் கட்டுரையாளர் வெற்றி பெற்றாலும் அவருக்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் ஆண்கள் ஓட்டே பெண்கள் ஓட்டு ஒன்று கூட விழவில்லை என்பதை இந்த தருணத்தில் தேர்தல்கமிஷன் அறிவிக்க கடமைபட்டுள்ளது

குறிப்பு = கட்டுரையாளர் வீட்டு ஓட்டு கூட விளவில்லையாம்.

அடுத்த (கட்டுரை) தேர்தலிலாவது பெண்கள் ஓட்டை பெற கட்டுரையாளர் தகுந்தமுயற்சியை மேற்கொண்டு மேல உள்ள வாசகங்களைதவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

ZAKIR HUSSAIN said...

Dear Shahul,

பெண்களிடம் ஒட்டு வாங்குவதற்காக பொய் சொல்ல முடியாது அல்லவா...அதனால்தான்

உண்மை சொன்னேன்.

Unknown said...

உணர்ந்தவை அனைத்தும் உண்மை!

ZAKIR HUSSAIN said...

Thanx Bro Abdul Rahman & Abdul Malik

sheikdawoodmohamedfarook said...

மறு பதிப்பாய் இருந்தாலும் பெரு மதிப்புக்குரிய Ever green கருத்துக்கள்.

Ebrahim Ansari said...

Refreshing Course. All Remain as they are.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு