Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும் 17

அதிரைநிருபர் | December 23, 2010 | ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்களே நம் அதிரைப்பட்டினத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெகுவிரையில் நடைப்பெற உள்ளது, இதற்கு துணையாக நம் அதிரைநிருபர் வலைப்பூவில் கல்வி விழிப்புணர்வு கட்டுரைகள் வெளிவர உள்ளது.  நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவதற்கு முதல் படியாக இருந்தது பின் தொடரும் இந்த கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வந்த பின்னூட்டங்களும் தான் என்பது மிகையில்லை. இத்தருணத்தில் இக்கட்டுரையை மீள்பதிவு செய்வது மிக சரியாக இருக்கும் என்று கருத்துகிறோம். படித்து நல்ல கருத்துக்களுடன் ஆலோசனைகளையும் பதியுங்கள்.

-- அதிரைநிருபர் குழு



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர்களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
-- பேராசிரியர் ஆபிதீன்
           +91 99658 92706
           abideen222270@yahoo.com

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் நாம் ஏற்கனவே பதிந்து வைத்த நம் எல்லோரின் எண்ணங்களின் செயல் வடிவம் வரும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தின் இறுதியில் நடந்தேற இருக்கிறது ! இதற்கான ஆயத்தப் பனிகளுக்கான செயல் வடிவங்கள் ஏற்கனவே துவங்கியும் விட்டது.

இனி தூர தொலைவில் இருப்பவர்களாகிய நாம் வலைப்பூகளில் பதியும் அல்லது வேறு வழிகளில் கிடைத்திடும் தகல்வகளை உள் வாங்குவதோடில்லாமல் நம்மால் ஆன எல்லா வகையான ஒத்துழைப்ப்யும் கண்டிப்பாக நம்முடைய "கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டு" களம் கண்டிருக்கும் அன்புச் சகோதரர்களுக்கு வழங்க வேண்டும்.

ஒவ்வோருவர் வீட்டில் குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேல் பள்ளிப் படிப்பில் இருக்கும் மாணவச் செல்வங்கள் இருபபர்கள் அவரவர்கள் தங்களுடைய பிள்ளைகளை, உறவுகளின் பிள்ளைகளை ஊக்கப் படுத்தி இந்த அருமையான சந்தர்பத்தை பயன்படுத்தி கலந்து கொள்ளச் செய்யவதோடில்லாமல் மென்மேலும் வளர்ச்சி கண்டிட முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இது திருவிழா கானும் மாநாடு அல்ல கூடி விட்டு கலைய ! நமது வாழ்வாதாரத்திற்கு போடும் அஸ்வதிவாரம், நம் வீட்டுப் பிள்ளைகள் நமக்கும் நம் சமுதாயத்திற்கும் பெற்று தர இருக்கும் வெற்றிகளின் வழித்தடம். இங்கே தடைகளை நீக்குவோம், இளைய மாணவச் சமுதாயத்தின் சுவாசத்தை சீராக்குவோம் இன்ஷா அல்லாஹ்...

வாருங்கள் கைகோர்ப்போம் !

அதிரை முஜீப் said...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால், இந்த நிகழ்ச்சி நன்றாக நடைபெற முஜீப்.காம் இணையத்தின் சார்பில் வாழ்த்துக்களும் துவாவும் உண்டு!. மேலும் இதுபோன்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள், மற்ற எல்லா பகுதிகளில் வருடம் இடண்டுமுறை என நடைபெற்றால், தமிழ்நாட்டளவில் நிச்சயம், நம் சமுதாய மாணவ/மாணவிகள் மத்தியில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்!. அறியாமை எனும் இருளை கல்வி என்ற மிகப்பெரிய ஆயுதம் கொண்டு சமுதாய புரட்சி செய்வோம்! தனி மரம் தோப்பாகலாம்! அதனூடே மற்ற மரங்களையும் நடும்போது!. சமுதாயத்தை உசுப்பிவிடுவோம்!. ஆட்சி அதிகாரத்தில் வெற்றி பெறுவோம்!!. அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கும் வரை, எங்களுக்கு பொறுமை இல்லை!. இந்த தலைமுறையையே நாங்கள் படித்த தலைமுறையாக்குவோம்!. நாளை மட்டும் அல்ல! இன்றும் நமதே!!.

இந்நிகழ்ச்சியில், படித்துகொண்டிருக்கும் மாணவர்களை மட்டும் அல்ல, படித்து விட்டு ஊரில் இருக்கும் அதிரை சிட்டிசனையும் கலந்து கொள்ள அழைத்து, அவர்களையும் மேல்படிபிற்கோ அல்லது வேலைவாய்ப்பிற்கான வழி முறைகளை,அல்லது உள்ளூரில் தொழில்தொடங்குவதற்கான வழி முறைகளையும் ஏற்படுத்தவேண்டும்.

அதிரை முஜீப்.
visit: www.adiraimujeeb.blogspot.com

sabeer.abushahruk said...

ஆமாம் முஜீப்,
இவ்வளவு தெளிவாக யோசிக்கும் / திட்டமிடும் உங்களைப்போன்றவர்களால் மட்டுமே நாம் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் கல்வி விழிப்புணர்வு சாத்தியப்படும்.

ஜலீல்- சௌதி, ஜாகிர் தம்மாம், ஜலால் நியூ யார்க், ஆகியோரும், எனையோரும் இந்த விஷயத்தில் தத்தமது கருத்துக்களையோ, வெற்றிக்கான துஆக்களையோ அவசியம் பதிய வேண்டும் என்று உரிமையோடு கட்டாயப்படுத்துகிறேன். வழக்கமான பங்களிப்பளர்களும் இறுதி ஆலோசனைகளை வழங்கவும். ஏனெனில், காலம் குறைவாகவே எஞ்சியுள்ளது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் கல்வி கட்ற்றவரும் ஆர்வமாக உள்ளனர் கல்வி கர்காதவரும் ஆர்வமாக உள்ளனர்
இதன் அர்த்தம் என்னவெனில் கல்வயீன் முக்கியதுவத்தை நாம் உணர ஆரபித்து விட்டோம்
இதுவே நக்கு மிகப்பெரிய வெற்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் நேசங்களே : உங்களை AEM என்ற மின்னாடல் குழுமத்தில் இணைத்துக் கொள்ளுங்களேன் : adirai-edu-mission@googlegroups.com இணைத்துக் கொள்வதில் சிரமங்களிருப்பின் எனது மின் அஞ்சலுக்கு nainathambi@gmail.com தகவல் தாருங்கள் இணைந்திடுவோமே ஒன்றாக ! :)

Yasir said...

கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருங்கால தலைமுறையை வலுவாக்குவது நமது சமுதாயக்கடமை...இது மாதிரியான் மாநாடுகள்...வருசாவருஷம் தொடர்ந்து நடைபெற வேண்டும்..அப்பொழதுதான் உண்மையான விழிப்புணர்வு ஏற்ப்படும்,அதற்க்கான தடைகளை நீக்கி..ஆர்வலர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்...உலக கல்வி விழிப்புணர்வுடன் மார்க்க கல்வி விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும்..அப்பொழுதுதான் அவர்கள் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நமது சமுதாயத்தை முன்னேற்ற பாடுபடுவார்கள்

ஜாகிர் ஹீசைன் said...

சகோ. சபீர்
எங்களை அழைத்ததற்கு ரொம்பவும் சந்தோஷம், தாங்கள் அழைக்காவிட்டாலும் இந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டிற்கு எங்களுடைய ஒத்துழைப்பும் துஆவும் என்றென்றும் உண்டு ,
இந்த கல்வி வழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம்வாய்ந்தது, இதில் யோசனைகள் சொல்வதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்றபோதிலும்

இதற்குமுன் எந்தவிதமான செயல்பாட்டிலும் விளம்பரங்களும் செய்துள்ளீர்கள் என்றுத் தெறிந்தால் அதற்குமேலுள்ள யோசனைகளைச் சொல்லலாமே, தாங்கள் யோசளை செய்ததையே திரும்பவும் சொல்லாமல் இருக்கலாம் அல்லவா

இதற்கு முன்னால் இக்கல்வி வழிப்புணர்வு கட்டுரை July 30,2010 அன்று வொளியானபோது சில சகோதரர்கள் சில கருத்துக்களும் சில முகவரிகளுமிட்டிரிந்தார்கள் அவர்களுக்கும் இதன் வழியாக அழைப்புக்கொடுத்து அவர்களையும் இனையச்செய்யலாமே

கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிபெற்று நம் சமுதாயம் இவ்வுலக கல்வியிலும் மருஉலக கல்வியிலும் வெற்றிபெற இறைவனை பிறார்த்திக்கிறேன்

மற்ற நண்பர்களுடைய துஆக்களுக்கும் யோசனைகளுக்கும் நாம் முயற்சிப்போம் இன்ஷாஅல்லாஹ்

அபு ஆதில் said...

உறக்க நிலையிலயே இருக்கும் நம் சமுதாயத்தை விழித்தெழ வைக்கும் அரிய முயற்ச்சியை வாழ்த்தி வரவேற்ப்போம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதற்கு முன்னால் இக்கல்வி வழிப்புணர்வு கட்டுரை July 30,2010 அன்று வொளியானபோது சில சகோதரர்கள் சில கருத்துக்களும் சில முகவரிகளுமிட்டிரிந்தார்கள் அவர்களுக்கும் இதன் வழியாக அழைப்புக்கொடுத்து அவர்களையும் இனையச்செய்யலாமே//

சகோதரர் ஜாஹிர்:
ஏற்கனவே முகவரியிட்டும் தனி மின் அஞ்சல் முகவரியும் தந்தவர்களையும் தொடர்பு கொண்டுதான் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் அவர்கள் யாவரின் ஒத்துழைப்பு நிச்ச்யம் இருந்திடும்.

ஜலீல் நெய்னா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர்..
நினைவுகூர்ந்ததற்கு நன்றி சந்தோஷம்.

நம் சமுதாயம் மிகவும் பின்தங்கி இருப்பது கல்வியிள்தான் எனவே,
இதன் முன்னேற்றத்திர்க்கு பாடு படும் நம் சகோதரர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிரோம். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக.

மேர்படி....கல்வி விழிப்புணர்வு மாநாட்டிர்காக நிதி திரட்டும் பனி ஏதும் உண்டா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(groups) யாரையுமே கானோமே !?

sabeer.abushahruk said...

நன்றி ஜாகிர்
அபு இபுறாகிம், சகோ. ஜாகிர், மொஹ்ஷின், அபு ஹாமித் ஆகியோருடன் கைகோர்த்து நான் சவுதியில் இருக்கும்போது ஏராளமான சமூக நல செயல்கள் செய்திருக்கிறேன். இவர்களையும் நம் குழுமத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நன்றி ஜாகிர்
சகோ. ஜாகிர், மொஹ்ஷின், அபு ஹாமித் ஆகியோருடன் கைகோர்த்து நான் சவுதியில் இருக்கும்போது ஏராளமான சமூக நல செயல்கள் செய்திருக்கிறேன். இவர்களையும் நம் குழுமத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்//

கவிக் காக்கா: நல்லுள்ளம் கொண்ட சகோத்ரகளின் மின் அன்ஞல் முகவரியை எனக்கு தனி மின் அஞ்சலில் அனுப்பித் தாருங்களேன் - நிச்சயம் சேர்த்திடுவேன் அடுத்த வினாடியே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பார்க்க.http://www.maalaimalar.com/2010/12/22230605/children-age-14-he-studied-mca.html

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் தஸ்தகீர் நீங்கள் தெரிவித்த சுட்டியில் உள்ள செய்தியை இங்கு பதிவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

கோவை, டிச. 22-

கோவையை சேர்ந்தவன் முகமது சுகைல். மேஸ்நெட் பயிற்சி நிறுவனத்தில் எம்.சி.ஐ.டி.பி. படிப்பில் பயிற்சி பெற்றான். 9-ம் வகுப்பு படித்துள்ள மாணவன். முகமது சுகைல் 14 வயதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்பிற்கு தேர்வாகி உள்ளான்.

அவனுக்குள் ஒளிந்திருக் கும் திறமையை அவனது 12-வது வயதிலேயே மேஸ்நெட் அடையாளம் கண்டு கொண்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் அவனுக்குள்ள அபார ஆர்வமும் பெற்றிருந்த அறிவும் வெளிப்பட்டது.
தனது குடும்பத்தினர் மற்றும் தாத்தா கொடுத்த ஊக்கத்தின் விளைவாக 12-வது வயதிலேயே ஆன்லைன் குளோபல் சான்றிதழ் பெற்றான். மைக்ரோசாப்ட் அளிக்கும் சமீபத்திய பயிற்சியான எம்.சி.ஐ.டி.பி. உள்பட மேஸ்நெட் அளிக்கும் பல்வேறு சான்றிதழ் படிப்புகளில் இதுவரை 13 சான்றிதழ்கள் பெற்றுள்ளான்.

முகமது சுகைல் பெற்றுள்ள இந்த அபார ஆற்றலுக்கு பரிசாக பாரதியார் பல்கலைக்கழகம் அவன் 9-வது படித்து முடித்த வுடன் 14-வது வதில் எம்.சி.ஏ. படிப்பில் சேர்த்துக் கொண்டது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. பயிலும் மாணவர்களில் மிக இளவயதுக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

எம்.பி.ஏ. படிப்பிக்குப் பிறகு அதில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்குவதை அடுத்த குறிக்கோளாகக் கொண்டுள்ளான். அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிக இளவயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமையையும் இவருக்கு சொந்தமாகப் போகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இங்கு கருத்திடும் சகோதரர்கள், மேலும் இந்த கட்டுரை முதலில் பதிந்தபோது கருத்திட்ட சகோதரர்களின் பின்னூடங்களில் நம் அனைவரின் கவலை தென்படுகிறது.

இதற்கான நீண்ட காலசெயல்திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். இதற்கு அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒரு அடித்தளமாக இருக்கும் என்பது நம்முடைய நம்பிக்கை.

ஒன்றினைந்து முயற்சிகள் செய்வோம் (முதல் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது). படைத்தவனிடம் கையேந்துவோம். அவனே போதுமானவன்.

அதிரைநிருபர் said...

வருகை தந்து கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.

// jaleelsa சொன்னது… மேர்படி....கல்வி விழிப்புணர்வு மாநாட்டிர்காக நிதி திரட்டும் பனி ஏதும் உண்டா? //

மாநாடு பற்றிய செய்தி நாளை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, இன்ஷா அல்லாஹ் விரைவில் விபரங்களுடன் வெளியிடுகிறோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு