அன்பான சகோதரர்களே!
கடந்த இருவாரங்களாக வெளியான இந்தத்தொடரின் இடஒதுக்கீடு என்கிற பேசுபொருள் மிகப் பலரின் வரவேற்புக்கும் ஒரு சிலரின் எதிர்ப்புக்கும் ஆளானது. நம்மைப் பொருத்தவரை , நமது மனதில் எவ்வித களங்கமும் இல்லை – நடு நிலை தவறவில்லை என்கிற மனசாட்சியின் உறுதிப்பாடு இருப்பதால் எதிர்த்து எழுதியவர்களின் தரங்கெட்ட வரிகள் நம்மை பாதிக்கவில்லை. மாற்றுக் கருத்து கொண்டோரை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்காக நாம் இரக்கப்பட்டு அவர்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம் என்கிற வரிகளோடு இதற்கு, நம்மைப் பொருத்தவரை முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம். அதே நேரம் இதுதான் அவர்கள் இத்தனை காலமாக கற்றுக் கொண்ட பாடம்- பகுத்தறிவு –பயனுள்ள அரசியல் தத்துவம் என்பதை அறிந்த அல்லாஹ் அவர்களுக்கு நல்ல எண்ணங்களைக் கொடுத்து இரட்சிக்க வேண்டும். அதே நேரம் சென்னையில் இருந்து நமக்கு ஆறுதல் கூறும் விதத்தில் அழைத்துப் பேசிய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி செலுத்துகிறோம்.
இனி ஆக்கபூர்வமாக,
இந்திய முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை , கல்வியில் நாம் பின் தங்கிவிட்டதற்கான வரலாற்றுக் காரணங்களையும் அவற்றைக் களைந்து நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஆக்கப்பணிகளையும் பற்றி நமக்குத்தெரிந்த சில கருத்துக்களைப் பதிய விரும்புகிறோம்.
இந்திய முஸ்லிம்களைப் பொருத்தவரை கல்வி ஒரு கேள்விக்குறியாகிவிட்டது. கடந்த வாரம் கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பேசிய பேராசிரியர் தி. மு. அ. காதர் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள். “முஸ்லிம் சமுதாயம் அடிப்படையில் ஒரு வணிக சமுதாயம். அவர்கள் படிப்பதில்லை. படிக்கும் பிள்ளைகளையும் படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வந்து தங்களுடன் இருக்கும்படியும் தொழிலை கவனிக்கும் படியும் செய்துவிடுகிறார்கள். இதனால் இந்த சமுதாயத்தை ஒரு கல்லாப்பெட்டி ( கல்லா பெட்டி ) சமுதாயம் என்று அழைக்கலாம்” என்றார். இன்றுவரை இது உண்மையாகவே இருக்கிறது.
அடிப்படையில் நம்மை ஆண்டவர்களும் நமது முன்னோர்களும் செய்த தவறுகள் – விதைத்த விதைகள்- அவற்றை நாம் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம். நவீனகாலக் கல்வியைக் கற்பது மார்க்கத்துக்கு எதிரானது என்ற கருத்தை விதைத்த வரலாற்றின் பின்னோக்கிய பக்கங்கள் இன்று நம்மை இந்நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. முன்னூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயருடைய ஆட்சியில் வளர்க்கப் பட்ட கல்விக்கும் , எண்ணூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட மொகலாயர் ஆட்சிக்கும் கல்வி வளர்ப்பதில் எவ்வளவு பெரிய வேறுபாடுகள் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். கல்வியில் பின் தங்கிய சமுதாயம் இன்று கால்பந்தாக உதைபட்டுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய கல்வி நிலையை உருது பேசும் முஸ்லிம்களுடைய கல்வி நிலையுடன் ஒப்பிட்டால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மிகவும் தாழ்மையான நிலையில் இருக்கிறார்கள். இது பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தை செலுத்தலாம்.
1631-ஆம் ஆண்டு, பிரிட்டிஷார், குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று அன்றைய மொகலாய மன்னரிடம் அனுமதி பெற்று நுழைந்தனர். அன்று முதல் வஞ்சகமாக மெல்ல மெல்ல இந்திய சாம்ராஜ்யங்களைப் பிரித்து, ஏமாற்றி 1639-ல் சந்திரகிரி மன்னரிடமிருந்து அவரது கட்டுப்பாட்டுக்குட்பட்ட சென்னைப் பட்டினத்தை குத்தகைக்கு எடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பலப் படுத்தி தொழில் செய்ய ஆரம்பித்தனர்.
பின்னர் தங்களை இராஜதானி நிலைக்கு உயர்த்தி, தென் இந்தியாவில் வடக்கில் தெலுங்குப் பிரதேசம், மேற்கே மலபார், தென் கன்னட மாவட்டங்கள் மற்றும் தெற்கே தமிழ் பேசும் பகுதிகள் உட்பட்ட 129, 500 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ள இராஜதானியாக ஆங்கிலேயர் ஆக்கிக் கொண்டனர். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டபின் அவர்களின் பார்வை ஆற்காட்டு நவாப் மீது திரும்பியது. நண்பனாக நடந்து, ஆற்காட்டு நவாப்பை மடக்கி, அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளின் அதிகாரத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி நவாபை கட்டாயப்படுத்தியதால் வேறு வழி இல்லாமல் அதிகாரம் ஆங்கிலேயருக்குக் கை மாறியது அல்ல அல்ல அதிகாரம் பறிபோனது. தனக்கும் தன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை நிர்ணயம் செய்யும் உரிமை இப்படி கைவிட்டுப் போனதால் முஸ்லிம்களின் கல்வியில் எவ்வாறான விளைவுகளை விளைவித்தன என்பதைப் பதிக்கும் நெஞ்சத்துடன் பார்க்கலாம்.
18 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவாப் முகமது அலி வாலாஜா, அவர்கள் தனது தனிப்பட்ட முயற்சியில் இஸ்லாமிய ஆராய்ச்சியை வளர்க்கவும், இஸ்லாமிய சித்தாந்தங்களை வலுப்படுத்தவும் சென்னையில் மதராஸா- யே- ஆலம் என்கிற அரபுப் பள்ளியை நிறுவினார். அதற்காக அந்தக் காலத்திலேயே , வட இந்தியாவிலிருந்து அப்துல் அலி மஹ்ருள் உலூம் என்ற பேரறிஞரை முதல்வராகக் கொண்டுவந்து மதரசாவை வழி நடத்தச் செய்தார். இந்தப் புனிதச் செயல் நவாபின் கல்வியை வளர்க்கும் நல்லெண்ண நெறிமுறைகளைக் காட்டுகிறது.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷார் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைப் பெறும் நோக்கத்தில், அவர்கள் பங்குக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை போதிக்கும் ஒரு மதரஸாவைத் தொடங்கினார்கள்.
அதே நேரம், இத்தகைய மதரஸா கல்விக்கு இடையூறாக, மெக்காலே கல்வித் திட்டம் என்ற ஒன்றைப் புகுத்தி, இஸ்லாமியர்களின் கல்விப் பணிக்கு ஊறு விளைவித்தனர். இதன் மூலம் ஆங்கிலத்தில் நவீன மத சார்பற்ற கல்வித் திட்டத்தைப் புகுத்தி, அதுவரை கீழ்க் கோர்ட்டுகளில் வழக்கத்தில் இருந்த பாரசீக மொழியை 1837- ல் அகற்றினார்கள். பிரிட்டிஷாரின் இந்தச்செயல் இந்தியா முழுதும் பாரசீக மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு கல்வியில் ஒரு பின்னடைவைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று. சட்டத்துறையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டனர்.
இதன் எதிரொலியாக, நவாப் கவுஸ் கான் பகதூர் வாலாஜா அவர்கள், மெக்காலேயின் கல்வித் திட்டத்துக்கு எதிராக , தனிப்பட்ட முறையில் 1851- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் அரபு மற்றும் பாரசீக மொழிகளின் வளர்ச்சிக்காக மதரஸா – யே- ஆஜம் என்ற பள்ளியை நிறுவினார். எனினும் இப்பள்ளி பணம்படைத்த முஸ்லிம்கள் மட்டுமே படிக்க இயன்றதாக இருந்தது. அத்துடன் அரசு அங்கீகரித்த பொதுக் கல்வி இந்தப் பள்ளியில் இணைக்கப் படவில்லை. இதன் விளைவாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளைப் பேசிய முஸ்லிம்களுக்கு இப்பள்ளியால் பயனில்லாமல் போனது.
என்றாலும் நரி மூளை படைத்த ஆங்கிலேயர்கள், இஸ்லாமியக் கல்வியை – அதன் தாத்பரியத்தை- வளத்தை- வளர்ச்சியை- வரலாற்றை- வீரத்தை சிதைக்கும் முயற்சியில் பட்டவர்த்தனமாக இறங்கி மெக்காலே கல்வித்திட்டத்தைக் கட்டாயமாக்கினார்கள்.
1859 – ஆம் ஆண்டு , மே மாதம் முதல் நாள் மதரஸா - யே- ஆஜமை, மதசார்பற்ற கல்வி என்ற போர்வையில் ஆங்கிலக் கல்விப் பயிற்றுவிக்கும் இடமாக மாற்றினர். அதே நேரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட பள்ளி, பொதுவான உயர்நிலைப் பள்ளியாக மாற்றப் பட்டது.
முஸ்லிம்கள் பயிலும் மதரஸாக்களை இப்படி மாற்ற ஆங்கிலேயரைக் கோபம அடையச் செய்த ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. அது என்ன?
ஆங்கிலேயர்களின் அடாவடித்தனத்தின் அடித்தளத்தை தகர்த்தவர்கள் முஸ்லிம்கள். இதை எந்தப் பேடியாலும்- மோடியாலும்- கொம்பனாலும்- வம்பனாலும் மாற்ற முடியாது. வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் உண்மை வெளிவந்தே தீரும்.
1857 – ல் நடந்த சிப்பாய் கலகம் (இது பற்றி மறைக்கப்பட்ட வரலாறுகளில் எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்) அல்லது முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களை சின்னாபின்னமாக்கியவர்கள் முஸ்லிம்கள். குறிப்பாக இஸ்லாமிய கல்வி பயின்ற முஸ்லிம்கள். அதிலும் சிறப்பாக, நிறுவப்பட்டிருந்த மதரசாக்களில் கல்வி பயின்று பின் இராணுவத்தில் சேர்ந்தவர்கள். இந்த எதிர்த்து நின்ற இஸ்லாமிய செல்வங்களை பீரங்கியின் வாயில் வைத்து சுட்டு வீழ்த்தினர் பிரிட்டிஷார். எனவே, வீரமும் விவேகமும் முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் ஓடக் காரணம் அவர்கள் பயின்ற மதரசாக் கல்வி என்று பிரிட்டிஷார் உறுதியாக நம்பினார்கள். எனவே வாய்ப்புக் கிடைக்கும் போது இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது அல்லது அவற்றுள் ஆங்கிலக் கல்வி முறையைப் புகுத்துவது என்பது அவர்களின் கொள்கையாயிற்று. இதே கூற்றையும் கொள்கையையும்தான் இன்றைய இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்க்கும் பிஜேபி போன்ற கட்சிகள் தங்களின் தேர்தல் அஜெண்டாவிலும் வைத்துள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.
“ பிறையாகப் பிறந்த இஸ்லாமிய இளைஞனே!
நீ
தரையில் அடித்த பந்து
உந்தி எழுவது போல்
குதித்தெழு !
உன்னுடன் ஒரு முழு நிலவு
உட்புகுந்துள்ளது” -
என்று பாடி உத்வேகம் ஊட்டிய உலகக் கவி அல்லாமா இக்பால் பாடினார் . அதுதான் இங்கு நமது நினைவுக்கு வருகிறது.
விழித்து எழுந்த முஸ்லிம் சமூகம் செய்தவை என்ன?
பதறி எழுந்த முஸ்லிம் சமூகம், அந்தக் குமுறலின் விளைவாக , கீழக்கரையில் சையத் முகமது மாப்பிள்ளை லெப்பை என்ற பெயர் படைத்திருந்த தனவந்தர், அல் மதரஸசத்துல் அரூஸியா என்ற பெயரில் பாரசீக மொழி கற்பிக்கும் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1864- ல் மதரஸா – இ- மன்பவுல் அன்வர் லால்பேட்டையிலும் 1871- ல் திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில், ரிவாஜ் –அல் – ஜினான், பி உலூம் – அல்- அத் யன் ஆகிய பள்ளிகளை பீர் முகமது ராவுத்தர் அவர்களும், பிரபல பாஷா குடும்பத்தினர் சென்னையில் மதரஸா – இ- சயீதியா என்கிற கல்வி நிறுவனத்தை 1872 – லும், ஆத்தூரைச்சார்ந்த மெளலானா அப்துல் வஹாப் அவர்கள் தனது சில நண்பர்களுடன் சேர்ந்து 1884 – ல் மதரஸா- பாக்கியத்துஸ் சாலிகாத் என்கிற கல்வி நிறுவனத்தையும் தோற்றுவித்தனர். இந்தப் பள்ளிகளில் கற்றவர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவி, தமிழ் மொழி மூலம் அரபுத் தமிழ், அரபு மொழி, இஸ்லாமியத் தத்துவம் போன்ற நெறிமுறைகளை போதித்தனர்.
இதே போல் 1865-ல் வேலூரில் தாருல் உலூம் லத்தீபியா, 1887-ல் வாணியம்பாடியில் மதரஸா மதானுள் உலூம் மற்றும் மதரஸா – இ- முப்ஈது இ ஆம் பள்ளிகளும் நிறுவப்பட்டன. சில வருடங்கள் கழித்து சென்னையில் மதரஸா- இ – முகம்மதி, கூத்தாநல்லூரில் மன்பவுள் உலா 1892-லும், தொடர்ந்து 1895-ல் தொண்டியில் மதரஸத்துல் இஸ்லாமியாவும் நிறுவப்பட்டன.
இவைகள் அல்லாமல் முஸ்லிம்களுக்குக் கல்வி அளிக்க, பொதக்குடி, நீடூர், ராஜகிரி, சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, பண்டாரவாடை, அத்திக்கடை, அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவும் முத்துப் பேட்டையில் ஆ. நெ. உதவிபெறும் மதரஸா மற்றும் தொடக்கப் பள்ளியும் இதே ரீதியில் பல ஊர்களில் வள்ளல் பெருமக்களால் தங்கத்தாமரையாக தொடங்கப் பட்டு பூமியில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. கல்வி ஒளி வீசத்தொடங்கிற்று .
இவ்வளவு சூடாக தொடங்கப்பட்ட நமது சமுதாயத்தின் கல்வி சூறையாடபப்ட்ட வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி
பார்வைக்கு: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ்நாடு மற்றும் சென்னை - 1930-1947. - ஆசிரியர்: ஜே.பி.பி.மோரே
Assalamu Alaikkum
ReplyDeleteRespected brothers,
Thanks for the article on Our Education from historical perspectives.
Allah has created every individual with great potential to learn any skill. Nowadays every individual has access to vast knowledge through internet. The Holy Quran, Al Hadees, and Islamic speeches, or any other knowledge materials are digitized and openly available at anytime and anywhere in the world through internet. In addition to that internet social media facilitated active learning, sharing knowledge, interfaith debating.
There is no one (parents, fore fathers) to blame for not learning now and grow. Because now, stop learning is similar to stop breathing.
May Allah enrich our knowledge. !!!
Jazakkallah khairan,
B. Ahamed Ameen from Dubai.
கீழக்கரையில் உதித்த முஸ்லிம்களின் கல்வி நிறுவனங்கள் முத்துப்பேட்டைமண்ணில் கால்பதித்துங் கூட இன்னும் நாம் கல்வியில் பின் தங்கியே நிற்கிறோம் ! காரணம் 'கல்' பெட்டியில் கண்புதைக்காமல் காலை-காலை ஊதுபத்தி புகைத்து-ஓதுபத்தி பகைத்து கல்லாபெட்டியில் கண்புதைத்து கல்லானேயாகி முகத்திரண்டு கண்ணும் புண்ணாகி மண்ணாகி போனோம்.இனியாவது நாம் முன்னாகிப்போவோமா?
ReplyDeleteஅன்புள்ள தம்பி அஹமது அமீன்,
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம். .
// There is no one (parents, fore fathers) to blame for not learning now and grow//
உண்மை . ஆனால் கற்காமல் கற்கவிடாமல் தடுக்கும் External factors ?
Thanks for your valuable observation and comment.
Assalamu Alaikkum
ReplyDeleteRespected brother,
//உண்மை . ஆனால் கற்காமல் கற்கவிடாமல் தடுக்கும் External factors ?//
I am calling the External factors as The Influences. My insights of external factors which affects our entire lives are various influences. I am admitting the influences of external factors. Yes, analyzing the true causes for defects and finding solutions are sign of rational in action.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
//பல ஊர்களில் வள்ளல் பெருமக்களால் தங்கத்தாமரையாக தொடங்கப் பட்டு பூமியில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. கல்வி ஒளி வீசத்தொடங்கிற்று //
ReplyDeleteஅன்று பல வள்ளல்களும் தர்மகர்த்தாக்களும் தங்களின் சொந்த பணத்தையும் சொத்துக்களையும் கல்விக்காகதாணம் செய்தார்கள் இன்று ஊர் உலகம் முழுக்க வசூல் செய்த பணத்தை படிப்புக்கும் மருத்துவ செலவுகளுக்கும் கொடுத்துவிட்டு நாங்கள் கொடுத்தோம் நாங்கள் கொடுத்தோம் என்று முதல் பக்கத்தில் போட்டோ போட்டு செய்தி வெளி இட்டு மார்தட்டிக்கொள்கின்றார்கள் இவர்கள் செய்யும் நல்லதையும் கெட்டதையும் இரண்டு புஜங்களிலும் உள்ள மலக்குமார்கள் குறித்துக கொண்டிருப்பதை மறந்துவிட்டார்கள்
//இரண்டு புஜங்களிளுமுள்ள மலக்குமார்கள் குறித்துக்கொண்டு இருக்கிறார்கள் // இது முன்னாடியே தெரிந்து இருந்தால் அவர்களிடமும் ஒருவசூல் போட்டு இருப்பார்களே!அடடா! இது தெரியாமே போச்சே!
ReplyDeleteAssalamu Alaikkum
ReplyDeleteFrom general point of view the external factors which negatively influence the education of an individual can be:
1. Lack of interest in developing oneself (No motivation, no thirst of knowledge)
2. Influences of bad acquaintances
3. No guidance
4. Financially Poor
5. Ignorance of parents
6. Ignorance of community
7. Governments involving uneducated,selfish(no genuine service mindedness) and greedy people.
Thanks and best regards,
B. Ahamed Ameen from Dubai.
நம் கல்வியின் இந்நிலைக்கான காரண வரலாறுக்கு நன்றி.
ReplyDeleteமாற்றுக் கருத்து கொண்டோரை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்காக நாம் இரக்கப்பட்டு அவர்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteஅன்பிற்குரிய காக்காமார்களுக்கு,
படிப்படியாக இஸ்லாமியரின் படிப்பைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லி, சொன்ன விதத்திலும் தகவல்களிலும் மலைக்க வைக்கிறீர்கள். இழந்ததை மீட்கச் சொன்னால் இருப்பதையும் இழக்கத்தான் வழிவகை உருவாக்குகிறது நம் கூட்டம்.
படிப்பறிவு என்பது பட்டம்பெறுவதைச் சார்ந்ததல்ல; பண்பாட்டில் சிறப்பது என்பதைச் சொல்லித்தர நாமும் ஓர் இயக்கம் ஆரம்பித்தால் தேவலாம்.
அற்புதமான தகவல்கள்; அப்படியே காப்பி அடித்து என் கோப்புகளில் பேஸ்ட் செய்துகொண்டேன், நன்றி.
//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteஅன்பிற்குரிய காக்காமார்களுக்கு,
படிப்படியாக இஸ்லாமியரின் படிப்பைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லி, சொன்ன விதத்திலும் தகவல்களிலும் மலைக்க வைக்கிறீர்கள். இழந்ததை மீட்கச் சொன்னால் இருப்பதையும் இழக்கத்தான் வழிவகை உருவாக்குகிறது நம் கூட்டம்.
படிப்பறிவு என்பது பட்டம்பெறுவதைச் சார்ந்ததல்ல; பண்பாட்டில் சிறப்பது என்பதைச் சொல்லித்தர நாமும் ஓர் இயக்கம் ஆரம்பித்தால் தேவலாம்.
அற்புதமான தகவல்கள்; அப்படியே காப்பி அடித்து என் கோப்புகளில் பேஸ்ட் செய்துகொண்டேன், நன்றி. //
நன்கொடை உதவி : Ctrl + C மற்றும் Ctrl + V
ஆதாரம் : கவிக் காக்கா (அறிவிப்பாளர் வரிசை தரமானதாக இருப்பதால்)
மறுப்பு : இன்னொரு இயக்கமா ??? ஐய்ய்ய்ய்யே வேனாமே... ஏன்னா போதையில நிறைய உளறவேண்டி இருக்கும், மனப் பிராந்தி பிடித்த மாதிரி திரியச் சொல்லுமே... எதுக்கு இந்த பொலப்பு ?
//ஆங்கிலேயர்களின் அடாவடித்தனத்தின் அடித்தளத்தை தகர்த்தவர்கள் முஸ்லிம்கள். இதை எந்தப் பேடியாலும்- மோடியாலும்- கொம்பனாலும்- வம்பனாலும் மாற்ற முடியாது. வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் உண்மை வெளிவந்தே தீரும். // தங்க வரிகள் காக்கா.
ReplyDeleteசத்தியம் வந்துவிட்டது,அசத்தியம் அழிந்தே தீரும் என்ற குரானின் கூற்றுப்படி,இஸ்லாத்திற்கெதிராக,முஸ்லிம்களுக்கு எதிராக எவன் திரண்டாலும் அவன் மண்ணைக் கவ்வப் போவது இன்ஷா அல்லாஹ் உறுதி.
ReplyDeleteதம்பி சபீர் !
வ அலைக்குமுஸ் ஸலாம்.
தம்பி அபூ இப்ராஹீம் !
வ அலைக்குமுஸ் ஸலாம்.
கருத்திட்ட - இதுவரை கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மச்சான், மருமகன் ஆகிய அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன்.
Dear Brother Ahmed Ameen,
Wa alaikkumussalam.
இந்தப் பதிவின் மீது தங்களின் அன்பான ஆர்வத்தைக் கண்டு மகிழ்கிறோம்.
அதை விட முக்கியமாக தாங்கள் பட்டியல் இட்டு இருப்பது இந்த பேசு பொருளில் நாங்கள் எழுதப் போகும் அத்தியாயங்களுக்கான Guidelines என்று உறுதியாக நினைக்கிறோம். தங்களுக்கு மீண்டும் நன்றி.
சகோதரர் இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு,
//தங்க வரிகள்// என்று தாங்கள் குறிப்பிட்டு இருப்பது நமது மனதில் "தங்க" வேண்டிய வரிகள்.
தம்பி அர. அல். அவர்களைப் பார்த்தால் என் ஸலாம் சொல்ல வேண்டியது.
This comment has been removed by the author.
ReplyDelete//''மனதில் ''தங்க'' வேண்டிய வரிகள்'' Myத்துனர் இப்ராஹீம் &ஸாரி சொன்னது // வரிகள் மனதிலேயே தங்கி விட்டால் இலவச பட்ஜெட் போடுவது எப்படி?'' இது Muchaaனின் sunந்தேகம்.!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//Ebrahim Ansari சொன்னது…
ReplyDelete23-7-2004 தேதிய """"தினத்தந்தி’’ நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது.
அந்தப் பேட்டி இதோ-//
இது அப்போ...
இப்போ சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா ?
அம்மாவின் ஆய்வுக்கு பின்னாடி அந்த முடிவில் மாற்றம் இருக்கலாம் தானே... !?
23-7-2004 தேதிய """"தினத்தந்தி’’ நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது.
ReplyDeleteஅந்தப் பேட்டி இதோ-
கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள் ளது. நீங்கள் தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே?
ஜெயலலிதா: இல்லையே? அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே!
கேள்வி: சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஜெயலலிதா: முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித் தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.
இதற்கு முன்பு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் """"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?’’ என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்? """"ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?’’ என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.
இப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா? .
தலைப்பில் "நமது கல்வி" ன்னு சொல்லிட்டிய... இதனை ஒரு சாரார் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே!?
ReplyDeleteவா ! இந்தப் பக்கம்.
ReplyDeleteவந்தேன்
கேட்டால் ?
சொல்வேன்!
ஐயா பாக்கெட்டில் என்ன வச்சிருக்கார்?
அறுநூறு ரூவா வச்சிருக்கார்
சூ மந்திரக்காளி!
கூட்டத்தில் ஒருவன்
ரத்தம் கக்கி விழுவான்.
விழுந்தான்.
அடுத்தநாள் விடிகாலை முதல் பஸ்சில்
சாமபலைத் தூவியவனும்
ரத்தம் கக்கியவனும் ஒரே பஸ்சில்
போர்வை விரித்து சுருட்டிய
பணத்தில் போவதற்கு ரெண்டு டிக்கெட்.
அடுத்த ஊர்
வா! இந்தப் பக்கம்!
வந்தேன்!
கேட்டால்?
சொல்வேன்.