Friday, March 21, 2014

...ங்க ! டா !

சாதிக்க வேண்டுமென்று..
சாதிக்கொரு கட்சியென்று..
ஆட்களை நிறுத்தி வச்சாங்க
ஐயாமார், அண்ணன்மார்
அதுக்கும் ஓட்டுப் போட்டாங்க
ஆளுக்கொண்ணா ஆகிப் போனாங்க !
அவிங்க ஆகிப் போனாங்க !!

பிராமணர், அவர் நம்மாளுதான்
வன்னியர், இவர் எங்காளுதான்
தேவர் இனம் நம்ம சனம்தான் என்று
ஆளுக்கொரு தேர்வா ஆகிப் போனாங்க
சாதி மக்க ஓட்டு போட்டாங்க !
அவிங்க சாதி சனம்
ஓட்டு போட்டாங்க !!

சிறுபான்மை இனமென்று
சொல்லிக் கொண்டாங்க
முஸ்லிம்கள் சொல்லிக் கொண்டாங்க
தேர்தல் தேதி வந்தவுடன்
ஆளாளுக்கு அடித்துக் கொண்டாங்க !
ஐயா! அடித்துக் கொண்டாங்க...

நம்ம கட்சியென்றும் இயக்கமென்றும்
பிரிந்து விட்டாங்க - நல்லா
முடிஞ்சு விட்டாங்க !
ஐய்யாவுக்கு நானென்றும்
அம்மாவுக்கு நீயென்றும்
கோஷம் போட்டாங்க !
எங்களை பிரிச்சே போட்டாங்க !

மோடி என்ற விஷப் பாம்பு
கொத்த பாக்குது  - மீண்டும்
கொத்த பாக்குது
காவிக் கூட்டம் நம்மை
விரட்டப் பாக்குது,
துறத்த பாக்குது

பாபர் பள்ளி
இழந்தாச்சு - இன்னும்..
புத்தி படிக்கல !
குஜராத் கலவரம்
கண்டாச்சு - இன்னும்
விழித்துப் பாக்கல !

ஐய்யாவோ ! அம்மாவோ..
முட்டுக் கொடுப்பார்(ள்)
மோடிக்கு முட்டுக் கொடுப்பார்(ள்)
அவன் எங்க தோள் ஏறி
எட்டி உதைப்பான் - எங்களை
எட்டி உதைப்பான் !

ஐயா தலைவர்களே !
எங்களுக்கு
கட்சியும் வேனாம்
இயக்கமும் வேனாம் !

எங்களை விட்டுவிடுங்க !
நாங்கள் முஸ்லிம்களென்றே
சாட்சி சொல்வோம் !
நல்லா சாட்சி சொல்லுவோம்
அல்லாஹ்வை மட்டுமே
நம்பி இருப்போம்... இன்னும்
நல்லா இருப்போம்,

இறைவனின் நாட்டப்படியே !
இன்ஷா அல்லாஹ்

இப்னு அப்துல் ரஜாக்

இது கவிதையல்ல... ஒரு சாமானியனின் வேதனை!

9 comments:

  1. தோழ்ர் இப்னு அப்துல் ரஜாக் அவர்கள் தொகுத்து தந்திருக்கும் வேதனைகள் இந்த சமுதாயத்தின் வேதனைகள். ஆனால் யூதர்களின் சதிக்கு னம்மில் சில மார்க்க மேதைகள் ஆளாகிவிட்டார்களோ யென்ற் சந்தேகம் பரவலாக இருக்கிறது. இதை உண்மை யென்று னம்பும்படி அவர்கள் யெடுக்கும் அரசியல் னிலைப் பாடுகளும் மார்க்க விவாதங்களும் திருமறை முதல் ஹதீஸ் வரை ஜகாத் முதல் ஹஜ் வரை விதிக்கபப்ட்ட கடமைகளையும் விமர்சிப்பது சந்தேகத்தை உருதிப் படுத்துகின்றன. இப்படிப்பட்ட பசுத்தோல் போர்த்திய புலிகளிடமிருந்து சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக.

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=8jNs7kCa74Q இந்த இனைப்பை அனைத்து சகொதரர்கலும் அவசியம் னேரம் ஒதுக்கிப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிரென். பல சந்தேகங்கலுக்கு இது விளக்கம் தரும்.

    ReplyDelete
  3. திமுகவோ அல்லது அண்ணா திமுகவோ மோடிக்கு ஆதரவு கொடுக்காது என்று சொல்ல முடியாது.2G ஊழலை குப்பையில் போட்டு சொந்தங்களுக்கு கொஞ்ஜம் நாற்க்காலியும் கொடுத்தால் தி.மு.க.திருப்தி அடையும்.அம்மாகேஸ்வேறே!அம்மாசொல்லுக்கு மோடிதஞ்சாவூர் தலையாட்டிபொம்மைபோலவும் கொடநாட்டு வாசலில் அழைப்பு மணி ஓசைஒலிக்கும் வரை ஒத்தைகாலில் நிற்கவும் வேண்டும்.இவையெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தாலே சித்தாப்பா. காற்று மாறலாம். அதுஅல்லாஹ்வுக்கே தெரியும்.மண்ணை ஆண்டவன் மண்ணிலும் கோடி!முஸ்லிம்கள் நிலை dilemma! வெள்ளம்பெருகிய நட்டாற்றில் துடுப்பு இல்லாத படகு!

    ReplyDelete
  4. என்ன பண்றது
    எல்லாம் விதி

    ReplyDelete
  5. சகோ பாமரன்,இந்த தளம் பொதுவானது.நீங்கள் ஒரு தலைப்பட்சமான முறையில் சகோ பீஜே அவர்களுக்கு எதிராகவும்,த த ஜ வுக்கு எதிராகவும் கருத்து சொன்னது தவறு,வன்மையாக கண்டிக்கிறேன்.இந்த தளமோ வேறு யாருமோ யாரையும் ஆதரிக்கவோ,எதிர்க்கவோ இல்லை,ஆனால் நம்மை சுற்றி உள்ள சம்பவங்களை மட்டுமே அலசும்.இதில் தவறான புரிதல் மட்டுமே ஏற்படுகிறது.எனவே உங்கள் கருத்தை வாபஸ் வாங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
  6. சகோதரர் இப்னு அப்துல் ரசாக் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

    நீங்கள் கூறியது போன்று 'சுற்றியுள்ள சம்பவங்களை' அலசும் போது யாரையும் விமர்சிக்காமல் அலச இயலாது.

    எளிதாக புரியும்படி கூறுவதானால் - கிண்ணத்தில் உள்ள தண்ணீர் அசையாமல் கிண்ணத்தை ஆட்டு அல்லது அலசு - என்று கூறுவதை ஒத்தது உங்கள் கருத்து.

    அடுத்ததாக 'பழுத்த மரம் தான் கல்லடி படும்' என்னும் பழமொழியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    இது வரை தமது சிந்தனையை பயன்படுத்தாமல் 'ஷியாக்களின் தர்கா என்னும் சமாதி வணக்கத்தை' இஸ்லாத்தில் புகுத்தும் வண்ணமாக, இமாம்களை தக்லீது செய்து காலத்தை ஒட்டி 'பிழைப்பு' நடத்தி வந்த 'பறேல்விகள்', 'முஸ்லீம் லீகர்கள்' 'தியோபந்திகள்', 'ஜமாத்தே இஸ்லாமிகள்', 'சலாபிகள்' மற்றும் இன்ன பிற வகுப்பார்கள் யாவருக்கும் பிஜே அவர்களின் இறை அச்சத்தை மட்டும் அடிப்படியாக கொண்ட சிந்தனை, துணிவு, நேர்மை, வன்மை யாவும் அவர்களின் இருப்பையே 'கேள்வி குறியாக்கி' விட்டது.

    இஸ்லாமிய எதிர்ப்பு குடியரசான ஈரானின் பண உதவி உதவியில் 'சமாதி வணக்கத்தை' வளர்த்த வந்த இவர்களது வெளி நாட்டு ஷியா முதலாளிகளுக்கு, எந்த பண உதவியும் இன்றி கொள்கையால் மட்டும் வளர்ந்த 'டிஎன்டிஜே' வுடைய வளர்ச்சி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

    வரலாறு முழுக்க 'ஷியாக்கள்' ஆட்சியை பிடிப்பதற்கு 'அரசியல் இஸ்லாம்' பேசி வந்துள்ள நிலையில் - பீஜே வின் 'அரசியல் இஸ்லாத்திற்கு' எதிரான நிலைப்பாடு அதற்கும் 'சாவு மணி' அடித்தது மட்டுமின்றி - அல்லாஹுவின் அருளை கொண்டு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவை இந்த வாய்மையான தௌஹீது பணிக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

    எனவே இவர்களது 'விமர்சனகளுக்கு' தகுந்த விளக்கம் கொடுக்கும் அதே வேளை, 'இஸ்லாத்தை' எதிர்க்கும் இவர்களது 'சமாதி வணங்கி ஷியா' அடிப்படைவாதத்தையும் எடுத்து வைப்பதே நீங்கள் கூறிய 'முறையான அலசலாக' இருக்க முடியும்.

    எனவே இது போன்ற ராபிதி ஷியாக்கள், சூபி பறேல்விகள் மற்றும் நக்ஷ்பந்திகள் ஆகியோருக்கு உரிய முறையில் அவர்களது வரலாற்றை எடுத்து கூற வேண்டும்.

    பாரசீக தேச வெறி பிடித்து 'மூன்று கலிபாக்களின் படுகொலையில்' சம்பந்தப்பட்டு 'இஸ்லாமிய எதிர்ப்பு நிலையை எடுத்த ஷியா' வரலாற்றை எடுத்து காட்டி அவர்களுக்கு 'உண்மையை' உணர்த்த பொறுமையாக முயற்சிக்க வேண்டும்.

    தர்கா என்ற 'சமாதி வணக்கம்' இஸ்லாத்திற்கு எதிரான 'ராபிதி ஷியாக்கள் மற்றும் பறேல்விகளின்' அசிங்கம் என்ற உண்மை இப்போது 'பிறந்த குழந்தை' கூட அறியும் நிலையில் - 'சமாதி வணக்கத்தை' ஒழித்து கட்டி 'இஸ்லாத்தை' மக்களிடம் எடுத்து சொல்வது ஒன்றன் மூலமே இன்ஷா அல்லாஹ் 'சத்தியம் நிலைநாட்டப்பட்டு, அசத்தியம் அழிய ஏதுவாகும்' என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. சகோ. இப்னு அப்துல் ரஜாக் அவகலுக்கு தாமதமான பதிலுக்கு வருந்துகிரென். னான் புன்படுத்டி இருந்தால் பொருத்துக் கொள்ள வும் . யென் கேள்விகல் அல்ல. னானும் தெரிந்து கொள்ள இதில் கூரப்பட்டவைகளுக்கு பதில் தந்தால் னன்றி உள்ளவ்னாவேன்.

    ReplyDelete
  8. சகோ பாமரன்,ஒரு முஸ்லீமை திட்டுவது பாவம்,கொல்வது குபுர்.இந்த ஹதீஸ் தெரியும் என எண்ணுகிறேன்.உங்களுக்கு ஏன் வீண் பாவம்?

    ReplyDelete
  9. சகோ. இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு, னான் யாரையும் திட்டவில்லையெ. ஒரு மார்க்க அறிஞர் தந்துள்ள திருமறையின் தர்ஜுமா பற்றீ இன்னொரு ஆலிம் பேசிய பேச்சை பதிவு செய்து இருக்கிறென். அனைவரும் விளக்கம் பெறுவதற்காகவே. இங்கு ஜமால் மதனி யெழ்ஹுப்பிய கேள்விகளுக்கு பதில் இருந்தால் அனைவரும் விளங்கலாம்தானெ. யெனது கருத்தும் பதிவும் தவறாக இருந்தால் அதிரை .னிருபர் னீக்கி விடலாம்தான்னெ! திட்டுவது பாவம்தான் னான் திட்டவில்லை. திட்டுவதையெ தொழ்ஹிலாக வைத்து இருப்பவர்கலைப் பற்றி னான் ஒண்டும் சொல்லமாட்டென். இப்பொது கூட மயிலாடுதுறை மமக வேட்பாளர் ஹைதர் அலி முஸ்லிம் அல்ல யெண்டு ஒரு பதிவு உங்கள் அதிரை னன்பர் பொட்டு இருக்கிறார். இதை னீங்கள் கண்டிக்கலாமே.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.