அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
பல் துலக்குவதின் சிறப்பு, மற்றும்
இயற்கை நடைமுறைகள்
''என்
சமுதாய – மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு
தொழுகையின் போதும் பல்துலக்கும் படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று
நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1196)
''நபி
(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல்
துலக்குவார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள்
(புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1197)
''நபி(ஸல்)
அவர்களுக்காக அவர்கள் பல் துலக்கவும், அவர்கள் உளுச்செய்யவும் நாங்கள் தண்ணீரை
தயாராக எடுத்து வைத்திருப்போம். இரவில் அவர்களை எழுப்பி நல்வணக்கம் புரிய,
தான் நாடியபடி அல்லாஹ் அவர்களை
எழுப்புவான் (எழுந்தவுடனே) நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள். உளுச்
செய்வார்கள். தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1198)
''பல்
துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்திபடுத்தும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
(நஸயீ, இப்னு குஸைமா) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
1202)
இயற்கை செயல்கள் ஐந்தாகும்.
1.'கத்னா'
செய்தல், 2. மறைவுறுப்பு முடியை நீக்குதல், 3. நகங்களை வெட்டுவது, 4. 'அக்குள்'
முடிகளை நீக்குவது, 5. மீசையை குறைப்பது என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1203)
ஜகாத்தின்
கட்டாயம்.
அதன்
சிறப்பு மற்றும் அது சம்பந்தப்பட்டவை
அல்லாஹ் கூறுகிறான் :
தொழுகையைப் பேணுங்கள், ஜகாத்
கொடுங்கள். (அல்குர்ஆன்: 2:43)
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே
கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகைய நிலை நாட்டுமாறும்,
ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை.
இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன்: 98:5)
(முஹம்மதே) அவர்களின் செல்வங்களில்
தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!
(அல்குர்ஆன்: 9:103)
''இஸ்லாம்,
ஐந்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது 1) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்
முஹம்மது (ஸல்) அவர்கள், அவனது அடியார் மற்றும் அவனது தூதர் என்றும் சான்று
பகர்வது 2) தொழுகையைப் பேணுவது 3) ஜகாத் கொடுப்பது 4)ஹஜ் செய்வது 5) ரமளானில்
நோன்பு நோற்பது என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1206)
''பரட்டைத்
தலையுடன் ''நஜ்து'' பகுதியில் இருந்து ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்.
அவரின் சப்தத்தை குறைந்ததாக கேட்டோம். அவர் சொல்வது என்ன என நாங்கள் விளங்க
முடியவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் நெருங்கினார். உடனே இஸ்லாம் பற்றிக் கேட்டார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ''ஒருநாள் முழுதும் ஐந்து நேரத் தொழுகைகள்'' என்று
கூறினார்கள். ''இவை அல்லாதவை என் மீது கடமையா?'' என்றார். ''இல்லை, ஆனால் உபரியான
(நபிலான) வணக்கங்கள் உண்டு'' என்று பதில் கூறினார்கள். மேலும் ''ரமளான் மாதம்
நோன்பு வைப்பது'' என்று நபி(ஸல்) கூறியதும், ''இது அல்லாதவை என் மீது கடமையா?''
என்று கேட்டார். ''இல்லை, ஆனால் உபரியான (நபிலான) நோன்பு உண்டு'' என்று நபி(ஸல்)
கூறிவிட்டு, ''ஜகாத் வழங்குவது கடமை'' என
அவரிடம் கூறினார்கள். ''இது அல்லாதவை என் மீது
கடமையா?'' என்று வந்தவர் கேட்டவர். ''இல்லை, ஆனால் உபரியான (தர்மம்)
உண்டு'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இதை விட நான்
அதிகமாக்கவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறிக்கொண்டே அந்த
மனிதர் திரும்பிச் சென்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் ''அவர் உண்மையாக நடந்து
கொண்டால் வெற்றி பெற்றுவிட்டார்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1207)
''சொர்க்கத்தில்
என்னை நுழையச் செய்யும் செயலை எனக்குக் கூறுங்கள்'' என ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
''நீர் அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு எதையும் இணைவைக்காதீர்! ஐந்து நேரத்
தொழுகையை நிறைவேற்றுவீராக! ஜகாத்தைக் கொடுப்பீராக! உறவினர்களை ஆதரிப்பீராக! (இதன் மூலம்
சுவனம் செல்வீர்)'' என்று நபி(ஸல்) பதில் அளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்:1211 )
ஒரு
கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! சுவனத்திற்குச்
செல்லத்தக்க ஒரு நற்செயலை எனக்கு அறிவித்து (கற்று)த் தாருங்கள்!'' என்று
கேட்டுக்கொண்டார். அப்போது ''அல்லாஹ்வை வணங்குவீராக! எதையும் அவனுக்கு
இணைவைக்காதீர்! தொழுகையைப் பேணுவீராக. கடமையான ஜகாத்தைக் கொடுப்பீராக! ரமளானில்
நோன்பு வைப்பீராக!'' என்று கூறினார்கள். ''என் உயிரை கையில் வைத்திருப்பவன் மீது
சத்தியமாக! இதை விட நான் அதிகமாக்கமாட்டேன்!'' என்று அவர் கூறினார். அவர் புறப்பட்டதும், ''சொர்க்கத்தில் உள்ள
ஒருவரை பார்க்க ஆசைப்படுபவர், இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்! என்று நபி(ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்:1212 )
''தொழுகையைப
பேணவும், ஜகாத்தை வழங்கவும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நல்லதை நாடவும் நான் நபி
(ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1213 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
ஒரு மரியாதைக்குரிய , உண்மையான தவ்ஹீதுவாதியின் அற்புதமான தொகுப்பு. உண்மையில் இது அருமருந்தே. ஜசாக் அல்லாஹ் சகோதரரே!
ReplyDeleteஅற்புதமான தொகுப்பு. உண்மையில் இது அருமருந்தே. ஜசாக் அல்லாஹ் சகோதரரே!
ReplyDeleteஅஸ்சலாமு அலைக்கும் வரஹ் காக்கா...
ReplyDeleteஅருமருந்து என்றும் வெள்ளி விருந்து !
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்..