Sunday, April 27, 2014

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 8 - விட்டுக் கொடுத்தல்

விட்டுக் கொடுத்தல்

குவைத் நாட்டின் ஒரு சூப்பர் மார்க்கெட், வழக்கம் போல, பணியைத் தொடங்கிவிட்ட அவனுக்கு சூப்பர் மார்க்கெட்டின் Biscuit Sectionல் வேலை, காலையில் வந்திறங்கும் பல நாடுகளின் பிஸ்கெட்டுகளை, இடம் தேர்வு செய்து, டிஸ்ப்ளே, சேல்ஸ் கவுண்டர் சர்வீஸ் என்பது அவன் வேலை.

அரபு நாடே அவனுக்கு புதிது என்பதால், ஃபீ - மாஃபீ வை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தான். ஆங்கிலம் தெரிந்த குவைத்திகளும் நிறைய பேர் இருந்தனர்.

ஒருநாள், வழக்கம் போல அங்கு வேலை செய்பவர்களுடன் பல்வேறு கம்பெனிகளிலும் உள்ள representativeகளும் தங்கள் கம்பெனியின் பொருட்களை அறிமுகப் படுத்தியும், displayக்கு உதவியும் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் பெரும்பான்மையோர் எகிப்து நாட்டவர்கள்தான்.

ஒரு நாள், இரு கம்பெனிகளின் repகளுக்கும் திடீரென வாக்குவாதம்,யாருடைய கம்பெனியின் பொருட்களை எங்கு வைப்பது என்று.வாக்குவாதம் அதிகரிக்க,கஸ்டமர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

இருவரும் மிஸ்ரிகள். அந்த ஊர் பாஷையில் அதிகமாக ஜீம் போட்டுக் கத்த, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரபியும் தெரியாது. அதிலும், மிஸ்ரி அரபி என்றால் சும்மாவா ? ஒன்னும் விளங்கள. கையை மட்டுமே பிசைய முடிந்தது. ஒரு ஹிந்தியால் என்ன செய்ய இயலும் !?

சத்தம் பெரிதாகவும், பக்கத்து selfல் வேலையாக இருந்த மிஸ்ரி ஓடி வந்தார். இருவரையும் அருகில் அழைத்து ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார், "சல்லு அலன் நபி" என்று. என்ன ஆச்சரியம், அந்த கிர் கிர் வாஜித் கர்ஜித்துக் கொண்டிருந்த இரு மிஸ்ரிகளும், உடனே சண்டையை நிறுத்தி விட்டனர். அது மட்டுமல்ல, இரண்டு பேரும் கொஞ்சம் சத்தமாக, இறைவனின் இறுதித் தூதர் மீது சலவாத் சொல்ல ஆரம்பித்தனர். பிறகு கைலாகு செய்து விட்டு, அங்கிருந்து மாலிஷ் பண்ணிக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்று விட்டனர்.சண்டை நின்றது, சமாதானம் ஆனது.


அதைப் பார்த்த அவனுக்கு ஆச்சரியம், ஆனந்தம், நபி (ஸல்) அவர்களின் மேல் உள்ள அம்மக்களின் பாசமும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மரணித்து விடாலும், அவர்கள் முன்மாதிரியாக காட்டிய எதுவும் மரணிக்க வில்லை. இறைவன் இப்பேறு பெற்ற தூதரின் உம்மத்தில் நம்மையும்  படைத்தானே என்ற மிகப் பெரும் சந்தோஷம் மேலிட அவன் கண்கள் பனித்து விட்டன.

அந்த தூதர் மீது, நாமும் அதிகமதிகம் சலவாத் சொல்வோமா?

இன்ஷா அல்லாஹ் தொடரும் !

இப்னு அப்துல் ரஜாக்

6 comments:

  1. மச்சான்
    சலவாத்தின் மகிமையை மிக அழகாகன சம்பாசனை மூலம் எடுத்து காட்டியுள்ளீர்கள் மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. மச்சான்,இது கற்பனை அல்ல,உண்மை சம்பவமே.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமுஅலைக்கும். நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்! கண்களில் ஆனந்த கண்ணீர் அந்த தூதர் மீது, நாமும் அதிகமதிகம் சலவாத் சொல்வோமாக!

    ReplyDelete
  4. //சல்லலாஹுஅலைஹிவஸல்லம்மரணித்துவிட்டாலும்//மாமனிதர்களின் மாமணிஸ ல்லலாஹுஅலைஹிவசல்லம் மரணிக்கவில்லை.அவர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மானுடத்தை 'விதைத்துகொண்டும்வாழ்வித்துக்கொண்டும் இருக்கிறார்கள்''என்றுமட்டும் சொல்ல முடியாது.அவர்கள் மானுடத்துக்கு எதிரானவைகளை சிதைத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  5. இச்சம்பவம் சலவாத்தின் மேன்மையை உணர்த்தியதோடு
    இரு கோபப்பார்வையையும் , சூடான வாக்குவாதத்தையும் எப்படி கூலாக்கி இருக்கின்றது இந்த சலவாத்து.

    இதன் மேன்மையை நாமும் உணர்ந்து,

    திருநபி மீது இறுதி வரை சொல்வோம் சலவாத்து.

    சல்லல்லாஹு அலா முஹம்மது , சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

    ReplyDelete
  6. கருத்திட்ட,வாசித்த,துவா செய்த அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.

    சல்லல்லாஹு அலா முஹம்மது , சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.