Monday, May 05, 2014

கண்கள் இரண்டும் - தொடர் - 35 - பிரைல் தட்டு எழுத்து...


பிரைல் தட்டு எழுத்து பதிவு

பார்வை இல்லாதோர்களில் எத்தனை அறிவாளிகள் உறுவகின்றனர் என்பது அவர்களில் சிலருக்கு தெரிவதில்லை. பார்வை அற்ற அணைவர்களுக்குமே அல்லாஹ் புற கண்களை படைக்காவிட்டாலும் அக கண்களை மிக சார்ப்பாக மிகவும் துள்ளியமாக இயங்கவைக்கின்றான் இயல்பாக இவர்களில் குரலிலும் ஓர் இனிமையை காணலாம் இதெல்லாம் அவர்களுக்கு ஒன்றை பிடுங்கி மற்றொன்றை இறைவன் அபரிவிதமாக  கொடுத்துவிடுகின்றான்  சில பார்வை அற்றோர் எப்போது பார்த்தாலும் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை நினைத்து நினைத்து குழப்பத்தோடு முகம் வாடி இருப்பார்கள். அந்த பிரச்சனைக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்பார்கள். குழப்பம் பிரச்சனையில் இல்லை. அவர்கள் அந்த பிரச்சனையை அணுகும் முறையில் தான் குழப்பமே உண்டாகிறது. 

அப்படி மனம் தளர்ந்தவர்கள்தான் ரயில்களிலும் பஸ்ஸுகளிலும் பாடுப்பாடி கை நீட்டி பிச்சை எடுத்து தன் வயிற்றை கழுவுகின்றனர்.  இவர்களை நம் சமுதாயம் கவணிப்பதில்லை அம்போ என்று விட்டுவிடுகின்றனர் . பார்வை உள்ள அணைவரும் இறைவனுக்கு நன்றி  சொல்லும் விதமாக  இப்படிபட்ட அனாதையாக  ஆதரவற்று இருப்பவர்களுக்கு நம்மலால் இயன்ற அளவு உதவி செய்து அவர்களுக்கு அப்படி பட்ட ஒரு குறையே இருப்பதாக பீல் பன்னாதபடி நம்மலால் பார்த்துக்கொள்ள முடியும் அரச்சங்கத்தில் இவர்களின் நலனுக்காக ஒரு துறையே ஒதுக்கலாம்

ஒரு லாடம் அடிக்கும் தொழிலாளியின் மகன் லாட ஊசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது கண்ணில் ஊசிபட்டு அவனது பார்வையே பறிபோனது.

அந்த லாடம் அடிக்கும் தொழிலாளியின் மகன் பிரச்சனையை வேறு விதமாக அணுகினான். “எந்த ஊசி என் கண்களை பறித்ததோ அதே ஊசியைக் கொண்டு கண்ணில்லாதவர்களுக்கு எழுத்துக்களை உருவாக்குவேன்” என்று சொல்லி ‘பிரைல்’ எனும் எழுத்து முறையை உருவாக்கினான். அவர் தான் லூயிஸ் பிரைல்.

ஒரு ஊசியால் ஒரு அட்டையில் அழுத்தி, ஆங்கில எழுத்துக்களை எழுத அட்டையின் ஒருபக்கம் குத்தியதும் அந்த இடம் பின்புறத்தில் புடைத்து, தடவிபார்க்கும்போது ஒரு புள்ளியை உணர முடியும். அவர்களுக்கு இப்படித்தான் பிரைல் எழுத்துக்களும் அதை வடிவமைக்கும் மிஷிங்களும் உருவாகின அதில் அட்டையை இணைத்து, ஆங்கில எழுத்துக்களை மட்டுமல்ல அவரவர்கள் பேசும் மொழிகளிலேயே ப்ரைல் எழுத்துக்களை பதிவு செய்கின்றனர் 

நாம் ஒரு லூயிஸ் பிரைலாக மாராவிட்டாலும் நம்மலால் இயன்ற உதவிகளை செய்யலாம் அல்லவா இதற்கு உரிய பலன் இந்த உலகத்தில் நமக்கு கிடைக்காவிட்டாலும் மறு உலகத்தில் நிச்சயம் உண்டு என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

ஒரு மனிதன் தன் குறைகளை உணர்கின்றபோது பாதி மனிதன் ஆகிறான். அந்தக் குறைகளைக் களைகிறபோது முழு மனிதன் ஆகிறான்.

தமிழகத்தில் பார்வையிழந்த மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் எழுந்து இருந்த்து. அம்மாவின் அரசு சமச்சீர் கல்வியின் அமலாக்கம் குறித்த கொள்கை முடிவை எடுப்பதில் தாமதாகிவரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்கள் தோன்றி இருந்தன.

இதனால், பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கான ''பிரையில்'' முறையில் புத்தகங்களை அச்சடிக்கவும் காலதாமதம் ஆகும் என்கிற கவலை ஏற்பட்டு இருந்த்து அது இப்போது எந்த நிலமையில் இருக்கின்றது என்று தெரியவில்லை.

அரசு தனது பாடத்திட்டத்தை அறிவித்த பிறகு அதை ''பிரையில்'' முறையில் அச்சடித்து, பிழைதிருத்தி ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு குறைந்தது 30 நாட்கள் ஆகும் என்று சுட்டிக்காட்டுகிறார் இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவாகி ஒருவர்  தமிழக அரசு பாடத்திட்டங்களை யூனிக்கோட் தமிழ் எழுத்துருவில் கொடுத்தால் இந்தப் புத்தகங்களை ''பிரையில்'' முறையில் 15 நாட்களில் அச்சிட்டுவிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் பிரையில் முறையில் புத்தகங்களை வெளியிடுவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டதா என்பது சந்தேகமே இப்படி பிபிசி தமிழோசையில் ஒரு தடவை செய்திகள் வாசிக்கப்பட்டது.

தமிழகத்தின் மாற்றுத்திறனாளிகள் வாரியத்தின் உறுப்பினராகவும் இருக்கும் ஒருவர், இந்த விஷயம் தொடர்பாக தாங்கள் அரசிடம் எடுத்துக் கூறிய போது, பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தை அணுகும்படியும், பாடநூல் நிறுவனம் பள்ளிக் கல்வி இயக்குநரை அணுகும்படியும் இழுத்தடிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்.

தமிழகம் முழுவதும் பார்வையிழந்தவர்கள் 95,000 பேர் பள்ளிச் செல்லும் வயதில் இருந்தாலும், அவர்களில் சுமார் 5000 பேரே பள்ளிக்கு செல்லும் நிலையில் உள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக தமிழகத்தில் 22 பள்ளிகள் உள்ளன, அதில் 11 அரசால் நடத்தப்படுகின்றன. இதர 11 பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளாகும்

அந்த படிப்பில் தேர்ச்சி பெற்ற கண்ணாலன் என்பவர் ஒரு கம்பேனியில் சேர்ந்து ஒரு பொறியாளரின் கீழ் கண்ணாலனும் அவருடைய நண்பர் பார்த்த சாரதி என்பவரும் அங்கு தொழிற்பயிற்சி எடுத்து அங்கேயே வேலை பார்த்தனர் கண்ணாலனுக்கு பிரவிலேயே கண்கள் இரண்டும் இல்லை அவருக்கு பெயரோ கண்ணாலன் 

மில்லிங்க் மெசின், டிரிலிங் மெசின் லேத் மெசின், சிலாப்பிங் மெசின், கொண்ட மெசின் சாப்பில் பார்வை படைத்த பார்த்த சாரதியை விட கண்ணாலன் சிறப்பாக பணியாற்றுவார். கண்ணால் பார்த்து செய்யக்கூடிய பார்த்த சாரதிக்கோ கிரஹிக்கும் தண்மை மிகவும் கம்மி  பார்த்த சார்திக்கு கண்ணிருந்தும் என்ன பிரையோஜனம் கண்ணால்னோ கண்ணில்லாமலேயே வெளுத்து கட்டுகின்றார். இதனால் பார்த்த சாரதி அந்த பொறியாளரிடம் நிறைய வாங்கி கட்டி கொள்வதுண்டு இதனால் விளங்குவது என்ன வென்றால் கண்ணிருபவனுக்கோ  பல சிந்தனை கண்ணாலனுக்கோ ஒரே சிந்தனை  சிந்தனை சிதரும்போது கவணமும் திசைமாறும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை

சில பல வருடங்களுக்கு பிறகு,.. 1986 ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், போக்குவரத்து பணியிலிருந்த ஒரு அலுவலரை சந்திக்க தனது மணைவி மற்றும் 6 வயது மகனுடன் கண்ணாலன் சென்றிருந்தார் மாற்று திறனாளிகளுக்கான நகர்பேருந்து இலவச அனுமதியட்டை தனக்கும், தன் மணைவிக்கும் வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் அந்த அலுவகத்திற்கு வருவதாக தெரிவித்தார்.

பிறக்கும் போதே தன்னைபோல் தன் மணைவியும் பார்வைதி றனற்றவர் என்றும், காதல் திருமணம் என்றும், பார்வையுள்ள ஆறு வயது மகன் தங்களை வழி நடத்துவதாகவும், வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்றும் கூறினார். தன்னைப ற்றியும் அவரிடம் கூறி, மலரும் நிணைவுகளை பகிர்ந்துகொண்டதினால். அந்த அலுவலர் அவரின்மீது கரிசனம் கொண்டு அவரின் அலுவலக நண்பர்களுக்கு அவரை அறிமுகம் செய்து அவருக்கு வேண்டிய உதவிகளை தாமதமின்றி செய்து கொடுக்கும்படி பரிந்துரைத்தார் அவரால் முடிந்த உதவி.

அந்த அலுவரை போன்று நாமும் வெவ்வேறு வகையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக மேற்கண்ட சம்பாசனை எடுத்துக்காட்டாக சாலையை கடக்க முயலும் மாற்று திறனாளிகளுக்கு அவ்வப்போது சாலையை கடந்து செல்ல உதவ வேண்டும். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வந்ததும், அவர்களுக்கு தகவல் கொடுத்து,  பேருந்தில் பயணம் செய்ய உதவுங்கள். இப்படி எத்தனையோ உதவிகள் இருக்கின்றன 

அடுத்த தொடரிலும் கண் இல்லாதோரின் ஓட்டுரிமையும் மாற்று திறனாலிகளின் பராமரிப்பும் பற்றி தொடரும்
-வளரும்-
அதிரை மன்சூர்

7 comments:

  1. ///பார்வை இழந்தோர் நலனுக்காக அரசாங்கம் ஒருதுறையே ஒதுக்கலாம்// தம்பிஅதிரைமன்ஸூர் சொன்னது.! அமைச்சரும் அதிகாரிகளும் பெரும்தொகை ஒதுக்க இதுவசதியான துறை! இதையாராலும் பார்க்க முடியாதுங்களே!

    ReplyDelete
  2. மன்சூர் அஸ்ஸலாமுன்.....
    அசிககா ஹலால்' நாசர் நானா உங்களை மிகவும் விசாரித்து உங்களுக்கு சலம் சொன்னார்கள்.

    ReplyDelete
  3. பார்வையற்ற பல ஆயிரம் பேர்களுக்கு கண்கொடுத்து கற்கவைத்த பிரைளிக்கும்அவர் கண்ணை புண்படுத்திய ஊசிக்கும் பார்வை இழந்தோறேல்லாம் நன்றி கூறவேண்டும்.வாசிக்கவைத்த ஊசி வாழ்க!

    ReplyDelete
  4. தொடரின் ஆரம்பம் முதலே, அனைவரும் அறியவேண்டிய ஆனால் இதுவரை அறியாத தகவலகளைத் திரட்டித் தருவதன் மூலம் கடினமாக உழைக்கும் தம்பி மன்சூர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. கண்கள் மற்றும் பார்வை தொடர்பான எல்லா பரிமாணங்களையும் அலசுகிறது தொடர்.

    சூப்பர்

    வாழ்த்துகள் மன்சூர்.

    ReplyDelete
  6. பிரைலிஎழுத்துவந்தவரலாறு சொன்னதம்பிஅதிரைமன்சூருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.