Saturday, May 03, 2014

CMN சலீம் - சிறப்பு காணொளிப் பேட்டி !


தமிழக முஸ்லிம் மக்களின் பொருளாதார நிலையை மேன்படுத்தவும் சட்டம், கல்வி, அரசியல், மத்திய மாநில அரசு நிர்வாகங்களின் மற்றும் IAS,IPS போன்ற துறைகளில் முஸ்லிம் மக்களின் நிலையை மேன்படுத்தி சமுதாய மக்களை மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி இரண்டிலும் அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தமிழக முழுவதும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே !

முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி மார்க்கம் காட்டும் வழிமுறையை பின்பற்றி பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் அம்மாபட்டினத்தில் அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி உருவாக்க சமுதாயநலனில்  அக்கறைக்கொண்ட சமுதாய சிந்தனையாளர்களின் பங்களிப்பில் 8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அரசு ஆணை பெற்று 100 மாணவிகளைக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரி 200 பங்குகள் சேர்க்க தீர்மானிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, 165 பங்களிப்பாளர்களின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் கல்லூரியின் கட்டிட பணி, அனுமதி மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகள் முடிவடைந்து அன்னை கதீஜா கல்லூரி செயல்பட்டு வருவதும் மேலும் மீதமுள்ள பங்குகளின் சேர்க்கையை முடிக்கவேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளது, மீதமுள்ள 35 பங்குகள் நிறைவடைய அன்புள்ளமும் கொடையுள்ளமும் கொண்ட சகோதரர்களின் உதவியை நாடுகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம்  சகோதரர் CMN சலீம் அமீரகம் (UAE) வருகை தந்தார்கள், அவர்களின் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் சந்திப்புகளுக்கு இடையே நமது அதிரைநிருபர் தளத்திற்கென சிற்ப்பு பேட்டி கண்டோம், அதன் காணொளித் தொகுப்பை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம்.

மேலும் அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரிக்கான உதவிகள் பற்றிய விரிவான தகவலுக்கு கீழ்கானும் தொடர்பு கொள்ள வேண்டி அதன் பொறுப்பாளர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழகம் - CMN சலீம் -0091-9840182251
அமீரகம் - இம்ரான் கரீம் - 00971-559739408



அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட  - ஒருகிணைந்து சமுதாய சேவை செய்வோம் - சமூகத்தை உயர்த்துவோம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

8 comments:

  1. கல்வித்துறையில் முஸ்லிம் மக்கள் கவனிக்காதன் விளைவு,முஸ்லிம் மக்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் புறந்தள்ளி கல்வி காவி மயமாக்கப்பட்டுள்ளது அல்லாஹ் பாதுகாப்பானாக,,,

    மார்க்கம் காட்டிய வழியில் இறைமறை வகுத்த நெறியில் நாமும் நம் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை வலிவுறுத்தும் காணொளி.

    ஜசக்கல்லாஹ் கைர் அதிரை நிருபர் வலைத்தளத்திற்கும் சகோ தாஜுதீன் அவர்களுக்கும் நன்றி

    -----------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete
  2. அன்னை கதீஜா கல்லூரியின் நல்ல நோக்கம் நிறைவேற அல்லாஹ் அருள்வானாக!

    ReplyDelete
  3. இந்திய முஸ்லிம்களின் தியாக வரலாறுகள் வந்து கொண்டிருந்த இன்று, என்னுடைய சில பணிகளின் காரணமாக அனுப்பித்தர இயலவில்லை.

    அதை ஈடு செய்வது போல் முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொண்ட சகோதரர் சலீம் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    அத்துடன் இந்த நேர்காணலை ஒரு பண்பட்ட ஊடகவியலரின் தன்மையுடன் அளித்த தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    அன்னை ஹதீஜா கல்லூரி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்தி பல முஸ்லிம் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட அல்லாஹ் துணையிருப்பானாக!

    ReplyDelete
  4. இந்த நேர்காணலை ஒரு பண்பட்ட ஊடகவியலரின் தன்மையுடன் அளித்த தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    அன்னை ஹதீஜா கல்லூரி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்தி பல முஸ்லிம் பெண் கல்வியாளர்களை உருவாக்கிட அல்லாஹ் துணையிருப்பானாக!

    ReplyDelete

  5. சீரிய தொலைநோக்குச்சிந்தனையுடன் சகோதரர் CMN சலீம் அவர்கள் துவங்கியுள்ள கல்லூரிக்கு நம்மால் முடிந்த ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பது நம் கடமையாகும்.

    முக்கியமாக டாக்டர் இ.அன்சாரி காக்கா போன்ற அறிஞர்களின் அத்தியாவசியமான பங்களிப்பு அன்னை கதீஜா கல்லூரிக்கு அவசியம் தேவை!

    இந்த நேர்காணலை ஒரு பண்பட்ட ஊடகவியலரின் தன்மையுடன் அளித்த தம்பி தாஜுதீன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையில் நம்முடைய பிள்ளைகள் வார்த்தெடுக்க முழுக்க இஸ்லாமிய கல்வியியலை போதிக்கும் தரமான பள்ளி ஒன்றை நிறுவ வேண்டும்.அரபி மொழிப்புலமையும் ஆங்கில அறியும் இஸ்லாமிய வரலாற்று கருத்துகளையும் நபிகளாரின் வாழ்க்கையும் தெளிவான கல்வியை கற்று கொடுக்கும் நோக்கில் சமுதாய சிந்தனையாளர்கள் பங்களிப்பின் மூலம் சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்க முயல வேண்டும்.இப்ராகிம் அன்சாரி காக்க,அதிரை அஹ்மத் காக்க போன்ற இன்னும் பல இஸ்லாமிய படைப்பாளிகள் தங்களின் அறிவார்ந்த கருத்துகளை நாளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் நூல்கள் எழுத வேண்டும்.தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் வெளிவரும் மாதயிதழ் "சமூகநீதி முரசு" இல் தங்களின் ஆக்கங்களையும் படைப்புகளையும் இஸ்லாமிய சமூகம் பயன்பெற்றிட பங்களிப்பு செய்ய வேண்டுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  7. அன்பான வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்

    முஸ்லீம்களின் தொலைந்து போன சொத்தாகவே இன்னும் கல்வி காணப்படுகின்றது. கல்விச் செல்வத்தை தேடும் பணியின் ஒரு முயற்சியாக இதனை நாம் கருதி எம்மாலான உதவிகளை செய்ய சகல முஸ்லீம் மக்களும் முன்வர வேண்டும். ஏனெனில் இரு கைகள் ஒன்று சேர்ந்து தட்டப்படும் போதே ஓசை வருகின்றது. சிறு துள்ளியே பெரு வெள்ளமாக உருவெடுக்கின்றது. எனவே நீங்கள் வழங்கும் சிறிய நன்கொடைகளை சிறுமையாக எண்ணாது ஒவ்வொரு முஸ்லிம் குடிமகனும் ஒரு முறைமையின் கீழ் இந்த கல்வியகத்திற்கு அண்பளிப்பைச் செய்தால் அது மலைபோல் குவியலாம். எமது இலக்கும் அடையப் பெறலாம். இந்த தூய எண்ணம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்.

    வஸ்ஸலாம்.

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.