Friday, November 08, 2013

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் !

மனிதகுலத்துக்கு அருட்கொடையாக வழங்கப்பட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) 
வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

87:1. (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.

87:2. அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.

87:3. மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.

87:4. அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.

87:5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.

87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

87:7. அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.

87:8. அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.

87:9. ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.

87:10. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

87:11. ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

87:12. அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

87:13. பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.

87:14. தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

87:15. மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.

87:16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.

87:17. ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.

87:18. நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-                                                         

87:19. இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.


அதிரைநிருபர் பதிப்பகம்

3 comments:

  1. இந்த அழுகை நம் அகக்கண்ணை திறக்கட்டும்.

    இதே போன்று கானொலிப்பதிவை தொடர்ந்து தாருங்கள்.

    அபு ஆசிப்.

    ReplyDelete
  2. தொழுகையில் அன்றாடம் நாம் ஒதக்கூடிய / ஓதுவதைக் கேட்கக்கூடிய இறைவசனங்களின் மொழியாக்கமும் நம் செவிகளை மட்டுமல்ல இதயங்களையும் பதப்படுத்தும் !

    ReplyDelete
  3. மிக்க மேலானவனான அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன்.

    யா அல்லாஹ் உன் வேதத்தை உணர்ந்து அறிந்து அதன்படி செயல்பட நல்லருள் புரிவாயாக!

    ReplyDelete

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.